Thursday, October 25, 2012

குரங்குகளை மனிதனாக்கிய இரு விபத்துக்கள்


மனிதன், சிம்பன்சி, போனபோ, கொரில்லா என பலவகை ஏப்கள் உலகில் உன்டு. இவற்றில் மனிதன் மட்டும் எப்படி மற்ற ஏப்களை தாண்டி முன்னேறினான்?

இதற்கான ஒரு விடை "சமைப்பது" என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முதல் முதலாக மனிதன் எப்படி சமைக்க கற்றுகொன்டான் என்பது இன்னும் தெரியவில்லை. கையில் வைத்திருந்த மாமிசதுன்டு காட்டு நெருப்பில் தற்செயலாக விழுந்து கருகி அதை எடுத்து சாப்பிட்டு சமைப்பதை மனிதன் ஒரு விபத்தாக அறிந்திருக்கலாம் என ஒரு தியரி உன்டு. ஆனால் எப்படியோ ச்மைக்க துவங்கியதும் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மிகபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதற்காக மருத்துவர் ரேங்கம் என்பவர் சமைக்கபடாத பச்சை உணவுகளை மட்டும் உண்ணும் மக்களை ஆய்வு செய்ததில் அவர்களில் 50% பெண்களுக்கு வெகு விரைவில் மாதவிலக்கு நிற்பதாக கண்டுபிடித்தார். பச்சை உணவுகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூன்டுவதுடன், முதுகுவலி, இடுப்புவலியையும் ஏற்படுத்தின. முன்நாளைய மனித இனம் இத்தகைய டயட்டில் ரொம்ப நாள் பல்கி பெருகியிருக்காது எனவும் சமைக்கபடாத உணவுகளை மட்டுமே உன்டிருந்தால் இன்னொரு குரங்கினமாக வாழ்ந்து அருகியிருப்போம் எனவும் ரேன்கம் கூறுகிறார்

மேலும் சமைக்கபடாத உணவு ஜீரணம் ஆக ஏழெட்டு மணிநேரம் எடுக்கும் என்பதாலும், அதில் எரிசக்தி குறைவு என்றும் சமைக்காமல் உண்னகூடிய உணவுகளின் வெரைட்டி குறைவு என்பதாலும் மனிதன் தீயையும், சமையலையும் கண்டுபிடித்தது அவனை மற்ற ஏப்களிடமிருந்து வெகு விரைவில் வித்தியாசபடுத்தி பயலாஜிக்கல் மாற்றங்களை உண்டாக்கியது

இதை விட முக்கியமான இன்னொரு மாற்றம் மனிதன் பால் குடிக்க தொடங்கியது. ஏப் வகைகள் அனைத்துக்கும் லாக்டோஸ் இன்டாலரன்ஸி (பால் ஒவ்வாமை) எனப்படும் வியாதி உன்டு. அதாவது ஏப் குரங்கினங்கள் பிறந்து சில மாதங்கள் வரை தான் தாய்பால் அருந்தும். அப்போதும் ஒரு குழந்தை எத்தனை தாய்ப்பால் குடிக்க முடியும் என ஒரு எல்லை உண்டு. அதை தான்டினால் லாக்டோஸ் இன்டாலரன்ஸி வந்து வயிற்றை பிடுங்கி டயர்ரியா வரும். இந்த வியாதி பல குழந்தைகளும் தாய்ப்பாலை பங்கிட்டு வளர பரிணாம வளர்ச்சி ஏற்படுத்திய விதியாகும். இதனால் பெண் ஏப்களால் பல குழந்தைகளை ஈன்று பாலூட்ட முடிந்தது.

கிமு 10,000 ஆண்டு வரை மனிதனும் பிற ஏப்களை போல கைபிள்ளையாக இருக்கையில் தாய்ப்பால் அருந்தியும், வளர்ந்த பின்னர் வேறு எந்த மிருகத்தின் பாலையும் அருந்தாமல் தான் இருந்து வந்தான். அதன்பின் கிமு 10,000 ஆன்டுவாக்கில் துருக்கி அருகே ஒரு மனிதனுக்கு ஜெனடிக் குறைபாடால் லாக்டோஸ் இன்டாலரன்ஸி மிக குறைந்துவிட்டது என்றும் அதன்பின் அந்த ஜெனடிக் மியூடேஷன் அவன் சந்ததியினர் மூலம் தீடீர் பாய்ச்சலாக உலகெங்கும் பரவி ஒரு சில ஆயிரம் ஆன்டுகளில் ஐரோப்பா, முதல் இமாலயம் வரை அன்று பரவி இருந்த மனிதர்கள் அனைவரும் பிள்ளைபருவம் தான்டியும் ஆயுள் முழுக்க பால் குடிக்க முடியும் என்ற நிலையை அடைந்தனர்.

இந்த காலகட்டத்தில் தான் மனிதன் மாட்டுபாலை ஒரு உணவாக குடிக்க துவங்கியிருக்க வேண்டும் என்கின்றனர். பால் குடிக்க துவங்கியதும் மனித உடலில் கால்ஷியம், புரதம் முதலிய பல சத்துக்கள் சேர்ந்து அவனது பரிணாம வலர்ச்சியை துரிதபடுத்தின,.

ஆக இந்த இரு விபத்துக்கள் மூலம் மனிதன் சமைக்க கற்றுகொண்டும், பாலை குடிக்க கற்றுகொன்டும் மற்ற ஏப் இனங்களை தாண்டி முன்னேறி மனிதனானன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்களுக்கு நன்றி...