Sunday, January 22, 2006

வாரன் பப்பட்டின் வெற்றி வழி - 5

பப்பட் முதலீடு செய்வது டெக்னாலஜி தேவையில்லாத சாதாரண மனிதனும் அறிந்து கொள்ளக்கூடிய துறைகள் தான். வங்கி(வெல்ல்ஸ் பார்கோ),உணவு,இன்சூரன்ஸ்,குளிர்பானம்(கோக்),சவர கம்பனி(ஜில்லெட்), கிரெடிட் கார்ட்(அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்) போன்ற டெக்னாலஜி அற்ற துறைகளில் தான் பப்பட் முதலீடு செய்வார். பப்பட் வாங்கிய கம்பனிகள் அனைத்தும் நேர்மைக்கு பேர் போனவை.மிகபுகழ் பெற்ற பிராண்டுகளை கொண்டவை.இவை இருக்கும் துறைகள் உலகம் அழியும் வரை தொடர்ந்து இருக்கும்.என்ன டெக்னாலஜி வந்தாலும் இவற்றை ஒன்றும் செய்ய முடியாது.இப்படிப்பட்ட துறைகளில் தான் பப்பட் முதலீடு செய்வார். இந்த கம்பனிகள் அனைத்துக்கும் வருடா வருடம் அவை அடையும் லாபம் எவ்வளவு என்பதை நாம் எளிதில் கணக்கிட இயலும்.இந்த கம்பனிகள் expected earnings என்று forecast ஒன்றை வருட ஆரம்பத்திலேயே கொடுத்துவிடும்.அனைத்து கம்பனிகளும் அப்படி தரும் என்றாலும் டெக்னாலஜி போன்ற துறைகளில் எதிர்பாரா நிகழ்வுகள் லாபத்தை குறைக்கும்.அந்த வாய்ப்பு இந்த துறைகளில் மிகவும் குறைவு. expected cashflow, predicted EPS(earnings per share) என்பதை பப்பட் முக்கியமாக கருதுவார். பப்பட் commodity என்று சொல்லப்படும் துறைகளை சந்தேகத்தோடு தான் நோக்குவார்.ஆனால் அந்த துறைகளிலும் அவர் சில சமயம் முதலீடு செய்வது உண்டு. ஆக பப்பட்டின் முறைகளை பின்பற்ற விரும்புவோர் எந்த துறை பங்குகளை வாங்கலாம்? 1.FMCG (fast moving consumer goods) 2.Finance (banks, insurance,NBFC's like ICICI idbi) 3.Branded food 4.retail and wholesale companies 5.Infrastructure companies(container corporation,transport firms etc) எதை தவிர்க்க வேண்டும்? 1.New companies in any industry 2.Technology companies 3.TV and other media companies 4.Textiles 5.IPO's (Never subscribe to any IPO of a new firm) சரி-எந்த துறை பங்குகள் வாங்கலாம் என்று முடிவு செய்தாகிவிட்டது.எந்த கம்பனிகள் என்பதற்கும் ஒரு தராதரம் பார்க்கும் முறையை பப்பட் தந்திருக்கிறார்(நேர்மையான,நீண்டகாலமாக தொழில் இருக்கும் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கும் கம்பனிகள்).இனி என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா? இனி தான் இருக்கிறது சில எளிய பைனான்ஸ் சூத்திரங்கள். அம்மாதிரி கம்பனிகளின் தற்போதைய பங்கு விலை(market price) என்ன?அவற்றின் உண்மையான பங்கு விலை(Intrinsic price) என்ன என்பதை கணக்கிட வேண்டும்.உண்மை விலை சந்தை விலையை விட அதிகமாக இருந்தால் பங்குகளை வாங்க வேண்டும். Intrinsic price > market price = buy (indicates share is under valued) intrinsic price < market price = dont buy (indicates share is over valued) that is market price < Intrinsic price = buy market price > Intrinsic price = dont buy உண்மை விலை என்பதை எப்படி கணக்கிடுவது?ஒரு எளிய சூத்திரம் மூலம். (அது நாளை)

5 comments:

ranjit kalidasan said...

Interestly going. You are writing in a novel style selvan
-ranjit

Unknown said...

நன்றி ரஞ்சித்.கட்டுரையில் எடிட் செய்து சிறிது மாற்றம் செய்துள்ளேன்.கடைசி இரண்டு பத்திகளும் இப்போது தெளிவாக இருக்கும் என நம்புகிறேன்

அன்புடன்
செல்வன்

Unknown said...

மிக்க நன்றி சத்யம்

ஜெ. ராம்கி said...

Ippothaan soodu pudikkuthu... earlier it was very slow..:-)

Unknown said...

வருக ரஜினி ராம்கி

தலைவர் வந்தபிறகு சூடு பிடிக்காமல் இருக்குமா?