Saturday, March 16, 2013

கான்சரை ஒழிக்கும் கெடோஜேனிக் டயட்: அட நிஜமாதான்

கான்சரை ஒழிக்கும் கெடோஜேனிக் டயட்: அட நிஜமாதான்.

(டிஸ்க்ளெய்மர்: இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்று அல்ல. 100% வெற்றி அளிக்க கூடியதும் அல்ல. வேலை செய்யும் என நம்பபடும் ஒரு கான்செப்ட். )

கான்சர் செல்கள் உயிருடன் இருக்க க்ளுகோஸ் தேவை. அவற்றுக்கான குளுகோஸ் சப்ளையை துண்டித்தால் உணவு இன்றி அவை பட்டினியால் இறந்துவிடும். குளுகோஸ் இல்லையெனில் நம் உடலில் மற்ற செல்களும் இறந்துவிடுமே என டென்சனாகவேண்டாம்:-). குளுகோஸ் தவிர்த்து நம் உடலுக்கு கெடோன்ஸ் எனும் இன்னொரு வகை எரிபொருள் உண்டு. அந்த எரிபொருளை கான்சர் செல்களால் பயன்படுத்த முடியாது. நம் உடலின்  மூல எரிபொருளை குளுகோஸிலிருந்து கெடோன்ஸுக்கு மாற்றினால் நம் உடல் செல்கள் வாழும், கான்சர் செல்கள் உயிர் இழக்கும். நம் உடலின் பிரைமரி எரிபொருளை கெடோன்சுக்கு எப்படி மாற்றுவது? தினமும் ஒரே ஒரு கிராம் சர்க்கரைசத்து கூட உடலில் சேர்க்காமல் உண்டால் மூன்று நாட்களில் உடல் கெடோசிசுக்கு சென்றுவிடும்.சர்க்கரை சத்து சேராமல் எதை உண்பது? எண்ணெய் சேர்க்காத மாமிசம், முட்டை. இவை இரண்டும் தான். மாமிசத்தை நெய்யில் வறுத்து உண்ணலாம், வேக வைத்து உண்ணலாம். ஆனால் அதை தவிர காய், கனி,பழம், தானியம்,சர்க்கரை, காஃபி, டி என எதுவும் உடலில் சேர கூடாது. இந்த டயட்டால் பின்விளைவு உன்டா? ஆம். மலசிக்கல் மாதிரி சில பிரச்சனைகள் வரும். ஆனால் கான்சர் குணமாகும் 

http://www.cbn.com/cbnnews/healthscience/2012/december/starving-cancer-ketogenic-diet-a-key-to-recovery/

மேலும் கேள்வி இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள்

2 comments:

திவாண்ணா said...

செல்வன், மருத்துவம் சார்ந்த பதிவுகள் வெகு ஜன ஊடகங்களில வரும்போது இப்படி ஓஹோன்னு தூக்கி வைக்கறதும் அப்புறம் அது காணாமல் போகிறதும் வழக்கம்தான். ஒரு கான்செப்ட் வந்தா அதை பல நாட்கள் பல பேருக்கு முயற்சி செய்து பார்த்துவிட்டே மருத்துவ உலகம் ஒப்புக்கொள்ளும். அது வரை அந்த கான்செப்ட் வாலிட் இல்லை. கான்சர் குறித்த விஷயம் என்பதால் படிபப்வர் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்று எழுதினேன். படித்துவிட்டு சிலர் இப்போதைய சிகித்சையை விட்டு விட்டு முயற்சிக்கக்கூடும். நீங்கள் கொடுத்த தொடுப்பில் சொன்ன ஆசாமி போல இனி இழக்க ஒன்றும் இல்லை என்ற நிலை இருந்தால் முயற்சிக்கலாம். மற்றவர்கள் யோசிக்கவும்.

Unknown said...

உண்மைதான். இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்று என நான் கருதி எழுதவில்லை. இதை முயற்சித்தால் எதுவும் கெட போவது இல்லை. வேலை செய்தால் செய்யும். இல்லாவிட்டால் நஷ்டம் ஒன்றும் இல்லை. அந்த டிச்கியை பதிவில் இட்டுவிடுகிறேன்