Tuesday, February 21, 2006
50.நண்பர்களை சாப்பிடுங்கள்
கேன்னிபாலிஸம்(cannibalism) எனப்படும் தம்மினத்தை சாப்பிடும் பழக்கம் பரிணாமவாதத்தில் முக்கிய இடம் பெறுகிறது.அனைத்து வகை உயிரினங்களிலும் காணப்படும் இப்பழக்கம் சில இனங்களில் கருவிலேயே துவங்கி விடுகிறது.
சான்ட்டைகர் ஷார்க்(sand tiger shark) எனப்படும் சுறாமீன் இனத்தில் தாயின் வயிற்றில் 12 மேற்பட்ட கருக்கள் இருக்கும்.கருவிலேயே பல் முளைத்ததும் அவை அருகிலிருக்கும் பல் முளைக்காத கருக்களை தின்றுவிடும்.பிறகு ஒன்றையொன்று தாக்கி தின்னத் துவங்கிவிடும்.கடைசியில் ஒரே ஷார்க் மட்டும்தான் மீதமிருக்கும்.கருவிலிருந்து வெளியே வரும்போது உலகை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலுடன் பிறக்கும்.தாய் சுறாவுக்கும் இது நல்லதே.ஒரே சமயத்தில் 12 குட்டிகளை வயிற்றில் சுமக்க அதனால் முடியாது.
சிங்கங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும்.ஒரு ஆண்சிங்கம் இன்னொரு ஆண்சிங்கத்தை அடித்து வீழ்த்திவிட்டு தோற்ற ஆணின் குடும்பத்தை தன் குடும்பத்துடன் இணைத்துக் கொள்ளும்.அப்படி செய்யும்போது தோற்ற சிங்கத்தின் குட்டிகளை தின்று விடும்.சிம்பன்சிகள் கூட இதே போல் தான் செய்யும்.
டாரன்டுலா ஸ்பைடர்கள்(Tarantula) இனத்தில் நிலமை மிக மோசம்.பெண் சிலந்திகள் கொலைகாரிகள்.காதல் முடிந்ததும் காதல் செய்த ஆணை சாப்பிட்டுவிடும்.இதிலும் சில வில்லங்கங்கள் இருக்கிறது.நிறைய ஆண்கள் இருக்கும் சிலந்தி இனங்களில் கிடைத்த ஆணையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் பெண் சிலந்திகள்.பசி அடங்கிய பின் தான் காதல்.ஆண்கள் எண்ணிக்கை குறைந்தால் ஆண்களை சாப்பிடுவதை பெண் சிலந்திகள் நிறுத்திவிடும்.
அனகோன்டா பாம்புகள் செய்வதும் இதைத்தான்.வெனெசூலாவில் பிடிபட்ட ஒரு 15 அடி, 90 கிலோ பெண் அனகோண்டா கிட்டத்தட்ட ஒரு 10 அடி ஆண் அனகோன்டாவை விழுங்கியிருந்தது.கர்ப்ப காலம் முழுவதும் இரை தேடுவது சிரமம் என்பதால் காதல் முடிந்ததும் கணவனை கொன்று தின்றுவிடும்.பிறகு பிரசவ காலம் முழுவதும் ஓய்வு தான்.
சில இனங்களில் தாம் சாப்பிடப்படப் போகிறோம் என்பதை அறிந்தே செல்லும் ஆண்கள் உண்டு.பிரம்மச்சாரியாக எத்தனை நாள் காலம் தள்ள முடியும்?மேலும் அவற்றின் ஆயுள் காலம் குறைவு.
வல்சர்(vulture) எனப்படும் கழுகு இனத்தில் பெண் கழுகுகள் ஒரு வார வித்த்யாசத்தில் இரண்டு முட்டைகள் வைக்கும்.முதலில் வெளிவரும் குஞ்சு முட்டையில் இருக்கும் குஞ்சை தின்று விடும்.முட்டையை ஒரெ கொத்து கொத்தி,உள்ளிருக்கும் குஞ்சு தலையில் ஒரு அடி.அவ்வளவுதான்.குஞ்சு காலி.பிறகு ஜாலியாக சாப்பிட வேண்டியதுதான்.
கான்னிபாலிசம் இல்லாவிட்டால் பல உயிரினங்கள் அழிந்துவிடும்.நாம் பல ராஜாக்கள் தம் தம்பிகளை கொன்று விட்டு அரியனை ஏறிய கதையை படித்திருக்கிறோம் அல்லவா?
சிப்லிசைட்(siblicide) எனப்படும் இன்னொரு சோதரக்கொலை முறையும் விலங்குகளிடையே இருக்கிறது.இதில் சாப்பிடுவதற்கெல்லாம் கொலை நடப்பதில்லை.உணவுக்கு,இருக்குமிடத்துக்கு போட்டி வரும்போது குட்டிகள் கொலை செய்யப்படும்.
கறுப்பு நிற கொக்கு தன் உடன்பிறப்பின் தலையை அப்படியே விழுங்கி மூச்சுத்திணற வைத்து கொல்லும்.சாப்பிடுவதற்கெல்லாம் கிடையாது,கொலை செய்ய அது ஒரு வழி.அவ்வளவுதான்.
டால்பின்கள் செய்வது தான் காமடி(கொலை எல்லாம் காமடியா என கேட்கக்கூடாது).பார்ப்பாய்ஸ் என்ற இன மீனின் குட்டிகளை சகட்டுமேனிக்கு தாக்கிக் கொல்லும்.சாப்பிடுவதற்கு அல்ல.பெருசுகளையும் தாக்காது,குட்டிகளை மட்டுமே தாக்கும்.
இன்னொரு இன மீனின் குட்டிகளை மட்டும் ஏன் தாக்குகிறது என பார்த்தால் பயிற்சி எடுப்பதற்காம்.டால்பின் குட்டிகளும் பார்பாய்ஸ் குட்டிகளும் கிட்டத்தட்ட ஒரே சைஸ் இருக்கும்.தன் குட்டிகளை கொல்வதற்கு முன் பார்பாய்ஸ் குட்டிகளை கொன்று பயிற்சி எடுக்குமாம் டால்பின்.
தன் குட்டிகளை ஏன் கொல்ல வேண்டும்?குட்டியோடு இருக்கும் வரை அம்மா டால்பின்,அப்பா டால்பினை பக்கத்தில் விடாதாம்.குட்டியை கொன்றுவிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமாம்.
எது எப்படியோ, என்னை கொல்லாமல் விட்ட என் உடன்பிறப்புக்கு என் நன்றி.
Courtesy:National wild life federation
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் செல்வன். நீங்கள் போகும் வேகத்தில் சீக்கிரமே என்னை முந்திவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். என்னோட அடுத்தப் பதிவு 150வது பதிவு. நன்றி மறக்காம வந்து வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. என்ன? :-)
இன்னும் இந்தப் பதிவை முழுசும் படிக்கலை. 50வது பதிவுன்னு பாத்தவுடனே வாழ்த்துக்கள் சொல்லலாம்ன்னு வந்தேன். :-)
மிக்க நன்றி குமரன்,
நீங்கள் 150 பதிவு தான் போட்டிருக்கிறீர்களா?ஒரே பதிவில் 150தா அல்லது எல்லா பதிவுகளையும் சேர்த்து 150தா?
முதல் வாழ்த்து உங்களுடையது என்பதை அறியும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
அன்புடன்
செல்வன்
செல்வன். என் எல்லா தமிழ் வலைப்பூக்களில் போட்ட பதிவுகளையும் சேர்த்து 149 பதிவுகள் போட்டிருக்கேன். தமிழ்மணத்துல வராததால ஆங்கில வலைப்பூக்களைக் கணக்குல எடுத்துக்கல.
1000மாவது பதிவை எட்டித்தொட வாழ்த்துக்கள் குமரன்.
150வது பதிவை எந்த வலைப்பூவில் போடுவீர்கள்?
சரி இமெயில் வருமல்லவா?பார்த்ததும் ஓடி வந்து விடுகிறேன்.
செல்வன்,
ஒன்றைத் தின்று ஒன்று உயிர் வாழ்வது இயற்கையின் நியதி (சின்ன மீன், பெரிய மீன், கொக்கு, கொக்கைச் சாப்பிட மனிதன்) என்ற கருத்தை விளக்கும் வகையில் எனக்குப்பிடித்த கதைகள் வரிசையில் பாவண்ணன் திண்ணையில் ஒரு பதிவு எழுதியுள்ளார். உங்கள் பதிவு எனக்கு அதை நினைவூட்டியது. நன்றி.
50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
//எது எப்படியோ, என்னை கொல்லாமல் விட்ட என் உடன்பிறப்புக்கு என் நன்றி.//
உங்கள் படம் என நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் போட்டுள்ளதன் அர்த்தம் என்ன ?
செல்வன், எப்பவுமே மைல்ஸ்டோன் பதிவுகள் 'கூடல்' பதிவில் தான் வரும் - 50, 100, 150, 200,.... நட்சத்திர வாரப் பதிவுகள் எல்லாமே. அந்த வலைப்பூ மட்டும் தான் ஒரே ஒரு விஷயத்தின் அடிப்படையில் அமையாத வலைப்பூ.
ஆமாம். வழக்கம் போல் மின்னஞ்சல் அனுப்புவேன். பார்த்தவுடன் வாருங்கள்.
மிக்க நன்றி கமிலியான் அவர்களே,
நட்சத்திரம் வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.
star stedded day in my life
உங்கள் படம் என நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் போட்டுள்ளதன் அர்த்தம் என்ன ? ////
அது என் படமல்ல.
உங்கள் பின்னூட்டத்தில் இருப்பது உங்கள் படமா என்ன?உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு கோட்பாட்டின் படம் தானே?
அதுபோல் நான் அடையாளமாய் தேர்ந்தெடுத்திருக்கும் இப்படமும் எனக்கு பிடித்த ஒரு கோட்பாட்டின் அடையாளச் சின்னமாக இருக்கும் படம் தான்.
ஜுடித் ஷல்கர் சொன்ன எனக்கு மிகவும் பிடித்த ஒரு கோட்பாட்டை வலியுறுத்தும் படமாக இதை நான் கருதி தேர்ந்தெடுத்தேன்.
அந்த கோட்பாடு ஷல்கரின் வார்த்தைகளில் "A liberal is one who believes that cruelty is the worst thing to do"
'கூடல்' பதிவில் தான் வரும் - 50, 100, 150, 200,.... நட்சத்திர வாரப் பதிவுகள் எல்லாமே. அந்த வலைப்பூ மட்டும் தான் ஒரே ஒரு விஷயத்தின் அடிப்படையில் அமையாத வலைப்பூ////
உங்கள் மின்னஞ்சலுக்கு வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்.
I am reserving other words for your 150th post.
All the best super star.
Ashlyn,
My sibling is actually more worse than cat,mouse,lion and tigers.These animals will simply kill.My sibling will torture and kill.:-))))
செல்வன், உங்க வலைப்பூவுக்கு வருவதற்கே பயமாக இருக்கே. Ashlyn மட்டும் எப்படி பயப்படாம எல்லாப் பதிவுக்கும் வந்துடறாங்க? நண்பர்களை சாப்பிடுங்கள்ன்னு வேற தலைப்பு கொடுத்திருக்கீங்க. ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான்.
அன்பு "நண்பர்" குமரனுக்கு
கவலையே படாதீங்க.தலைப்புக்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லாத கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
அதுவும் நான் சுத்த சைவம்.தைரியமா பதிவுக்கு வரலாம்:-))
http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_24.html
Post a Comment