ஆண் சிஙங்களுக்கு ஏற்பட்ட களங்கத்தை ஒரு புதிய ஆய்வு முடிவுகள் துடைத்துள்ளன. கார்னிகி பல்கலைக்ழக பேராசிரியர்களால் சிஙங்கலின் உடலில் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி நடத்தபட்ட இந்த ஆய்வில் தெரிய வந்த விஷயம் என்னவெனில்
* பெண் சிங்கங்கள் பகலில் கூட்டமாக வேட்டையாடும்
* ஆண் சிங்னங்கள் இரவில் தான் வேட்டையாடும், ஊர் அடங்கியவுடன் ஆண் சிங்கம் வேட்டைக்கு கிளம்பி தனியாக பொறி வைத்து (ஆம்புஷ்) இரையை வேட்டையாடும்.
இதுநாள்வரை சிங்கங்களை வைத்து நடத்தபாட்ட ஆய்வுகள் பகலில் ஆண் சிங்கம் தூங்குவதை வைத்து அதை சோம்பேறி என முடிவு கட்டியுள்ளனர். அது தவறு என இந்த ஆய்வு கூறுகிறது. ஆக ஆண் சிங்கம் சோம்பேறி அல்ல. பகலில் மனைவியை வேலைக்கு செல்ல அனுமதித்து குழந்தைகளை கவனித்துகொள்ளும் பேபிசிட்டர். மனைவி வீடு திஉம்பியவுடன் ஆண்சிங்கம் பொறுப்பா வேலைக்கு போய் வருகிறது.
இரவில் ஆராய்ச்சி செய்யாமல் பகலில் மட்டும் ஆராய்ச்சி செய்து இப்பேர்ப்பட்ட உத்தம புருஷனை சோம்பேறி என்றும் ஆணாதிக்கவாதி என்றும் கூறிய விஞ்ஞானிகள் மன்னிப்பு கேட்பார்களா?
1 comment:
ஹா ஹா ஹா...
Post a Comment