Saturday, June 10, 2006

108.மீண்டும் சந்திப்போம்

நேற்றுதான் நட்சத்திர வாரம் துவங்கியது போல் இருக்கிறது.இன்று முடிந்துவிட்டது.நிறைய புதுநண்பர்களை இந்த நட்சத்திர வாரம் அறிமுகப்படுத்தியது.பல வலைபதிவர்கள் பதிவை விட அருமையான பின்னூட்டங்களை அளித்தனர். இந்த வாரம் முடிந்ததும் பதிவுகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள இருக்கிறேன்.வேலை பளு அதிகமாகிவிட்டது முக்கிய காரணம்.அக்டோபர் வரை பதிவுகளில் அதிக கவனம் செலுத்த இயலாது.வாரம் ஒரு பதிவு மட்டுமே இயலும் என நினைக்கிறேன்.அக்டோபர் முடிந்ததும் மீண்டும் முழு வீச்சில் வருகிறேன். இந்த வாய்ப்பை அளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும்,உற்சாகமாக படித்து வாழ்த்தும்,திருத்தமும் சொன்ன நண்பர்களுக்கு என் நன்றி.குறிப்பாக நேற்று என் பதிவில் ஒரு சிக்கல் ஏற்பட்டபோது உடனடியாக உதவி செய்த நண்பர் மாயவரத்தானுக்கு என் மனமார்ந்த நன்றி. அடுத்த வார நட்சத்திரத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

38 comments:

Karthikeyan said...

வாழ்த்துக்கள் செல்வன் சார்...நீங்கள் நட்சத்திரமான விஷயம் இப்பொழுதுதான் தெரியவந்தது... உங்கள் பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன் மீண்டும் சந்திக்கலாம்.

அன்புடன்
கார்த்திகேயன்

மணியன் said...

செல்வன்$, ( $ரை டார்லிங் எனச் சொல்லத் தோன்றுகிறது) நல்ல சில கருத்துக்களை விவாதிக்க, சிந்திக்க வைத்த உங்கள் பதிவுகள் பாண்டேஜ் பாண்டியனால் சிரிக்கவும் வைத்தது.
வாழ்த்துக்கள்!

Unknown said...

பேராசிரியர் கார்த்திகேயன் அவர்களே

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மணியன் ஐயா,

எழுத்துலகில் சிகரம் தொட்ட நீங்கள் வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.நட்சத்திர வார துவக்கத்திலும் இப்போதும் உங்கள் வாழ்த்துக்கள் கிட்டியதில் மிகுந்த மகிழ்ச்சி.

அன்புடன்
செல்வன்

மணியன் said...

மன்னிக்கவும், செல்வன்$ $elvan ஆனது பார்க்கவில்லை. உண்மையான நட்சத்திரம்தானே ;)

Unknown said...

மணியன் ஐயா,

"செல்வன் டார்லிங்" இன்று முதல் "டாலர் செல்வன்" ஆகிவிட்டான்.ஆங்கில பிளாக் துவக்கியதால் தான் பெயரை மாற்றினேன்.

நீங்கள் சொன்னபிறகுதான் செல்வன்$க்கு செல்வன் டார்லிங் என்ற அர்த்தம் கூட உண்டு என தோன்றுகிறது.

பெத்தராயுடு said...

செல்வன்,

நட்சத்திர வாரத்தில் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டாராக மின்னினீங்க என்றால் மிகையில்லை.

வாழ்த்துகள்.

அன்புடன்,
பெத்தராயுடு.

துளசி கோபால் said...

நல்ல வாரமாக இருந்தது $ரே.

Unknown said...

பெத்த ராயுடு

மிக்க நன்றி.முதல் முதலாக என் வலைதளத்துக்கு வருகை புரிந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என நன்றி.

துளசி அக்கா

நன்றி.செல்வன் $ஆக காரணம் இங்கு இன்னொரு செல்வன் இருப்பதுதான்.ஏகப்பட்ட பெயர் குழப்பம் ஆனதால் பெயரை மாற்றிக்கொண்டேன்.

வாழ்த்துக்கு நன்றி துளசி அக்கா

துளசி கோபால் said...

//ஏகப்பட்ட பெயர் குழப்பம் ஆனதால் ...//

நல்ல வேளை. இன்னும் 'துளசி' வரவில்லை:-)

வெளிகண்ட நாதர் said...

அதிகமாக என்னால் உங்கள் எல்லா பதிவுகளிலும் பின்னூட்டமிட முடியவில்லை எனினும் படித்து பிடுவதுண்டு. இங்கள் பேண்டேஜ் பாண்டியன் நல்ல காமடி, இந்த் அனு அக்கா ஸ்டைலில் நன்றாக எழுதினீர்கள். நட்சத்திர வாரத்தில் மின்னியதற்கு வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!
அருமையான பதிவுகளை வழங்கினீர்கள் (பின்னூட்டங்களில் நானும் கொஞ்சம் கலாசிட்டேன் கண்டுக்காதிங்க அத எல்லாம்:-)) ) ,நட்சத்திர வாரம் என்று இல்லை எப்பொழுதும் இது போல் சிறப்பாக செயல்படுங்கள் ,மேலும் பல நல்ல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

சிவா said...

ரொம்பவே அருமையாக கொண்டு சென்றீர்கள். வாழ்த்துக்கள். எல்லா பதிவுகளையும் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.

அன்புடன்,
சிவா

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் செல்வன். இன்னும் உங்கள் இந்த வாரப் பதிவுகள் எல்லாவற்றையும் படித்து முடிக்கவில்லை. கட்டாயம் படிப்பேன். படித்து அங்கேயே என் பின்னூட்டத்தை இடுகிறேன். நீண்ட விடுமுறையில் போகாமல் வாரம் ஒரு பதிவாவது எழுதுங்கள்.

Sundar Padmanaban said...

Selvan,

Thanks for all the posts.

Anbudan.
Sundar.

Sivabalan said...

செல்வன்,

மிக அருமையான பதிவுகளை தந்து மகிழ்விச்சீர்கள்.

வாழ்த்துக்கள்.

ilavanji said...

$elvan,

சுவாரசியமான வாரம்!

அடிக்கடி வரமுடியாதுங்கறீங்க! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வாங்க! :)

மாயவரத்தான் said...

நன்றிக்கு பதில் நன்றி.

அருமையான பதிவுகள்.

வேலை பளு குறைந்தவுடன் மீண்டும் வாருங்கள்.

சிவமுருகன் said...

வாழ்த்துக்கள் செல்வன் சார்...
நல்ல வாரமாக இருந்தது.

wish you a very happy weekend

தாணு said...

கம்யூனிசப் பதிவுக்கெல்லாம் பின்னூட்டம் இட நேரமில்லை ஆனாலும் வாசித்தேன். நிறைவான வாரம்

பினாத்தல் சுரேஷ் said...

சுவாரஸ்யமாகச் சென்றது செல்வன்.

பாண்டேஜ் பாண்டியனை ஐ சி யூவிற்கு அனுப்பிவிடாதீர்கள்:-) த்டர்ச்சியாகக் கொண்டு வரச்சொல்லுங்கள்.

பிரபல மதம் பற்றிய பதிவும் வித்தியாசமான சிந்தனையைக் காட்டியது..

வாழ்த்துக்கள்.

VSK said...

வடை, பாயாசம், சாம்பார், ரசம், ,தயிர் என ஒரு அறுசுவை விருந்து சாப்பிட்டு முடித்த திருப்தி, இந்த ஒரு வாரப் பதிவுகளினால் ஏற்பட்டது எனச் சொன்னால், அது மிகையாகாது!

நல்ல நட்சத்திரமாக மின்னினீர்கள்!

Sivabalan said...

அருமையான பதிவுகள்!!

மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.

(This is my second comment in this blog. Even in some of your other blogs also, my comments did not appear. May be due to Blogger probalem)

Anonymous said...

Selvan,

Please post this comment in your blog "108.மீண்டும் சந்திப்போம்" .


அருமையான பதிவுகள்!!
மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.

(This is my second comment in this blog. Even in some of your other blogs also, my comments did not appear. May be due to Blogger probalem)

Anonymous said...

செல்வன், நல்லவாரம். வேலைகளை செவ்வனெ முடித்து பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர வாழ்த்துக்கள்

Unknown said...

அன்பு நண்பர்களே

அனைவருக்கும் விரிவான பதிலை இன்று மாலை இடுகிறேன்.சிவபாலன் ஹேலொஸ்கான் நிறுவி பின்னூட்டங்களில் சிறிது குழப்பம் ஏற்பட்டுவிட்டது.மன்னிக்கவும்.

அன்புடன்
செல்வன்

வெற்றி said...

செல்வன்,
அருமையான பல பதிவுகளைத் தந்தமைக்கு நன்றிகள். கடந்த வாரம் ஈழத்தில் இடம்பெற்ற சிங்களப் பயங்கரவாதத்தால் என் உறவுகள் கொல்லப்பட்ட செய்தி அறிந்து[சின்னக் குழந்தைகள் உட்பட] மனமுடைந்து இணையத்தளப் பக்கம் வராததால் தங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்க முடியாது போய்விட்டாலும், படித்த பதிவுகள் மிகவும் அருமையாக இருந்தன. நன்றிகளும் வாழ்த்துக்களும்.

அன்புடன்
வெற்றி

பொன்ஸ்~~Poorna said...

செல்வன்,
ப்ளாக்கர் பிரச்சனை செய்தாலும் இந்த வாரம் சுறுசுறுப்பாகவே சென்றது.. பல்வகைப்பட்ட தலைப்புகளைத் தொட்டிருந்தீர்கள்.. இருந்தாலும் சில பதிவுகள் எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாகத் தோன்றின - ரொம்ப ஆழமான பதிவுகளாகப் போய்விட்டன என்பது என் எண்ணம்..

நீங்கள் தான் நட்சத்திரம் என்றவுடன், இந்திய நேரம் இல்லாமல், பதிவுகள் நமது நேரத்தில் வரும், எல்லாவற்றையும் படிக்கலாம் என்று நினைத்திருந்தேன்.. ஆனால், எல்லா விதமான நேரங்களிலும் பதிவிட்டதில் படிக்கத் தான் கொஞ்சமே கொஞ்சம் திணறிவிட்டேன்.. வேலைகள் முடிந்து சீக்கிரம் திரும்பி வர வாழ்த்துக்கள. :)

இலவசக்கொத்தனார் said...

நிறையா விஷ்யங்க்ள் புரியாத லெவலில் இருந்தாலும், புரிந்தவைகள் நன்றாகவே இருந்தது. வாழ்த்துக்கள் வாத்தியாரே.

Unknown said...

வெற்றி,

மிகவும் வேதனை அடைந்தேன்.உங்கள் உறவினர்களின் குடும்பங்களுக்காக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.நெஞ்சு பொறுக்குதில்லையே எம் சகோதரர் துயரை பார்க்க.எப்போது இந்த துயர் தீருமோ என எண்ணிப்பார்த்தால் விடை ஒன்றும் தோன்றவில்லையே?

Unknown said...

துளஸி அக்கா,
இன்னும் ஆயிரம் பேர் வந்தாலும் துலஸி என்றால் நீங்கள் தான்.என் கதை அப்படியா?இப்ப தான் புதுசா வந்திருக்கேன்.

வெளிகண்ட நாதர்,
வாழ்த்துக்கு நன்றி.உங்கள் பழைய பதிவுகளை தேடி படித்து கொண்டிருக்கிறேன்.மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

வவ்வால்,
உங்கள் பின்னூட்டங்கள் நீங்கள் நிறைய விஷயம் தெரிந்தவர் என்பதை காட்டின.உங்கள் வலைபதிவும் அருமையாக கவிதை மணம் கமழ்கிறது.இனியும் எழுதுவேன் வவ்வால்.ஆனால் அதிகபட்சம் வாரம் ஒன்று தான் முடியும்.சில மாதங்களில் வேலை முடிந்ததும் மீண்டும் முழுவீச்சில் இரங்கிஉவிட வேண்டியதுதான்.

சிவா,(சிவபுராணம்)
வாழ்த்துக்கு நன்றி.நேரம் கிடைக்கும்போது படித்து கருத்து சொல்லுங்கள்.நன்றி சிவா.

குமரன்,
நீண்ட விடுமுறை எல்லாம் இல்லை.தினமும் தமிழ்மணம் பக்கம் வராமல் இருக்க மாட்டேன்.வாரத்துக்கு ஒரு பதிவு நிச்சயம் இடுவேன்.நன்றி குமரன்,.

சுந்தர்,
பெப்சி பதிவில் பதிவை விட மிக அருமையான பின்னூட்டம் நீங்களும் வவ்வாலும் இட்டீர்கள்.உங்கள் பின்னூட்டங்களை தொகுத்தாலே இன்னொரு பதிவு தயாராகிவிடும்.நன்றி சுந்தர்.

சிவபாலன்
ஒவ்வொரு பதிவையும் படித்து பின்னூட்டம் இட்டீர்கள்.மிக்க நன்றி.நீங்கள் சீக்கிரம் பதிவு ஆரம்பியுங்கள்.புராஜக்ட் மெனேஜ்மென்ட் பற்றி எழுதுகிறேன் என்றீர்கள்.சீக்கிரம் செய்யுங்கள்.

இளவஞ்சி,
நன்றி.உங்க பழைய பதிவுகளை தேடிபிடிச்சு TCஏ பத்தி படிச்சு பாக்கணும்.நம்ம கல்லூரி மக்கள் ஒரு யாகூ குழுமம் துவக்கிருக்காங்க.உங்களுக்கு தெரியுமா என்னன்னு தெரியலை.இதோ அந்த வலைதளம்.

http://groups.yahoo.com/group/ex_tce/

சிவமுருகன்,
நன்றி.நம்ம முத்தமிழில் சந்தித்துக்கொண்டு தானே இருப்போம்?உங்கள் பதிவுகளையும் தொடர்ஞ்து படிப்பேன்.

தாணு
நன்றி.நேரம் கிடைக்கும்போது மற்ற பதிவுகளையும் படித்து கருத்து சொல்லுங்கள்.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

சுரேஷ்(பெனாத்தல்)

முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டம் இடுகிறீர்கள் என நினைக்கிறேன்.நன்றி.பாண்டியன் கண்டிப்பாக தொடர்ஞ்து வருவார்(பேன்டேஜுடன்):-))

நன்றி சுரேஷ்

எஸ்.கே சார்
வாழ்த்திலும் கவிதை மணக்குது.நன்றி.நீங்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்.முக்கியமாக தமிழ் கவிதை இடுங்கள்.நன்றி எஸ்.கே.

கால்கரி சிவா,
உங்கள் வாக்கு பலித்து நல்ல வேலை கிடைக்க ஆண்டவன் அருள் புரிவானாக.நன்றி சிவா

பொன்ஸ்
நீங்கள் சொன்னமாதிரி நிறைய பதிவுகள் இட்டதும்,கடினமான தலைப்புக்களைல் எழுதியதும் ஒரு குறைதான்.பிளாக்கர் பகவான் வேறு அவ்வப்போது சோதனை செய்தார்.பகலில் பதிப்பிடவே முடியவில்லை.அதனால் தான் இரவில் பதிப்பிட்டு நீங்கள் படிக்க சிரமம் ஏற்பட்டது.அப்படி இருந்தும் பலர் நினைவில் வைத்திருந்து பதிவுகளை தேடி படித்து பின்னூட்டம் இட்டனர்.எப்படியோ நல்லபடியாக இந்த வாரத்தை முடித்தேன் என்பதில் மிக்க சந்தோஷம்.உங்கள் அனைவர் உதவியையும் மறக்கவே முடியாது.நன்றி பொன்ஸ்.

மாயவரத்தாரே
ஆயிரம் இருந்தாலும் மாயுரம் ஆகாது.மாயவரத்தார் செய்த உதவி போலும் ஆகாது.நன்றி.

கொத்தனாரே

வெண்பா சொல்லித்தரும் நீங்கள் தான் எப்போதும் வாத்தியார்.நாங்கள் தான் மானவர்கள்.நன்றி தலைவா

ramachandranusha(உஷா) said...

செல்வன்,
மிக நன்றாக போனது இந்த வாரம். உங்கள் உழைப்பையும், செயல் நேர்த்திக்கும் என் பாராட்டுக்கள். எல்லா பதிவுகளையும்
மீண்டும் நிதானமாய் படிக்க வேண்டும். கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது எனக்கு :-)
சிம்ரனுக்கும், கோக்குக்கும் பின்னுட்டம் இட வேண்டும் என்று நினைத்தும் இடமால் போனதற்கு காரணம், விவாதங்கள் சுவையாய் போனால் தொடரமுடியாது என்று விட்டு விட்டேன். நேரமின்மையே காரணம்.வாழ்த்துக்கள்

Unknown said...

ராமசந்திரன் உஷா,
வாருங்கள்.வாழ்த்துக்கு நன்றி.நீங்கள் சொன்ன மாதிரி நிறைய பதிவுகள் போட்டுவிட்டேன்.நேரம் கிடைக்கும்போது படித்து கருத்து சொல்லுங்கள்.

நன்றி

அன்புடன்
செல்வன்

Muthu said...

நன்று.சில பதிவுகள் இன்னும் படிக்கவில்லை.

ஆனால் மீண்டும் நான் ஏற்கனவே போட்ட "பிட்" டை போடுகிறேன்.

"நல்லா எழுதறய்யா நீ "

வவ்வால் said...

//வவ்வால்,
உங்கள் பின்னூட்டங்கள் நீங்கள் நிறைய விஷயம் தெரிந்தவர் என்பதை காட்டின.உங்கள் வலைபதிவும் அருமையாக கவிதை மணம் கமழ்கிறது.இனியும் எழுதுவேன் வவ்வால்.ஆனால் அதிகபட்சம் வாரம் ஒன்று தான் முடியும்//

நமக்கு விஷய ஞானம் குறைவு தான்,எனக்கே என்ன தெரியும்னே தெரியாது ,உங்கல் பதிவை படித்ததும் தான் நியாபகம் வரும் பலதும்,அதற்காக உங்களுக்கு எனது நன்றி. உங்களை போன்றோர் எழுதும் போது தான் தூங்கிட்டு இருக்க சிங்கம் வெளியில வருது!( வவ்வால் சிங்கம் ஆக ஆசை படுறது பேராசைனு பொன்ஸ் பொங்கிட போறாங்க :-)))

சுருக்கமா பின்னூட்டம் போடனும்னு நினைப்பேன் ஆனா கைய வைத்ததும் வளர்ந்து போய்கிட்டே இருக்கும். எல்லாம் உங்க பதிவு பண்ற வேலை :-))
என்னால் ஏதெனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் பொருத்தருள்க!
வேலைகள் குறைந்ததும் முழு வீச்சில் களம் இறங்குங்கள்.

இப்படிக்கு
அன்புடன்
வவ்வால்

பொன்ஸ்~~Poorna said...

//தான் தூங்கிட்டு இருக்க சிங்கம் வெளியில வருது!( வவ்வால் சிங்கம் ஆக ஆசை படுறது பேராசைனு பொன்ஸ் பொங்கிட போறாங்க :-)))//
ஐயோ.. எப்டிங்க இப்படி எல்லாம்?!! முதல் முதல் படிக்கும் போது இது தான் தோணிச்சு.. எப்படியும் கலாய்க்கலாம்னு இருந்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க..
ஆனாலும் எனக்கும் ஒரு சான்ஸ் கொடுத்தா நல்லா இருக்கும் வவ்வால்,அப்புறம் நான் இன்னும் தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்.. நீங்க தாங்க மாட்டீங்க!!
ஆமாம், சொல்லிட்டேன்:)

Unknown said...

நண்பரே முத்து,

வாழ்த்துக்கு மிக்க நன்றி.என் பல பதிவுகளை படித்து இன்று பின்னூட்டம் அளித்திருந்தீர்கள்.நன்றி தலை

அஷ்லின்
ஆங்கில பிளாக் சும்மா பரிசைக்கு படிக்கறப்ப எழுதி பழகுவதற்கு(நீ எழுதி பழக நாங்க தான் கிடைச்சமான்னு கேக்க கூடாது.:-)))

வவ்வால்
நீங்க சொன்னீங்க.பொன்ஸ் பொங்கி எழுந்துட்டாங்க.யானை கிட்ட மோதினா என்னாகும்னு வவ்வால் கிட்ட சொல்லுன்னு எச்சரிக்கை வேற விடுத்திருக்காங்க.சபாஷ் சரியான போட்டின்னு சொல்லி நாங்கஎல்லாம் வேடிக்கை பார்ப்பதுதான் முறை.

வவ்வால் பெப்சி பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் அளிக்க தாமதமாகிறது.பொறுத்து கொள்ளுங்கள்.வேலை மும்முரத்தில் பதிவை திறக்கவே முடியவில்லை.

பொன்ஸ்,
சிங்கம் புலின்னு என்ன சொன்னாலும் விடாதீங்க.ஆயிரம் தான் சிங்கம் பலசாலின்னாலும் யானைக்கு கோபம் வந்தா காடே அலறிடுமாம்.:-)))

Unknown said...

TCE பொறியியல் கல்லூரி சம்பந்தமாக தனி மடல் அனுப்பிய நண்பருக்கு மிக்க நன்றி.அவர் சொன்ன அந்த செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை/ஆச்சரியத்தை அளித்தது.நன்றி நண்பரே

வவ்வால் said...

செல்வன்,
பொறுமையாக பதில் கூறுங்கள். சந்தடி சாக்குல என்ன பொன்ஸ் கிட்ட மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கறிங்க ,அவங்க வேற என்னை மிதிச்சு துவம்சம் பண்ணிடுவாங்க போல இருக்கு :-))

//வவ்வால்,அப்புறம் நான் இன்னும் தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சிடுவேன்.. நீங்க தாங்க மாட்டீங்க!!
ஆமாம், சொல்லிட்டேன்:)//

அம்மா பொன்ஸ்,

பனை மரத்துல வவ்வால எங்களுக்கே சவலானு லாம் ஒரு காலத்துல சவுண்ட் விடுவோம் இப்போ வவ்வாலுக்கே சவாலா.பார்க்க சாதுவா இருக்கும் வவ்வால் சீறினா சிங்கம் ல :-))