Sunday, January 22, 2006
குமரிக்கண்ட வரலாறு
லெமூரிய தேடலின் வரலாறு:
லெமூரியா என்ற சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் பிலிப் லட்லி ஸ்காட்லர் (1864) என்ற வெள்ளையராவார்.லேமூரியாவை கோன்ட்வானாலாந்து,இந்தோ-ஆப்பிரிக்க கண்டம் என்று பல பெயரால் 19ம் நூற்றாண்டின் ஐரொப்பிய ஆராச்சியாளர்கள் அழைத்தனர்.
லெமூரியா என்பது கண்டமா என்று பலத்த விவாதம் நடைபெற்றது. அது ஒரு பாலம் என்று வாதிட்டவர் உண்டு.கண்டம் என்று வாதிட்டவர் உண்டு.நிலப்பாலம் என்று கூறியவர் உண்டு.
அன்றைய தமிழறிகர்கள் தமிழ் பெயரை லெமூரியக்கண்டதுக்கு இட்டனர்.சூரியநாராயன சாஸ்திரியார் 1903'ல் 'குமரி கண்டம்" என அதை அழைத்தார்.'குமரி நாடு' 'குமரி தேசம்' என்று பல பெயர்கள் லெமூரியாவுக்கு அன்று இடப்பட்டன.
லெமூரியா என்ற பெயர் ஏன் வந்தது என்று கேட்டால் தமிழர் கொதித்துபோவோம்.பிலிப் ஸ்காட்லர் ஒரு விலங்கியல் துறை நிபுணர்.லெமூரியகண்டத்தில் லெமூர் என்ற குரங்கினம் வாழ்ந்ததாக கருதி அப்பெயரை அவர் இட்டார்.அன்றைய தமிழறிஙர்களுக்கு அப்பெயர் பிடிக்காதது போனதற்கு இது தான் காரணம்.பெரும்பாலான தமிழ் பெயர்கள் 'குமரி' என்றே துவஙி இடப்பட்டன.
லெமூரிய கண்டத்து தமிழர்களை பற்றி அன்றைய ஐரோப்பியரிடையே பல கீழான கருத்துக்கள் நிலவின.அவர்கள் குரங்கு மனிதர்கள்,நியாண்டர்தால்கள் என்று ஐரோப்பியர் கருதினர்.
யாழ்பாணத்தை சேர்ந்த தமிழறிங்கர் முத்தாம்பி பிள்ளை 1902'லேயே இந்த கருத்தை மறுத்தார்.லெமூரியா என்ற பெயரயே ஒதுக்கிவிட்டு குமரி நாடு என்று அதற்கு பெயர் சூட்டினார்.
சமஸ்கிருத புராணங்களில் லெமூரியா:
வடமொழி புரானங்களில் லெமூரியா "குமாரிகா கண்டம்" என்று அழைக்கபட்டது.குமரித்திவீபம் என்றும் சொன்னார்கள்.
பாரத வர்ஷம் என்று இந்தியா 9 பிரிவுகளாக ஸ்கந்தபுரானத்தில் பிரிக்கபட்டுள்ளது.அதில் குமரித்தீவிபம் பற்றி சொல்லிவிட்டு பாரதநாட்டில் நாகரிக மனிதர்கள் வாழ்ந்த ஒரே பிரதேசம் குமரித்திவீபம் தான் என்று சொலியிருப்பதாக ஆறுமுக நாவலனார் கூறுகிறார்.
சிவன்கோயில்களும்,சைவத்தலங்களும்,பிராமண குடியிருப்புகளும் லெமூரியாவில் நிரம்பியிருந்ததாக ஆறுமுக நாவலனார் கூறுகிறார்.("கந்த புராண வசனம்" 1981-கொழும்பு-வெளியீடு ஆறுமுகநாவலனார் சபை)
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
விவரங்களுக்கு நன்றி செல்வன்.
தமிழ்மணத்தில் இப்போது தெரிகிறது இந்தப் பதிவு.
நன்றி குமரன்,
ஆரம்பத்தில் தமிழ்மணத்தில் வரவில்லை.இப்போது வந்துவிட்டது.
குமரிக்கண்டம் பற்றி எழுததூண்டியது உங்கள் பதிவுதான்.நன்றி
செல்வன்:
சமஸ்கிருத 'புராணங்களில்' லெமூரியா - என்கிறபோதே அதற்கும் குமரிக்கண்ட "வரலாற்றுக்கும்" எந்தத் தொடர்புமில்லை என்பதும் அது வெறும் புனைவுதானென்பதும் தெளிவு.
புராணத்தையும், வரலாற்றையும் போட்டுக் குழப்புவது என்பது உள்நோக்கம் கொண்ட முயற்சி; அதுவும் மதவாதிகளின் திரிப்பு வேலை.
தொல்காப்பியர்,இளங்கோவடிகள் என்று ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன குமரிக்கண்டத்தின் பழந்தமிழ் வரலாற்றுக்கு.
இங்கே - சமஸ்கிருதம், பார்ப்பனர்கள் இருந்தார்கள் என்றெல்லாம் 'புராணக் கதைகளை' உள் புகுத்துவது - உண்மையான வரலாற்றுத் தேடலுக்கு குறுக்கே நிற்கிற தடையாகிவிடும்.
இது என் கருத்து அவ்வளவுதான்; மற்றபடி இனிவரும் காலத்தில் எவ்விதத் திரிபும் 'குமரிக்கண்ட' விஷயத்தில் அறிவு்/வரலாற்று/ஆய்வுத் தளத்தில் சாத்தியமிலையாதலால் - உங்கள் குமரிக்கண்டப் பதிவை வரவேற்கிறேன்.
இப்போதைக்கு குமரிக்கண்டம் பற்றி யார் பேசினாலும் - அது கடைசியில் - தமிழர்களின் உண்மை வரலாற்றை, இந்தியத் துணைக்கண்டத்தின் பூர்வகுடிகளென்ற பெருமையை - அவ்வித விவாதம் மீட்டுத் தரும் என்கிற உண்மையின் மீதுள்ள நம்பிக்கையில் உங்கள் பதிவை வரவேற்கிறேன். :)
>> லெமூரியா என்ற பெயர் ஏன் வந்தது என்று கேட்டால் தமிழர் கொதித்துபோவோம்.பிலிப் ஸ்காட்லர் ஒரு விலங்கியல் துறை நிபுணர். >>
'lemuur' என்றும் 'லெமூர்' என்றும் அழைகப்படுகிற அந்த விலங்கு இன்றும் 'மடகாஸ்கர்' தீவிலே உள்ளது. மடகாஸ்கர் இன்றைய ஆப்பிரிக்கக் கண்டத்தின் அருகில் இருந்தாலும் - நம்முடைய பழமையான குமரிக் கண்டத்தின் நிலப்பரப்பின் ஒருபகுதியாகவே பண்டைக்காலத்தில் இருந்திருக்கும் என்பது ஒருவகை ஆய்வு.
குமரிக்கண்டம் ஒரே நேரத்தில் மூழ்கிடவில்லை. பல்வேறு காலகட்டத்தில் - பல நூற்றாண்டுகளின் கால இடைவெளியில் - அதன் நிலப்பகுதி மூழ்கியது.
அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் 'லெமூர்' என்று அய்ரோப்பியர் அழைத்தனர். ஆனால், நம் பழந்தமிழ் இலக்கியங்களின் வழியில் நாம் அதைக் குமரிக்கண்டம் என்று அழைக்கிறோம். இதில் 'கொதிப்பதற்கு' ஒன்றுமில்லை. :)
neo
ஆறுமுக நாவலனார் சொன்னதாகத் தானே செல்வன் எழுதியிருக்கிறார்? இதில் நீங்கள் சொல்லும் உள்நோக்கம் எல்லாம் எங்கு வருகிறது என்று புரியவில்லை. புராணங்களில் கற்பனைக் கதைகள் இருக்கலாம். ஆனால் அவற்றில் சில வரலாறுகளும் இருக்கலாம் என்பதை மறந்துவிட வேண்டாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் புராணத்தில் சேர்க்கலாம் என்பதால் அதில் கூறப்பட்டதை நீங்கள் உடனே ஒதுக்கிவிடுகிறீர்களா? இல்லையே? தேவையென்றால் ஏற்றுக்கொள்வதும் தேவையில்லையென்றால் புறந்தள்ளுவதும் சரியன்று. எல்லாவிதமான கருத்துகளையும் கேட்போம். நமக்குச் சரியென்று தோன்றுவதை ஏற்றுக்கொள்வோம். என்ன சொல்கிறீர்கள்? :-)
பின்னூட்டத்துக்கு நன்றி நியோ அவர்களே,
தோராவை(பழைய எற்பாடு) ஒதுக்கி வைத்துவிட்டு யூத இனத்தின் வரலாற்றை எந்த வரலாற்று ஆசிரியனும் எழுதமாட்டான்.புதிய எற்பாட்டை மேற்கோள் காட்டாமல் கிறிஸ்துவர்களின் வரலாறு எழுதமுடியாது.கில்கமீஷை ஒதுக்கிவிட்டு சுமேரியர் நாகரிகம் பற்றி எழுதுவதும் யாரும் செய்யமாட்டார்கள்.அதுபோல் புராணங்களையும் ,ராமாயண மகாபாரதத்தையும் ஒதுக்கிவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது.
குமரிக்கண்டத்தில் சமஸ்கிருதம் இருந்ததா என்பது தெரியவில்லை.குறிப்புகளை பார்த்து அதை எழுதுகிறேன்.ஆனால் குமரிக்கண்டத்தின் தலைநகர் மதுரை.மதுரை என்பது மதுரம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது.
லெமூரியாவில் அந்தண சமூகத்தை சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்ததாக ஆறுமுக நாவலனார் எழுதியுள்ளார்.அதைத் தான் நான் இங்கு குறிப்பிட்டேன்.
தாங்கள் சொன்ன குரங்கு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் வாலி,சுக்ரீவனா?
அகத்தியர் ஆரியர் தானே? அவர் தமிழை வளர்த்தார் அவர் மாணவர்தானனே தொல்காப்பியர். கீழ் உள்ளதை படித்துப்பாருங்கள்
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=1709&postdays=0&postorder=asc&start=0
என்னார் அவர்களே,
ஆரிய திராவிட மோதல் அரசியல்.அதனுள் நான் புக விரும்பவில்லை.5000 வருடம் முன்பு என்ன நடந்தது என புராணங்களையும்,வேதங்களையும் வைத்து மோதி யாது பயன்?ஆரியனும் திராவிடனும் தாயாய் பிள்ளையாய் தான் இந்தியாவில் வாழ வேண்டும்.உலகம் சிறு கிராமமாக சுருங்கிவிட்டது.உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஆப்பிரிக்க குரங்கிலிருந்து வந்தவர்கள் தான்.அப்படிப்பார்த்தால் தமிழனின் பூர்விகம் ஆப்பிரிக்காதான்.தமிழ்நாடல்ல.தமிழனும் தமிழ்நாட்டுக்கு கைபர் கணவாய் வழியாகத்தான் வந்தான்.
ஆரியனும் குரங்கு வம்சம்தான்.திராவிடனும் குரங்கு வம்சம் தான்.வெள்ளைக்காரனும் கறுப்பனும் குரங்கு வம்சம் தான்.ஆரியனும் திராவிடனும் அண்ணன் தம்பியாய் வாழ்வதே சாலச்சிறந்தது..
சரியான கருத்து நண்பரே நான் 100% ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி நண்பரே
லெமுரியா, குமரிக் கண்டம் போன்றவை அனுமானங்களின் அடிப்படையில் உருவான கற்பனைகள். அந்த அனுமானங்களை அறிவியல் நிராகரித்துவிட்டது.ஆகையால் கற்பனைகளை கற்பனைகள் என்று கொள்வதே தகும். அதை வரலாறு என்று எண்ணி குழம்ப வேண்டாம்.
ரவி, கற்பனை என்று நம்ம புராண இதிகாசங்கள் கூடத்தான் அறிவியல் ஒதுக்கி வச்சுடுச்சு. நாம என்ன அவைகளைப் பற்றிப் பேசாமலா இருக்கிறோம்?
அது சரி. லெமுரியாங்கறது கற்பனைன்னு அறிவியல் எப்ப ஒதுக்கி வச்சது. அதை உண்மைன்னு இன்னும் தெளிவா ஆராய்ச்சி முடிவுகள் வரலைன்னுத் தான் நெனைக்கிறேன். உங்க கிட்ட ஏதாவது சுட்டி இருந்தா சொல்லுங்க.
ரவி ஸிரினிவாஸ்,
குமரிக்கண்டம் பற்றி பல வரலாற்று ஜர்னல்களில் எழுதியுள்ளார்கள்.ஆய்வுகள் தொடர்ந்து நடந்தால் மேலும் விவரங்கள் தொடர்ந்து வெளிவரலாம்.
இதைப்பற்றி அதிகம் தெரியாதென்பதால் பதிவிற்கு நன்றி என்று கூறி நிறுத்திக்கொள்கிறேன். (அந்த 'நன்றி'யல்ல) :)))
லேமூரியா என்பது wikipediaவில் மட்டுமே கேள்விப்பட்டது! :(((
லெமூரியா பல வரலாற்று ஜர்னல்களில் சொல்லப்பட்ட உண்மை ராமனாதன்.அது சரி அது என்ன அந்த "நன்றி"?புரியலையே?
//அது சரி அது என்ன அந்த "நன்றி"?புரியலையே?//
ஹி ஹி. செல்வன். அது ஒரு கனாக்காலம்!!! (தமிழ்மணத்தில்!!!) பழசத் தேடுனா (ஜூன், ஜூலை 2005!) பதில் கிடைக்கும்!!!!
இதுக்கு மேல சொன்னா, நான் அவுட்டு! எத்தன பேரிய்யா இப்படிக் கிளம்பிருக்கீக???
நான் எங்கே கிளம்பினேன்?நான் பாட்டுக்கு குரங்கு,மனுஷன் அப்படின்னு பதிவு போட்டுட்டு சிவனேன்னு ஒரு மூலைல கிடக்கேன்
ரவி ஸ்ரீனிவாஸ்
எது கர்ப்பணை அன்று எங்கள் ராவணன் சென்றது
1.புஷ்பக விமானம் - ஆகாய விமானம்
2. கலசத்தில் பிறந்தது 100 குழந்தை - டெஸ் டீயூப் குழந்தை
3.மாயக்கண்ணாடி -- டிவி
4. இமயமலையில் சிவலிங்கம் உள்ளது
மற்றவை ஞாபகம் இல்லை தனியே ஒரு பதிவு போடுகிறேன்
புஷ்பக விமானம் பற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.நான் இந்த விளையாட்டுக்கு வரலை.
செல்வன் நல்ல கட்டுரை, பாராட்டுகள்.
இதோ குமரி கண்டத்தின் வரைப்படம்.
http://img.photobucket.com/albums/v452/paransothi/KumariKandam.jpg
http://img.photobucket.com/albums/v452/paransothi/KumariKandam.jpg
பரஞ்சோதி அவர்களே,
அந்த புகைபடத்தை காண பாஸ்வர்ட் கேட்கிறது அந்த சுட்டி
திண்ணையில் குமரிக்கண்டம் பற்றி குமரிமைந்தன் எழுதிவருகிறார்
www.thinnai.com
இது அவரின் வலைப்பக்கம்
http://kumarimainthan.com
மேலும் விபரம் பெற மின்னஞ்சல் முகவரி
kumarimainthan@sify.com
எட்வின் பிரகாஷ்
நன்றி.குமரிமைந்தனின் வலைதளம் சென்று பார்க்கிறேன்.இந்த சுட்டிகள் இங்கிருப்பது பலருக்கும் உபயோகமாக இருக்கும்
நன்றி பிரகாஷ்
//
தோராவை(பழைய எற்பாடு) ஒதுக்கி வைத்துவிட்டு யூத இனத்தின் வரலாற்றை எந்த வரலாற்று ஆசிரியனும் எழுதமாட்டான்.புதிய எற்பாட்டை மேற்கோள் காட்டாமல் கிறிஸ்துவர்களின் வரலாறு எழுதமுடியாது.கில்கமீஷை ஒதுக்கிவிட்டு சுமேரியர் நாகரிகம் பற்றி எழுதுவதும் யாரும் செய்யமாட்டார்கள்.அதுபோல் புராணங்களையும் ,ராமாயண மகாபாரதத்தையும் ஒதுக்கிவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது.
//
சரியாகச் சொன்னீர்கள்...
இப்படி எல்லாம் எழுதினால் மதவாத திரிப்பு என்று கூச்சல் போடுவார்கள் நம் அறிவு ஜீவி வரலாற்றாளர்கள்..("Eminent historians").
இந்திய வரலாற்றை கண்டபடி திரித்துவிட்டு, சரி செய்தால் communal என்று கத்தியவர்கள் தானே..இந்த ஆரிய திராவிட இனவாதம் வளர்த்த கம்யூனிச வரலாறு ஆசிரியர்கள்...
ஷங்கர்,
வரலாற்று பாடபுத்தகத்தில் அரசியல் புகுந்தது இந்தியாவின் தலை எழுத்து.வரலாற்று நூலாசிரியர்களுக்குள்ளும் அரசியல்,இனம்,ஜாதி புகுந்து விட்டதுபோல் தெரிகிறது.History என்பது His storyஆகிவிட்டது:-)
செல்வன்,
தகவலுக்கு நன்றி. வரலாறுகள் பற்றியோ அல்லது புராணக்கதைகள் பற்றியோ எனக்கு போதிய அறிவு இல்லாமையால் உங்கள் பதிவு பற்றி என்னால் கருத்து ஏதும் சொல்ல முடியாது. ஆறுமுக நாவலர் வாழ்ந்த மண்ணில் பிறந்திருந்தும் அவரின் ஒரு படைப்பைக் கூட படிக்கவில்லையே எனும் ஏக்கம் உங்களின் பதிவைப் படிக்கும் போது எழுகின்றது.
//லெமூரிய கண்டத்து தமிழர்களை பற்றி அன்றைய ஐரோப்பியரிடையே பல கீழான கருத்துக்கள் நிலவின.அவர்கள் குரங்கு மனிதர்கள்,நியாண்டர்தால்கள் என்று ஐரோப்பியர் கருதினர்.//
நீங்கள் சொல்வது உண்மைதான். நான் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் ஆசிரியரும் அதைத்தான் சொல்கிறார்:
"In the Europe of the 1890s, the colonisation of other lands was considered to be not only justified, but also a praiseworthy and noble enterprise, taking civilisation to backward lands ..."
[John R.Gee, Unequal Conflict, p.14]
வெற்றி,
ஆறுமுக நாவலரின் புத்தகங்கள் இப்போது நூலகங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதால் நீங்கள் படிக்காததில் ஆச்சரியமில்லை.அக்காலத்திய இலங்கை தமிழரின் தமிழார்வமும் இயல் இசை நாடகத்தமிழுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டும் தற்போதைய தலைமுறைக்கு நினைவூட்டப்படுதல் அவசியம்.
நன்றி வெற்றி.
அன்புடன்
செல்வன்
Post a Comment