Wednesday, March 22, 2006

கைபுள்ளைக்கு கல்யாணம் டோய்....

கைபுள்ள ஒரு பொண்ணு தேடி கட்டிக்கன்னு ஊரு கோயில்ல இருக்கற ஜோசியகார பாட்டி புத்திமதி சொன்னாங்கப்பா... ஜோசியகார பாட்டி சொல்ல தட்ட விரும்பாத கைபுள்ளையும் ரொம்ப நாளா நம்ம கைபுள்ள பொண்ணு தேடிகிட்டு இருந்தாரு.சும்மா இருக்காம நம்ம பார்த்திபன் கிட்ட வேற போய் ஐடியா கேட்டுபுட்டாரு ரஜினி சொல்லுற பொண்ணை கட்டிக்க..ஜோதிகா மாதிரியே இருக்கும்னு பார்திபன் நம்ம கைபுள்ளை கிட்ட சொன்னாரு.விதி யார உட்டுது? அண்ணே எனக்கு அண்ணே எனக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஒரு பொண்ணு பாத்து குடுங்கண்ணேன்னு கைபுள்ளை ரஜினி கிட்ட கெஞ்சுனாரு நான் காட்டிடுவேன்.அப்புறம் அதே பொண்னை தான் நீ கட்டிக்கணும்னு ரஜினி கன்டிஷன சொல்லிபுட்டாரு.கைபுள்ளையும் ஒத்துகிட்டாரு அண்னே நீங்க சொல்ற பொண்ணை நான் கட்டிகறேன்னு சொல்லி போய் பாத்தா..பொண்ணு ஆத்தாடீ..இப்படி அல்ல இருக்கு??

இதைய கட்டுனா வாழ்க்கை பேன்டாஜா அல்ல ஆயிடும்னு கைபுள்ளை ரொம்ப நொந்து போயிடாருப்பா..பாவம்...

24 comments:

Geetha Sambasivam said...

ippadi ellarum potti pottu kondu kaipullaikku Penn parppathai parthal avar chollamale lkalyanam seithu kondu vida pogirar.

கைப்புள்ள said...

கூகிள் இமேஜ் searchல தேடி பிடிச்சு ஒரு இண்டர்நேஷனல் ஆப்பு அமெரிக்காலேருந்து வச்சிருக்கீங்க...ரைட்டு. ஆனா அதே search resultல ஜோதிகா நம்ம காதுல ரகசியம் பேசி சிரிக்கற மாதிரி ஒரு படம் இருந்தது உங்க கண்ணுக்குத் தெரியலியாய்யா?

ஒத வாங்கி பஞ்சர் ஆனப் படமும்...ஆறடி அஜானுபாகு பிகர் படம் மட்டும் தான் ஒங்க கண்ணுல பட்டுச்சாக்கும்? ஒரு மனுசன் எம்புட்டு ஆப்பைத் தான்யா வாங்குவான்? செவனேனு இருந்தாலும் சும்மா இருக்க மாட்டுறாங்களேயா...அவ்வ்வ்...அவ்வ்வ்

ILA (a) இளா said...

எப்படி இருந்த கைப்பு இப்படி ஆகிட்டியே

சிங். செயகுமார். said...

அப்போ கைபுள்ளைக்கி லோகத்துல பொண்ணே இல்லையா?

Sam said...

என்ன செல்வன்
இந்த மாதிரிதான் இன்னொருத்தர் கிட்ட, ஏங்க அவருக்காக அசின் படத்த போடக்கூடாதான்னு
கேட்டேங்க. அவரு உடனே ப்ளேட்ட திருப்பி உங்களுக்கு வேணும்ன்னா நேரடியா கேளுங்கன்னு
சொல்லிட்டாருங்க. எனக்கு ஒரே ஷாக்காயிப் போச்சுங்க. பாருங்க அவருக்காக நீங்க அசின்
படத்தை போட்டீங்கன்னா உங்களை தேடி வந்து நன்றி சொல்வாருங்க? நான் அவரு வீட்டாண்ட
போயி தகவல் சொல்லட்டுங்களா?
அன்புடன்
சாம்

Unknown said...

Thanks friendds,,will post reply in evening.Have class now

regards
selvan

Muthu said...

கைப்புள்ளையோட நிலை இப்படிக் கஷ்டமா ஆயிடுச்சே. :-).

Sam said...

என்ன செல்வன்
அவரே வந்து ஃரிபரென்ஸ்ஸ சொல்லிட்டாகல்ல! ஜோ படம் கொஞ்சம் போட்டிருங்களே!
வேர யாராவது வந்து கலாட்டாப் பண்ணறதுக்குள்ள சட்டுப் புட்டுன்னு படத்தப் போட்டிருங்க.
அன்புடன்
சாம்

Unknown said...

அன்பு சாம்,

ஜோதிகா படம் ஏனோ பிளாக்கில் அப்லோடாக மறுக்கிறது.இன்னும் கூகிளில் நிறைய சூப்பரான படங்கள் கிடைத்தன.ஆனால் சில படங்கள் தான் அப்லோடாகின்றன.ஒரு வேளை கைபுள்ளைக்கு ஜோடியாக ஜோதிகாவை சூர்யா விட மாட்டேன் என்கிறாரோ தெரியவில்லை

Unknown said...

ஒத வாங்கி பஞ்சர் ஆனப் படமும்...ஆறடி அஜானுபாகு பிகர் படம் மட்டும் தான் ஒங்க கண்ணுல பட்டுச்சாக்கும்? ஒரு மனுசன் எம்புட்டு ஆப்பைத் தான்யா வாங்குவான்? செவனேனு இருந்தாலும் சும்மா இருக்க மாட்டுறாங்களேயா...
-----------------------------------

அன்பு கைபுள்ளை,,,

1.கலாய் என்றால் என்ன?

2.செவனேன்னு இருந்தா சும்மா எப்படி இருக்க முடியும்?செவனேன்னு தானே இருக்க முடியும்?

3.ஒதை வாங்கினா எப்படி பங்சர் ஆகமுடியும்?முள்ளு குத்தினா தானே பங்சர் ஆக முடியும்?

இந்த கேள்விகளுக்கு உடனடி பதில் தேவை...:-))))

Unknown said...

செயகுமார் அண்ணே,

கைபுள்ளைக்கு சந்திரமுகி மாதிரி பொண்ணை ரஜினி பாத்து வச்சிருக்காரு..நீங்க லோகத்துல பொண்ணே இல்லையான்னு கேக்கறீங்களே....

Unknown said...

ippadi ellarum potti pottu kondu kaipullaikku Penn parppathai parthal avar chollamale lkalyanam seithu kondu vida pogirar.//

நாங்க கைபுள்ளை கல்யாணத்துக்கு போறமோ இல்லையோ கட்டதுரையும் பார்த்திபனும் போறது உறுதியாம் :-)))

Unknown said...

உளவு துறையின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் படி, சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் சங்கத் தலைவர் கைப்புள்ள மீது அதிருப்தி அடைந்துள்ளதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
கைப்புள்ளயின் குடும்ப அரசியல் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் போல் உள்ளது.
ஏற்கனவே கைப்பொண்ணு தல கைப்புவின் வாழ்க்கையில் நுழைந்ததற்கு சங்கத்தின் முக்கிய மீசைக்கார புள்ளி எந்த வித வாழ்த்தும் தெரிவிக்காமல் ஒதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலயின் ஹாங்காங் விசிட் பற்றி வீடு கட்டும் சங்கத்து மற்றொரு முக்கிய புள்ளி கடும் கடுப்பில் இருப்பதாய் பேச்சு. தலயின் ஹாங்காங் லூட்டிகள் பற்றியும் சங்கத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

குடும்ப அரசியலின் அடுத்த கட்டமாய் தன்னுடைய தூரத்து தம்பி வீரபாகுவைச் சங்கத்தில் இணைத்தது பெரும் கலவரத்தைக் கிளப்பும் என எதிர்பார்க்கப் படுகிறது...

தல... இருக்கீயா... இப்படி உன்னப் பத்தி தப்பு தப்பாப் பத்திரிக்கையிலே எழுதி இருக்காங்க தல...
நீ எதாவது பேசு தல.... நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)

Sam said...

தேவ்
நீங்க எப்படி எல்லா எடத்துக்கும் போய் இப்படி அறிக்கை விடறீங்க. கைப்புள்ள உங்கள
பார்த்து பயப்படராருங்க!
அன்புடன்
சாம்

Unknown said...

சாம்,
கைபுள்ளையாவது பயபடறதாவது?சந்திரமுகியவே சமாளிச்சவர் அவர்:-)))

கைப்புள்ள said...

//நான் எப்பவும் உன் கூடத் தான் தல....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(விசும்பல்)//

நம்புறேன்யா...நம்புறேன்! அதுக்குன்னு எல்லா ப்ளாக்லயும் போய் இதச் சொல்லணுமா? எதாவது அறிக்கை விட்டா 'அவனுங்க' பிச்சி எடுக்குறானுங்க...அறிக்கை விடலன்னா நீ 'பத்திரிகை'நியூஸா கொண்டாரே? என்ன தான் பண்ணுவேன்?

சரி...ஒனக்கு அறிக்கை தானே வேணும்? இந்தா வாங்கிக்க "எங்கள் சங்கத்து சிங்கங்கள் அனைவரும் தலயின் அன்புக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள்...இங்கு உள்கட்சி பூசலுக்கு இடமில்லை. தம்பி வீரபாகு சும்மா உலூலூங்காட்டி ரெண்டு நாள் தங்கியிருந்து ரெஸ்ட் எடுத்துட்டு போனாரு. அவருக்கும் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கெடயாது"...போதுமா?

இத கொண்டு போய் எல்லா பத்திரிகைக்கும் குடு...எல்லா ப்ளாக்லயும் எழுது.

கைப்புள்ள said...

//1.கலாய் என்றால் என்ன?

2.செவனேன்னு இருந்தா சும்மா எப்படி இருக்க முடியும்?செவனேன்னு தானே இருக்க முடியும்?

3.ஒதை வாங்கினா எப்படி பங்சர் ஆகமுடியும்?முள்ளு குத்தினா தானே பங்சர் ஆக முடியும்?//

1. கலாய்ன்னா...அது கலாய் தான்...ஆங்...இப்ப நெனப்பு வந்துடுச்சு...கலாய்ன்னா பாத்திரங்களுக்குப் பூசற ஒரு சாயம்

2. இது கொஞ்சம் ஓவர். நான் செவனேனு கெடந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்றீங்க...இந்த சின்ன விசயம் கூடவா புரியலை...ஸ்...அப்பப்பா...இம்சை பண்றாங்கய்யா மனுசனை

3. த்...அதத்...த்..அத..இந்த மாதிரி குண்டக்க மண்டக்க எல்லாம் கேள்வி கேக்கப் பிடாது...ஆமா

Unknown said...

1. கலாய்ன்னா...அது கலாய் தான்...ஆங்...இப்ப நெனப்பு வந்துடுச்சு...கலாய்ன்னா பாத்திரங்களுக்குப் பூசற ஒரு சாயம்

அப்ப உங்களை கலாயிக்கறதுன்னா பாத்திரத்துக்கு பூசற சாயத்தை எடுத்து பூசறதுன்னு அர்த்தமா...தம்பி கட்டதுரை..எடப்பா அந்த சாயத்தை

2. இது கொஞ்சம் ஓவர். நான் செவனேனு கெடந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்றீங்க...இந்த சின்ன விசயம் கூடவா புரியலை...ஸ்...அப்பப்பா...இம்சை பண்றாங்கய்யா மனுசனை

சித்த முன்னதேன் சிவனேன்னு கிடக்கறதுன்னா சும்மா கிடக்கறதுன்னீங்க.இப்ப என்னடான்னா நீங்க சிவனேன்னயும் நான் சும்மாவும் கிடக்குற மாதிரி பேசறீங்க.தெளிவா சொல்லுங்க.குழம்பாதீங்க.சிவனேன்னு கிடக்கறதுன்னா என்ன சும்மா இருக்கறதுன்னா என்ன?

3. த்...அதத்...த்..அத..இந்த மாதிரி குண்டக்க மண்டக்க எல்லாம் கேள்வி கேக்கப் பிடாது...ஆமா

குண்டக்கன்ன என்ன மண்டக்கன்ன என்ன?

கைப்புள்ள said...

ஏம்ப்பா புனித காளைமாடு,
நீயும் பார்த்திபனும் அண்ணன் தம்பியா? இல்லை நீ தான் பார்த்திபனா? ஏன்யா உங்களுக்கு இந்த பொழப்பு?

'தனக்குவமை இல்லாதவன்' உலகத்தின் புதிய கடவுள்னு குண்டக்க மண்டக்க பேர் மாத்தி வைக்கும் போதே புரிஞ்சிக்காம மிஸ்டேக்ஸ் பண்ணிட்டேன்...அவ்வ்வ்

கைப்புள்ள said...

தப்பாச் சொல்லிட்டேன்...

ஏம்ப்பா புனித எருது!

கைப்புள்ள said...

ஒரு செவத்த தோலு புள்ள சோதிகா படம் போடுயான்னு கேட்டதுக்கு அப்பப்பா...என்ன கேள்வி கேக்கிறாங்கியா இவுங்க?

Unknown said...

ஒரு செவத்த தோலு புள்ள சோதிகா படம் போடுயான்னு கேட்டதுக்கு அப்பப்பா...என்ன கேள்வி கேக்கிறாங்கியா இவுங்க?

--

kattuna manaivi "chandramuki" kallukundu mathiri 6 adila irukkarappa ethukkuppa sevatha pullai?

sonnaa keeluppa kaipu

Unknown said...

புனித காளைமாடு = புனித எருது

rendum onnu thampa.eempa kaipu ippadi kuzamparai?

Dont think kundakka mandakka.Think thelivaaka :-)))

கைப்புள்ள said...

//புனித காளைமாடு = புனித எருது//

இல்லை...ரெண்டும் வேற வேறன்னு சொல்லி நான் வம்புல மாட்டிக்க விரும்பலை...அதனால நான் கம்முன்னு இருந்துக்கறேன்...இல்லை நான் எதுவும் சொல்லலை...மூச்