Tuesday, January 17, 2006

நபகோவின் லோலிடா

இந்த கவிதா ரசிகனின்,புலவனின் காதலை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.தோற்றுப்போன இவன் காதலை எண்ணி அழுவதா,செத்துபோன இவன் காதலியை எண்ணி அழுவதா? என்னென்ன தியாகம் செய்கிறான் காதலிக்காக?காதலுக்கு தன்னை மெழுகுவர்த்தியாய் உருக்கி அவளுக்காக ஒரு காதல் கோட்டையே தன் இதயத்தில் கட்டுகிறான்.இந்த மாபெரும் கவிஞனை பற்றிய,உலகை குலுக்கிய அமர காதல் பற்றிய ஒரு சிறு விமர்சனம் தான் இக்கட்டுரை. தன் காதலியை பற்றி அவன் வாயிலேயே சொல்வதை கேளுங்கள்.(கவிதையின் சுவை குன்றிவிடக்கூடாது என்பதற்காக ஆங்கிலத்திலேயே தருகிறேன்.இதை தமிழில் மொழிபெயர்க்கவே முடியாது என்பது தான் நிஜம்) Lolita,light of my life Fire of my loins My sin,my soul Lo-lee-ta The tip of taking the trip of three steps down the palate to tap at three,on the teeth,lo lee ta ஹம்பிரெட் ஹம்பிரெட் என்பது அந்த கவிஞனின் பெயர்.கலா ரசிகனின் பெயர்.பெயரே வித்யாசமாக இருக்கிறது என்கிறீர்களா?ஆம்.அது தான் ஹம்பிரெட் ஹம்பிரெட்.இவனுக்கு அழகான பெண்கள் என்றால் மிக பிரியம்.இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா?இவனுக்கு பிடித்த பெண்கள் வயது 9 முதல் 14 வரை இருக்க வேண்டும்.இம்மாதிரி பெண்களை இவன் நிம்பெட்(nymphet) என்று பிரியமுடன் அழைப்பான்.என்ன ரசனை இது என்று முகம் சுழிக்கிறீர்களா?முன்பே சொன்னேனே வித்யாசமான கலாரசிகன் ஹம்பிரெட் ஹம்பிரெட் என்று. ஹம்பிரெட் ஹம்பிரெட் அழகின் ரசிகன்.9 முதல் 14 வரை தான் ஒரு பெண்ணின் அழகு முழுமை பெறுகிறது என்பது அவன் எண்ணம்.ஆனால் இதை வெளியே சொன்னால் அவனை எல்லாரும் குற்றவாளி போல் பார்க்கிறார்களாம்.அதனால் அவன் இதை சொல்வதில்லை.ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆசைதானே இது?இதற்கு போய் அவனை குற்றம் சொன்னால் அவனால் என்ன செய்ய முடியும்?அவன் மனம் விரும்பும் அழகை தானே அவன் ரசிக்க முடியும்? இதே போல் தான் அவன் அழகிய வண்ணத்து பூச்சிகளையும் ரசிப்பான்.மணிக்கணக்கில் அவைகளை பார்த்து ரசிக்க வேண்டும் என்பது அவன் ஆசை.நியாயமான ஆசை தானே என்கிறீர்களா?ஆம்.நியாயமான ஆசைதான்.ஆனால் இந்த முட்டாள் வண்ணத்துபூச்சிகளுக்கு அவன் ஆசை தெரிவதில்லை.மணிக்கணக்கில் அவன் முன் அவை உட்காருவதில்லை.அதனால் தான் அவைகளை அவன் கொன்று தனது நோட்டுப் புத்தகத்தில் பின் குத்தி ஒட்டிவைத்து ரசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்ன முகம் சுழிக்கிறீர்கள்?அதுதான் முன்பே சொன்னேனே வித்யாசமான கலாரசிகன் ஹம்பிரெட் ஹம்பிரெட் என்று.. ஹம்பிரெட் ஹம்பிரெட் கொலைகாரன் அல்ல.கலாரசிகன்.அழகின் ரசிகன்.அருமையான கவிஞன்.அவன் கதை ஆரம்பத்தில் எழுதிய கவிதையை படித்தீர்கள் அல்லவா? அது சரி.யார் அந்த லோலிடா என்று கேட்கிறீர்களா?கவிஞனின் காதலி தான் அந்தப் பெண்.அவளை அவன் பிரான்சில் சந்திக்கிறான்.முதல் சந்திப்பிலேயே காதல்.கண்டதும் காதல்.இதயத்தை கொள்ளை கொள்கிறாள் அந்த அழகு தேவதை.அவள் இயற்பெயர் டோலோரஸ் ஹாஸ்.என்ன பெயரில் ஒரு கவித்துவமே இல்லை என்று பார்க்கிறீர்களா?ஹம்பிரெட் ஹம்பிரெட்க்கும் இதுதான் தோன்றியது.அதனால் தான் அழகாக அவளுக்கு லோலிடா என்று பெயர் சூட்டி வித விதமாக அவள் பெயரை முன்பு சொன்ன கவிதையில் உள்ளதுபோல் உச்சரித்து மகிழ்ந்தான். லோலிடா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா? http://www.dictionary.com/ இல் Lolita என்று அடித்து பாருங்கள் தெரியும்.ஆனால் பார்த்துவிட்டு மறுபடி முகத்தை சுழிக்கக் கூடாது.என்ன ரசனை இது,இவன் மனிதனா என்று திட்டக்கூடாது.அதுதான் முன்பே சொன்னேனே வித்யாசமான கலாரசிகன் ஹம்பிரெட் ஹம்பிரெட் என்று.. தனது காதலியை சந்தித்த அந்த வினாடியை இந்த அழகின் ரசிகன் எப்படி மெய்மறந்து வர்ணிக்கிறான் என்று பாருங்கள் I loved her. It was love at first sight, at last sight, at ever and ever sight. தெய்வீக காதல் இது என்று தோன்றுகிறதல்லவா?இப்படிபட்ட காதலியை அடைய நாம் என்ன தான் செய்ய மாட்டோம்?எதையும் செய்வோமல்லவா?அதை தான் இந்த கலாரசிகனும் செய்தான். அவன் தன் காதலியை அடைய தடையாய் இருந்தது எது?சமுதாயம் ஐயா,சமுதாயம்.நாசமாய் போன இந்த சமுதாயம்.அம்பிகாபதி அமராவதியை பிரித்த அதே சமுதாயம் தான் இவர்களையும் பிரித்தது.இவன் வயது நாற்பதாம்.அவள் வயது 13ம்.இவன் தன் காதலை அவளிடம் தெரிவிக்கவே கூடாதாம்.என்னென்ன தடைகளை காதலுக்கு குறுக்கே போடுகிறது பாருங்கள் இந்த பாழாய் போன பிரென்சு சமுதாயம்? ஆனால் நீங்கள் தான் முன்பே சொல்லிவிட்டிர்களே,இப்படிபட்ட காதலியை அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று.நான் எங்கே சொன்னேன் என்கிறீர்களா?சொன்னிர்கள்.முந்தைய பத்திக்கு முந்திய பத்தியை படித்துப் பாருங்கள் ஐயா. அவள் பூமுகத்தை,(மன்னிக்கவும் லோலிடாவிடம் நமது கவிஞனுக்கு பிடித்தது அவள் கால்கள் தான்.) அவள் இளம் கால்களை தினமும் காண நம் கவிஞனுக்கு தெரிந்த ஒரே வழி லோலிடாவின் வீட்டில் வசிப்பதுதான்.அதெப்படி வசிக்க முடியும் என்கிறீர்களா?திருமணம் செய்துகொண்டால் வசிக்க முடியுமல்லவா? அதெப்படி வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா?அவளை அவன் திருமணம் செய்தான் என்று எங்கே ஐயா சொன்னேன்?அவன் திருமணம் செய்தது லோலிடாவின் தாயை. இது என்ன அக்கிரமம் என்கிறீர்களா?காதலிப்பது ஒருத்தியை.கைபிடிப்பது இன்னொருத்தியா என்கிறீர்களா?நியாயமான கேள்விதான்.ஆனால் சற்றுமுன் நீங்கள் தானே இப்படிப்பட்ட காதலிக்காக எதுவும் செய்யலாம் என்று சொன்னிர்கள்?சொன்னபிறகு மாற்றி பேசுவது நியாயம் இல்லை ஐயா,நியாயம் இல்லை. தனது காதலியின் கால்களை தினமும் காண அவளின் தாயை திருமணம் செய்த அவன் ரசிக உள்ளத்தை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லையா?என்னது இல்லையா?சரியா போச்சு போங்கள்.நல்ல ரசிகர் நீங்கள்.என்ன ரசனையோ போங்கள் காதலித்த பெண் தன்னை அப்பா என்று அழைக்கும் கொடுமையை எத்தனை நாள் தாங்குவது?தனக்கும் தன் காதலிக்கும் குறுக்கே நிற்பது யார்?ஒரு கிழ மனைவி.இம்மாதிரி இடைஞ்சல் பிடித்த மனைவிகளை கொல்லலாம் போல் கோபம் வருமா வராதா?கிழவிகள் எல்லாம் எதற்கு உயிர் வாழ்ந்துகொண்டு?நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.இந்த கிழ போல்டுகள் எல்லாம் உயிர் வாழ வேண்டும் என்று என்ன அவசியம்?சுனாமி,ரயில் விபத்து என்று ஏதேதோ வந்து இவளை கொண்டு போகக்கூடாதா?தாமஸ் ஆல்வா எடிசன் கூட செத்துவிட்டார்.இந்த கிழ மனைவி கம் வருங்கால மாமியார் மட்டும் உயிர் வாழ்ந்து எதை சாதிக்கப் போகிறாள்? (தொடரும்) Lolita By Vlamidir Nabokov

1 comment:

சினேகிதி said...

thodarum endu podurukeenga angal enga micham???