Monday, January 18, 2010

Thursday, January 07, 2010

கலாசார காவலர்

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் சென்ற அமெரிக்க கப்பற்படை வீரர் ஒருவருக்கு அங்கே ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணியும் உடையை கண்டு கடும்கோபம் வந்தது.ஓட்டல் அறைக்கு திரும்பியதும் மடலை தட்டி ஆஸ்திரேலியாவின் நாளிதழுக்கு வாசகர் கடிதம் ஒன்றை கடும்கோபத்துடன் அனுப்பினார்.அதில் உடலை மறைக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பெண்களுக்கு அறிவுரை சொல்லிவிட்டு கடைசியாக "கட்டுபாடு பேணப்படவேண்டும் பெண்களே.முழுவதுமாக எல்லாவற்றையும் காட்டாமல் கொஞ்சத்தையாவது கற்பனைக்கு விடுங்கள்" என அறிவுரை சொல்லியிருந்தார். .

அவ்வளவுதான்...ஓட்டுமொத்த ஆஸ்திரேலியாவும் அது தன் கலாசாரத்துக்கு விடப்பட்ட சவாலாக் கருதி கொந்தளித்து எழுந்துவிட்டது.அந்த பத்திரிக்கைக்கு வந்த பதில் கடிதங்களில் ஆஸ்திரேலிய பெண்கள் "இன்னொரு ப்ளடி அமெரிக்கன் உலகை திருத்த கிளம்பிவிட்டான்" எனவும் "உன் உபதேசங்களை அமெரிக்காவில் வைத்துகொள்" எனவும் பொங்கினர்.விவரம் சர்வதேச அளவில் பிரச்சனையாகும் என தெரிந்தவுடன் அமெரிக்க தூதரகம் தலையிட்டு அப்படி எந்த அமெரிக்க மாலுமியும் ஆஸ்திரேலியாவில் இல்லை என அறிக்கை விட்டு பிரச்சனையை தீர்த்தது.