Tuesday, January 17, 2006

கொரில்லா காதல்

கொரில்லாக்களை பற்றி பல மாயைகள் நிலவுகின்றன.கிங்காங் படம் வந்த பிறகு இது அதிகம் தான் ஆனது.கொரில்லாக்கள் ஜென்டில் ஏப் என்று கூட அழைக்கபடுகின்றன. ஆனால் கொரில்லாக்கள் தமது காதலை தெரிவிக்கும் முறையை அறிந்தால் பலர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.கொரில்லாக்கள் பெரும்பாலும் மனிதன் போல் தான்.கொரில்லா ஆண் அந்தப்புரத்தையே வைத்திருக்கும்.அந்த அந்தப்புரத்தில் விசுவாசமான பெண் கொரில்லாக்களும்,கொரில்லா சிசுக்களும் இருக்கும்.பெண் கொரில்லாக்கள் தாயன்பு மிகுந்தவை.கொரில்லா ஆண்கள் பெண்கொரில்லக்களிடம் குடும்ப வன்முறை,அடி ஆகியவற்றை காட்டுவதில்லை.பெண் கொரில்லக்கள் ஆண்கொரில்லக்களுக்கு கட்டுபட்டு தான் வாழும். கொரில்லாக்களிடையே குடும்ப உணர்வும் பாசமும் அதிகம்.குட்டி கொரில்லாவை வேட்டையாட முயலும் வேட்டைக்காரர்கள் அதன் தாயையும் தந்தையையும் கொன்றால் தான் குட்டியை நெருங்கவே முடியும். சக்களத்தி சண்டையும் பெண் கொரில்லக்களிடம் ஏற்படுவதுண்டு.அப்போது ஆண் கொரில்லா சின்னதாக உறுமினால் சண்டை நின்றுவிடும்.வலிமை வாய்ந்த கொரில்லக்கள் பல மனைவிகளை வைத்திருக்கும்.வலிமை குறைந்த கொரில்லாக்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின்படி வாழும்.வலிமையற்ற கொரில்லாக்கள் பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டியதுதான். வயதான தந்தையின் மனைவிகளை வயது வந்த மகன் வாரிசுரிமையாக பெறுவதும் கொரில்லா குடும்பங்களில் நடக்கும். வனவிலங்கு ஆய்வாளர்களை பல வருடங்களாக ஆச்சரியப்பட வைத்த விஷயம் கொரில்லாக்களிடையே நடக்கும் சிசுக் கொலை தான்.30% கொரில்லாக்கள் குழந்தைப் பருவத்திலேயே கொல்லப்பட்டுவிடும். சிசுக்கொலை இந்த அளவுக்கு ஏன் நடக்கிறது என்பது புரியாத புதிராக இருந்தது. டியான் பாஸி இந்த புதிரை சற்று விடுவித்தார்.அவருக்கு பிறகு பல ஆய்வுகள் கொரில்லா சிசுக்கொலையை ஆராய்ந்தன.வியக்க வைக்கும் பல உண்மைகள் தெரிந்தன. வலிமை வாய்ந்த ஆண்கொரில்லாவின் அந்தப்புரத்தில் இருக்கும் பெண்கொரில்லாவை இன்னொரு ஆண்கொரில்லா விரும்புகிறது.அந்த பெண் கொரில்லாவை அடைய ஒரே வழி அதன் குழந்தையை கொல்வது தான்.பெண்கொரில்லாக்கள் தாய்ப்பாசம் மிகுந்தவை.தனது கணவன் தன் குழந்தையை காப்பான் என்று நம்பித் தான் அவை இருக்கின்றன.அந்த நம்பிக்கையை உடைக்க ஒரே வழி குழந்தையை கொல்வதுதான்.அப்படி செய்தால் தனது கணவன் உதவாக்கரை என்ற நம்பிக்கை அந்த பெண்கொரில்லா மனதில் வந்துவிடும்.பிறகு அது அந்த கணவனை விட்டு பிரிந்துவிடும். கணவனை பிரிந்த பெண்கொரில்லா தனது குழந்தையை கொன்றவனுடன் ஏன் ஜோடி சேர்கிறது?அது காட்டில் உள்ள வேறு எந்த ஆண் கொரில்லாவுடனும் ஜோடி சேரலாம்.ஆனால் 100க்கு 100 சதவிகிதம் அவை தமது குழந்தையை கொன்ற கொரில்லாவுடனே ஜோடி சேர்கின்றன.இனி பிறக்கும் குழந்தையாவது பாதுகாப்பாக இருக்கட்டுமே என்ற அச்ச உணர்வு காரணமா அல்லது தனது முன்னாள் கணவனை மீறிய வலிமை வாய்ந்த இந்த புதிய கொரில்லாவின் ஆளுமை தரும் ஈர்ப்பு காரணமா என்று தெரியவில்லை.ஆனால் நடப்பதென்னவோ இதுதான். அடுத்தவன் மனைவியை கவர கொரில்லாக்கள் பின்பற்றும் முறை சிசுக்கொலைதான். வேறொருவிதத்திலும் கொரில்லாக்களிடையே சிசுக்கொலை நடைபெறுவதுண்டு.ஆண்கொரில்லா திடீரென்று இறந்து போனால் அந்த குடும்பமே சின்னா பின்னமாகிவிடும்.புதிதாக ஒரு ஆண்கொரில்லா தலைமையேற்காவிட்டால் குடும்பம் சீர்குலைந்து போகும்.புதிதாக தலைமையேற்கும் கொரில்லா இதற்குமுன் இருந்த தலைவனுக்கு பிறந்த அத்தனை குட்டிகளையும் கொன்றுவிடும்.தனக்கு பிறக்கும் குட்டிகளை மட்டுமே வாழ அனுமதிக்கும்.

12 comments:

குமரன் (Kumaran) said...

என்னாய்யா தலைப்பு இது? :-) உங்களுக்கும் பின்னூட்ட ஆசையா? அதையும் கெடுப்பானேன். பின்னூட்டம் போட்டுட்டேன். :-) நிறைய பின்னூட்டம் பெற்று பெருவாழ்வு வாழ்க. :-)

Unknown said...

குமரன் அவர்களே

பின்னூட்டம் பெற வேண்டும் என்று ஆசை உண்டு.ஆனால் அதற்காக இந்த தலைப்பு வைக்கவில்லை.புதுமையாக தலைப்பு வைக்க வேண்டும் என்று எப்போதும் யோசிப்பேன்.அதே போல் யோசித்து தான் இந்த தலைப்பை வைத்தேன்.தலைப்பு உட்பொருளுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.இக்கட்டுரையின் கருப்பொருளை தான் தலைப்பாக கொடுத்திருக்கிறேன்.

rv said...

விவகாரமான தலைப்புன்னாலும் பொருத்தமாத்தான் இருக்கு.

//புதிதாக தலைமையேற்கும் கொரில்லா இதற்குமுன் இருந்த தலைவனுக்கு பிறந்த அத்தனை குட்டிகளையும் கொன்றுவிடும்.//
இது சிங்கங்களின் குடும்பங்களிலும் நடக்குமுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.

Unknown said...

தகவலுக்கு நன்றி.

Muthu said...

நிஜமாய்யா இதெல்லாம்,அப்போ வர்ணம், சாதி எல்லாம் அங்கயும் உண்டான்னு பார்த்து சொல்லும்....

G.Ragavan said...

தலைப்பு என்னடா இப்பிடியிருக்கேன்னு கொஞ்சம் யோசிச்சுக்கிட்டுதான் உள்ள வந்தேன். வந்தா இப்பிடி ஒரு சமாச்சாரம்.

கொரில்லா...இப்பிடியெல்லாம் செய்யுதா...பயங்கரமா இருக்கே....

பிடிக்கலைன்னா....லேசா வெலகிப் போற சுதந்திரம் பெண் கொரில்லாவுக்குக் கூட இருக்கு.....ம்ம்ம்..நான் ஒன்னும் சொல்லலை. வாயை மூடிக் கிட்டேன்.

ஒரு குரங்குக் கூட்டம் இன்னொரு கூட்டத்தோட போரிட்டு ஜெயிச்சா......அடுத்த கூட்டத்துப் பெண் குரங்குகளை வன்புணருமாம். அப்பாடியோவ்....செக்ஸ் என்பது உலக இயக்கத்தையே தாங்கீட்டு இருக்குங்குறது எவ்வளவு உண்மை.

நாமக்கல் சிபி said...

விவகாரமான தலைப்புதான். பரவாயில்லை உட்பொருளுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது.

கணவன் மீதான நம்பிக்கையைக் குலைத்து பின் பெண் கொரில்லாவை அடைதல். ம்ம்ம்ம்ம்... இப்பொது புரிகிறது. ஆளுங்கட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியைக் கவிழ்க்கும் வித்தை எப்படி தோன்றியது என்று.

நிலா said...

செல்வன்

நல்லா கோர்வையா இன்ஃபர்மேடிவா எழுதிருக்கீங்க. ஒழுங்கான தலைப்பு வச்சிருந்தா இன்னும் நிறைய பேர் படிச்சிருப்பங்கன்னு நினைக்கிறேன். என்னதான் கட்டுரையோடு ஒத்துப்போகுதுன்னாலும் அந்தத் தலைப்பு கொஞ்சம் முகம் சுளிக்க வைக்குது. ரொம்ப யோசிச்சிட்டு வேற படிக்கறதுக்கு எதுவும் இல்லைங்கறதனாலத வந்தேன். உங்ககிட்ட நல்ல திறமை இருக்கு. தேவையில்லாத ஸ்டன்ட் தேவையில்லைங்கறது என் எண்ணம்

Unknown said...

கருத்துக்களுக்கு நன்றி ராமனாதன்,முத்து,சிபி,நிலா,தேவ்,ராகவன் அவர்களே,

புதுமையாய் இருக்கட்டும் என்று தலைப்பு வைத்து backfire ஆகிவிட்டது.அடுத்த முறை வேறு தலைப்பிடுகிறேன்.

முத்து அவர்களே-எல்லா கொரில்லாவகைளிலும் சாதி கிடையாது:-)

Mohosapiens என்ற குரங்கு இனத்தில் தான் சாதி மற்றும் வர்ண பிரிவினைகள் உண்டு.

பி.கு Homo sapiens = மனிதன்

Sundar Padmanaban said...

//Mohosapiens என்ற குரங்கு இனத்தில் தான் சாதி மற்றும் வர்ண பிரிவினைகள் உண்டு.

பி.கு Homo sapiens = மனிதன் //

சூப்பர்!! :))

இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலை செல்வன். Edit Posts போய் தலைப்பைத் திருத்திடுங்க.

நன்றி.

Unknown said...

மாற்றிவிட்டேன் சுந்தர் அவர்களே.

Unknown said...

மிக்க நன்றி ஸ்னேகன்,மேசலின் அவர்களே,

கொரில்லாவை பற்றியும் நீங்கள் சொன்ன டார்வின் தத்துவம் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன்.
நன்றி