Monday, April 17, 2006

78.தேவதை ரசிகன்

காதலை பாட தேவதை ரசிகன் என நாங்கள் செல்லமாக அழைக்கும் எங்கள் நிலா ரசிகன் போல் யார் உளர்?தன் காதலி சாதாரண பெண் அல்ல என இவனுக்கு ஒரு எண்ணம்.சாதாரண பெண் செய்யும் வேலைகளை இவள் செய்தால் இவன் அதிசயித்து போவான். கோலம் போட வாசல் தெளிக்க அவள் வந்தால் இவனுக்கு ஒரே வியப்பு நீ கோலமிட வாசல் வரும்போதெல்லாம் என் இதயதேசம் தவிக்கிறது... கோலமிட இளவரசியா வருவது என்று! என வியப்பான். அவள் தேவதை என்பதை இவன் எப்படி கண்டுபிடித்தானாம்? மழையில் நனைகையில் விரித்திருந்த உன்குடை மடக்கி வானம் பார்த்து தலையசைத்து மழையை வரவேற்கிறாய் இது, நீ தேவதை என்பதற்கு மற்றுமொரு சாட்சி அவள் பெயர் என்னவென்று அவளை இவன் கேட்டானாம்.அவள் வேறெதோ பெயர் சொன்னாளாம்.இவன் சிரித்தானாம்.தன் பெயரே தெரியாமல் ஒரு பெண்ணா என வியந்தானாம்.அவள் பெயர் தேவதை அன்றோ?அது கூட தெரியவில்லையே இவளுக்கு என்று. என் தேவதை உனக்கு ஏன் தேவதை என்று பெயர் தெரியுமா என்றேன் அழகாய் தலைசாய்த்து கண்சிமிட்டி உதடு சுளித்து தெரியாதே என்றாய் அப்போது என்னுள ஏற்பட்ட அதிஅற்புதமான அந்த உணர்வுகளை வார்த்தைகளாய் எழுதிவிட எத்தனை முயன்றும் முடியாமல் தவிக்கிறேன் நான் தேவதையின் அப்பா நாத்திகராம்.அது எப்படி அப்படி இருக்க முடியும் என இவனுக்கு ஒரே வியப்பு. கடவுள் இல்லை என்கிறார் உன் அப்பா மகாலட்சுமி உன்னை அருகில் வைத்துக்கொண்டு என அதிசயித்து போகிறான்.

6 comments:

Dr.Srishiv said...

அன்பின் செல்வன்,
நம் நிலா இப்போதுதானே சிறிது மனம் தேறி வருகின்றான்? இந்த நேரத்தில் மீண்டும் அவனை மனம் நெகிழ வைக்க இந்த பதிவா? ஆயினும் ஒரு நண்பனாய் இதனைச்செய்ய எனக்கு ஏன் இத்தனை நாள் தோன்றவில்லை என்று வெட்கப்படுகின்றேன், அவனைப்பற்றி எவ்வளவு எழுதினாலும் தகும் ஐயா, இன்னொரு தபுசங்கர் அவன், இணையத்தில் சிக்கிவிட்டான், அவ்வளவே...நன்றிகள் தோழா..
ஸ்ரீஷிவ்...

Unknown said...

அன்பு ஷிவ்,

எனக்கு இது தெரியாது.கவிதைகளில் இருந்து ஒரு கதையை நானே உருவாக்கி ஒரு கட்டுரை எழுதினேன்.அது நிஜமாகவே நடந்தது என தெரியும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

கட்டுரையை மாற்றிவிட்டேன்.அக்கவிதைகளை நீக்கி விட்டேன்.

அன்புடன்
செல்வன்

Karthik Jayanth said...

செல்வா சார்,

கொஞ்சம் பதிவுக்கு சம்மந்தம் இல்லாத கேள்வி. படத்துல இருக்குறது சின்ன வயசு நயன்தாரா வா ?.

அப்படித்தான் இருக்கும் என்று சிற்றறிவுக்கு படுகிறது.

Unknown said...

தலைவா கார்த்திக்,
அது கூகிளில் டவுன்லோட் செய்த படம்.வயது என்னவென்று தெரியாது.நீங்கள் தேடினாலும் கிடைக்கும்.

மற்றபடி சின்ன வயசு நயன் தாராவா என விஷம பிரச்சாரம் செய்வதை கண்டித்து தலைவர் கைப்பு 51 மணிநேர உண்ணாவிரதம் இருப்பார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Ashlyn said...

Kavithai is good, but does nayathara look like a devathai to you?

Unknown said...

Kavithai is good, but does nayathara look like a devathai to you?/

Doesnt she look like one?comeon..be objective.