Tuesday, August 30, 2011

குடும்பமும், கம்யூனிசமும்: ஜெர்மன் கேஸ் ஸ்டடி

குடும்பத்தின் மீதான இடதுசாரிகளின் தாக்குதல் மிக தொன்மையானது.உலகை கட்டுக்குள் கொண்டுவரும் இடதுசாரிகளின் திட்டத்தில் குடும்பம் என்ற அமைப்பை சிதைத்தல் மிக முக்கியமானது. காரல் மார்க்ஸின் காலத்திலேயே குடும்பத்துகெதிரான கம்யூனிஸ்டுகளின் யுத்தம் துவங்கிவிட்டது.எங்கெல்ஸின் சித்தாந்தப்படி குடும்ப அமைப்பு தான் தனியுடமையும் முதலாளித்துவ சமூகமும் நீடிக்க ஒரே காரனம்.தகப்பன் சொத்து பிள்ளைக்கு என்ற அமைப்பு நீடிப்பதால் தான் பனகாரர்கள் தம் பிள்ளைகளுக்கு கோடிகணக்கில் சொத்து சேர்க்கின்ரனர்.பிள்லைகள் இருப்பதால் தான் சொத்து சேர்க்கவே மக்கள் தூண்டபடுகின்றனர்.அதனால் குடும்பத்தை ஒழிக்காமல் தனியுடமையையும், முதலாளித்துவத்தையும் ஒழிக்க முடியாது.

19ம் நூற்றாண்டில் குடும்பத்தை ஒழிக்க எங்கெல்ஸ் கையில் எடுத்த ஆயுதம் "ப்ரீ லவ்".ஒவ்வொரு உரிமைபோரின் இறுதியிலும் "ப்ரீ லவ் கான்செப்ட் மலர்வது தவிர்க்க இயலாதது" என எங்கெல்ஸ் எழுதினார்.இந்த கோட்பாட்டை பல ஜெர்மானிய இடதுசாரிகள் முன்னெடுத்தனர்.ஜெர்மானிய சோஷலிஸ்டு கட்சி பிதாமகர் ஆகஸ்ட் பெபல் எழுதிய Die Frau und der Sozialismus எனும் நூலில் குடும்ப அமைப்பை கடுமையாக சாடிடியிருப்பார்.இதற்கு அன்றைய ஜெர்மன் சமூகமும், அரசும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.1849,1874,1876 அன்ட் 1894 ஆகிய நான்கு ஆண்டுகளில் "சோஷலிச தாக்குதலிலிருந்து குடும்பத்தை பாதுகாக்கும் சட்டங்கள்" அன்றைய பிரஷ்ய மற்றும் ஜெர்மானிய அரசுகளால் இயற்ரபட்டன.

குடும்பத்துகெதிரான இந்த நீண்ட நெடும்போரை பற்றி இன்னும் விரிவாக எழுத முடியும்.ஆனால் மடல் நீண்டுவிடும் என்பதால் தவிர்க்கிறேன்.இரண்டாம் உலகபோருக்கு பின்னர் குடும்ப அமைப்புகெதிரான ஜெர்மானிய சோஷலிஸ்டுகளின் தாக்குதல் கிட்டத்தட்ட முழு வெற்றியை அடைந்தது.திருமணம் என்ற அமைப்பு ஜெர்மனியில் சிதைய ஆரம்பித்தது.

தாய்,தந்தை,பிள்ளைகள்...இவர்கள் கொண்டது தான் டிரெடிஷனல் குடும்பம்.இத்தகைய குடும்ப அமைப்பு வெற்றி அடைய மொனோகமி (ஒரே ஒருவரை திருமணம் செய்தல்) முறை மிக அவசியமானது.இந்த குடும்ப அமைப்பு தான் ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளம்,ஆதாரம் எல்லாம்.குழந்தைகள் தான் நாட்டின் ஆதாரம்.அந்த குழந்தைகளின் வளர்ப்பு சிறப்பாக அமைய அடிப்படை தேவை அவர்களை பெற்றவர்கள் அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை அவர்களை ஒன்றாக ஒரே கூரையின் கீழே இருந்து வளர்ப்பதே ஆகும்.ஸ்டெப் மதர், ஸ்டெப் ஃபாதர், மற்றும் தனியாக ஒரே ஒரு பெற்றொரால் வளர்க்கபடும் குழந்தைகள் பெரும்பாலும் தறுதலைகளாக,கிரிமினல்களாக அல்லது ஏழைகளாக வளர்வது தான் யதார்த்தம்.இது நான் கூறுவது அல்ல.ஆராய்ச்சி முடிவுகள் கூறூவது.

http://www.thelocal.de/society/20100729-28831.html

The figures are worrying because single parent families are more likely to live in poverty than those with both a mother and father. In 2009, some 31 percent of single-mother families lived on incomes of less than €1,100 per month – with mothers of children younger than three-years-old especially hard hit.Some 62 percent had incomes of between €1,100 and €2,600 per month. For 31 percent of single mothers, welfare such as Hartz IV unemployment benefits was the main source of income.A separate report from the Federal Statistics Office, titled "Life in Europe," found that in 2008, nearly one in five single-parent families could not afford to properly heat their homes. Nearly three quarters said they were not in a position to pay unexpected bills such as a broken washing machine. More than half said they could not afford a one-week holiday requiring travel once a year.

ப்ரி லவ் கான்செப்ட் இத்தகைய டிரெடிஷனல் குடும்ப அமைப்பை முற்றிலும் சிதைத்து அழிக்கிறது.டீனேஜ் வயதில் அல்லது திருமனமாகாமல் கர்ப்பமுறும் பெண்கள் தம் குழந்தைகளுடன் ஒன்று தனியாக அல்லது இன்னொருவருடன் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு ஆளாகின்றனர். குழந்தைகளை ஒருவரிடம் பெற்றுவிட்டு இன்னொருவருடன் நடத்தும் வாழ்க்கையில் சிக்கல்கள் வரும்.அந்த வாழ்க்கை வெற்றி அடையும் வாய்ப்பு, அல்லது ஸ்டெப் ஃபாதர் தந்தையை ரிப்ளேஸ் செய்யும் வாய்ப்பு மிக குறைவு.வழக்கமாக இத்தகைய குடும்ப அமைப்புகளில் ஒரு 10 வருட காலகட்டத்தில் ஒரு குழந்தை தன் தாய் நாலைந்து பார்ட்னர்களை மாற்றிகொள்வதை பார்த்துவிடுகிறது.இது அதன் வாழ்வில் சகிக்க இயலாத மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

இத்தகைய குழந்தைகள் ஏழ்மையிலும், கிரைமிலும் வளர்ந்து நாட்டுக்கு பாரமாக மாறும் வாய்ப்புகளே அதிகம். பெற்ர தாய், தந்தையர் சேர்ந்து வளர்க்கும் குழந்தைகளை விட இந்த குழந்தைகள் மிக டிஸட்வான்டேஜான நிலையில் வளர்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக ஜெர்மனியில் இத்தகைய பாரம்பரிய குடும்ப அமைப்பு முரை சிதைந்து வருகிறது.இதன் விளைவுகள்:

The number of single-parent families in Germany has risen over the past decade, with nearly one in five mothers and fathers now raising their children on their own, a national "microcensus" revealed Thursday.

திருமணம், கற்பு (ஒருவனுக்கு ஒருத்தி), குடும்ப அமைப்பு ஆகியவற்றை தொலைப்பது ஜெர்மனி எனும் தேசத்தையே தொலைப்பதற்கு சமம்.பாரம்பரிய குடும்ப அமைப்பு முரை வலுவாக இருந்தால் தான் எந்த தேசமும் வெற்றியைடைய முடியும்.அந்த முறை அழிந்தால் எதிர்காலத்தை தொலைத்த தறுதலைகளாக - இப்போது லண்டன் நகரில் வன்முரையை நிகழ்த்தும் ரவுடிகள் போல- தான் பிள்ளைகள் வளரும்.

துரதிர்ஷ்டவசமாக பாரம்பரிய குடும்ப அமைப்பை கட்டிகாக்கும் கன்சர்வேடிவ் கட்சிகள் ஜெர்மனியில் வலுவாக இல்லை.ஜெர்மானிய கன்சர்வேடிவ் கட்சியை "சோஷலிஸ்ட் லைட்" என தான் அழைக்க இயலும்

குடும்பம், கலாசாரம்,பண்பாடு அனைத்துக்கும் அடிப்படை எது? இறைவன். பக்தி..ஜெர்மானியர்கள் அதையே இழந்து வருகின்றனர். ஆண்டவனையும், பக்தியையும், ஆன்மிகத்தையும் இழந்தால் ஒரு தேசம் அனைத்தையும் இழக்கும். வேறு எதை இழந்தாலும் ஒரு தேசத்தை மீட்க முடியும். ஆண்டவனை இழந்தால் அதை மீட்பது இயலாது.


No comments: