ட்ரைகிளிசரைட்ஸ் குறைப்பு-. இதை எப்படி செய்வது? ட்ரைகிளிசரைட்ஸ் உருவாவது எப்படி? மின்னசோட்டா பல்கலைகழக நியுட்ரிஷன் சயன்ஸ் பேராசிரியர் பார்க்ஸின் ஆய்வு கூறுவது என்னவெனில் நாம் உண்ணும் உணவில் 55% காலரிகள் சர்க்கரைசத்தில் இருந்து வந்தால் அது ட்ரைகிளிசரைடாக மாறுகிறது என்கிறார். ட்ரைகிளிசரடை குறைக்க உணவில் உள்ள சர்க்கரை சத்தை குறைப்பது, குறைந்த காலரிகள் உள்ள உணவை உட்கொள்வதை விட மிக அதிக பலனை அளிப்பதாக டெக்சாஸ் பல்கலைக்ழக மருத்துவ பேராசிரியர் ஜெப்ரி பிரவுனிங்கின் ஆய்வும் கூறுகிறது.
இதில் எந்த விந்தையும் இல்லை. காரணம் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை தான் லிவரை அடைந்து ட்ரைகிளசரைடாக மாறுகிறது. ட்ரைகிலசரைடு தான் எல்டிஎல் கொலஸ்டிராலை விட மிக ஆபத்தான கொலசடிரால். இதய அடைப்புக்கு நேரடி காரணி. ஆக ட்ரைகிளசரைடை குறைப்பது உங்கள் நோக்கம் எனில் அதற்கான வழிமுறை எளிது. உணவில் இருக்கும் சர்க்கரை சத்தை குறைக்க வேண்டும். இந்த நோக்கம் உள்ளவர்கள் பழங்கள், தானியங்களை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். பழம் நல்லதுதான் ஆனால் ட்ரைகிள்சரைடு அதிக அளவில் உள்ளவர்களுக்கு அது நல்லது அல்ல. தானியத்துக்கு மாற்று எது என்பது நீங்கள் வீகனா, சைவமா, அசைவமா என்பதை பொறுத்து தீர்மானம் ஆகும்.
No comments:
Post a Comment