Tuesday, February 07, 2006
39. உலகின் புதிய கடவுள்-- பின் நவீனத்துவ வரலாறு
பின்நவீனத்துவத்தை பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.அவை எவ்வளவு தவறானவை என்பது அத்துறையை சரிவர அறிந்து கொண்டால் விளங்கிவிடும்.உண்மையில் அத்துறை அறிவின் சுடர்.அத்துறையை சேர்ந்த ஞானிகள் நாம் கண்டு வியக்கும் ஐரோப்பிய அமெரிக்க சமூதாயத்தை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள்.
பின்நவீனத்துவ தத்துவ துறைகளை பற்றி மட்டும் சிறிது எழுதுகிறேன்.இவற்றுள் பல தத்துவ துறைகள் உண்டு.இந்த துறைகளின் பட்டியலை நேற்று இட்டிருந்தேன்.இத்துறைகளுக்கிடையே பெரிய வித்த்யாசம் இல்லை.இவை மாறுபடுவது "உண்மை என்றால் என்ன?" என்ற கேள்வியில் தான்.
பின்நவீனத்துவத்தில் எனக்கு பிடித்த துறை ப்ரக்மாடிஸம் (pragmatism) என்ற ஒன்றாகும்.அதை முதலில் விளக்குகிறேன்.
200 வருடங்களுக்கு முன் உண்மை மனிதனால் உருவாக்கப்படுவது, கண்டுபிடிக்கப்படுவதல்ல என்ற சிந்தனை ஐரோப்பாவில் பரவியது.மனிதன் யார்,மனித வாழ்வின் நோக்கம் என்ன,விஞ்ஞானம் என்றால் என்ன என்ற கேள்விகள் தத்துவ துறைகளில் விவாதிக்கப்பட்டன.
டார்வின் வந்த பிறகு (டார்வினும் பின்நவீனத்துவ சிற்பிகளுல் ஒருவர்) இந்த விவாதம் சூடு பிடித்தது.ஹெகலும் மார்க்ஸும் நீட்ச்ஷேயும் இந்த விவாதத்துக்கு ஒரு முடிவு கட்டினர்.
"சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய தேடலின் உருவாக்கம்" என்ற கோட்பாட்டை முன்வைத்தார் ஹெகெல்.அன்றைய ஐரோப்பாவில் " சமூக கட்டமைப்புகள் ஆண்டவனால் உருவாக்கபடுகிறது" என்ற கருத்து நிலவியது".சமூகம்,குடும்பம்,அரசு இவை ஆண்டவனால் படைக்கபடுகைறது என்று நம்பிய ஐரோப்பிய சமூகம் ஹெகலை ஏற்றுக்கொள்லவில்லை.
ஹெகலின் சிஷ்யப்பிள்ளையான மார்க்ஸ் "அந்த சுய தேடல் சமதர்ம சமூகம் அமைப்பதில் நீறைவுரும்" என்று சொன்னார்.சமூகத்தில்,அறிவியலில், அரசியலில் ஆண்டவனுக்கு எந்த பங்கும் இருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை.இம் மூன்றிலும் இரூந்து மதத்தை, கடவுளை ஒழித்து கட்டினால் தான் மனித இனம் முன்னேறும் என்றார்.
(மார்க்ஸின் இந்த கருத்தை அவரின் சீடகோடிகள் பின்நாளில் நீறைவேற்றினர்.church state seperation, church science seperation போனறவை நிகழ்ந்தது இந்த அடிப்படையைல் தான்.)
மார்க்ஸையும் டார்வினையும் நாத்திகர்கள் என்று ஐரோப்பீயரும் அமெரிக்கரும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்த போது நாத்திகம் ஆயிரம் மடங்கு பரவாயில்லை என்று சொல்லும்வணணம் ஒருவர் வந்தார்.அவர் தான் நீட்ச்ஷே.
அவர் முன்னெடுத்த நிகிலிசம் (nihilism) என்ற கருத்தை கேட்டு ஐரோப்பியர் அலறினர்."நான் கடவுளின் விரோதி(I am antichrist)" என அறிவிப்பு செய்தார் நீட்ஷே."கடவுள் செத்துவிட்டார் (God is dead)" என்று எழுதினார்."எந்த மதபுத்தகத்தையும் படிக்காதீர்கள்.இதோ அதற்கு பதில் என் சராதுஷ்ட்ரா (zarathushtra) என்ற புத்தகத்தை படியுங்கள்.இதுதான் இனி உலகின் வேதம்" என்று அறிவித்தார்.
"மனிதன் ஏன் பிறந்தான் " என்ற கேள்வி அர்த்தமற்ற்து."வாழ்வின் லட்சியம் என ஒன்றும் கிடையாது.உண்மை என ஏதுவும் கிடையாது" என சொன்னார்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ingga mathippaangga nu ninaikkaRiingga?mmmmm.....
thanks manikandan,
ashlyn,hope your work schedule is ok now
செல்வன்,
சுவாரசியமாக போய்கொண்டிருந்தபோது தொடரும் போட்டு விட்டீர்கள்...
Thanks muthu,
Dint want to overdose people in one post itself.
பல புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன் செல்வன். அதற்கு மிக்க நன்றி.
தொடருங்கள்.
----
நம்ம குமரன் உங்களுக்கு பதில் சொல்லிட்டார் இங்க. நேரமிருந்தால் பார்த்து பதிலளிக்கவும். நன்றி.
thanks ramanathan.
will look at kumaran's replies.
thanks
selvan
நல்ல தொடர் செல்வன், தொடர வாழ்த்துக்கள். வாரன் பப்பட் என்ன ஆனார்? அந்த தொடரின் அத்தியாங்கள் உங்கள் வலைப்பதிவிலிருந்து நீக்கப்பட்டு இருக்கே?
- ranjit
Thanks ranjith,
I will post about buffet on saturday.I am hadrpressed in work for today till friday.
Previous buffet appears in archives.There was some problems with archives but I corrected it
thanks
selvan
zarathusra பார்ஸிகளின் இறைத் தூதுவர் என்று எண்ணியிருந்தேனே. நீங்கள் வேறு ஏதோ சொல்கிறீர்கள்?
Dear kumaran,
Zarathushtra was a prophet of pharsis.Nietzsche chose that name for his book.But it has nothing to do with zorastrianism.
Post a Comment