Thursday, February 16, 2006

காதலிக்காக $12,000

காதலர் தினத்தில் சராசரியாக ஒரு அமெரிக்க காதலன் தன் காதலிக்காக $128 செலவு செய்கிறான்.அமெரிக்க காதலி $74 செலவு செய்கிறாளாம்.பெரும்பாலும் இத்தொகை பூக்கள்,சாக்லட்,கிரீடிங் கார்ட் மற்றும் டின்னருக்கு செலவாகிறதாம். முத்தம் இல்லாமல் காதலர் தினமா?மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க பெண்கள் காதல் தினத்தன்று "நறுமணம்" வீசும் உணவுப்பண்டங்களை தவிர்ப்பார்களாம்(குளோசப் கவனிக்க) காதலர் தினத்தன்று $128 செலவு செய்யும் காதலன் வருடம் முழுவதும் எவ்வலவு செலவு செய்வானாம்?அதிகமில்லை ஜென்டில்மென்.$12,000 என்கிறது பெஸ்ட் லைப் பத்திரிக்கை நடத்திய சர்வே. இந்த $12,000ல் பூக்களுக்கு மட்டும் $300,டின்னருக்கு $2526, தியேட்டர்,கன்சர்ட்டுக்கு $752. 50 வருடங்களில் ஆண் மனைவுக்கு செய்யும் செலவு தொகை $590,400(விலைவாசி அட்ஜஸ்ட் செய்தபிறகு) இதெல்லாம் கலாச்சார ஜென்டர் ரோல்களின் தாக்கம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.ஆண்கள் தான் காதலிக்கு செலவு செய்ய வேண்டும் என்பது ஐரோப்பிய கலாச்சாரம்.காதலர் தினத்தன்று டட்ச் டிரீட்(உன் பில்லை நீ கட்டு,என் பில்லை நான் கட்டுகிறேன்) செய்யும் காதலனை எந்த பெண்ணாவது மதிப்பாளா?அல்லது காதலிக்கு பூ,நகை என வாங்கித்தராமல் காதலை சொல்லத் தான் முடியுமா? புத்திசாலி காதலர்கள் 50/50 என்ற விகிதத்தில் செலவு செய்வதும் உண்டாம்.சில பெண்ணுரிமையை நம்பும் பெண்கள் முழு தொகையையும் காதலன் தலையில் கட்டுவதில்லை.50:50 என செலவுத் தொகையை பகிர்ந்து கொள்கிறார்கள்.யாரையும் நம்பி நான் இல்லை என்பது அவர்கள் வாதம். யார் காசு கொடுத்தா என்ன,கல்லா நிறைஞ்சா போதாதா என்கின்றனர் கடைக்காரர்கள்.காதலர் தினத்தன்று மட்டும் $13.7 பில்லியன்(ரூ50,000 கோடி) அளவுக்கு விற்பனை அதிகமாகிறதாம்.இப்படி இருக்கும்போது காசு யார் கட்டுகிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தால் முடியுமா? இதில் பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன.காதலர் தினத்தில் அதிகமாக செலவு செய்பவர்கள் 45 - 54 வயதினராம்.தலைக்கு $135 (ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட சமமாக) செலவு செய்கின்றனராம்.குறைந்த அளவில் செலவு செய்பவர்கள் 18 - 24 வயதினராம்($81 மட்டுமே.)இரண்டு வருடத்துக்கு முன் $153 செலவு செய்தார்களாம் இவர்கள்.(பாக்கட் மணி அப்பன் கிட்ட சண்டை புடிச்சு வாங்குங்க கண்ணுகளா) பூரா தொகையையும் காதலன் காதலிக்கே செலவு செய்வதில்லை.குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு $ 20 செலவு செய்கிறார்களாம்.நண்பர்களுக்கு $5.06 செலவு செய்கிறார்களாம்.(நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் சிறிதளவு பாய்கிறது.ஏதோ பெத்தவங்களை மறக்காம இருந்தா சரின்கறீங்களா?) 62% பேர் கிரிட்டிங் கார்ட் வாங்குவார்களாம். 47% சாக்லேட் வாங்குவார்களாம் 42% வெளிய ஊர் சுத்த போவாங்களாம். 10% கிப்ட் கார்ட்,கிப்ட் தருவார்களாம். 52% ஆண்கள் பூ வாங்குவார்களாம், 15% பெண்கள் பூ வாங்குவாங்க(பொக்கே,பிளவர் பாஸ்கட்ங்க,தலைல வெக்கற பூ கிடையாது) 22.4% நகை வாங்கி கொடுப்பாங்களாம் 5% ஆண்களும்,12% பெண்களும் டிரஸ் கிப்ட் பண்ணுவாங்களாம். 2005 வாலன்டைன் டே தகவல்கள் 18 கோடி ரோஜாக்கள் விற்றன. $2.4 பில்லியன்(ரூ 10,000 கோடி) மதிப்புக்கு நகை விற்றது 18 கோடி கார்டு விற்றது(ரோஜா விற்பனையும் கார்டு விற்பனையும் சமமாக இருக்கு பாத்தீங்களா?) 3.6 கோடி இதய வடிவ சாக்லட் பாக்ஸ் விற்றதாம். நாட்டின் நாலாவது பெரிய ஷாப்பிங் திருவிழா காதலர் தினமாம்(கிறிஸ்துமஸ்,ஈஸ்டர்,ஆலோவின் அடுத்தாம்) பூக் கடைக்காரர்களுக்கு அதிக விற்பனையாகும் நாளும் காதலர் தினமாம். தினமும் காதலர் தினமாவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்கிறார்களாம் கடைக்காரர்கள்.அவங்க ஆசைய நிறைவேத்துவோமே?தினம் தினம் காதலர் தினம் கொண்டாடலாம்.சண்டை சச்சரவு எதுவும் இருக்காது.எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க.என்ன சொல்றீங்க?

9 comments:

NONO said...

இந்த தகவல் எல்லாம் நம்பகரமாண தகவலா? ஒரு US வாசிக்கு சராசரி ஆண்டு வருமாணம் என்ன? காதலிக்கு 12,000 US$ கொஞ்கம் அதிகமாக தெரியவில்லை?, அதாவது 1000$ ஒருமாதத்துக்கு, ஒரு கிழமைக்கு 250$, 35$ ஒரு நாளுக்கு!!!
US BMP 36 000US$/வருடத்துக்கு (2000 ஆண்டு) அப்பிடிப் பாத்தா ஒண்றில் மூண்று பங்கு காதலிக்கு?

Unknown said...

Dear oliyinile,

kathali includes wife also.Taking wife out to dinner in week end is ritual in american houses.If you include dress,jewels etc $1000 permonth is nothing.

This is not a national survey.This was conducted by bestlife magazine.I dont think their sample size crossed 1000.But a sample of 1000 is enough to get a statistically significant conclusion in most of the cases.

rv said...

அது ஏன்பா காதலர்கள் செய்வது ஜாஸ்தியாயிருக்கு? என்ன அநியாயம் இது?

ஆண்களுக்கு பெண்கள் எவ்வளவு தேவையோ அதேயளவு பெண்களுக்கும் ஆண்கள் தேவை! இல்லாம இருந்திடமுடியுமா?

காதல், கத்திரிக்கான்னு அலட்டிக்காம ஹார்மோன்களப் பாருங்கப்பா. ரெண்டு பேருக்கும் சமமாத்தான் சுரக்குது. ஆனா ஆண் மட்டும் அதிகமா செலவு செய்யணுமாம். அநியாயம்!

Unknown said...

ramanathan,

Its men who go after women.Men earn more than women too.So men have to spend more.:-))

Ashlyn said...

Dear Selvan,
Women are prudent by nature. That's why they spend (or "waste") less for men :)
So you are saying average american spends about $1000 a month for the wife? No way..If that includes putting up with a wife who can't cook, yeah..that is a good figure. But on restaurants, jewels, and flowers alone, I don't think an average american would spend $1000 a month. If you include everyday packaged food, everyday TV dinners, weekend restaurants, and movies..hmmmm...may be $500- $600 a month. Still $1000 seems like a lot of money to me. Who took that survey? Guys always lie. So don't believe that.

Unknown said...

ashlyn,
That survey was taken by best life magazine.In such surveys sample size will be maximum 1000 and US is a country of 300 million.So generalizability of results is gonna be a problem,but thats the best we can do.

At times research results will be counter initutive.They dint give the methodology of the survey so I couldnt comment on the validity of the findings.Just reported what they reported.Maybe we can take it with a pinch of salt

Anonymous said...

nalla pathivu.but indiala 12000 dollar selvau panna mutiyuma?kasu irukkaravan evvalavu vena selavu seyvaan

raj

NONO said...

//kathali includes wife also.//

காதலி/காதலன் என்றால் கல்யாணம் ஆக முன்தானே/அல்லது ஒண்றாய் வாழத்துவங்க முன்தானே...???

//$1000 a month for the wife? No way..If that includes putting up with a wife who can't cook//

hahahaha!!!

Unknown said...

காதலி/காதலன் என்றால் கல்யாணம் ஆக முன்தானே/அல்லது ஒண்றாய் வாழத்துவங்க முன்தானே...???//

kalyanathukku appuramum kaathalan kaathali thaane?

manaivi = thali kattiya kathali