Saturday, February 04, 2006
விண்ணுலக சொர்க்கம் யான் வேண்டேன்
தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனி அந்த உலகை மாற்ற வேண்டும்"--காரல் மார்க்ஸ்
"இதுவரை பூசாரிகளும் மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயே பொன்னுலகம் அடைய வைக்கும்.....வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவது அல்ல..உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது" (மார்க்ஸ் 1861)
போராட்ட வரலாறு:
மார்க்ஸ் (1818 - 83) 1842'ல் ரைன்லான்ட் கஜட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியராக தனது பொது வாழ்வை துவக்கினார்.ஒரெ வருடத்தில் அரசு அந்த பத்திரிக்கையை தடை செய்து அவரையும் ஆசிரியர் பதவியில் இருந்து தூக்கியது.மார்க்ஸ் பாரிசுக்கு குடிபெயர்ந்து பிரென்சு மண்ணில் இருந்து ப்ருஷ்ய தொழிலாளிகளுக்காக குரல் கொடுத்தார்.1845'ல் பிரென்சு அரசு அவரை நாடு கடத்தியது. புருஸ்செல்ஸ்ல் இருந்து தனது முதல் பொருளாதார அறிக்கையயை வெளியிட்டார்.(வறுமையின் தத்துவம்).
1847'ல் கம்யுனிஸ்ட் பிரகடனம் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த பிரகடனத்தை என்கெல்ஸுடன் சேர்ந்து வெளியிட்டார்.உடனடியாக அவர் பெல்ஜ்யத்திலிருந்து வெளியெற்றப்பட்டார்.பிரன்சு அரசும் அவரை ஆயுத புரட்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தி அவரை நாடு கடததியது.அவருக்கு எந்த நாடும் இடம் தர முன்வரவில்லை. "நாடற்ற நபர்" என்று அவர் அறிவிக்கபட்டார்.ரத்தச்சிவப்பு வண்ணத்தில் தனது பத்திரிக்கையில் அதன் கடைசி இதழை வெளியிட்டு விட்டு குடும்பம் குட்டியோடு(1843'ல் திருமணம் செய்து கொண்டார்) நாடோடியாக நாடு நாடாக சுற்றினார்.எந்த நாடும் அடைக்கலம் தரவில்லை.1849'ல் பிரிட்டன் மட்டுமே அடைகலம் தந்தது
சாகும் வரை பிரிட்டனில் வாழ்ந்தார்.வறுமையிலும்,வியாதிகளிலும் பிடிக்கபட்டார்.அவரின் பல குழந்தைகள் பசியால் செததன.மனைவி நரம்பு வ்யாதியால் பாதிக்கபட்டார்.எங்கெல்ஸ் கஷ்டப்பட்டு செய்த பண உதவி மட்டுமே அவர் பசியை அவ்வப்போது ஆற்ற்யது
ஆனால் இந்த 35 ஆண்டுகளில் அவர் மாபெரும் எழுத்து புரட்சியை செய்தார்.நரம்பு வியாதி வந்த போதும் பிரிட்டிஷ் மியுசியத்துக்கு சென்று தனிஅறையில் அமர்ந்து எழுதினார்.
டாஸ் காபிடல் என்னும் புரட்சியாளர்களின் வேதநூலை அவர் 1867'ல் வெளியிட்டார்.வறுமையிலும் வியாதியிலும் 1883'ல் அவர் இறந்தார்.
அவரது கல்லறையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் எஙெல்ஸ் கண்ணீர் உரை ஆற்றினார்.அனைத்து போராளிகளின் தந்தை என்று மார்க்ஸை அவர் குறிப்பிட்டார். "போரட்ட உணர்வு மார்க்ஸின் இணைபிரிக்கமுடியாத குணம்" என்றார் எங்கெல்ஸ்."அவர் போராட்டத்தை நேசிக்கவில்லை காதலித்தார்." என்றார் எங்கெல்ஸ்
இருக்கும் உலகை வைத்து மார்க்ஸ் திருப்தி அடையவில்லை.ஒரு புது உலகை அவர் அமைக்க விரும்பினார்.பெண்ணியம் முதல் போராடும் அனைத்து துறைகளுக்கும் தலைவரும், தந்தையும் காரல் மார்க்ஸ் தான்.பின்னவீனத்துவ தத்துவ மேதைகள் படைத்த அற்புத துறைகளுக்கு தாயாய் இருப்பது மார்க்சியமே
மார்க்ஸ் தனது இள வயதில் கெகல்(G.W.F. Hegel) என்ற தத்துவ அறிஞரின் சிஷ்யனாக இருந்தார்.ஆனால் பின்னாளில் கேகலின் தத்துவங்களை நடைமுறைக்கு ஒத்துவராதவை என்று கடுமையாக சாடினார்."கெகல் சொன்னது சிந்தனைக்கு மட்டுமே விருந்து.நடைமுறைக்கு அல்ல" என்று கிண்டலும் அடித்தார்
மார்க்ஸ் மதங்களை வெறுத்ததும் இதனால் தான்.அவற்றால் எந்த நடைமுறை பயனையும் அவர் காணவில்லை.இப்பொதைய பசிக்கு அவை எதுவும் செய்வதில்லை,அவை காட்டும் மோட்சம் இறந்தபிறகே அடையகூடியது என்பதை உணர்ந்ததும் அவர் வருத்தம் அடைந்தார்.ஆனால் மதங்கள் மனிதனின் தற்போதய வாழ்வை இறந்தபின் வரும் சொர்க்கதிற்க்காக தியாகம் செய்ய சொல்வதை உணர்ந்ததும் அவர் கடும் கோபம் அடைந்து 'மதம் மனிதனின் எதிரி' என்று சாடும் அளவுக்கு அவர் சென்றார்.நடைமுறை வாழ்வில் பயனளிக்காத எந்த ஒரு தத்துவத்தயும் எதிர்த்தவர் மார்க்ஸ்.கெகலை அவர் சாடியதும் அதன் அடிப்படையில் தான்.
ஆனால் கெகலின் அடிப்படை சித்தாந்தமான "சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய தேடலின் உருவாக்கம்" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.மார்க்ஸியம் என்பதை 'அந்த சுயதேடல் இன்னும் முடிவடையவில்லை' என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கினார்.
மனிதன் உருவாக்கிய சமூக அமைப்புகளை அவர் வலியோனுக்கும் மெலியோனுக்கும் இடையே நடைபெற்ற யுத்த களமாக பார்த்தார்.ஆண்டாண்டு காலமாக வலியோனே வெற்றி பெற்று தனக்கு சாதகமான சமூகத்தை,அரசை,சட்டத்தை உருவாக்கினான்.நாளடைவில் அச்சட்டம்,சமூகம்,சமுதாயம்,அரசு இவை அனைத்தும் வலியோனை மேலும் மேலும் வலியோனாக்கியது.
கானகத்தில் உருவான "வல்லவன் வாழ்வான்" என்ற விதி 19ம் நுற்றாண்டு ஐரொப்பிய சமுகத்திலும் நிலவியதை அவர் கணடார்.இந்த விதியே இதுவரை உருவான அனைத்து சமுகங்களயும் படைத்தது என்பதையும் அவர் கண்டார்.
வலியோனுக்கும் மெலியோனுக்கும் நடைபெறும் யுத்ததை அவர் "வர்க்க போராட்டம்" என்று வர்ணித்தார்.அவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வாழ முடியும் என்பதை அவர் நம்பவில்லை.புலியும்,புள்ளிமானும் எங்காவது கூடி வாழ முடியுமா?
மெலியோன் என ஒருவன் இருப்பதால் தான் வலியோன் என ஒருவன் இருக்கிறான்.மெலியோனை சுரண்டி தான் வலியோன் வாழ முடியும்.வலியோன் வாழ்வான் என்ற விதியை மார்க்ஸ் மறுக்கவில்லை.மெலியோன் தனது விதியை போராட்டம் மூலம் மாற்றி அமைக்க முடியும் என அவர் நம்பினார்.மெலியோன் வலியொனாவதெ அவன் முன்னேற வழி என அவர் நினைத்தார்.
ஐரொப்பிய சமூகம் முன்னெறியது என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை.ரோமானியா காலத்து அடிமைகளையும் தற்போது உள்ள பஞ்சாலை தொழிளாலிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை என்று அவர் சொன்னார்.
-------------------
மார்க்ஸ் சொன்னதில் பின்னவீனத்துவவாதிகள் முக்கியமாக கருதுவது இதைதான்.
1.சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய தேடலின் உருவாக்கம்
2.அந்த சுயதேடல் இன்னும் முடிவடையவில்லை
3.நடைமுறை வாழ்வில் பயனளிக்காத எந்த ஒரு தத்துவத்தயும் ஏற்க வேண்டியதில்லை
மார்க்ஸ் செய்த தவறையும் இங்கு சுட்டி காட்ட வேண்டும்.அவர் மனிதனின் சுயதேடல் ஒரு புதிய சமுதாயத்தை உருவக்குவதன் மூலம் முழுமை அடையும் என நம்பினார்.ஆனால் காலம் அது தவறு என்பதை நிருபித்தது.ஒடுக்கப்பட்டவனின் கரத்தில் வந்த அதிகாரம் அவனை புதிய சர்வாதிகாரியாக்கியது.அவ்வளவுதான். பழைய கொடும்கோன்மை சமூகத்திற்க்கு பதில் ஒரு புதிய கொடும்கோன்மை சமுகம் உருவாகியது..
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
\\எங்கெல்ஸ் கஷ்டப்பட்டு செய்த பண உதவி மட்டுமே அவர் பசியை அவ்வப்போது ஆற்ற்யது//
\\"போரட்ட உணர்வு மார்க்ஸின் இணைபிரிக்கமுடியாத குணம்" என்றார் எங்கெல்ஸ்."அவர் போராட்டத்தை நேசிக்கவில்லை காதலித்தார்." என்றார் எங்கெல்ஸ்//
வரலாற்று நாயகர்கள் அனைவருக்குமே இப்படியான அற்புத நண்பர்கள் வாய்த்திருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் அனைவராலும் அறியப்படுவதில்லை. உண்மையில் மார்க்ஸ் இந்த உலகத்துக்கு வழங்கியதைவிட ஏங்கெல்ஸ் வழங்கியதே அபூர்வமானது - காரல் மார்க்ஸை. நட்புதான் இங்கும் புரட்சியை உலகுக்கு வழங்கியது.
அன்பின் நண்பர் அன்புச் செல்வன்,
உங்களின் பதிவுகள் வாசிப்பவனின் நேரத்தை வீணடிக்காத சுவாரஸ்யமிக்க, பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்கள் வேட்கை கொண்ட எழுத்துக்கள்.
மார்க்ஸின் வரலாற்றைக் கொடுத்ததற்கு நன்றி செல்வன்.
நன்றி முபாரக்,
நீங்கள் சொன்னமாதிரி நட்பு தான் மார்க்ஸியத்துக்கு அடிப்படை.காம்ரேட் என தான் அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வார்கள்.மார்க்ஸியம் லெனின்,ஸ்டாலின் கையில் வீழ்ந்ததுதான் அதன் துரதிருஷ்டம்.
நன்றி பொதுசெயலாளர் குமரன் அவர்களே,
நீங்கள் சொன்ன மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி பின்னூட்டம் மூலம் நன்றி சொல்வது என முடிவுசெய்துள்ளேன்:-)))
அண்ணன் காட்டிய வழியன்றோ
செல்வம் நன்றி,
விவாதிபோம்,
வருகிறேன்.
Post a Comment