Friday, February 17, 2006

வீரபாண்டிய கவுண்டமணி

வீரபாண்டிய கவுண்டமணியும், வெள்ளையதேவன் செந்திலும், ஜாக்சன் துரையை சந்திக்க கிளம்புகின்றனர்.கவுண்டமணி கெஞ்சினால் மிஞ்சுவார்,மிஞ்சினால் கெஞ்சுவார் என்பது ஜாக்சன் துரைக்கு தெரியாதல்லவா?கால் மேல் கால் போட்டு அட்டகாசமாக உட்கார்ந்திருக்கிறார் ஜாக்சன் துரை ஜாக்சன்:"நீர் தான் வீர பாண்டிய கவுண்டமணி என்பவரோ?" கவுண்டர்:"ஆமான்டா டிபன் பாக்ஸ் மண்டையா.நீதான் ஜாக்சன் துரை அப்படிங்கர முட்டகோஸ் மண்டையனாடா?' ஜாக்சன்:"ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?' கவுண்டர்:நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும்,பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பன்னிக்குட்டி மாதிரி இருக்கே?கலரே அப்படியா இல்லை வெண்குஷ்டம் வந்து இந்த மாதிரி ஆயிட்டியா?" செந்தில்:"அண்ணே கொஞ்சம் அடக்கி வாசிங்க.டுப்பாக்கி கிப்பாக்கி வெச்சிருக்கப்போகிறான்>" கவுண்டர் :"அப்படியாடா சொல்றே?"(பயத்துடன் திரும்பி) "நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர்.அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர்" ஜாக்சன்:" நட்பு வேண்டும்.ஆனால் அதற்கேற்ற நடத்தை இல்லை உன்னிடம்" கவுண்டர்: "இல்லைங்க ஆபீசர்.நான் நல்லா தான் நடப்பேனுங்க ஆபீசர்.இதோ பாருங்க ரஜினி மாதிரி நடந்து காட்டட்டுமா?" ரஜினி,கமல் போல் பல விதங்களில் நடந்து காட்டுகிறார்.ஜாக்சனுக்கு கோபம் வருகிறது. ஜாக்சன்: உன் மீது குற்றம் சுமத்துகிறேன். கவுண்டர்:"என்ன குற்றம் அப்படின்னு சொன்னா திருத்திக்கிவேனுங்க ஆபீசர்" ஜாக்சன்: "சொன்னால் எண்ணிக்கை தெரியாது." கவுண்டர்: (நக்கலாக)"ஓ ஐ ஆம் சாரி.நீங்க எண்ண தெரியாத தற்குறியா ஆபீசர்?(உரத்த குரலில்)ஆமா எண்னவே தெரியாத உனக்கெல்லாம் எவன்டா வேலை போட்டு குடுத்து ஊரையே கூட்டி பெருக்கற நீளத்துக்கு கவுனையும் மாட்டி விட்டான்?" ஜாக்சன்:"எனக்கா எண்ணிக்கை தெரியாது?அகம் பிடித்தவனே,சொல்கிறேன் கேள்.பல வருடங்களாக கிஸ்தி,திறை,வரி,வட்டி இது எதுவும் நீ செலுத்தவில்லை" கவுண்டர்: "வானம் பொழியுது,பூமி விளையுது.நடுவுல வெள்ளைப் பன்னி உனக்கெதுக்குடா புரோக்கர் கமிஷன்?நீ என்ன என் கூட வயலுக்கு வந்து சோத்துபானை திருடி அடி வாங்கினாயா?என் கூட சேர்ந்து ஊர்ல கடன் வாங்கிகிட்டு ஒண்ணா தலைமறைவானாயா?இல்லைனா முனியம்மா என்னை போட்டு மொத்தினப்ப வந்து காப்பாத்துனையா?இல்லை இந்த பேரிக்கா மண்டையன் கிட்ட நான் சிக்கிதவிச்சப்ப வந்து ஆறுதல் சொன்னாயா? என்ன எளவுக்குடா உனக்கு நான் கிஸ்தி கட்டணும்?அடேய் டோப்பா தலையா,நான் இங்க வந்தா உங்கிட்ட அஞ்சோ,பத்தோ கடன் வாங்கிட்டு போலாம்னு பாத்தா நீ எங்கிட்டையே வரி வட்டி கேக்காரயா?நியாயமாடா இது?ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?" ஜாக்சன் ஆவேசத்தில் முறைக்க கவுண்டமனி தன் மீசையை முறுக்குகிறார். ஜாக்சன்: "என்ன மீசையை முறுக்குகிறாயா?அது ஆபத்துக்கு அறிகுறி.உன்னை கைது செய்ய உத்தரவிடுகிறேன்" கவுண்டர்: "ஐயோ ஆபீசர்.இது ஒட்டு மீசை.இந்தாங்கோ" மீசையை தூக்கி எறிந்துவிட்டு கவுண்டர் ஓடுகிறார்.

41 comments:

நிலா said...

செல்வன், கலக்கீட்டீங்க.

Short and sweet.

Unknown said...

thanks nila.

Anonymous said...

:-)))
good one.

G.Ragavan said...

சூப்பரப்பு....சூப்பரோ சூப்பர்

Unknown said...

நன்றி பரணி,

குமரன் (Kumaran) said...

சோக்கா கீதுபா....

Unknown said...

நன்றி ராகவன்,
பரிசா எனக்கு ஒரு ரெசிபி தரணும்:-))

Unknown said...

நன்றி குமரன்

வாழ்க தலைவர்.வாழ்க கழகம்.:-))

Anonymous said...

nice :))

ranjit kalidasan said...

super selvan. kalakeetinga

Unknown said...

thanks ashlyn,
senthil atakki vaasiththaar,paakalaiyaa?

Unknown said...

thanks a lot ranjith,

Muthu said...

செல்வன்,

//ஆமா தலைல பஞ்சு மிட்டாய வெச்சுட்டு உக்காந்துட்டு இருக்கியே எறும்பு கடிக்காதாடா?"//

இந்த வரியில் கவுண்டமணி டச்சில் டாப்கியரை தொடுகிறீர்கள்..

டி.பி.ஆர் ஜோசப் இந்த மாதிரி சுவையாக எழுதுவார் .படியுங்கள்.

Unknown said...

நன்றி திரு முத்து,
நிஜமாகவே அந்த வரிகளை மிகவும் ரசித்து எழுதினேன்.உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.
டி.பி.ஆர் ஜோசப் அண்ணணின் பதிவுகளை கண்டிப்பாக படிக்கிறேன்.
மிக்க நன்றி

மாயவரத்தான் said...

ஹ ஹ் ஹா

சூப்பர்.

ஆனாலும் கடைசியில நம்ம கவுண்டர் அந்த வெள்ளக்காரனை மொத்து மொத்துன்னு பின்னுறாப்ல ஒரு சீன் வெச்சிருக்கலாம்.

Unknown said...

நன்றி மாயவரத்தான்,

நீங்கள் சொன்னபிறகு தான் "அட முன்னாடியே தோணாம போச்சே" அப்படின்னு ஸ்ட்ரைக் ஆகுது.

அன்புடன்
செல்வன்

Karthik Jayanth said...

// நட்பு விரும்பி அழைத்ததாக அறிகிறேனுங்க ஆபீசர்.அதயே விரும்பி நானும் வந்துள்ளேனுங்க ஆபீசர் //

சூப்பரப்பு....

ஜோ/Joe said...

பின்னிப்புட்டீங்க!

கைப்புள்ள said...

//நீ மெட்ராஸ்ல உக்காந்திருந்தா உன்னை பாக்கறதுக்கு ரொம்பதூரம் தாண்டா வரணும்,பரங்கிக்கா மண்டையா?ஆமா அதென்னாடா நீ இப்படி வெள்ளை வெளேர்னு வெள்ளைப் பன்னிக்குட்டி மாதிரி இருக்கே?//

இத எழுதும் போது கவுண்டமணியே உங்க உடம்புக்குள்ள புகுந்து எழுதியிருப்பார் போல...நச்னு இருக்கு.

இது மாதிரி தொடர்ந்து கலக்குங்க.

Unknown said...

ரொம்ப நன்றி ஜோ,

Unknown said...

நன்றி கைபுள்ள அண்ணே.சீக்கிரம் வடிவேலு பத்தி ஒரு பதிவு உங்களுக்காக போடறேன்

பரஞ்சோதி said...

செல்வன் அட்டகாசம் பண்ணியிருக்கீங்க. வாழ்த்துகள்.

நகைச்சுவையாக எழுதுவது மிகவும் கடினம்,உங்களுக்கோ இது ரொம்பவும் எளிதாக வருகிறது. தொடர்ந்து பலவகையாக நகைச்சுவகள் கொடுத்து மக்களை கொஞ்சம் சிரிக்க வையுங்க, எப்போ பார்த்தாலும் சண்டை போட்டு கடுப்பாகவே இருக்காங்க. தொடரட்டும் உங்கள் சேவை.

சிரிப்புடன்
பரஞ்சோதி

Unknown said...

நன்றி பரஞ்சோதி,

ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டைங்கற மாதிரி என்னால முடிஞ்ச நகைச்சுவையை தொடர்ந்து எழுதுவேன்.உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

G.Ragavan said...

// நன்றி ராகவன்,
பரிசா எனக்கு ஒரு ரெசிபி தரணும்:-)) //

ரெசிப்பியா...........எங்க! உக்காரைக்கு அப்புறம் குக்கரையே கொஞ்ச நாளைக்குக் கவுத்தி வெச்சாச்சு.

Unknown said...

கவுத்தி வெச்ச குக்கர் மீண்டும் நிமிராமலா இருக்கப்போகிறது?ராகவன் ஒரு சூப்பர் ரெசிபி தராமலா இருக்கப்போகிறார்?

b said...

எப்போதும் பயனுள்ள கணமான பதிவையே எழுதும் தாங்கள் இப்பதிவில் என்னை சிரிக்க வைத்து விட்டீர்கள்.

நன்றி செல்வன்.

Unknown said...

மிக்க நன்றி மூர்த்தி

சீரியசாக எழுதிய பதிவுகளை விட இதற்கு தான் வரவேற்பு அதிகம்.எனக்கும் இம்மாதிரி தமாஷ் பதிவுகள் தான் பிடிக்கிறது.

SP.VR. SUBBIAH said...

முதலில் வழக்கம்போல வீறாய்ப்பாகப் பேசியவர், செந்தில் துப்பாக்கி என்று எச்சரித்தவுடன்,"ஆபீசர்" என்று பதுங்கிப் பேசுவது சிறப்பாக எழுதப்ப்ட்டுள்ளது.வாழ்த்துக்கள்
SP.VR.சுப்பையா, கோயமுத்தூர்

Unknown said...

நன்றி திரு சுப்பையா,

தங்கள் பதிவுகளை படித்து மிகவும் மனம் மகிழ்ந்தேன் .இந்தியா வல்லரசாவது பற்றிய ஜாதககட்டுரை மிகவும் நன்றக இருந்தது.

Unknown said...

திரு சுப்பையா,
தங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்தால் நிறைய பேர் படித்து பலனடைவார்கள் அல்லவா?மிகவும் அருமையான கட்டுரைகளை எழுதி உள்ளீர்கள்.

நரியா said...

வணக்கம் செல்வன்,
:))
மிகவும் நகைச்சுவையான பதிவு. இதில் இவ்வளவு நகைச்சுவை இருக்கும் என எதிர்பாராமல் தேனீர் குடித்துக்கோண்டே படித்தது, பொறை ஏரி, லாப்டோப் மீது உமிழ்ந்து, தொடர்ந்து இருமி, ஒரு வழியாக சமாதானமாகி முழுவதும் படித்து முடித்தேன். :))

டிஃபன் பாக்ஸ் தலையா, முட்டகோஸ் தலையா...சூப்பர்ங்கோ!!!

தலைவர் கவுண்டமணி வாழ்க வாழ்க!! :))

நன்றி,
நரியா

நரியா said...

வணக்கம் செல்வன்,
:))
மிகவும் நகைச்சுவையான பதிவு. இதில் இவ்வளவு நகைச்சுவை இருக்கும் என எதிர்பாராமல் தேனீர் குடித்துக்கோண்டே படித்தது, பொறை ஏரி, லாப்டோப் மீது உமிழ்ந்து, தொடர்ந்து இருமி, ஒரு வழியாக சமாதானமாகி முழுவதும் படித்து முடித்தேன். :))

டிஃபன் பாக்ஸ் தலையா, முட்டகோஸ் தலையா...சூப்பர்ங்கோ!!!

தலைவர் கவுண்டமணி வாழ்க வாழ்க!! :))

நன்றி,
நரியா

Unknown said...

நன்றி நாரியா.

எப்போதோ எழுதிய பதிவு.ஆனால் இது நிரைய பேருக்கு பிடித்துவிட்டது.
நன்றி

அன்புடன்
செல்வன்

பொன்ஸ்~~Poorna said...

அட செல்வன், இது மாதிரி எல்லாம் கூட எழுதுவீங்களா நீங்க? சூப்பர்.. வடிவேலு சுட்டி கொடுத்தா படிச்சி சிரிப்பேன் :)

Unknown said...

அக்கா

இந்த சுட்டியை படிச்சு பாருங்க.இது சிவாஜி காமடி

http://holyox.blogspot.com/2006/02/blog-post_113994633472805942.html

Anonymous said...

சும்மா!என்னதான் எழுதியிருக்கென்று பார்ககவே "கிளிக்" கினேன்; நல்ல சிரிப்பு வந்தது. கவுண்டரை
நினைத்து வாசிக்க கலக்கலாயிருக்கு ! தொடரவும்;
யோகன் -பாரிஸ்

Unknown said...

Thanks johan.Paris

anbudan
selvan

Nakkiran said...

கவுண்டரை நினைத்துக் கொண்டே படித்து சிரித்துக் கொண்டேன். அற்புதமான பதிவு...

Unknown said...

thanks nakkiran

anbudan
selvan

Sivabalan said...

செல்வன்,

கவுன்டரை போட்டு கலக்கீடீங்க...

நன்றி..

Unknown said...

Thank you sivabalan

anbudan
selvan