Thursday, November 08, 2012

ஒயம்யாகோன் - உலகின் ஐஸ்பெட்டி

பிபிசி தொலைகாட்சியில் "Living in extreme cold" எனும் நிகழ்ச்சியை காட்டினார்கள்.அதில் உள்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
 
ரஷ்யாவில் சைபீரியாவில் "உலகின் மிக குளிர்மையான கிராமம்" என்ற பட்டத்தை அடைந்துள்ள ஒயம்யகோன் கிராமம் உள்ளது. கின்னஸ் சாதனைபடி - 72 டிகிரி செல்ஷியஸ் டிகிரி குளிர் இந்த கிராமத்தில் பதிவாகி உள்ளது.

ஒயம்யகோனில் பெர்மாபிராஸ்ட் எனப்படும் பனி நிரந்தரமாக உள்ளது. அதாவது வருடம் முழுக்க பனி. மண்ணையோ, புல்லையோ எந்த காலத்திலும் இங்கிருக்கும் மக்கள் பார்த்தது இல்லை. வெயில் காலத்தில் இங்கே அதிகபட்சம் 30 டிகிரி வெப்பம். அதாவது இவர்கள் வெயில்கால வெப்பம் உங்கள் ப்ரிட்ஜ் ஐஸ்பெட்டியில் உள்ள வெப்பத்துக்கு சமம்.

 
(குதிரை,கலைமான் வளர்ப்பு தான் தொழில் மற்றும் பிழைப்பு)
 

இந்த குளிருக்காகவே உலகில் பல டூரிஸ்டுகளும் இங்கே வருகிறார்கள். மைனஸ் அறுபது, எழுபது டிகிரி குளிரை அனுபவித்து அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.இந்த குளிர் மனித உடலை என்ன செய்யும், இங்கே வாழ்க்கை நடத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.

இந்த குளிரில் எந்த காய்கறியும் விளையாது. அதனால் வருடம் முழுக்க மான்கறியும், குதிரை மாமிசமும் தான் உணவு. மைனஸ் ஐம்பது டிகிரி குளிரில் எதாவது உலோகம் உங்கள் தோலில் பட்டால் அவ்வளவுதான். அப்படியே ஒட்டிகொள்ளும். இங்கே இரும்ப் தூண் ஒன்றில் நாக்கை வைத்த ஒரு நாய்க்கு நாக்கு அப்படியே இரும்போடு ஒட்டிகொண்டு எடுப்பதற்குள் நாய் துள்ளிகுதித்ததால் நாக்கு அப்படியே தனியாக கழன்டு வந்துவிட்டது.

இம்மாதிரி உடைகளின் விலை $1500. இந்த மக்களின் இரண்டுமாத வருமானம் இது. இதை வாங்க வங்கிலோன்கள் எல்லாம் கொடுக்கும் நிலை.

வென்னீரை காய்ச்சி மேலே ஆகாயத்தை நோக்கி வீசினீர்கள் எனில் அது கீழே விழுகையில் பனியாக தான் விழும்.வாழைப்பழம் ஒன்றை வெளியே இரண்டு நிமிடம் வைத்தால் அது கெட்டியாகி உலோகம் போல் ஆகிவிடும். அப்புறம் அதை வைத்து ஆணிகளை கூட அடிக்கலாம்!!!
 
Inline image 1
 
(வென்னீரை வீசினால் கீழே வருவதுக்குள் ஐஸ்)

ஒயம்யாகோனில் கார் வைத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. கார் எஞ்சின் வருடம் முழுக்க ஓடிகொண்டே இருக்கமுடியும். ஸ்விட்சை ஆஃப் செய்தால் வண்டியில் உள்ள பெட்ரோல் அப்படியே உறைந்துவிடும்.அப்புறம் புதுகார் தான் வாங்கணும்.

பால், நியூஸ்பேப்பர் எல்லாம் விமானம் மூலம் சப்ளை ஆகும். குளிரால் பால் கெட்டுபோகும் பிரச்சனை எல்லாம் இல்லை. பால் உறைந்த கட்டியாக சப்ளை செய்யபடும். வேண்டும்போது கொஞ்சம் வெட்டி எடுத்து அடுப்பில் வைத்து உருக்கிகொள்ளவேண்டியதுதான்!!!

அப்புறம் குளிர்காலத்தில் எப்படி வெளியே போகிரார்கள் என கேட்கிறீர்களா?

போவது இல்லை. குளிர்காலத்தில் மிக அவசியமான தேவை ஏற்பட்டால் ஒழிய வெளியே போவது இல்லை. போனால் உடல் முழுக்க ஃபர் எனப்படும் மிருகதோலால் மூடிகொண்டு தான் போகவேண்டும். சிறு ஓட்டை இருந்தாலும் குளிர்காற்று உள்ளே நுழைந்துவிடும். பத்து நிமிடத்துக்கு மேல்; அந்த குளிரில் எக்ஸ்போஸ் ஆகும் பாகம் அப்படியே ப்ராஸ்ட்பைட் ஆகிவிடும்.அப்புறம் வெட்டி எடுக்கவேண்டியதுதான்.குளிர் மைனஸ் முப்பது, நாற்பது டிகிரிக்கு மேலே போனால் அந்த ஊரில் இருக்கும் ஒரே பள்ளியும் மூடப்படும்.அப்புறம் லீவுதான்.
 
இப்படி ஒரு பனிஷ்மெண்ட் கிராமத்தில் ஏன் வசிக்கிறார்கள் என கேட்கலாம். ஒயம்யகோன் முன்னாள் குலாக். அதாவது தன்டனை முகாம். ஸ்டாலின் காலத்தில் நாடு கடத்தபட்டவர்கள் இங்கே அனுப்பபட்டனர். பின்னாளில் அபப்டியே இங்கே குடியிருப்பு உருவாகிவிட்டது.
 
நன்றி: பிபிசி
மற்றும் புகைப்படங்களுக்கு கீழே உள்ல தளத்துக்கு செல்லவும்
 

No comments: