Saturday, January 21, 2006
இந்தியாவை கைதூக்கி விடும் அமெரிக்கா
அமெரிக்கா இந்தியாவின் எதிரி என சொல்லுவோர் கவனத்துக்கு
சென்ற வருடம் அவுட்சோர்சிங்கால் கிடைத்த வேலைகள் 13 லட்சம்
சென்ற வருட H1B விசாக்கள் 65,000
சென்ற வருட படிப்பு விசாக்கள் 80466
ஆரகிள் கம்பனி மட்டும் அதிகரித்த இந்திய பணியிடங்கள் 10000
இந்தியாவில் ஐ,பி.எம் ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் 10,000
கெவ்லெட்ட் பக்கார்ட் 10,800
மைக்ரோசாப்ட் 3000
டி.ஜி.எஸ் 4400
(இவை அத்தனையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாப்ட்வேர்கள்,ஆக அமெரிக்காக்காரன் இந்தியாவில் பொருளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு விற்கிறான்.சம்பளம் இந்தியனுக்கு)
வருஷா வருஷம் அதிகரிக்கும் சாப்ட்வேர் வேலைகள் 68,000
2008இல் சாப்ட்வேர் கம்பனிகளில் வேலை பார்ப்போர் எண்ணிக்கை பற்றிய நாஸ்காமின் மதிப்பீடு 22 லட்சம்
இந்திய கம்பனிகளுக்கு கிடைத்த அவுட்சோர்சிங் விற்றுமுதல் 22 பில்லியன் டாலர்(அதிகமில்லை ஜென்டில்மென் 94,600 கோடி ரூபாய் தான்)
அமெரிக்கவுக்கு ஏற்றுமதியான இந்திய பொருட்கள் 15 பில்லியன் டாலர்.
அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது 6.1 பில்லியன் டாலர்.
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
சமீபத்தில ரமணா படம் பாத்திருக்கீங்க போல :)
எல்லாருமா சேர்ந்து இப்படி விஜய்காந்தை புள்ளியியல் துறை தலைவராக்கிட்டிங்க போல
sutti koduththirukkalaam. nanRi
அந்த காலந்தொட்டு இந்த காலம் வரை அமெரிக்கா பல வகைகளில் உதவியுள்ளது
மூட்டை பூச்சி மருந்து விட்டுக்கு விடு அடிக்க கொடுத்தது, கோதுமை, பால் பவுடர் , சத்துணவு கொடுத்தது மற்றும் நிறை கொடுத்து நம்மை ஏமாற்றப் பார்த்தது காமராஜர் அவர்களுக்கு அல்வா கொடுத்த கதையும் உண்டு
கார்த்திக் ,
இக்கட்டுரையின் பெரும்பாலான புள்ளிவிவரங்கள் தற்போதைய பிசினஸ் வீக் மேகசினிலிருந்து எடுக்கப்பட்டன.அவுட்சோர்சிங் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை.
என்னார் அவர்களே,
காமராஜர் காலத்து கதை பேசி இப்போது ஆகப்போவது என்ன?அதற்குமுன் பிரிட்டிஷ் காரன் கூடத்தான் நம்மை ஆக்கிரமித்திருந்தான்.இன்று இந்தியாவும் அமெரிக்காவும் நண்பர்கள்.இந்த நட்பை முன்னெடுத்து செல்வதே இன்றைய புதிய பொருளாதார உலகில் இந்தியா முன்னேற வழி
1.எந்த நாடும் எந்த நாட்டுக்கும் சும்மா எதையும் செய்வது இல்லை.
2.சர்வதேச உறவுகள் moralityயை மையமாக கொண்டு செயல்படுவது இல்லை.
3.அமெரிக்கா இன்னும் நூறு வருடங்களுக்கு வல்லரசு!
(சீனாவால் அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடதான் முடியும்.)
4.நமது பிராந்திய எதிரி சீனா.
5.சீனாவின் எதிரி அமெரிக்கா
6.அகவே நமக்கு அமெரிக்கா நன்பன்.
7.அமெரிக்காவுக்கு ஒசாமா வேண்டும்.அதற்க்கு பாகிஸ்தான் வேண்டும்.பாகிஸ்தானுக்கு அயுதம் வேண்டும்.அதை அமெரிக்கா கொடுத்து உதவும்.
இந்திய-அமெரிக்க பொருளாதார உறவு மேம்பட்டால் கிடைக்கும் நன்மைகள் : இருவருக்கும்.
இப்படி பல.
சமுத்ரா அவர்களே,
//1.எந்த நாடும் எந்த நாட்டுக்கும் சும்மா எதையும் செய்வது இல்லை.
2.சர்வதேச உறவுகள் மொரலிட்ய்யை மையமாக கொண்டு செயல்படுவது இல்லை.//
100% சரி
//3..அமெரிக்கா இன்னும் நூறு வருடங்களுக்கு வல்லரசு!
(சீனாவால் அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடதான் முடியும்.)///
2020ல் இந்தியா போட்டிக்கு வந்துவிடும் என்கிறார் கலாம்.
//4.நமது பிராந்திய எதிரி சீனா.//
இல்லை.பாகிஸ்தான்.சீனாக்காரனோடு நமக்கு போட்டிதானே தவிர விரோதம் இல்லை.
//சீனாக்காரனோடு நமக்கு போட்டிதானே தவிர விரோதம் இல்லை.
//
சீனா?
1.அருனாச்சல் பிரதேசம் அவர்களுடையது என்று சொல்லி வருகிறார்கள்.
2.கால் பாகம் காஷ்மீர் அவர்களிடம் உள்ளது.
3.பாகிஸ்தானுக்கு அனுஆயுதம் கொடுத்து உதவியது சீனா.
(I can tell you the name of the warhead design obtained from China)
4.தங்கள் Proxy வடகொரியா மூலம் பாகிஸ்தானுக்கு எவுகனைகள் சப்ளை செய்தது சீனா.
5.திபத் அரசு இந்தியாவில் நடந்து வருகிறது.(Tibets government in Exile, headed by His Holiness Dalai Lama)
6.டஜன் கனக்கில் சுற்றுகளுடன் ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஒரு ஓய்வு பெற்ற ரானுவ அதிகாரி என்னிடம் சொன்னார் "China will fight India to the last Pakistani!"
அதாவது பாகிஸ்தான் சீனாவின் Proxy.
உன்மையான எதிரி சீனா.
கலாம்?
சீனா அமெரிக்காவுக்கு தொழில்நுட்ப போட்டியாக வரும் என்று சொல்லியிருக்க மாட்டார். :-)
சமுத்ரா,
சீனாவோடு சண்டை வந்ததற்கு நேரு அரசின் தவறான கொள்கையும் ஒரு காரணம்.டிபெத்தை சைனாக்காரன் பிடித்தால் நேருவுக்கு என்ன?தலாஇலாமவுக்கு பலத்த ஆதரவு கொடுத்தார்.சைனாக்காரன் எதிரியாகி விட்டான்.
சைனாக்காரனோடு நமக்கு சண்டை இல்லாமலில்லை.ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனை தீர்ந்து வருகிறது.சிக்கிம் பிரச்சனை இப்போது தான் ஓய்ந்தது.இப்போது நம்மிடம் அணுகுண்டு இருப்பதால் சைனாக்காரன் வாலாட்ட மாட்டான்.சைனாவை நம்மோடு சேர்த்துக்கொண்டால் ஆசியாவில் அரசியல் செய்ய நமக்கு அது நல்ல வாய்ப்பு.
சமுத்ரா, செல்வன்
தமிழ் வலைப்பதிவுகளில் "மாற்று" எண்ணங்கள் உள்ளவர்கள், சிந்திப்பவர்களும் உள்ளார்கள் என்ற முறையில் உங்களிருவருக்கும் எனது நன்றிகள், வாழ்த்துகள்.
நன்றி வாசன்,
"மாற்று கருத்து" அப்படின்னு சொல்லிட்டிங்க.யாராவது என்கூட சண்டைக்கு வந்துட போறாங்க:-))
சுட்டிக்கு நன்றி வ.னா கொனா
பங்க்ளாதேஷ் அமெரிக்காவுக்கு அதிக அளவில் கார்மென்டுகளை அனுப்புகிறது.அமெரிக்கா இல்லையென்றால் அதன் பொருளாதாரம் அம்பேல் தான்
சுவையான தகவல்களைக் கொடுத்திருக்கிறீர்கள் :-)
சனியனின் காமெடியையும் இரசிக்காமல் இல்லை!!
//ஆரகிள் கம்பனி மட்டும் அதிகரித்த இந்திய பணியிடங்கள் 10000
இந்தியாவில் ஐ,பி.எம் ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் 10,000
கெவ்லெட்ட் பக்கார்ட் 10,800
மைக்ரோசாப்ட் 3000
டி.ஜி.எஸ் 4400
ஆரகிள் கம்பனி மட்டும் அதிகரித்த இந்திய பணியிடங்கள் 10000
இந்தியாவில் ஐ,பி.எம் ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் 10,000
கெவ்லெட்ட் பக்கார்ட் 10,800
மைக்ரோசாப்ட் 3000
டி.ஜி.எஸ் 4400
வருஷா வருஷம் அதிகரிக்கும் சாப்ட்வேர் வேலைகள் 68,000
இந்திய கம்பனிகளுக்கு கிடைத்த அவுட்சோர்சிங் விற்றுமுதல் 22 பில்லியன் டாலர்(அதிகமில்லை ஜென்டில்மென் 94,600 கோடி ரூபாய் தான்)//
இன்னிக்கி கிடைச்ச பழய சோறை வச்சிகிட்டு ஒரு லிஸ்ட் போட்டிங்க இதனால் ஆன புட் பாஸ்னிங் பத்தி யோசிச்சீங்களா?
இதனால் ஏற்பட்ட பின் விளைவுகள்
80% பேருக்கு சக்கரை வியாதி வந்தது.
75% பேருக்கு ரத்த அழுத்த வியாதி வந்தது.
90% பேருக்கு Stress disease வந்தது.
87% பேரின் வீட்டில் தவணை முறை பொருட்கள் வந்தது.
அதில் 6% பேர் தவணை திரும்ப கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
61% பேர் கார் வாங்கினர்.
2% பேர் நல்ல நிலையில் பெரிய பதவியில் உள்ளனர்.
இது மட்டுமில்லை, என்ன மருந்து கொடுத்தாலும் அதன் அடியில் இருக்கும் ஒரு தாக்கம். இதோ,
அவுட் சோர்சிங்க் என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்த போது அமெரிக்க எதிர்கட்சிகள் போர்கொடி உயர்த்தின, அப்போது ஆளும் கட்சியினர் கொடுத்த ஒரு விளக்கம், "நாங்கள் தற்சமயம் அவுட்சோர்சிங்க் செய்வது வெறும் வேலைகளையல்ல, நம் நாட்டிலுள்ள தனிமனித அதிகஎடையும்(obesity), பர்கரையும், சாண்ட் விச், பீஸா, மேலும் சில வியாதிகளுக்கான மருந்துகளை அடுத்த 100 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யும் ஒரு வாய்ப்பையும் தான். இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு நாளொன்றுக்கு ராயல்டியாக கிடைக்கவிருக்கும் செலாவணி அதிகமில்லை ஜென்டில் மென் 90,000 பில்லியன் டாலர்".
அடுத்த ட்ரில்லியன் இன்டஸ்ட்ரி "வெல்னெஸ்" (Wellness) இன்டஸ்ட்ரி என்று கணித்துள்ளனர், நம் நாட்டில் யார் ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்கின்றனர் அல்லது உணவே மருந்து என்ற கொள்கையை கடைபிடிக்கின்றனர். யாருமில்லை. உண்பது என்னவோ பாஸ்ட் புட் (fast food), ஜன்க் புட்(junk food), டின் புட் (tin food). அமெரிக்க கணவு பலிக்கும் நாள் ரொம்ப தூரத்திலில்லை.
பாருங்க சார், என்ன வேனா சொல்லுங்க அவுட் சோர்சிங்க் ஒழிக்க படவேண்டியதே.
அவுட் சோர்சிங்கினால் பாதிக்கப்பட்டவர்களே, பட இருப்பவர்களே அதிகம் அதனால் அதை...
நேரமில்லாததால் இன்னும் சில தகவல்களை சொல்ல முடியவில்லை.
அன்பின் சிவமுருகன்,
//அப்போது ஆளும் கட்சியினர் கொடுத்த ஒரு விளக்கம், "நாங்கள் தற்சமயம் அவுட்சோர்சிங்க் செய்வது வெறும் வேலைகளையல்ல, நம் நாட்டிலுள்ள தனிமனித அதிகஎடையும்(ஒபெசிட்ய்), பர்கரையும், சாண்ட் விச், பீஸா, மேலும் சில வியாதிகளுக்கான மருந்துகளை அடுத்த 100 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யும் ஒரு வாய்ப்பையும் தான். இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு நாளொன்றுக்கு ராயல்டியாக கிடைக்கவிருக்கும் செலாவணி அதிகமில்லை ஜென்டில் மென் 90,000 பில்லியன் டாலர்".//
இதன்மூல நீங்கள் சொல்ல வருவது அவுட்சோர்சிங்கால் அமெரிக்கனுக்கு ஆதாயம் கிடைக்கிறது என்பது.சரியா?
ஆம்.அவனுக்கும் ஆதாயம்.நமக்கும் ஆதாயம்.
இரண்டு வேலை பார்த்து அதிக சம்பளம் வாங்கினால் இந்தியனுக்கு ரத்த அழுத்தம் வரும் என்கிறீர்கள்.
சரி இனி மேல் யாரும் அதிக சம்பளம் தரும் வேலை செய்யக்கூடாது என சட்டம் போட்டுவிடலாமா?
//அவுட் சோர்சிங்கினால் பாதிக்கப்பட்டவர்களே, பட இருப்பவர்களே அதிகம் அதனால் அதை...
நேரமில்லாததால் இன்னும் சில தகவல்களை சொல்ல முடியவில்லை. //
நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கள்.காத்திருக்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி செல்லமுத்து
India now has the largest number of AIDS infections as the spread of the disease shows no sign of letting up a quarter-century into an epidemic that has claimed 25 million lives, the U.N. reported Tuesday.
//India now has the largest number of AIDS infections as the spread of the disease shows no sign of letting up a quarter-century into an epidemic that has claimed 25 million lives, the U.N. reported Tuesday. //
Do you say AIDS spread in India because of outsourcing?AIDS came to India in 80's when India did not liberalise its economy.We were a socialist economy then.
நடக்க இருப்பதை நான் சொல்லியா தடுக்கப்படும், போகட்டும் அத்தனையும் பாஞ்சன்யம் ஏந்திய கண்ணனுக்கு. நடக்க போவதை நானும் பார்க்கத்தான் போகிறேன்.
//இரண்டு வேலை பார்த்து அதிக சம்பளம் வாங்கினால் இந்தியனுக்கு ரத்த அழுத்தம் வரும் என்கிறீர்கள்.
சரி இனி மேல் யாரும் அதிக சம்பளம் தரும் வேலை செய்யக்கூடாது என சட்டம் போட்டுவிடலாமா?//
இரண்டு வேலை இந்தியாவில் எங்கும் பார்க்க உரிமை யாருக்கும் கிடையாது அவ்வாறு நடப்பது குற்றம், சம்பந்தப்பட்ட உரிமையாளரின் ஒத்துழைப்பின் பேரில் அதை செய்யக்கூடும். பெரிய வேலையோ, இருவேலைக்கோ நான் எதிரியல்ல, இரவில் பார்க்கும், பார்க்க தூண்டும், வேலைகளை எதிர்த்து குரல் கொடுக்கிறேன், மேலும் வேலை செய்வது ஒரு நிறுவனம் சம்பளம் பெறுவது வேறு நிறுவனம் என்ற கொள்கை தவறு என்று சொல்கிறேன் அவ்வளவே.
சிவ முருகன்
தப்பா புரிஞ்கிகிட்டீங்க.தப்பு என் மேல் தான்
இரண்டு வேலை செய்வது என நான் சொல்லவில்லை
"பாயின்ட் நம்பர் இரண்டு,
வேலை பார்த்து அதிக சம்பளம் வாங்கினால் இந்தியனுக்கு ரத்த அழுத்தம் வரும் என்கிறீர்கள்.
சரி இனி மேல் யாரும் அதிக சம்பளம் தரும் வேலை செய்யக்கூடாது என சட்டம் போட்டுவிடலாமா"
இது தான் நான் சொல்ல வந்தது.
இரவில் பார்க்கும், பார்க்க தூண்டும், வேலைகளை எதிர்த்து குரல் கொடுக்கிறேன், மேலும் வேலை செய்வது ஒரு நிறுவனம் சம்பளம் பெறுவது வேறு நிறுவனம் என்ற கொள்கை தவறு என்று சொல்கிறேன் அவ்வளவே. //
இரவில் பார்க்கும் வேலைகள்
1.தீயணைப்பு
2.காவல்
3.மருத்துவம்
4.ராணுவம்
5.பஞ்சாலைகள்
6.லேத்து பட்டறைகள்
7.அணைகட்டுகள்
8.விமான நிலயங்கள்
9.ரயில் பஸ் நிலயங்கள்
10.உனவகங்கள்
லிஸ்ட் போயிட்டே இருக்குங்க......இது எல்லாத்தையும் எதிர்க்கறீங்களா?
//மேலும் வேலை செய்வது ஒரு நிறுவனம் சம்பளம் பெறுவது வேறு நிறுவனம் என்ற கொள்கை தவறு என்று சொல்கிறேன் அவ்வளவே//
சப் கான்டிராக்டிங் தப்புங்கறீங்களா?அது வியாபார உலகில் சர்வசதாரணம்.சம்பந்தப்பட்ட ரெண்டு தரப்பும் சந்தோஷமா இருக்கப்ப நாம ஏங்க எதிர்க்கணும்?
//80% பேருக்கு சக்கரை வியாதி வந்தது.
75% பேருக்கு ரத்த அழுத்த வியாதி வந்தது.
90% பேருக்கு Stress disease வந்தது.
87% பேரின் வீட்டில் தவணை முறை பொருட்கள் வந்தது.
அதில் 6% பேர் தவணை திரும்ப கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
61% பேர் கார் வாங்கினர்.
2% பேர் நல்ல நிலையில் பெரிய பதவியில் உள்ளனர்.
//
சார் இதுக்கு எதாவது ஆதாரம் இருக்கா?
அதாவது அவுட்சோர்சிங் துறையில் வேலை செய்பவர்களிடம் இந்த மாதிரி நோய்கள் வருவது பற்றீ மருத்துவ துறை அறிஞர்களால ஆய்வு செய்யபட்டு எதாவது trend இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்களா?
1)"velai illaiye/kedaikka mattenguthe, epdi vazvathu" enum 'tension'-a vida velaiyal varum tension evvalavo paravaayillai.
2)velaiyillamal saapaatirku kasta paduvathai vida nanraaga saapittu obesity varuvathu evvalavo paravaayillai.
3)veali-ya dhan thandhan, neraya panamum thandhan, aanaa ungala bargar pizza saapida sonnaana? athu unga thappu.
4)credit card-a muraiyaga payanpaduththinaal entha pirachchinaiyum illai. how can they responsible for these peoples' stupidity(committing suiside) or poor financial management?
நான் சொல்ல நினைத்ததை அப்படியே சரியா சொல்லிவிட்டீர்கள் குரு.நன்றி.
தமிழ்ங்கிலீஷ் படிக்க சிறிது சிரமம்.தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதினால் படிக்க எளிதாக இருக்கும் என்பது என் கருத்து.ஆனால் தமின்கிலீஷில் எழுத என் பதிவில் எந்த தடையும் இல்லை.என் கருத்தை சொன்னேன்.
தலைவா சமுத்ரா
நன்றி.அவர் அதை ஒரு உதாரணமா சொன்னாருன்னு தான் நினைக்கிறேன்.அதிக பணம் சேர்த்தால் பிரச்சனை வரும்னு சொல்லிருக்கார்(அதுக்காக நாம் பணம் சேக்கறதை நிப்பாட்டிடுவோமா என்ன:-))))
இந்த வருடம் 1.15 லட்சம் அமெரிக்க விசாக்கள்...
மிகவும் சந்தோஷமான தகவலை சொன்னீர்கள் சுமா.நன்றி
எப்படியோ போங்க, எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு,
வாழ்க அவுட் சோர்சிங், ஒழிக இந்திய வேலைகள்.
போதுமா!
சிவமுருகன்
தப்புங்க சிவமுருகன்
"வாழ்க அவுட்சோர்சிங்கால் உருவாகும் இந்திய வேலைகள்" என்பது தான் சரி.
வரப்புயர நீர் உயரும்
அவுட்சோர்சிங் உயர இந்திய வேலைகள் உயரும்.
அவுட் சோர்சிங் என்றால் அமெரிக்க வேலைகள் இந்தியாவுக்கு வரும் என அர்த்தம் சிவமுருகன்.இதனால் இந்திய வேலைவாய்ப்புகள் அதிகர்ரிக்குமே தவிர குறையாது
சிவமுருகன்,
தப்பா நெனச்சுகாதீங்க, its important to overcome our pre-suppositions.
:)
அவர் தப்பா நினைக்கமாட்டார் சமுத்ரா.பொதுவா சிவமுருகன் மிகவும் அமைதியானவர்.இந்த அலவுக்கு அவர் விவாதம் செய்து இப்போதுதான் பார்க்கிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.
நமது கருத்தை விவாத மேடையில் எடுத்து வைத்தால் தான் நல்லது கெட்டது தெரியவரும்.ஆரோக்கியமான விவாதம் நடத்திய சிவமுருகனுக்கும் சமுத்ராவுக்கும் என் நன்றிகள்
அடிப்படையில் உங்களுக்கு "அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்" என்ற எண்ணம் ஆழப்பதிந்திருக்கிறது.
அமெரிக்காவை ஏன் எதிர்க்க வெண்டும், அமெரிக முதலீடுகளை ஏன் தடுக்க வேண்டும் என்ற தெளிவுள்ளவர்களுக்கு உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் சிரிப்பை வரவழைப்பதோடு நின்று விடுவதால் அவர்கள் யாரும் பதில் சொல்ல வருவதில்லை.
இந்திய முதலீடுகளை, இந்திய தலையீட்டை ஈழத்தில் நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
உலகில் அமெரிக்கா எதை செய்கிறதோ அதையே தான் இந்த பிராந்தியத்தில் இந்தியா செய்ய முயல்கிறது. இரண்டுமே நேர்மையான அரசுகள் அல்ல.
சரி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
எனக்கு சில கேள்விகளுக்கு விளக்கம் தேவை.
1. சிலி ஜனாதிபதி அலன்டே ஏன் கொல்லப்பட்டார்?
2. இந்தியப்படைகள் ஏன் இத்தனை தமிழர்களை கொன்று குவித்தது?
3. ஈராக்கை அமெரிக்கா ஏன் ஆக்கிரமித்தது?
4. ஈரான் பயங்கரவாதத்திற்கு உதவும் நாடாக தற்போது மாறியிருப்பது ஏன்?
5. பங்களாதேஷ் ஏன் தனி நாடாக பிரிய வேண்டும்?
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயல்வீர்களானால், அமெரிக்க முதலீடுகளை இந்தியாவும், இந்திய முதலீடுகளை நாங்களும் ஏன் தடுக்க வேண்டும் என்பது பற்றிய விளக்கம் கிடைக்கும்
வாருங்கள் மயூரன்,
என் பதிவுக்கு முதல் முதலாக வருகை தந்திருக்கிறீர்கள்.மிகுந்த மகிழ்ச்சி.
//அடிப்படையில் உங்களுக்கு "அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்" என்ற எண்ணம் ஆழப்பதிந்திருக்கிறது.//
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.
அமெரிக்காவால் இந்தியாவுக்கு நன்மை.இதுதான் என் வாதம்.
//அமெரிக்காவை ஏன் எதிர்க்க வெண்டும், அமெரிக முதலீடுகளை ஏன் தடுக்க வேண்டும் என்ற தெளிவுள்ளவர்களுக்கு உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் சிரிப்பை வரவழைப்பதோடு நின்று விடுவதால் அவர்கள் யாரும் பதில் சொல்ல வருவதில்லை.//
நீங்களாவது வந்தீர்களே என்னை மதித்து என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.உங்களுக்கு தெரிந்ததை எனக்கும் சொன்னால் தானே எனக்கு விவரம் தெரியும்.இல்லாவிட்டால் என் பழைய கருத்தையே அல்லவா இன்னும் வைத்திருப்பேன்?
என் கருத்தை உரைத்துபார்க்க கிடைக்கும் உரைகல்லே விவாத மேடை.
//இந்திய முதலீடுகளை, இந்திய தலையீட்டை ஈழத்தில் நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
உலகில் அமெரிக்கா எதை செய்கிறதோ அதையே தான் இந்த பிராந்தியத்தில் இந்தியா செய்ய முயல்கிறது. இரண்டுமே நேர்மையான அரசுகள் அல்ல.//
ஈழப்பிரச்சனை இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று.
அமெரிக்காவும் இந்தியாவும் நேர்மையான அரசுகளாக,தர்மத்தின் தலைவர்களாக,சத்யத்தின் தர்மத்தின் காவலர்களாக இருக்க வேண்டும் என நான் என் பதிவில் எங்கும் சொல்லவே இல்லை.நான் சொல்லாத ஒன்றுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் சொல்லுங்கள்?
//1. சிலி ஜனாதிபதி அலன்டே ஏன் கொல்லப்பட்டார்?
2. இந்தியப்படைகள் ஏன் இத்தனை தமிழர்களை கொன்று குவித்தது?
3. ஈராக்கை அமெரிக்கா ஏன் ஆக்கிரமித்தது?
4. ஈரான் பயங்கரவாதத்திற்கு உதவும் நாடாக தற்போது மாறியிருப்பது ஏன்?
5. பங்களாதேஷ் ஏன் தனி நாடாக பிரிய வேண்டும்?///
இதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
அமெரிக்காவால் இந்தியாவுக்கு வேலை கிடைக்குது,காசு கிடைக்குதுன்னு சொல்ரேன்.அதுக்கு சிலி ஜனாதிபதி ஏன் செத்தார்ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்ல?
அமெரிக்க விசா கிடைக்கிறப்ப எந்த H1B ஆளாவது "சிலி ஜனாதிபதி செத்துட்டாரு.அதனால உன்னோட விசா வேணாம்"னு சொல்லுவாங்களா?
அவுட் சோர்சிங்க் மூலமா மாசம் 30,000 சம்பளம் வாங்குபவன் "நீ சிலி ஜனதிபதியை கொன்னாய்.அதனால உன் காசு வேணாம்னு" சொல்லுவானா?
அமெரிக்காவுக்கு இந்தியா வேணும்.இந்தியாவுக்கு அமெரிக்கா வேணும்.
அதான் நம்ம பாயின்டு.
ஈழத்துக்கு இந்தியா வேணுமா,ஈராக்குக்கு அமெரிக்கா வேணுமான்னெல்லாம் எனக்கு கவலை இல்லை.
//பொதுவா சிவமுருகன் மிகவும் அமைதியானவர்.//
பாராட்டுக்கு நன்றி. ஆனா அவுட் சோர்சிங் கூடவே, கூடாது.
//இந்த அலவுக்கு அவர் விவாதம் செய்து இப்போதுதான் பார்க்கிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.//
அவுட் சோர்சிங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்பதால் இவ்விவாதம்.
//நமது கருத்தை விவாத மேடையில் எடுத்து வைத்தால் தான் நல்லது கெட்டது தெரியவரும்.ஆரோக்கியமான விவாதம் நடத்திய சிவமுருகனுக்கும் சமுத்ராவுக்கும் என் நன்றிகள்//
நான் அங்கே வாய திறக்க மாட்டேன் சாரி விரலால் தட்ட மாட்டேன்.
ஒன்னே ஒன்னு சார்,
"நான் கொண்ட கோலம் நீ காணவில்லை"
என்ற எதோ பாடல் மட்டும் பாட தோணிச்சி அவ்வளவு தான்.உங்களால் அவுட் சோர்ஸ் இல்லாத உலகை பார்க்க முடியுமா?.
இன்னொன்னு சார்:
காமராஜரிடம் ஒரு முறை கோவில்களில் சமஸ்கிருதத்தை விட்டு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றுசொல்லும் போது அவர் சொன்னார் "அடுத்தவன் இலைய நாம் ஏன் புடுங்கனும், புது இலையை போட்டு நல்லா சாப்டுங்க யாரு வேண்டாம்னா?" அது போல் தான் அவுட் சோர்ஸும்.
நான் சொல்வதை யார் எடுத்துக்கொண்டுள்ளனர், கேட்டுள்ளனர், நீங்கள் ஏற்பதற்க்கு. போதும் சார். நீங்க நினைக்றது வேற, இதன் மூலம் அடுத்த தலைமுறை எப்படி குட்டிசுவரா போன என்ன என்பது போலிருக்கிறது.
நடக்கவிருப்பதை யாராலும் தடுக்க முடியாது எல்லாம் அவன் பெற்ற சாபம். இத இத்தோட விடுங்க.
பதிவுக்கு வருவது இதுதான் முதல்தரம் என்றில்லை. கருத்து சொல்வது முதல் தரம்.
அத்தோடு நானும் விவாதங்கள் மூலம் என் அறிவினை, கருத்தினை கூர்மைப்படுத்திக்கொள்ள விரும்பும் ஒரு சாதாரண மாணவன்.
நாங்கள் மேலும் மேலும் உரையாடலாம்.
நான் கேட்ட கேள்விகள் அரசியல் சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைக்கிற்றீர்களோ தெரியவில்லை
அத்தனை கேள்விகளும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது.
நீங்கள் சொல்கின்ற அவுட்சோர்சிங், அன்னிய முதலீடு சம்பந்தப்பட்டது.
உலகை ஆள நினைக்கும் ஒரு சில அமெரிக்க கம்பனிகள் பற்றியது.
நாடுகளுக்கு படைகள் போவதும், அரசாங்கம் ஒன்றினால் தேசத்தலைவர்கள் கொல்லப்படுவதும் அரசியல் காரணங்களுக்காக என்று நினைக்கிறீர்களா?
இந்தியாவிலோ இலங்கையிலோ, தமிழீழத்திலோ அமெரிக்க, அநிய முதலீடு வேண்டாம் என்பது, அவ்வவ் தேஅங்களின் அரசான்கங்கள் பற்றிய என் நன் மதிப்பினாலோ, விருப்பங்களினாலோ அல்ல. அங்கே வாழும் மக்கள் பற்றிய அக்கறையினால்.
தமிழ் மக்களாவது அரவாயில்லை, போராட்டம் அவர்களை ஏதோ கொஞ்சமாவது அரசியல் முனைப்போடு வைத்திர்க்கிறது. கண்ணுக்கு முன்னே அநீதியாய் சுரண்டப்பட்டு வாழ்வழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிங்கள மக்களோடு நான் வாழ்கிறேன்.
அது ஒரு பாவப்பட்ட இனமாக தன்னை ஏகாதிபத்திய நலன்களுக்காக பலியிட்டுக்கொண்டிருக்கிறது.
நீங்கள் இப்போது சொல்லுகின்ற அமெரிக்க மூலதனத்தால், உலக வங்கியின் ஆலோசனைகளால் ஏற்பட்ட மிகையான நலன்கள் பற்றியும், கட்டற்ற வேலைவாய்ப்பு, சம்பளத்தொகை பற்றியும், ஆர்ஜென்டீனா முன்பு நிறைய பேசியது.
ஆர்ஜென்டீனா விடவும் நீங்கள் அமெரிக்க முதலீடுகளைஆதரித்து பேச முடியாது.,
உலக வங்கியின் ஆலோசனைகளின்படி, அவுட் சோசிங் ஆர்ப்பாட்டங்களின் வழி உச்சத்தை நோக்கி செல்வதாக நினைத்துக்கொண்டிருந்த நாடுதான் ஆர்ஜென்டீனா.
கடைசியாக அந்த நாட்டுக்கு ஏற்பட்ட கதி என்ன?
ச்தைந்து சின்னாபின்னமாகிப்போய் பொருளாதார வங்குரோத்தை அந்த நாடு அடைந்ததற்கு காரணம் என்ன?
அமெரிக்க நலன்கள். அமெரிக்க முதலீடுகள்.
அன்னிய முதலீடுகளால் கிடைக்கும் உடனடியான இலாஅங்கள், மேலோட்டமாக பார்க்கும் போது தோன்றும் நன்மைகள் எம்து கண்களை மறைக்கின்றன.
ஆனால் உண்மை நிலை அதுவல்ல.
ஜே ஆர் ஜயவர்தன இலங்கையில் திறந்த பொருளாதாரத்தை அறிமுகபடுத்திய பின்னர்தான் எமது நாடு இப்படி ஒரு ஒருளாதார ரீதியில் கேவலங்கெட்ட நிலைமைக்கு போனது. இந்தியா தன் பொருளாதாரத்தை எமக்கு பின்னர்தான் திறந்தது.
ஆர்ஜென்டீனா மட்டுமல்ல எத்தனையோ உதாரண நாடுகள் உண்டு.
அடுத்த உதாரணமாக இந்தியா மாறப்போவதை சகிக்க முடியாமலிருக்கிறது.
இந்தியா வளமான பலமான நாடு.
இப்படி ஒரு நாட்டில் வாழ நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் நாட்டை வங்குறோத்தாக்கி சர்வதேச தெருவில் நிறுத்த நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?
ஆர்ஜென்டீனாவின் வரலாற்றை அதன் அடிப்படைகளை கட்டாயம் இணையத்தில் தேடி படியுங்கள்.
அத்தோடு முடிந்தால் அங்கே நக்சலைட்டுக்களின் பிரசுரங்களை பெற்று படித்துப்பாருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் ன்று காது கொடுத்து கேளுங்கள்.
நான் அடித்து சொல்வேன். அமெரிக்க முதலீடு தலையீடும் எப்போதும், எப்போதும் எந்த நாட்டுக்கும் நன்மை தரப்போவதில்லை.
அன்பின் மயூரன்,
என் பதிவுக்கு வருகை புரிந்து கருத்து சொன்னீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் பல பதிவுகளை படித்து நான் வியந்ததுண்டு.ஆனால் பின்னூட்டம் இட்டதில்லை.
அமெரிக்க முதலீட்டை எதிர்ப்பவர்கள் அர்ஜென்டினாவை பார்,மெக்சிகோவை பார் என சொல்வதுண்டு.ஆதரிப்பவர்கள் சீனாவை பார்,தென் கிழக்கு ஆசியாவை பார் என சொல்வதுண்டு.
அர்ஜென்டினாவின் பிரச்சனை அதன் கரன்சியால் வந்த ஒன்று.தனது கரன்சியை டாலருக்கு நிகராக பெக் செய்து மாட்டிக்கொண்டது.மேலும் தென்னமரிக்க நாடுகள் பனானா ரிபளிக் என அழைக்கபடும் அரசியல்,பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகள்.அவை கவிழ்வதும் நிமிர்வதும் ஆச்சரியமில்லை.
அமெரிக்க முதலீட்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி வளர்ந்த நாடுகள் ஏராளம் உண்டு.சீனாவை,தென்கிழக்கு ஆசிய நாடுகளை,கிழக்கு ஐரோப்பிய நாடுகள்,கொரியா என ஏராளமான உதாரணங்கள் உண்டு.
இந்தியாவில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பன்னாட்டு மூலதனம் தவிர்த்து வேறு வழியில்லை.தொலைதொடர்பு துறையை எடுத்துக்கொண்டால் அதிநவீன தொழில்நுட்பம் வேண்டும்,மூலதனம் பல லட்சம் கோடிகள் வேண்டும்-இதற்கு எங்கே போவது?இந்தியாவில் அத்தனை பணமும் தொழில்நுட்பமும் யாரிடமும் இல்லை.அரசு டெலிபோன் கம்பனிகள் வேலைக்காதவை.
விமானங்கள்,கம்புயூட்டர்கள்,இயந்திரங்கள்,தொழில்நுட்பம் என இந்தியாவின் தேவை அளப்பறியது.இவற்றை நாமே மீண்டும் கண்டுபிடிக்கலாம் (re-inventing the wheel) என நினைத்தால் இந்தியா பின் தங்கி தான் இருக்கும்.
அமெரிக்காவிடம் பணம் இருக்கு,.நம்மிடம் மனிதவளம் இருக்கு.வலிய வந்த சீதேவியை ஏன் எட்டி உதைக்க வெண்டும்?
நக்சலைட் பேச்சு எடுபட்ட எந்த நாடும் இந்திய மாநிலமும் உருப்பட்டாதாக சரித்திரமே இல்லை.ரஷ்யா,வடகொரியா என அவர்கள் அழித்த நாடுகள் ஏராளம்.இந்தியாவிலும் ஏராளமான மாநிலங்களில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் பிரச்சனை இல்லாத தமிழ்நாடு,கர்நாடகா,குஜராத்,மராட்டியம்,போன்ற மாநிலங்கள் தான் முன்னேறுகின்றன.
செல்வா சார்,
நான் சிவமுருகன், மயூரா கருத்துக்களுடன் ஒன்றிப் போகிறேன். அவர்களின் கண்ணோட்டம் காலங்களை தாண்டி உண்மைக்கு துணை போவதை போன்று. ஏனையவைகள் குறுகிய சாகு படிக்காக வரம் கேக்கும் பூசாரிகளின் பக்தியைப் போன்றது.
IMF-வும் இது போன்ற சாணக்கிய நாடுகளும் நினைத்தால் பிள்ளைக்கு குச்சி மிட்டாய் கொடுத்து நல்ல ருசித்து சாப்பிடும் பொழுது டபக்கின்னு புடுங்கிக் கொள்வது போல புடுங்கி வயத்தில் அடித்த கதை ஆங்காங்கே நடந்ததை கண்னை மூடிக் கொண்டு அலுச்சாட்டியம் பிடிக்காக் கூடாது பார்பதற்கு.
The Thunder from the East என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்கள். அங்கு நிறைய சிவப்பு கொடிகள் வழியெங்கும் நட்டு வைத்திருப்பார்கள், அன்னீய முதலீட்டை நம்பி ஒரு நாடு முழு மூச்சில் தன்னை தொலைத்துக் கொள்ளும் பொருட்டு என்னவாகிறது என்பதனை. தாய்லாந்து போன்ற நாடுகளில் அவ்வாறு ஆரம்பித்த வேலைகள் இன்னும் முடிவுறாமலேயே கிடக்கிறது.
கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் நாம் இந்த விளையாட்டில் இருந்தால் அவர்களுக்கு நேர்ந்த கதி நமக்கும் ஏற்பட கொஞ்சம் வாய்ப்புகள் குறையும். ஏனெனில், நம்மிடம் நிறைய think tank மக்கள் இருக்கிறார்கள். அதீத ஆர்வக் கோளாறு கண்ணைக் கட்டிவிடும். மாமா ஆதாயமில்லாமல் ஆற்றில் இறங்க மாட்டாய்ங்க.
மேலே தூதூதூதூக்கி டபக்கின்னு விட்டுட்ட... தலைகிழாக விழுந்து எங்க அடிப்பட்டதுன்னு தெரியாமலே...
அருமையான விவாதத்திற்கூறிய விசயங்களை முன்னிருத்துவதற்கு நன்றி, செல்வன். ரொம்ப சுகாதாரமான பதிவுகள்.
தெகா.
suresh.chennai
hallo friend..
very bad thing you and all
india is gone here..u told indian is happy there
இங்கு நடந்து கொண்டிருக்கும் விவாதத்தில் எனக்கு தெரிந்த சில கருத்துக்கள். அவுட்சோர்சிங் என்பது நூறு சதவீதம் கால் சென்டர் வேலை போல் இரவுகளில் மட்டும் நடைபெறுவது இல்லை. ஆகவே சிவ முருகன் குறிப்பிடுவது போல் இதன் மூலம் வரும் பிரச்சனைகளின் அளவை நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளுடன் ஒப்பிடுவது சரியில்லை.
இந்த சீப் லேபர் என்று இந்தியாவிற்கு கிடைத்து வந்த வேலை வாய்ப்புகள் இப்பொழுது நம் திறனுக்காகவும் கிடைக்க ஆரம்பித்துள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இன்றுள்ள சூல்நிலையில் அமேரிக்கா இந்தியா இரண்டுமே இதன் மூலம் பயன் அடைகிறது என்றுதான் என்னுடைய கருத்து.
//நான் அடித்து சொல்வேன். அமெரிக்க முதலீடு தலையீடும் எப்போதும், எப்போதும் எந்த நாட்டுக்கும் நன்மை தரப்போவதில்லை. //
இரண்டாம் உலக போருக்கு பின்னால் அமெரிக்க உதவியுடன் தலைநிமிர்ந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
நமது மக்கள் அமெரிக்கா அணுகுண்டு போட்டவன் என்று திட்டி கொண்டு இருக்கும் போது அமெரிக்க நிதி உதவிகளை பெற்று தனது உள்கட்டமைப்பை மிக அற்புதமாக அமைத்து கொண்டு தனது குடிமக்களுக்கு தரமான வாழ்க்கையை அளித்து உள்ளது நிப்பானிய அரசு!
//ஜே ஆர் ஜயவர்தன இலங்கையில் திறந்த பொருளாதாரத்தை அறிமுகபடுத்திய பின்னர்தான் எமது நாடு இப்படி ஒரு ஒருளாதார ரீதியில் கேவலங்கெட்ட நிலைமைக்கு போனது. இந்தியா தன் பொருளாதாரத்தை எமக்கு பின்னர்தான் திறந்தது.//
இல்லை அய்யா, இப்போதும் இலங்கையில் அமைதி நிலவினால் நிச்சயம் உங்கள் நாடு நன்றாக செழித்து வளரவழியுண்டு.
உதாரனமாக நமது இரு நாடுகள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட இரண்டு ஆண்டுகள் வர்த்தகம் 100% மேல் அதிகரித்தது.....(FTA?)
உங்கள் நாட்டில் political stability மட்டும் தான் இல்லை...அது மட்டும் இருந்தால் இலங்கையும் நன்றாக இருக்கும். :(
மயூரன், கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த நக்சல்களுகும், கம்யூனிஸ்ட்டுகளும் ஆண்ட நாடுகளில் இன்னும் எத்தனை வறுமை இருக்கிறது!
அவுட்சோர்ஸிங்கினால் standard of living உயரலாம். ஆனால் Quality of living மேம்படுமா என்பது கேள்விக்குரியே?
//அவுட்சோர்ஸிங்கினால் standard of living உயரலாம். ஆனால் Quality of living மேம்படுமா என்பது கேள்விக்குரியே?
//
standard of living,Quality of living ரெண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதாண்ணா
வேந்தன் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்றான். தனது அறுந்த செருப்பை தைத்துக்கொடுக்க சொன்னான். அவனும் செய்து கொடுக்க வேந்தன் சில சில்லறைகளை கொடுத்தான். தொழிலாளி அதை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னான்.
தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார்.
தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்.
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
//கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் நாம் இந்த விளையாட்டில் இருந்தால் அவர்களுக்கு நேர்ந்த கதி நமக்கும் ஏற்பட கொஞ்சம் வாய்ப்புகள் குறையும். ஏனெனில், நம்மிடம் நிறைய think tank மக்கள் இருக்கிறார்கள். அதீத ஆர்வக் கோளாறு கண்ணைக் கட்டிவிடும். மாமா ஆதாயமில்லாமல் ஆற்றில் இறங்க மாட்டாய்ங்க.//
தெக்கிட்டான்,
உங்கள் இந்த வரிகள் மிக அழகாக இந்த பிரச்சனைக்கான தீர்வை சொல்கின்றன.நாம் முட்டாளாக இருந்தால் யாராக இருந்தாலும் ஏறித்தான் மிதிப்பார்கள்.புத்திசாலித்தனமாக தான் இதுவரை நம் அரசு நடந்து கொண்டுள்ளது என நினைக்கிறேன்.
நன்றி
அன்புடன்
செல்வன்
Post a Comment