Tuesday, January 24, 2006

ஸ்பூன் ஏந்திய 3000 பேர்

குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கான்டிராக்டர் திடீரென்று ஏதோ கணக்கு போட்டு ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது.துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது.இனி மம்முட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்?துரத்தி விட்டார். 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள்.2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள்.புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது.வேகமாக வேலை செய்தது. "புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மம்முட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியிருப்பார்கள்" என்றான் நெகிழ்ச்சியுடன் ஒருவன். "மம்முட்டி மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஸ்பூன் ஏந்திய 3000 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியிருப்பார்கள்" என்றான் புரிதலுடன் இன்னொருவன். இருவரும் வேறு வேலை தேடி பட்டணத்துக்கு கிளம்பினார்கள்

10 comments:

Unknown said...

The only constant thing in this world is change... Good story to use in corporate context

நிலா said...

selvan
kalakkureenga.
Can u please mail me your mail id? (nila at nilacharal dot com is my id)
tks

rv said...

நல்லா இருக்கு செல்வன்.

சரியான கருத்து.

பழூர் கார்த்தி said...

செல்வன், சும்மா 'நச்'சுன்னு இருக்கு நீதிக்கதை !!!

Unknown said...

மிக்க நன்றி தேவ்,அஷ்லின்,ரஷ்ய மாவட்ட ப.ம.க செயலாளர் ராமனாதன்:-),சோம்பேறி பையன்,

நிலா அவர்களே உங்களுக்கு மின்னஞல் உடனே அனுப்புகிறேன்.நன்றி

ramachandranusha(உஷா) said...

good story Selvan

Unknown said...

thanks ramachandran usha

ranjit kalidasan said...

Good story selvan.

Unknown said...

thanks Ranjith kalidasan

Unknown said...

Dear ari,
thanks for the feedback.while management has to make change as painless to labors as possible,workers should be ready for anything anytime.corporate world is full of nasty shocks.One who has skill will survive anywhere in the world.

As you said laborors should develop multiple skills.

regards
selvan