Sunday, June 04, 2006
97.*நட்சத்திரம்*என்னை படைத்த என் உலகம்
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தபோது எனக்கு இங்கு யாரையும் தெரியாது.தப்பி பிழைத்த அகதிபோல் தனிஆளாய் ஒரு புதிய தேசத்தில் இரண்டு சூட்கேஸ்களுடன் வந்து இறங்கினேன்.
ஒன்றுமே தெரியாத இந்த தேசத்தில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் ஒர் மதகுரு தான்.எதேச்சையாய் உணவகத்தில் சந்தித்து நண்பரானார்.அடிக்கடி அவர் வழிபாட்டு ஸ்தலத்துக்கு போவேன்.அங்கு நிறைய சினேகிதர்கள் கிடைத்தனர்.வாரா வாரம் மதம்,கடவுள் பற்றி பேச ஒரு மீட்டிங் உண்டு.கடவுள் யார்,பிற மதங்கள்,வழிபாட்டின் மகத்துவம்,கடவுள் இருப்பது உண்மையா போன்ற தலைப்பில் கணக்கற்ற விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
இன்னொருபுறம் கல்லூரியில் அமெரிக்க புரபசர் ஒருவர் தன் சித்தாந்தத்தை போதிக்க துவங்கினார்.அவர் அமெரிக்காவின் தலைசிறந்த தத்துவஞானி. அமெரிக்க தத்துவதுறையின் தேர்ந்தெடுத்த முத்துக்களை அவர் எனக்கு கற்பித்தார். தத்துவம் கால் காசுக்கு பெறாது என்ற நிலையை மாற்றி தனிவாழ்வுக்கும்,பொருள் சேர்க்கவும் உதவும் என்ற நம்பிக்கையை நான் படித்த மேற்கத்திய தத்துவஞான புத்தகங்கள் எனக்கு அளித்தன.
இப்படி முற்றிலும் வேறுபட்ட இந்த இரு வேறு சித்தாந்தங்களுக்கு இடையே நடந்த இந்த உரையாடலில் மெதுமெதுவே என் வாழ்வின் வழி அமையத் துவங்கியது.பலகலைகழக மாணவர் சங்கம் மூலம் பல வகையான குழுக்கள் எனக்கு பரிச்சயமாயின.என் கல்லூரியில் உள்ள பலவகைப்பட்ட சித்தாந்த அடிப்படையிலான குழுக்களோடு உரையாடி அவர்கள் அளித்த நூல்களை ஆழ்ந்து படித்ததில் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.சில சமயங்களில் ஒரே மாதிரியான கேள்விகளுக்கு இவர்கள் அனைவரும் வேறு வேறு பதில்கள் வைத்திருப்பதை அறிய முடிந்தது.
அவர்கள் வைத்திருக்கும் பதில்களை விட அப்பதில்களை அவர்கள் அடைந்த விதம் தான் என்னை ஈர்த்தது. அந்த பதிலை அடைய அவர்கள் கடைபிடித்த வழி சரி இல்லை என்றால் அந்த பதிலை - அது எவ்வளவு கவர்ச்சிகரமானதாக தோன்றிய போதும் - ஒதுக்கிவிட நான் பயின்றேன்.என் கல்வியின் மிகப்பெரும் பயனாக நான் கருதுவது இதையே.
இங்கு நான் கற்கும் கல்வி என்னை சுற்றியுள்ள உலகை நான் பார்க்கும் விதத்தை மாற்றியது.என் பார்வை மாறியதால் என் செயல்பாடுகளும் மாறின.கல்வியின் நோக்கம் சுதந்திரமே என்பதை தற்போது உணர்கிறேன்.மெய்ஞ்ஞானம் என்பது மனிதனை தெய்வமாக்குவதல்ல என்பதும் அவனிடம் உள்ள மிருக உணர்ச்சியை அவன் சுயமுன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் ஒரு கருவியே சமூகம என்பதை உணர்கிறேன்.ஒரு நாகரீக சமுதாயம் சுதந்திரத்தை கட்டிக்காத்தால் அந்த சுதந்திரம் அச்சமுதாயத்தை நிச்சயம் கட்டிக்காக்கும் என நம்புகிறேன்.
இங்கு தடை இன்றி கிடைத்த இணைய தொடர்பு எனக்கு ஒரு புது உலகத்தை அறிமுகப்படுத்தியது.முதல் முதலாக மரத்தடி யாகூ குழுமத்தில் சேர்ந்தேன்.அங்கு இதுவரை ஒரு கட்டுரை கூட எழுதியதில்லை.திஸ்கியில் தெரிந்த சீன எழுத்துக்களை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தேன்.எப்படியோ தக்குமுக்காடி யுனிகோட் தட்டச்சு மெதுவே பழகினேன்.
பிறகு கூகிள் தமிழ் குழுக்களை பற்றி தெரிந்தது.மெதுவே கூகிளில் உள்ள யுனிகோடு குழுமங்களில் சேர்ந்தேன்.என் எழுத்தை சிலர் ரசிக்க கூட செய்வார்கள் என்பதை அக்குழுக்களில் தான் கண்டேன்.அது எனக்கு அப்போது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல எனக்கு ஏராளமான நண்பர்கள் கூகிள் குழுக்கள் மூலம் கிடைத்தனர். வலைபதிவின் மேல் நீண்ட நாட்களாக ஒரு கண்.ஒரு சுபயோக சுபதினத்தில் தட்டுத்தடுமாறி இந்த வலைபதிவை ஆரம்பித்தேன்.
எத்தனை நண்பர்களை என் எழுத்து எனக்கு பெற்றுத்தந்தது என எண்ணிப்பார்த்தால் வியப்பாக இருக்கிறது.முத்தமிழ் குழுவின் 210 சொந்தங்களையும்,நம்பிக்கை குழுவின் 200 சொந்தங்களையும்,தமிழ்மணத்தின் மூலம் கிடைத்த உங்கள் அனைவரையும் நான் அடைந்தது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
என் படைப்புக்களை வெளியிட்டு ஊக்கமளித்த நிலாச்சாரல் ஆசிரியர் நிலாராஜ், தமிழோவியம் ஆசிரியர் கணேஷ் சந்திரா,திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம், ஆகியோரை என்றும் மறக்கவே முடியாது.
தமிழ்மணம் என்ற ஒரு ஆலமரத்தை நிறுவி நமக்கெல்லாம் ஒரு கூடு அமைக்க வழி செய்த காசிக்கும்,தமிழ்மண நிர்வாக குழுவுக்கும் என்ன சொல்லித்தான் நம் நன்றியை தெரிவிக்க முடியும்?தமிழ்மணத்துக்கு அவர்கள் செய்யும் சேவையை தமிழன்னைக்கு அவர்கள் சூட்டும் பூமாலையாகத்தான் எதிர்காலம் கருதும்.இணைய தமிழ் வரலாற்றை எழுதும்போது தமிழ்மணத்தின் பெயரையும்,காசியின் பெயரையும் பிள்ளையார் சுழிக்கு அடுத்ததாக எழுதவேண்டி வரும்.
தமிழ்மணம் மூலம் எனக்கு கிடைத்தது நட்பும்,சொந்தங்களும் தான்.யார் பேரை சொல்ல,யார் பேரை விட?
எந்துரோ மகானுபாவலு
அத்தனை பேருக்கும் என் வணக்கம்
என் சக்திக்கு எட்டியவரை நல்ல படைப்புக்களை உங்களுக்கு இந்த நட்சத்திர வாரத்தில் தரவேண்டும் என நினைத்துள்ளேன்.
இந்த நட்சத்திர வாரத்தில் எழுதவிருக்கும் சில subjects.
1.கம்யூனிசம்
2.சிம்ரன்
3.பேன்டேஜ் பாண்டியன்
4.கேள்வி கேட்பது
5.கற்பின் அரசி கண்ணகி
6.மசாலா தோசையும் வெங்காய சாம்பாரும்
(Subject ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று பயந்து விடாதீர்கள்.வழக்கமாக இப்படித்தான் கோக்குமாக்காக எழுதுவேன்.நட்சத்திர வாரத்தில் மட்டும் புதுசாவா எளுத முடியும்?:-)))))
மொத்தம் 10 கட்டுரைகளை இந்த நட்சத்திர வாரத்தில் இட எண்ணி உள்ளேன்.நிறைய எழுதினால் உங்களுக்கே அலுப்பு தட்டிவிடும்.
யாதுமாகி நின்ற பரம்பொருளை வணங்கி என் நட்சத்திர வாரத்தை இனிதே துவங்குகிறேன்.அனைவருக்கும் என் அன்பான நன்றி
மாறா அன்புடன்
செல்வன்
(தற்போது கிடைத்த ஒரு நல்ல செய்தி.இந்த பதிவிலேயே அப்டேட் செய்து விடுகிறேன்.நிலாச்சாரல் நடத்திய நிலவு சுடர் போட்டியில் என் ரஜினி வாய்ஸ்:ஒரு மனோதத்துவ ஆய்வு எனுக் கட்டுரை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.நட்சத்திர வார மகிழ்வோடு இதுவும் சேர்ந்து இரட்டை சந்தோஷம்.நிலாச்சாரலுக்கு என் நன்றி.சூப்பர் ஸ்டார் வாய்ஸை பற்றி கட்டுரை எழுதினாலே பரிசு கிடைக்கிறதே.அவர் பெயருக்குள் காந்தம் உண்டு என்பது உண்மைதான் போலும்.:-)))
Subscribe to:
Post Comments (Atom)
118 comments:
செல்வன் சார்,
நட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள் ! சரி வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஸ்டெடியா ஓட்டுங்க :-)
I think i am the first to wish you :-)
வணக்கம் செல்வன் !
வாழ்த்துகள்! உங்கள் நட்சத்திர பதிவு சன்னலில் வானம் எட்டிப் பார்க்கட்டும்! கலக்க போவது யாரு....செல்வனாச்சே!
நண்பர் செல்வனுக்கு நட்சத்திர வாழ்த்துக்கள்!
நன்றி கார்த்திக்.
முதல் வாழ்த்து உங்களுடையது தான்.நன்றி
நாம் தான் முதல் பின்னூட்டம்னு அல்ப சந்தோஷம் பட்ட நமக்கு முன்னே ஒருத்தர் இருக்கார்பா :-)),சரி ஒரு குழந்தை கிட்டே ஒரு மிட்டாய் வேணுமா ரெண்டு மிட்டாய் வேணுமானு கேட்டா ரெண்டு தானே சொல்லும் அப்போ ரெண்டு தானே டாப் :-))
வவ்வால் வாருங்கள்
நீங்கள் எட்டிப்பார்த்து வாழ்த்தியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நன்றி வவ்வால்
நம்பிக்கை வாழ்த்து தந்த நம்பிக்கை ராமரே.நன்றி
May be I am the second one
mmmmmmm okay the fouth one. Right?
anyway, congrats!!!!!!
Thanks thulasi akka.Its a pleasure to get your wishes.Thank you.
Thanks a lot Umanath selvan.
வவ்வால்,அதுக்காக ரெண்டுக்கு மேல் வேண்டாம் என இருந்து விடாதீர்கள்.கணக்கு வழக்கில்லாமல் பின்னூட்டம் இட வேண்டும்:-)))
Joke pa:-)
செல்வன் சார்,
இந்த வாரநட்சத்திரத்துக்கு என் வாழ்த்துக்கள்.
அன்பான வாழ்த்துக்கு நன்றி சிவமுருகன்.
உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களது அனைத்து தலைப்புகளையும் ஆவளுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி
பரமேஸ்வரி நம்பிள்ளை அக்கா..வாழ்த்துக்கு நன்றி
கலக்குங்க சாமியோவ்..
வாருங்கள் நண்பரே முத்து.
அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி
அன்புடன்
செல்வன்
வணக்கம் செல்வன்!
//வவ்வால்,அதுக்காக ரெண்டுக்கு மேல் வேண்டாம் என இருந்து விடாதீர்கள்.கணக்கு வழக்கில்லாமல் பின்னூட்டம் இட வேண்டும்:-)))
Joke pa:-) //
ஒன்றே நன்று!
இரண்டே எல்லை!
இரண்டுக்கு மேல் தொல்லை!
இது குடும்ப கட்டுப்பாடுக்கு தான் பின்னூட்டத்திற்கு கட்டுப்பாடு போட்டா பொழப்பு கெட்டுறாதா :-))
(சும்மா டமாஸு!)
//இது குடும்ப கட்டுப்பாடுக்கு தான் பின்னூட்டத்திற்கு கட்டுப்பாடு போட்டா பொழப்பு கெட்டுறாதா :-))//
ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர் வவ்வால்.
நன்று.நன்று.:-))))
செல்வன் டாலர் செல்வன் ஆனது எப்போது?
வாருங்கள் தேசாந்திரி.
இன்னொரு செல்வனும் தமிழ்மணத்தில் இருக்கிறார்.ஏகப்பட்ட பெயர் குழப்பம்.அடையாளத்துக்கு டாலர் சேர்த்துக்கொண்டேன்.
அடேடே பேங்க் போய் விட்டு வருவதற்குள் நட்சத்திர வாரம் ஆரம்பித்து 22 பின்னூட்டங்களும் வந்து விட்டனவா? பலே, பலே.
ஒவ்வொரு பதிவுக்கும் நூறுக்கு குறைவின்றி பின்னூட்டங்கள் பெற வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நட்சத்திரத்துக்கு நூறு டாலர் வாழ்த்து.. காலைல வந்து பதிவைப் படிக்கிறேன்.. :)
கடவுள் செல்வன் வாழ்க!!! :)
டோண்டு ஐயா,
வாருங்கள்.பெரியவரான உங்கள் ஆசிர்வாதம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி.
அன்புடன்
செல்வன்
வாங்க பொன்ஸ்.என் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துவது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.நன்றி.
அன்புடன்
செல்வன்
வாழ்த்துகள் செல்வன்.
தமிழ்மணத்தின் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள்.
உங்க பதிவுகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும், தொடர்ந்து படித்து வருகிறேன்.
நட்சத்திர பதிவுகளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
- பரஞ்சோதி
செல்வன், நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ வாழ்த்துக்கள்
பரஞ்சோதி.வாருங்கள்.உங்கள் பல கதைகளை நான் படித்து ரசித்துள்ளேன்.என் பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.
மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது பரஞ்சோதி.நன்றி
வாருங்கள் கால்கரி சிவா.அன்பான வாழ்த்துக்கு நன்றி.
Hot Star after a Hot blog (Simbu :-) )
Congrats!
Thanks a lot prabuRaja.Manmathan was a hot movie,so the reviews to it were also hot:-)))
Thanks
selvan
வாழ்த்துக்கள் செல்வன்.
கலக்குங்க செல்வன்...
நன்றி நன்மனம்
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க:-))
என் வலைபதிவினுள் புகுந்த ஆண் சிங்கமே,,செந்தழல் ரவி...நன்றி..நன்றி
அன்புடன்
செல்வன்
வாழ்த்துக்கள் செல்வன், கலக்குங்க நட்சத்திர வாரத்தில்!
வாருங்கள் வெளிகண்டநாதரே.நன்றி..நன்றி.
இன்னும் தூங்கவில்லையா?நள்ளிரவு தாண்டியாச்சே?
அன்புடன்
செல்வன்
Eagerly waiting for your post on Simran. Hi!Hi!
தங்கவேல் அவர்களே
வாருங்கள்..வாழ்த்துக்கு நன்றி
அருமையான பதிவுகளை அளிப்பவராயிற்ரே நீங்கள்.உங்கள் பரிணாமவாத கட்டுரையை மகிழ்வோடு படித்தேன்.
டார்வின் பற்றி சில பதிவுகள் போட்டுள்ளேன்.அவற்றில் இரண்டின் சுட்டிகள் இதோ.படித்து பாருங்கள்.
நன்றி தங்கவேல்
http://holyox.blogspot.com/2006/01/blog-post_17.html
http://holyox.blogspot.com/2006/01/blog-post_20.html
வாழ்த்துக்கள் செல்வன்$
வாங்க சிபி.
நீங்க பெயருக்கு பின் புரொபைல் எண்ணை சேர்த்துக்கொண்டீர்கள்.நான் டாலரை சேர்த்துக்கொண்டேன்.:-))
நன்றி சிபி
அன்புடன்
செல்வன்
நட்சத்திரம் செல்வன்
வாழ்த்துக்கள். தாங்கள் ஒரு ஆய்வு மாணவர் என்பதை அறிந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் உங்களது ஆய்வு தத்துவதுறையைச் சார்ந்தது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
தாங்கள் கூறியுள்ளதுபோல் தத்துவம் என்பது, மனிதனை மேம்படுத்துவதும், சமூகத்தை பலப்படுத்துவதும், சமூகத்தை மாற்றியமைப்பதுமாகும். இந்த வேலையை தத்துவம் நீண்ட காலமாக தொடர்ந்து செய்து வருகிறது.
உங்களது நட்சத்திரவார பதிவுகள் தேர்வு அருமையாக உள்ளது. குறிப்பாக கம்யூனிசம். வாழ்த்துக்கள். உங்களது தத்துவத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை நன்றாக கற்றிருப்பீர் என்று நினைக்கிறேன். மேலும் அதனை பலப்படுத்தினால் சிறப்பாக அமையும்.
பொதுவாக உங்கள் எழுத்துக்கள் நல்லமுறையில், நல்ல சிந்தனையோடு பதியப்படுகிறது. சமூகத்தின் மீதான பாசம் அதில் வெளிப்படும். மேலும் புதிய கோணத்தில் அதனை தரும் விதம் சிறப்பானது.
அடுத்து ரஜினியின் வாய்சுக்கு பரிசு கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
தொடருங்கள் உங்கள் பயணத்தை...
செல்வன்,
வாழ்த்துக்கள்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
சகோதரரே சந்திப்பு...
வாருங்கள்..விரிவான பின்னூட்டத்தை அளித்தீர்கள்.என் ஆய்வுத்துறை தத்துவமல்ல.சந்தையியல்.Applied philosophy என சொல்லலாம்.
தத்துவம் என்பது நீங்கள் சொன்னதுபோல் மனிதனை மேம்படுத்தத்தான்.வழிமுறைகள் மாறுகின்றனவே தவிர்த்து நோக்கம் ஒன்றுதான். "இயக்கவியல் பொருள் முதல்வாதம்" என்றால் ஆங்கிலத்தில் என்ன?தனித்தமிழ் சரியாக தெரியவில்லை சகோதரரே.
வாழ்த்துக்கு நன்றி தோழர் சந்திப்பு.
வாருங்கள் ஈழத்தமிழ் சகோதரரே.வெற்றி.
வாழ்த்துக்கு என் அன்பான நன்றி.
வாழ்த்துக்கள் செல்வன். பரிசோடு துவக்கம் நல்ல ஆரம்பமே, மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்!!
Selvan
Dialetical Materialism and Historical Materialism.
வணக்கம் செல்வன்!நட்சத்திர வாழ்த்துக்கள்!
அன்புடன்,
(துபாய்)ராஜா.
தோழர் சந்திப்பு
அவை மார்க்ஸ், ஹெகல் காலத்திய கொள்கைகள்.அவற்ரை ஆழ்ந்து படிக்கவில்லை நண்பரே.ஆயினும் அவற்றின் அடிப்படையை சொல்லித்தந்தனர்.தற்போதைய அமெரிக்க தத்துவ ஞானிகளின் படைப்புக்கே முன்னுரிமை தந்து பயிற்றுவித்தனர்.
நன்றி சந்திப்பு
மணியன் ஐயா வாருங்கள்
பெரியவரான நீங்கள் வாழ்த்தியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.எழுத்துலகில் நீங்கள் சாதித்ததில் ஒரு துளி அளவேனும் சாதித்தால் மிகவும் மகிழ்வேன்.
நன்றி ஐயா
வாருங்கள் துபாய் ராஜா.
வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்புடன்
செல்வன்
hi partner,
ரொம்ப லேட்டா வந்திட்டேனோ? அதனாலென்ன, நம்ம எல்லாம் லேட்டா வந்தாலும்..........(மீதியை நீங்களே ஏதோ பார்த்து முடிச்சிக்கங்க!)
நட்சத்திர வாரத்திற்கும், கிடைத்திருக்கும் கட்டுரைப் பரிசுக்கும் வாழ்த்துக்கள்.
பார்ட்னர்..வாங்க..வாங்க....
நீங்க லேட்டா வரலை பார்ட்னர்.....பதிவு போட்டு கொஞ்சம் நேரம் தான் ஆச்சு.:-))
வாழ்த்துக்கு நன்றி பார்ட்னர்
அன்புடன்
செல்வன்
பழச வைச்சி ஒரு மாதிரி ஓட்டிடிருக்கிறோம்...புதிதாக யோசிக்கணுமோ...பிரயோக தத்துவவியலா...சரி அசத்துங்க!
நிறைய வாழ்த்துக்களுடன்!
செகசித்தன்
வாருங்கள் சித்தன்,
தத்துவம் மக்களுக்கு பயன்படாவிட்டால் அது எதுக்கு?என்ன பயன்?
தத்துவம் தற்போது ஆய்வுக்கும்,விஞ்ஞானத்தின் அடிப்படையாகவும் உள்ளது.நாம் ஏன் கேள்வி கேட்கிறோம் என விளக்கும் தத்துவத்துறை epistemology ஆகும்.
நன்றி சித்தன்
வாழ்த்துக்கள்...செல்வன்...!!
வாருங்கள் வஜ்ரா.
நீங்கள் வந்ததில் மிக மகிழ்ச்சி.வாழ்த்துக்கு நன்றி
அன்புடன்
செல்வன்
நட்சத்திர வாழ்த்துக்கள் செல்வன்...
கூடவே உங்கள் பரிசு பெற்ற கட்டுரைக்கும் வாழ்த்துக்கள்!! :)
வாருங்கள் இளவஞ்சி
நீங்கள் வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது.
பரிசு சூப்பர்ஸ்டாருக்கு சமர்ப்பணம்:-))
நன்றி இளவஞ்சி
அன்புடன்
செல்வன்
வாழ்த்துக்கள் செல்வன்.
வாழ்த்துக்கள் செல்வன்
அட, அதுக்குள்ளே தம்பிக்கு இவ்வளவு பேர் வாழ்த்து சொல்லிட்டாங்களே. ம்ம்ம்.
ஆனாலும் தலைவர் சொல்றது போல லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்லெ...
நிலாச்சாரல் பரிசுக்கும் ஒரு வாழ்த்து
கம்யூனிஸத்தை பற்றியும் மற்ற தலைப்புகளில் எழுதும் கட்டுரைகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மேலும், மேலும் வெற்றிப்பெற அண்ணனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த வார ஸ்டாருக்கு எதிர்கால ஸ்டாரின் வாழ்த்துக்கள் (எல்லாம் பேராசைதான்).......கலக்குங்க ஆமா உங்க சப்ஜக்டுல ஒன்னு விடுபட்டுபோச்சாட்டுக்கு? ஸ்டாரானதும் சூப்பர் ஸ்டார மறந்துடாதீங்க.. ஆயிரம் வாழ்த்துக்களுடன் அன்புடன் மகேந்திரன்.
வாழ்த்துக்கள் செல்வன்,கலக்குங்க...
எளிமையாக அதே நேரம் செறிவான கருத்துகளோடு நட்சத்திர வாரத்தை துவக்கியிருக்கிறீர்கள். உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாக காத்திருக்கிறேன். இனிமையான சிறப்பானதொரு வாரமாக அமைய வாழ்த்துகள்...
அட. நம்ம செல்வன் இந்த வார விண்மீனா? சிறப்போ சிறப்பு (சூப்பரோ சூப்பர் தானுங்க)! எழுத்தாளர் திலகமே! தத்துவச் செல்வரே! வாழ்த்துகள்.
வழக்கம் போல இந்தப் பதிவும் நம்ம மண்டையில ஏறலை. ஹிஹி... சும்மா தமாஸு.
வாழ்த்துகள் செல்வன். இந்த நட்சத்திர வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.
நட்சத்திர வார எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் செல்வன் :)
செல்வன்,
மத்தியானம் இணைய இணைப்புக் கிடைக்கவில்லை. அதனால் நான் பார்க்கவில்லை. ரொம்ப லேட் நான் தான்.
மனமார்ந்த நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
நிலாச்சாரல் பரிசுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் நட்சத்திர வாரம் இனிதே அமைய என் வாழ்த்துகள் செல்வன்.
வாய்த்துபா. எல்லாத்துகுமேதான்.வ(ர்)ட்டா?
வாழ்த்துக்கள் செல்வன்.
"வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்". அது போல உங்க "வீரபாண்டிய கவுண்டமணி", "பாண்டெஜ் பாண்டியன்" இவற்றையெல்லாம் படித்து நான் சிரித்தது மறக்க முடியாதது. நீங்கள் சினிமாவைப்பற்றி எழுதினாலும் சரி புராணங்களைப்பற்றி எழுதினாலும் சரி எனக்கு புதிய தகவலாகவும் படிக்க சுவாரசியமாகவும் இருக்கிறது.
என் தலைவர் கவுண்டமணியை பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்:).
மீண்டும் வாழ்த்துக்கள்.
நரியா
// மெய்ஞ்ஞானம் என்பது மனிதனை தெய்வமாக்குவதல்ல என்பதும் அவனிடம் உள்ள மிருக உணர்ச்சியை அவன் சுயமுன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் ஒரு கருவியே சமூகம என்பதை உணர்கிறேன். //
நட்சத்திர வார செல்வனை வாழ்த்தி வரவேற்கிறேன்.
நீங்கள் போடும் போட்டில் கடவுள் கான்சப்ட் தலை தெரிக்க ஓடவேண்டும்....
வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் செல்வன்.
அதென்ன கம்யூனிசமும், சிம்ரனும், ஒரே கதம்ப வாசனையாக இருக்குது?
அனைவருக்கும் நன்றி.பிளாக்கர் சொதப்புகிறது.பதில் அடிக்க முடியவில்லை.புதிதாக கட்டுரை ஒன்றை அப்லோட் செய்து எனும் செய்தி வருகிறது.மதியம் மீண்டும் முயல்கிறேன்
அனைவருக்கும் நன்றி.பிளாக்கர் சொதப்புகிறது.பதில் அடிக்க முடியவில்லை.புதிதாக கட்டுரை ஒன்றை அப்லோட் செய்து எனும் செய்தி வருகிறது.மதியம் மீண்டும் முயல்கிறேன்
அனைவருக்கும் நன்றி.பிளாக்கர் சொதப்புகிறது.பதில் அடிக்க முடியவில்லை.புதிதாக கட்டுரை ஒன்றை அப்லோட் செய்து எனும் செய்தி வருகிறது.மதியம் மீண்டும் முயல்கிறேன்
வாழ்த்துக்கள்
விண்மீன் ஜொலிக்க வாழ்த்துகள்!
மிக்க நன்றி பட்டணத்து ராசா
கூட்டணி தோழா தேவ்...நன்றி
மஞ்சூர் அண்ணா
வாருங்கள்.வாருங்கள்.அண்னனின் வாழ்த்துக்கு தம்பிக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.முத்தமிழுக்கே முழு வெற்றியும்
நன்றி அண்ணா
செல்வன்
கண்டிப்பாக ஸ்டார் ஆவீர்கள் மகேந்திரன்.இதில் என்ன பேராசை?தகுதியான ஆசை தான்.ஸூப்பர் ஸ்டாரை மரக்க முடியுமா?அவர் தான் பரிசு வாங்கி கொடுத்து அசத்திட்டாரல்ல?
வாழ்த்துக்கு நன்றி சுதர்சன் கோபால்
வாழ்த்துக்கு நன்றி முத்துகுமரன்.உங்கள் விருப்பப்படி நல்லதாக தர முயல்கிறேன்.
அன்புடன்
செல்வன்
குமரா...ஆயிரம் இருந்தாலும் கட்சி தலைவர் வாழ்த்தியது போல் வருமா?
நான் தத்துவ செல்வனல்ல....தத்தி தவழும் சிறுவன்.அதனால் தான் அவதாரை மாற்றிவிட்டேன்.:-))
ராகவன் வாருங்கள்.
வாழ்த்துக்கு நன்றி..இனியது கேட்கின் ஆனந்தமே ஆனந்தம் தான்
அன்புடன்
செல்வன்
நியோ
வாருங்கள்...வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி
அன்புடன்
செல்வன்
கீதா சாம்பசிவம் அக்கா
வாருங்கள்...லேட் எல்லாம் இல்லை.அங்கே மத்யானம் எனும்போது இங்கே நள்ளிரவு.காலையில் வந்ததும் உங்கள் வாழ்த்து தான் முதலில் வந்தது.
நன்றி அக்கா
செல்வன்
அன்பு தம்பி கைப்ப்பூஊஊ
நன்றி..நன்றி....நம்ம வ.வா.ச கூட்டணியோட புகழை இந்த வாரத்தில் காப்பாத்துவேன்னு உறுதிமொழி எடுத்துக்கறேன்
அன்பு இலவச கொத்ஸூ
நன்றி..நன்றி.....
நன்றி நாரியா
பான்டேஜ் பாண்டியன் நாளை அல்லது புதனன்று வருவார்.கவுண்டமணி இப்போது வராவிட்டாலும் நிச்சயம் வரும் வாரங்களில் எழுதுகிறேன்
நன்றி
அஷ்லின் நன்றி,
எல்லாம் நேரம் வேறென்ன சொல்ல?இல்லையா?:-))
வாருங்கள் சிவபாலன்
வாழ்த்துக்கு நன்றி
கடவுளை பற்றி இனி ஒன்றும் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.சொல்ல வேண்டிய அனைத்தும் அந்த விஷயத்தில் சொல்லியாச்சு என தோன்றுகிறது
தாணு வாருங்கள்
வாழ்த்துக்கு நன்றி
உண்மையை சொல்ல போனால் கம்யுனிச கட்டுரையை விட சிம்ரனை பற்றிய கட்டுரை தான் informative valueவோடு இருக்கும்.அது பொழுதுபோக்கு கட்டுரை அல்ல.புதனன்று அல்லது நாளை இடுகிறேன்
நன்றி
எஸ்.கே வாருங்கள்
என்னை விட நீங்கள் அதிக சந்தோஷம்மாக இருப்பீர்கள் என தெரியும்.விரைவில் நீங்கள் நட்சத்திரமாக கடவுலை வேண்டுகிறேன்.
நன்றி எஸ்.கே
சந்த்ரவதனா
வாருங்கள்.மூத்த வலைபதிவரான நீங்கள் வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மிக்க நன்றி
செல்வன்
வழக்கம்போல கலக்குங்க...
//என் படைப்புக்களை வெளியிட்டு ஊக்கமளித்த நிலாச்சாரல் ஆசிரியர் நிலாராஜ்,//
நட்சத்திர வாரத்தின் முதல் பதிவிலேயே நன்றி நவிலலா? :-)
புது ட்ரெண்ட்தான் :-)))
தலைப்பெல்லாம் ஆவலைத் தூண்டியிருக்கு... அப்புறமா வர்றேன்
//நிலாச்சாரல் நடத்திய நிலவு சுடர் போட்டியில் என் ரஜினி வாய்ஸ்:ஒரு மனோதத்துவ ஆய்வு எனுக் கட்டுரை பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது//
மென்மேலும் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்...
வாருங்கள் நிலா.வாழ்த்துக்கு நன்றி
//மென்மேலும் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்... //
முதல் முதலாக இப்போது தான் எழுதி பரிசு வாங்குகிறேன்.நன்றி
வாருங்கள் பாபிள்.பெரிய எழுத்தாளன் எல்லாம் கிடையாதுங்க.அந்த தலைப்புல கொஞ்சம் தெரியும் அவ்வளவுதான்.
நன்றி பாபிள்
செல்வன்!
நட்சத்திரவாரத்துக்கு வாழ்த்துக்கள். இனிமேதான் உங்க பதிவுகள் படிக்கோணும். ஆனா எல்லாத் தலைப்பும் ரொம்ப கனதியா இருக்கும் போல... நமக்கு அந்த ஆறாவது தலைப்புத்தான் சரியாப்படுது. பார்ப்போம்.
அன்புள்ள சம்பத்,
நட்சத்திரப் வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.
"முத்தமிழ் குழுவின் 210 சொந்தங்களையும்,நம்பிக்கை குழுவின் 200 சொந்தங்களையும்"(yadda yadda) "நான் அடைந்தது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்."
அடடடடா!! கொன்னுட்டீங்கப்பா.. புல்லரிக்குது போங்க! ;-)
அன்பின் மலைநாடன்
நன்றி.ஆம்..சில தலைப்புக்கள் கனமானவை போல் தோன்றினாலும் முடிந்தவரை எளிமைப்படுத்தியே தந்துள்ளேன்.சிம்ரன்,பான்டேஜ் பாண்டியவன் ஆகியவை படிக்க லேசாகத்தான் இருக்கும்
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மலைநாடன்
அன்பின் சேதுக்கரசி,
வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
தலை
பிச்சிப்புட்டீங்கோ ;)
நல்ல பதிவு, நல்ல படைப்பு, நல்ல பதில்களூம் :), முத்தமிழிற்கும், நம்பிக்கைக்கும் பெருமை சேர்த்தமைக்கு நன்றி தலை :)
என்றென்றும் நீங்கா பாசத்துடன்,
ஸ்ரீஷிவ்...:)
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சிவா....
உங்கள் மடிக்கணினி சரியாகி விட்டதா?
செல்வன், தாமதமாக வருவதற்கு மன்னியுங்கள். நேற்றே இதைப்படிக்கவேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது.
நீங்கள் எப்படி இவ்வளவு வித்தியாசமான தலைப்புகளில் சரளமாக எழுதுகிறீர்கள்? கம்யூனிசம் எங்கே சிம்ரன், ரஜினி எங்கே. என்னவோ கலக்குங்க. படிக்க ஆவலா இருக்கேன்.
அன்பின் ரமணி
வாருங்கள்.நட்சத்திர வாரத்தில் உங்கள் வாழ்த்து கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்து கட்டுரைகளையும் இடுகிறேன்.குறை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி ரமணி
செல்வன்,
//அருமையான பதிவுகளை அளிப்பவராயிற்ரே நீங்கள்.உங்கள் பரிணாமவாத கட்டுரையை மகிழ்வோடு படித்தேன்.//
எனது பதிவுகளைப் படித்து தங்கள் கருத்துக்களைச் சொன்னதிற்கு மிக்க நன்றி. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் கருத்துக்களால் உந்தப்பட்டு மீண்டும் ஒருமுறை எனது பதிவுகளை மொத்தமாகப் படித்தேன்; நீங்கள் சொன்னதுபோல் நன்றாகத்தான் உள்ளது. உங்களது கருத்துக்கள் என்னை மீண்டும் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கின்றன.
.
எங்கள் அன்புச்செல்வன் அண்ணா,
தமிழ்மணத்திலும் உங்கள் கைவண்ணம் நட்சத்திரமாய் மிளிர்வதைப்பார்த்து மிகுந்த மகிழ்ச்சி.
உங்கள் அறிவுக்குத்தலைவணங்கும் அன்புசார் உள்ளங்களையும் உங்கள் அன்புக்குத்தலை வணங்கும் அறிவுசார் உள்ளங்களையும் நினைக்கையில் மகிழ்ச்சி பூக்கீன்றது.
உங்கள் படைப்புகள் என்றென்றும் நட்சத்தி(த)ரமாய் மிளிர என்றும் என் வாழ்த்துக்கள் அண்ணா.
//உங்கள் கருத்துக்களால் உந்தப்பட்டு மீண்டும் ஒருமுறை எனது பதிவுகளை மொத்தமாகப் படித்தேன்; நீங்கள் சொன்னதுபோல் நன்றாகத்தான் உள்ளது. //
ஹாஹாஹா. இதனை எத்தனை தடவை நானும் செய்திருப்பேன். நம் பிள்ளையை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பதே தனி சுகம். இல்லையா? :-)
அன்பின் தங்கவேல்
நல்ல சிந்தனையோடு பதிவுகளை எழுதும் தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விடுத்து நல்ல கருத்துக்களை எழுதினால் அதற்கென ஒரு வாசகர் வட்டம் உருவாகும்.அது நாளுக்கு நாள் அதிகரிக்குமே ஒழிய குறையாது
நன்றி தங்கவேல்
அன்பின் என்றென்றும் உங்கள்
அனைத்தும் இறைவன் அருளே.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி உடன்பிறப்பே
நம் குழந்தையை அடுத்தவர் கொஞ்சினால் அதில் வரும் இன்பமே தனி குமரன்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய்
ஒவ்வொரு பதிவருக்கும் அவர் படைப்பு குழந்தையே.அதனால் தானே படைப்பு என்கிறோம்?
// கடவுளை பற்றி இனி ஒன்றும் எழுதுவதில்லை என முடிவெடுத்துள்ளேன்.சொல்ல வேண்டிய அனைத்தும் அந்த விஷயத்தில் சொல்லியாச்சு என தோன்றுகிறது //
செல்வன்,
என் போன்ற உங்கள் ரசிகர்களுக்காக முடிந்த வரை மாதம் ஒரு பதிவாவது போடுங்கள்.
நிலாச்சாரல் வெற்றிக்கும், நட்சத்திர வாரத்திற்குமாக எனது இரட்டை வாழ்த்துக்கள்.
அன்பின் சிவபாலன்,
நிச்சயம் முயல்கிறேன்.
நன்றி சிவபாலன்
அன்பின் பச்சோந்தி,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
செல்வன்
Post a Comment