Saturday, January 28, 2012

ஆவ்சம் அமெரிக்கா


slide_206415_641595_large.jpg?1327599855

சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஜெஸிகா புக்கானன் எனும் அமெரிக்க பெண் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் பிடிபட்டார். ஜெஸிகா போரால் பாதிக்கபட்டுள்ள ஆபிரிக்க நாடுகளில் உள்ள நிலகண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரை சோமாலிய கடற்கொள்ளையர்கல் பிடித்து சென்றது அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது.அவரை விடுவிக்க வந்த அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்த கடற்கொள்ளையர் 1.5 மில்லியன் டாலர்களை பிணையாக அளித்தால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்றனர்.

தீவிரவாதிகளிடம் மண்டியிட்டு பழக்கபடாத ஆவ்சம் அமெரிக்க களத்தில் இறங்கியது. சென்ற வாரம் 24 நேவி சீல்கள் சோமாலியாவில் உள்ள அடோ எனும் நகருக்கு அருகே இறங்கினர். 12 மைல் தொலைவை நடந்தே கடந்தனர். கடற்கொள்ளையர் இருந்த கட்டிடத்தை முற்றுகை இட்டனர். அங்கே இருந்த 9 கடற்கொள்ளையரை நமனுலகு அனுப்பி ஜெஸிகாவையும், அங்கே இருந்த இன்னொரு டச்சு நாட்டை சேர்ந்த பனயகைதியான  பால் ஹோகன் என்பவரையும் மீட்டனர்.

இந்த ஆபரேஷனில் உயிர் இழப்பு விவரம்

அமெரிக்கா: 0
சோமாலியா கொள்ளையர்: 9

அன்று அதிகாலை ஜெஸிகாவின் தந்தை ஜான் புக்கானனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

"ஜான் நான் பராக் ஒபாமா.உங்களுக்கு ஒரு நற்செய்தி.உங்கள் மகள் மீட்கபட்டுவிட்டாள்.."

ஜான் புக்கானனுக்கு தான் காண்பது கனவா,நனவா என்பதே புரியவில்லை...

2 comments:

Thiagarajan said...

My best wishes for The Rescue Team and for you [ for translated msg ]
This is called "value for life". not valid in many countries, including "Incredible India".

Unknown said...

Thanks Thiyagarajan. The idea behind sharing such news is to create awareness among people so that they will make our country really Incredible like Awesome America.

Long shot attempt but I never lose hope:-)