Sunday, January 15, 2006

சோமு தங்கச்சியும் குஷ்புவும்

எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான்."என்னடா ஆச்சு" என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான். "அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய்?" என்று கேட்டேன்."கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது" என்றான். "ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா " என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை. "அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க" என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான்."திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லை,பெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்,பாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா" என்று பொங்கினான். "சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றே,பெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு" என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது."ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்,தமிழ் பண்பாடு" என்றான். 'சரியப்பா,ஆம்பளை தான் உசத்தி,பொம்பளைக பணிஞ்சு தான் போகணும் " என்றேன்.அந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லை போலிருந்தது."அப்படி எல்லாம் இல்லை.ஆனா யோசிச்சுபார் நாம சைட் அடிக்கிறோம்,தம் அடிக்கிறோம்.சரி.அதே நம்ம அக்கா, தங்கச்சி தம் அடிச்சா,கல்யாணத்துக்கு முன்னாடி எவன்கூடவாவது போனா ஒத்துக்குவமா?" என்று கேட்டான். "இல்லடா அது முடியாது" என்று சொன்னேன்.அவனுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது."அதுதாண்டா நானும் சொன்னேன்.ஆம்பளைக ஆயிரம் தப்பு பண்ணுவானுங்க,பொம்பளை போட்டி போட்டுட்டு அதே மாதிரி தப்பு பண்ணலாமா" அப்படின்னு கேட்டான். எனக்கு இதில் எதோ தப்பு இருக்கற மாதிரி தெரிஞ்சது."இல்லடா சோமு.அப்ப நீ என்ன தாண்டா சொல்லவர்ரே?நீ பப்புக்கு,டிஸ்கொதேக்கு போவே ஆனா உன் தங்கச்சி போககூடாது அப்படிதானே" என்று கேட்டேன்."ஆமாம்" என்று சொன்னான். "நீ மட்டும் ஏண்டா போறே?" என்றேன்."அது என் அடிப்படை சுதந்திரம்" என்று சொன்னான்."உன் தங்கச்சிக்கு அந்த சுதந்திரம் இல்லையா" என்று கேட்டதற்கு "இல்லை,தமிழ் கலாச்சாரம்" என்றான்.திருவிளையாடல் சிவன் தருமி பாணியில் ஒரு கேள்வி பதில் அடுத்து ஆரம்பமானது. "சரி நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட ஆளோட ,பீச்சு,பப்புக்கு,டிஸ்கோக்கு போவியா?" "பின்ன,இங்க எல்லாம் போகாமயா லவ்வு பண்ண முடியும்?" "சந்தர்ப்பம் கிடைச்சா பலான விஷயம் கூட பண்ணுவே இல்லையா?" "கண்டிப்பா..இது என்ன கேள்வி?என்னோட ஆளுன்னு இல்லை.எந்த பொண்ணு கிடைச்சாலும் விடமாட்டேன். 12 வயசுல இருந்து எப்படா வாய்ப்பு கிடைக்கும் எவ மாட்டுவான்னு காத்துட்டிருக்கேன்..எது என்னடா கேள்வி?" "சரி அப்ப உன்கூட பப்புக்கு,பீச்சுக்கு வர்ரத்துக்கு,பலான விஷயம் பண்றதுக்கு உன்னோட ஆளுக்கு சுதந்திரம் வேணுமா வேண்டாமா?" "கண்டிப்பா வேணும்." "அவ அண்ணன்காரன் தடுத்தா என்ன பண்ணுவே?" "கைய உடைப்பேன்.நான் ஆம்பளை" "என்னடா அக்கிரமமா இருக்கு.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சி எல்லாம் ஒழுக்கமா வீட்டுல இருக்கணும்னு சொன்னாய்.இப்ப என்னடான்னா மாத்தி பேசறாய்?" "அது என் தங்கச்சிக்கு சொன்னது.என் தங்கச்சி ஒழுக்கமா இருக்கணும்.அவ்வளவுதான்". "அப்ப அடுத்தவன் தங்கச்சி ஒழுக்கமா இருக்ககூடாதா?" "அதெப்படி?அப்புறம் யார் என்கூட மஜா பண்ணறது?அதெல்லாம் ஒத்துக்க முடியாது.மத்த பொண்ணுக கட்டுபெட்டியா இருந்தா எனக்கு புடிக்காது" "குஷ்பு சொன்னதும் அதுதாண்டா.எல்லா பொண்ணுங்களும் ஜாலியா இருக்கணும்"னு நீ சொல்றதை தானே அவங்களும் சொன்னாங்க.அப்புறம் எதுக்கு நீ தக்காளி வீசுன?" "குஷ்பு அப்படி பேசிருக்க கூடாது.வேற மாதிரி பேசிருக்கணும்" "எப்படி பேசிருக்கணும்?" "சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு" பேசிருக்கணும். நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.

36 comments:

மோகன் said...

I cudnt control my laugh...;))).
pavum somu thankachi...

ramachandranusha(உஷா) said...

சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்//

:-))))))))))))))))))

G.Ragavan said...

என்னுடைய சிரிப்பை உண்மையிலேயே அடக்க முடியவில்லை....ஹா ஹா ஹா...அநேகமா அடுத்த வெளக்கமாரு உங்களுக்குத்தான்னு நெனைக்கிறேன். எதுக்கும் நீங்க ஒரு வாரம் லீவு போட்டுட்டு மேட்டூர் டூர் போயிருங்க.

Unknown said...

விளக்குமாறு வரும்போது வரட்டும்.அதற்கு முன் பூக்கூடை தந்து வாழ்த்து தெரிவித்த மோகன்,ராமசந்திரன் உஷா,ராகவனுக்கு நன்றி

முகமூடி said...

//`"சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு" பேசிருக்கணும். //

;-)) ஊர்ல கழுதையெல்லாம் காணாம போயிருச்சாம். எதுக்கும் உங்க ஊட்டு வெளியில ஏதும் கூச்சல் கேக்குதான்னு பாருங்க.

Unknown said...

முகமூடி அவர்களே,
ராகவன் சொன்ன மாதிரி ஒரு வாரம் மேட்டுருக்கு போய் பதுங்கி விட வேண்டியதுதான்

rv said...

செல்வன்,
சூப்பர் பதிவு.. :)))

//pavum somu thankachi... //
அதே

Unknown said...

நன்றி ராமநாதன் அவர்களே,

நீங்கள்,முகமூடி,ராமச்சந்திரன் உஷா,ராகவன்,மோகன் போன்ற வலைபதிவு சூப்பர்ஸ்டார்கள் பதிவு ஆரம்பித்த முதல் நாளே வந்து பாராட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

சிரிப்பை அடக்க முடியவில்லை!!

சூப்பர் பதிவு:-)))

kalakkungga! adi vaanggath thayaaraavum irungga!

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

செல்வன், அருமை! சொல்ல வந்ததை நகையுணர்வோடு இயல்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்று.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

நன்றி சுரேஷ்,செல்வராஜ்,

உங்களை போன்ற வலைபதிவு சூப்பர்ஸ்டார்களிடம் பாராட்டு பெறும்போது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதுபோல் சந்தோஷமாக இருக்கிறது.

வசந்தன்(Vasanthan) said...

மேலேயுள்ளது போலி டோண்டுவுடையது.

நல்ல பதிவு. அந்தச் சர்ச்சைகள் நடந்தபோதே வந்திருக்க வேண்டிய பதிவு,
டோண்டு கூட (அசல் டோண்டு) இப்படியொரு பாணியில் தன் கருத்தைச் சொல்லியிருந்தால் ஓரளவு தப்பியிருக்கலாம்.
வாழ்த்தும் நன்றியும்.

Unknown said...

நன்றி திரு வசந்தன் அவர்களே,

போலி பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.

இன்னொரு வலைபதிவாளரின் பெயரில் போலியாக பின்னூட்டம் இட்டதால் தான் நீக்கினேன்.எதிர்கருத்து என்பதால் அல்ல.போலி பின்னூட்டம் இட்ட நண்பர் எதிர்கருத்தை சொந்த பெயரிலோ புனை பெயரிலோ தாராளமாக இடலாம்.அடுத்தவர் பெயரில் வேண்டாம்.விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி.அவை நாகரிகமாக இருக்கவேண்டும்.

நிலா said...

//"சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு" பேசிருக்கணும்.//

அப்படிப் போடு. கலக்கிட்டீங்க :-)))

Unknown said...

மிக்க நன்றி நிலா அவர்களே

ஐயர் said...

முன்னர் டோன்டுகூட எல்லா இளம்பெண்களும் தனக்குப் பிடித்தவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாக உடலுறவு கொள்ளலாம் என எழுதி இருந்தார்.

Unknown said...

முன்னர் டோன்டுகூட எல்லா இளம்பெண்களும் தனக்குப் பிடித்தவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சர்வ சுதந்திரமாக உடலுறவு கொள்ளலாம் என எழுதி இருந்தார்.///

அவர் அதை எழுதினாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.ஆனால் 18 வயது தாண்டிய திருமணமாகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்பது எனக்கு தெரியும்.

நாமக்கல் சிபி said...

இந்த யதார்தத்தை அனைவரும் புரிந்து கொண்டால் பிரச்னையே இருக்காது.

பார்த்துப்பா, பின்னூட்டம்கற பேருல யாராவது பின்னி எடுத்துற போறாங்க!

சரியான நகைச்சுவை. பாராட்டுக்கள்.

Unknown said...

நன்றி சிபி அவர்களே,

ஏக பத்தினி விரதர்கள்,ஏகப்பட்ட பத்தினி விரதர்கள் இரு சாராரும் தமக்கு பிடித்த கோட்பாட்டின்படி சந்தோஷமாக வாழ வேண்டும்.இரு தரப்புக்கும் கலாச்சார மோதல் இல்லாமல் தனிமனித சுதந்திரம் நாட்டில் செழிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஐயர் said...

//அவர் அதை எழுதினாரா இல்லையா என்று எனக்கு தெரியாது.//

செலுவம்,

அதெல்லாம் தெரியாம நீங்க வலைபதிய வந்துட்டீங்க?!!!

//ஆனால் 18 வயது தாண்டிய திருமணமாகாத ஆணும் பெண்ணும் உறவு கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்பது எனக்கு தெரியும்.//

அந்தாளும் அப்டிதான் சொன்னாரு. ஆனா கூடவே பள்ளிப் பிள்ளைகளும் தயங்காமல் தம் சுய விருப்பப்படி உடலுறவு கொள்ளலாம் ஆனால் கட்டாயம் உறை மாட்டிக் கொள்ள வேண்டும் என எழுதினார். கூடவே சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின என்றும் எழுதினார். அந்தாளு எழுதிய 4 காமப் பதிவுகளைப் படித்துப் பார்க்கவும். நல்லா நாக்க புடுங்குறாமாதிரி நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டேன். பதில் சொல்லலை!

Unknown said...

திருப்பாச்சி அவர்களே,

வலைபதிவு உலகில் பல நூறு நண்பர்கள் இருக்கிறார்கள்.அத்தனை பேர் பதிவுகளையும் படிப்பது நடக்கின்ற காரியமா?

திரு டோண்டு என்ன எழுதியிருந்தாலும் அவர் எழுத்துக்களை நான் என் பதிவில் என்னவென்று விமர்சனம் செய்ய முடியும்?அவர் பதிவு பற்றிய விமர்சனங்களை அவர் பதிவில் தானே நான் செய்ய முடியும்?என் பதிவில் நான் எழுதியதற்கு தானே நான் விளக்கம் தர முடியும்?

என்னுடைய பதிவில் உங்களுக்கு எதாவது பிடிக்கவில்லையென்றால் தாராளமாக கேள்வி எழுப்பலாம்.என்னால் இயன்ற விளக்கங்களை கண்டிப்பாக தருகிறேன்.என் பதிவில் உள்ள பிழைகளை அனைவரும் விமர்சித்தால் தான் நான் என்னை சீர்மை படுத்திக்கொள்ள உதவும்.

என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு என் அன்பு கூர்ந்த நன்றி.

Muthu said...

செல்வன்,
மிக அருமை. படித்தவுடன் படாரென சிரித்துவிட்டாலும் கிட்டத்தட்ட இதே போன்று விவாதம் செய்த நண்பர் ஒருவரை எனக்குத் தெரியும், ஜெர்மனியில்தான் இருக்கிறார் :-).

Unknown said...

நன்றி முத்து அவர்களே,

ஜெர்மனி வரை போகவேண்டாம்.தமிழ்நாட்டில் விவாதம் நடத்துவோர் அனைவரும் இம்மாதிரி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐயர் said...

அன்புக்குரிய செல்வம்,

டோண்டுவின் எழுத்தினை நீங்கள் படிக்கவில்லை என்றீர்கள். உங்களுக்காக நான் தேடிக் கொணர்ந்து இருக்கிறேன்.


குஸ்புவின் கற்புக் கொள்கையை ஆதரித்து டோண்டு அவர்கள் எழுதிய பதிவில் இருந்து சில துளிகள்:

* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.

* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.

* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.

* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.

கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சந்திரன் said...

சிரிச்சு குமிச்சிட்டேன்...நல்ல பதிவு..
ஆனால் இதை வெறும் நகைச்சுவையாக மட்டுமே பார்க்கிறேன்.

Unknown said...

தானியேல் அவர்களே,

ஒரு விஷயத்தை நான் பார்க்கும் வண்ணமே அனைவரும் பார்க்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இல்லை.எனக்கு தோன்றியதை நான் எழுதினேன்.தங்களுக்கு என் எழுத்து நடை பிடித்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி
செல்வன்

Unknown said...

திருப்பாச்சி அவர்களே,

திரு டோண்டுவின் கருத்துக்களை இட்டதற்கு நன்றி.ஆனால் இன்னொரு வலைபதிவரை பற்றி நான் என்னுடைய பதிவில் விமர்சனம் செய்வது முறையாக இருக்காது.வலைபதிவு உலகில் பல்வேறு விதமான வகைகளில் இதை அணுகுகிறார்கள்.இன்னொரு வலைபதிவரின் அணுகுமுறையும் நமது அணுகுமுறையும் கண்டிப்பாக மாறுபடத்தான் செய்யும்.

திரு டோண்டு என்றல்ல,வேறு எந்த வலைபதிவரையும் விமர்சனம் செய்யும் வகையில் நான் பதிவு எழுதுவதில்லை.அடுத்தவரை நான் விமர்சித்தால் என்னை அவர் திருப்பி விமர்சிப்பார்.அனைவருக்கும் நண்பனாக இருக்கவே விரும்புகிறேன்.

Unknown said...

test

சிங். செயகுமார். said...

நண்பரே, ரொம்ப நாளைக்கு பின் கலகலப்பான காரமான பதிவு. வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி சிங் செயகுமார் அவர்களே

கைப்புள்ள said...

ஐயோ...ஐயோ...ஒரே சிரிப்பு போங்க! உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிகிறது விளக்கமாறுடன் அடிக்க வந்தவர்களையும் ரசிக்க வைத்து முறைவாசல் செய்ய வைத்து விட்டீர்கள் என்று.

Unknown said...

கைபுள்ள அவர்களே,

ஏதோ விளையாட்டாய் அந்த பதிவு போட்டேன்.தமிழ்மணத்தில் இவ்வலவு ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குஷ்பூ பற்றி எழுதினால் 32 பின்னூட்டங்கள்.வாரன் பப்பட் பற்றி எழுதினால் 1 பின்னூட்டம் கூட இல்லை.சினிமாவின் ஈர்ப்பு அப்படிப்பட்டது.பதிவு ஆரம்பித்த 5 நாட்களில் 1400 Hits.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.இதில் குஷ்புவுக்காக வந்த Hits எத்தனை என்பது தான் தெரியவில்லை.:-))

Anonymous said...

watch my short film.
Women liberation is important without damaging Tamil culture. Kuspu is outsider and she doesn't have RIGHT to destroy our culture. if our culture doesn't give equality, LET US ALL FIX IT. who is other person to comment? do we go around and say bad about other culture?
we should fight to death if someone outside our culture put us down. Our culture may have so many holes;evolving is not necessary.
http://ilavarasan-periyar.blogspot.com/

Unknown said...

Dear ilavarasan

I will defenitely watch your shortfilm asap.

I dont think whether kushbu is an outsider or insider matters much.

எப்பொருள் யார் யார்வார் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

Further she married a tamilian and has two kids through him.For all practical purposes she is a daughter-in-law of tamilnadu and hence a thamizachi

No culture can remain insular from changes.New thoughts should be welcomed by a culture.Open debates and honest thought sharing is important for a culture.

Nakkiran said...

//"சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு" பேசிருக்கணும்.//


Super thala