Monday, October 23, 2006
204. நான்
70களில் வந்த வண்ணப்படம் என நினைக்கிறேன். ரவிச்சந்திரன் நடித்ததில் காதலிக்க நேரமில்லைக்கு அடுத்து மிக கலக்கலான வெற்றியை பெற்ற படம்.
ஜமீந்தார் ஒருவரின் சிறுவயது மகன். தந்தையுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு இலங்கைக்கு ஓடிவிடுகிறான். சொத்து முழுவதும் அவன் பெயரில் எழுதி வைத்து விட்டு, அவனை கண்டுபிடிக்க என்னெத்தே கன்னையா, விகே ராமசாமி தலைமையில் ஒரு குழுவையும் ஏற்படுத்தி விட்டு ஜமீந்தார் மண்டையை போடுகிறார். வழக்கம் போல் ஜமிந்தார் மகனுக்காக காத்திருக்கும் அத்தை மகள் ஒருவர்(வேறு யார்?நம்ம புரட்சி தலைவி அம்மா தான்:-)
குழு அவனை கண்டுபிடிக்க புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்கிறது. வீட்டுக்கு வெளியே காலிங்க்பெல் வைக்கிறது. ஜமீன் வாரிசு வந்து மணி அடித்தால் பச்சை விளக்கு எரியும். அப்புறம் அவனுக்கு இன்டர்வியு வைத்து அவன் தான் வாரிசா என சோதிப்பார்கள்.
வாரிசு யார் என கண்டுபிடிப்பது எப்படி? அவனுக்கு இடது கை பழக்கம், காலை மிதித்தால் "அம்மா" என கத்த மாட்டான் "அப்பா" என்று தான் கத்துவான். ரோஜா கலர் தான் பிடிக்கும். இந்த க்ளூக்களை வைத்து உண்மையான வாரிசை கண்டுபிடிக்கணும்.:-)
"நான் தான் வாரிசு" என சொல்லிகொண்டு மூணு பேர் வந்து நிற்கிறார்கள். நாகேஷ், மனோகர் மற்றும் ரவிச்சந்திரன். மூவரும் அனைத்து சோதனைகளையும் பாஸ் செய்கிறார்கள். குழு திக்கு முக்காடி போய் மூவரையும் அரண்மணையில் இருக்க வைத்து பரிசோதிக்கலாம என நினைக்கிறது.
மனோகரை ஆதரித்து கடத்தல் மன்னன் அசோகனின் கும்பல் நாகேஷயும், ரவிச்சந்திரனையும் மிரட்டுகிறது. இருவரும் கூட்டணி போட்டு அசோகனை சமாளிக்கும் காட்சிகள் காமடியின் உச்சகட்டம். இருவரையும் கடத்தி சிறைவைக்க, சினிமா ஆசை காட்டி அடியாள் பெண்களை மயக்கி தப்புவது செம காமடி. நடுவே ஜெயலலிதாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் லவ்ஸ் வேறு மலர்கிறது.
ரவிச்சந்திரன் தான் உண்மையான வாரிசு என அனைவரும் நம்ப துவங்கையில் ரவிச்கந்திரனின் தங்கையும், தாயும் இலங்கையிலிருந்து வர அவர் குட்டு உடைகிறது. நாகேஷை யாரோ கடத்திக்கொண்டு போக போட்டியின்றி மனோகர் தேர்ந்தெடுக்கப்படும் சூழலில் மீண்டும் பச்சை விளக்கு எரிந்து "நான் தான் வாரிசு" என்று சொல்லிக்கொண்டு முத்துராமன் வந்து நிற்கிறார்.
முத்துராமனையும் சதி செய்து மனோகர் துரத்துகிறார். கடத்தப்பட்ட நாகேஷ் தப்புகிறார். அவரும் முத்துராமனும் ரவிச்சந்திரனும் மனோகரை துரத்த கூட்டு சேர்கின்றனர். அதன்பின் ஜெட் வேகத்தில் கதை பறக்கிறது. படத்தின் புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றன.
படத்தின் சிறப்பம்சங்கள்:
ஜமிந்தாரின் சிறுவயது மகள் குட்டி பத்மினியை அசோகன் கொல்ல முயல அருவிக்கரையில் நாகேஷ் 'நான் ஆனையிட்டால்" என்று பாடி காப்பாற்றும் காட்சிகள் அமர்க்களமான காமடி.
படத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதாவை கிண்டல் அடித்து ரவிச்கந்திரன் பாடும் "ராஜா..கண்ணு போகாதடி..நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" என்ற பாடல் வெகு பிரபலம்.
ஜெயலலிதாவை பெண்பார்க்க வருவோரை அடித்து விரட்ட "அம்மனோ, சாமியோ" என பேயாட்டம் ஆடுவது குலுங்கி சிரிக்க வைக்கும் காமடி. அந்த பாட்டும் வெகு பிரபலம்.
அசோகனை காமடி கலந்த முட்டாள் வில்லனாக காட்டியிருப்பது சிறப்பு. அசோகனின் டயலாக்குகள் வெகு பிரமாதம்.
கிளைமேக்சில் விஷவாயு அறை, கார்சேசிங், இரும்பு கிளவுஸில் கூரிய நகம் மாட்டிக்கொண்டு பாயும் வில்லன், கிளவுசில் மின்சாரம் பாய்ச்சி கொல்லும் கதாநாயகன்,சிறுவயதிலேயே தன் ஏழை நண்பர்களை அரண்மனைக்கு கூட்டி வந்து விருந்தளித்து அதற்காக ஜமீந்தார் அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டை விட்டு ஓடும் வயதுக்கு மீறிய சிந்தனையுள்ள சிறுவன் என பீரியட் பிலிஸ்ம்களுக்குண்டான அனைத்து மசாலாக்களும் உண்டு.
என்னத்தே கன்னையாவுக்கு அந்த பெயர் வர இந்த படம் தான் காரணம். அடிக்கடி "என்னத்தே வந்து,, என்னத்தே போயி" என சொல்லுவார். நாகேஷ் இரட்டை வேஷம். நாகேஷின் அம்மாவும் இன்னொரு நாகேஷ் தான். அடிக்கடி 'கொமட்ல குத்துவேன்' என சொல்லி சிரிக்க வைப்பார்
மொத்தத்தில் படம் பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம் என்பது உறுதி
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
Was it released in 1968 or 1969.
Music by T.Ramamoorthy (of MSV-TR)
Direction Ramanna
ஆஹா,
நானும் இந்த படம் பாத்திருக்கேன்...
அப்பவெல்லாம் ஜெயலலிதா அதிகமா ரவிச்சந்திரனோடதான் நடிச்சாங்க ;)
நல்ல ஜோடி...
நாகேஷ் காமெடியும் சூப்பரா இருக்கும்...
டி ஆர் ராமண்ணா இயக்கிய படம். வெள்ளிவிழா கண்ட படம்.
எப்போது போட்டாலும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்.
என்னத்த கண்ணையா பிரபலமானது இந்தப் படத்தால்தான்.
தகவலுக்கு நன்றி அனானிமஸ். ரிலீசான வருடம் சரியாக தெரியவில்லை. நீங்கள் சொல்லி அறிந்துகொண்டேன். நன்றி
பாலாஜி
இந்த மாதிரி பழைய படங்கள் எல்லாமே மிக அருமையாக இருக்கும். ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள், நான் ஆகிய படங்கள் எத்தனை தரம் போட்டாலும் பார்க்க தூண்டும்
ஓகை
ஆம். இதை ஒரு நாலைந்து முறை பார்த்திருப்பேன். இன்னும் காட்சி அமைப்புகள் மனதிலேயே நிற்கிறது
முக்கியமாக நாகேஷ் இன்டெர்வியுக்கு வரும் போது விலைப்பட்டி கோட்டு, பேண்ட், கண்ணாடி என்று ஒவ்வொன்றிலும் தொங்கும்!
தொட்டு தொட்டு வேறு நினைவு படுத்துவார் அதை அந்தக் காட்சி முழுதும்!
பயங்கர சிரிப்பு!
அசோகன் ஒரு இழுத்து இழுத்து பேசும் வசன உச்சரிப்பை இதில் தான் ஆரம்பித்தார் என நினைவு!
அருமையான பொழுது போக்கு படம்!
ரெண்டாவது நாகேஷ் கொஞ்சம் போர்தான்!
'டான்'க்குப் போட்டி 'நான்' ?
சரியான பட்டர் நான். ;-)
சுடச் சுடச் செய்தி,
இந்தியாவின் புதிய பிரதமராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
எஸ்.கே
நீங்களும் இந்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்த விலைபட்டியல் விவகாரம் மறந்து விட்டது. நீங்கள் சொன்னதும் டக் என்று ஞாபகம் வந்துவிட்டது.
அனானி
டானுக்கு போட்டி இல்லை 'நான்':-)
இந்த படத்தை பற்றிய டிவிடி ஒன்றை இணையத்தில் பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்துட்டது.
வஜ்ரா,
:-))
நான் பழைய படங்களுக்கு எப்போதும் விமர்சனம் எழுதுவேன். என் முதல் பதிவே மனோகரா பட விமர்சனம் தான்
சிங்காரம் ஆளையே கான ம் ஹி ஹி ஹி அழிச்சிடு...அசோகன் சொல்வனல்ல அந்தபடம் தானே
செல்வன், நல்ல விமரிசனம்.
1966லிருந்து 70.71 வரை ஒரே வண்ணப்படங்களும்,கறுப்பு வெள்ளைப் படங்களும் வந்தன. முக்கியமாக ஜெயலலிதா,ரவிச்சந்திரன்,ஜய்சங்கர்,சிவகுமார்,முத்துராமன், ஏவிஎம் ராஜன்,லக்ஷ்மி என்று ஒரெ திறமைசாலிகள்(எங்களைப் பொறுத்து)
நான்,நீ.யார் நீ,மூன்றெழுத்து,பணமா பாசமா எல்லாமே பாடல்கள் பிரசித்தமான படங்கள்.
எல்லவற்றையும் என் நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள்.நன்றி.
14
வல்லிசிம்ஹன் ஐயா
//ஜெயலலிதா,ரவிச்சந்திரன்,ஜய்சங்கர்,சிவகுமார்,முத்துராமன், ஏவிஎம் ராஜன்,லக்ஷ்மி என்று ஒரெ திறமைசாலிகள்//
அருமையான பட்டியலை சொன்னீர்கள். அப்போது எம்ஜிஆர், சிவாஜி இருவரும் உச்சகட்ட புகழுடன் இருந்தாலும் இவர்கள் அனைவரும் அப்போது மிக கடுமையான போட்டியை கொடுத்தனர். இப்போது அஜித், விஜய், சூர்யா என இருப்பதுபோல் அப்போது இவர்களும் அருமையாக நடித்தனர். பின்னாளில் ரவிச்சந்திரன் சரியாக ஜொலிக்கவில்லை. ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்ட் பாணிக்கு மாறியது வர்கவுட் ஆகவில்லை.
ஏன் 14ஐ மட்டும் மத்தவங்களுக்கு விட்டுத் தரமாட்டேங்கறீங்க?
வல்லி சிம்ஹன் அம்மா.
பெத்தராயுடு
14க்கு முந்தைய நம்பர் வர்ரப்ப கரெக்டா யாரும் மாட்டுவதில்லை. அதுதான் நானே களத்தில் புகுந்து விளையாடிடறது:-)
//வல்லி சிம்ஹன் அம்மா.//
மிகுந்த மகிழ்ச்சி அம்மா. வலைபதிவின் மூலம் பல சொந்தங்கள் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நானும் இந்த படத்தை பார்த்த ஞாபகம் உள்ளது.
நாகேஷ் படங்களில் அவரின் பாடி லாங்வெஜ் தான் சூப்பர்......
அதுக்காகவே அவர் படங்களை எத்தனை தடவை வேண்டும் என்றாலும் பார்க்கலாம்
நாகையாரே
நாகேஷின் படங்கள் பல எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது.
இந்த மாதிரி விண்டேஜ் படங்களை சன்டிவியின் புண்ணியத்தில் தற்போது எல்லாரும் பார்க்க முடிகிறது. இல்லாவிட்டால் இதை யாரும் பார்க்கவே முடியாது.
செல்வன்,
அசோகன் ஒரு வசனம் பேசுவாருன்னு நினைக்கிறேன் !
அதாவது, எலெக்ட்ரிக் கையுறை ஒண்ணு போட்டுக்கிட்டு, அதை உரசி தீப்பொறி வரவழைச்சு, சொல்வாரு:
"நானே முடிச்சுடறேன், நானே முடிச்சுடறேன் !" அப்டின்னு ஞாபகம் :) சரியா ?
பாலா
குறிப்பிட்ட வசனங்கள் ஞாபகம் இல்லை.ஆனால் இந்த பாணியில் பேசுவார் என ஞாபகம் இருக்கிறது. அசோகன் நடிப்பு படத்தில் மிக அருமையாக இருக்கும்
Post a Comment