Tuesday, January 16, 2007

230.Out sourcing

ஜேம்ஸ் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் சென்றார். தனது அறுந்த செருப்பை தைத்துக்கொடுக்க சொன்னார். அவனும் செய்து கொடுக்க ஜேம்ஸ் சில சில்லறைகளை கொடுத்தார். தொழிலாளி அதை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னான்.

தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார்.

தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்.

எழுதியவர் முத்தமிழ் குழுமத்தின் வேந்தன் அரசு.

(முத்தமிழ் குழுமத்தில் சென்ற ஆண்டில் எழுதப்படவைகளில் எனக்கு பிடித்தவை முத்தமிழ் குழுமத்தின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி அடுத்த சில நாட்களுக்கு வெளியாகும்)

Related links:

இந்தியாவை கைதூக்கி விடும் அமெரிக்கா

20 comments:

Anonymous said...

"தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார். தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்".

அடிமைபுத்தியுள்ள இந்தியர்களை திருத்தவே முடியாது என்று தனது சக தோழர் ராஜாவிடம் அசுரத்தனமாக புலம்பினார் இந்தத் தோழர். பிறகு தாங்கள் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனத்துக்கு சென்றனர் அவர்கள்.

அதானே, அவங்களும் பிழைக்கணும் இல்லே.

முரளி மனோஹர்

(sligtly edited by selvan to hide work identity of bloggers)

Unknown said...

நன்றி மனோகர்.

நீங்கள் சொன்ன கதையின் இரண்டாம் பாகம் மிக அருமையாக இருந்தது. முகமூடி போல் சக பதிவரின் வேலை பற்றிய தகவலை எடிட் செய்ய வேண்டியதானது.மன்னிக்கவும்.

இலவசக்கொத்தனார் said...

என்னென்னமோ எழுத வருது. ஆனா நாம ஒரு சிரிப்புக்கு எழுதினதை சிரிப்புக்காக மட்டுமே படிக்க மாட்டார்கள் என்பதலால் அவை சென்சாரில் சிக்கி எடிட் செய்யப்பட்டு விட்டன.
:))))

Unknown said...

தலை கொத்ஸ்

பதிவெழுவது மட்டும் தான் நம் கையில்.அதற்கு பொருள் தருவது பதிவுலகின் கையில்.இந்த விதி உங்களுக்கு தெரியாதா?:)

எழுதறதை எழுதுங்க.திரிக்கிறவங்க திரிக்கட்டும்:))

ரவி said...

சரியான கவர் ட்ரைவ் !!!!!

இலவசக்கொத்தனார் said...

//எழுதறதை எழுதுங்க.திரிக்கிறவங்க திரிக்கட்டும்:))//

என்னது திரிக்கிறதா? அந்த கிரிஷ் அப்பா என்னத்தையோ தொடையில் திரிக்கப் போயிதான் அந்த அடி வாங்கினாரு. நான் இந்த ஆட்டத்துக்கு வரலை சாமி. ஐயாம் தி க்ரேட் எஸ்கேப்....!!!!

Hariharan # 03985177737685368452 said...

செருப்புத் தைக்கும் தொழிலாளி அவனது தொழிலின் முதலாளி, அவர் செய்யும் சேவைக்கு அவனுக்கு என்ன வேணும்னு கேட்கத் தெரிந்து கேட்டதைப் பெற்று விட்ட நிலையிலும்
நடுவிலே வந்து தொழிலாளியின் தோழராக வேடம் கட்டுவோர் அதையே பிழைப்பாய் நடத்துவோர் செஞ்சட்டை அட்டைகள்.

நம்மூரில் (குறிப்பாக கேரளா, மேவங்கத்தில்) சங்கு ஊதியபடி ஆரம்பித்து, பரபரப்பாய் செயல்பட்ட பல தொழிற்சாலைகளுக்குச் சங்கூதி மூடவைத்த மூடர்கள் இந்த செஞ்சட்டைக் கூட்டம்!

தொழிலாளிக்கு அதிக பலன்கள் பெற்றுத்தருவதாகச் சொல்லியே அதிக பாதகங்களைச் செய்பவர்கள்.

Unknown said...

நன்றி தலைவா செந்தழல் ரவி

Unknown said...

கொத்ஸு,,
அடி வாங்கித்தான் அவர் இன்னைக்கு தமிழ்மணம் முழுக்க பேசப்படும் பெரும் புள்ளியா இருக்காரு.அடிவாங்கினா நீங்களும் பெரும்புள்ளி ஆவீங்க:))

Unknown said...

வாங்க ஹரிஹரன்,

நல்லா சொன்னிங்க. நம்மூரில் தான் செஞ்சட்டைகள் அட்டகாசம் தாங்கலை. குவைத்தில் நீங்க நிம்மதியா இருப்பீங்க:)

bala said...

//நல்லா சொன்னிங்க. நம்மூரில் தான் செஞ்சட்டைகள் அட்டகாசம் தாங்கலை. குவைத்தில் நீங்க நிம்மதியா இருப்பீங்க//

செல்வன் அய்யா,
நீங்க ஒட்டு மொத்தமா இப்படி கம்யூனிஸ்ட்களை வசை பாடுவது வேதனை அளிக்குதய்யா.எங்க புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி ஓட்டுப் பொறுக்கி கட்சி இல்லை.நாங்க செவப்பு சட்டை கட்சி இல்லை.நாங்க சிவப்பு அண்டர்வேர் கட்சி.அதனாலத் தான் திராவிட, கொள்ளை அடிக்கும் கட்சிகளை ,சப்போர்ட் செய்து சமூக நீதி காக்கறோம்.எங்க லேட்டஸ்ட் கொள்கை கோவில் சிலைகளை உடைக்கிறது தான்.இதை யார் செய்தாலும் நாங்க அவங்களுக்கு சப்போர்ட் செய்வோம்.புதியதோர் சமுதாயமும்/கலாசாராமும் சமைக்கறோம்.பொறுத்திருந்து பாருங்க, எங்க கட்சி எந்த ரேஞ்சுல போகப் போவுதுன்னு.

பாலா

Unknown said...

பாலா

உங்க கட்சி இந்த கலக்கல் கலக்குவதை பார்த்தால் விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே? புதிய கலாச்சாரம் படைக்கத்தான் வருஷக்கணக்கா பத்திரிக்கை நடத்துகிறதே உங்கள் கட்சி, இன்னுமா படைத்து முடிக்கவில்லை?:))

Anonymous said...

சூப்பர் செல்வன்.....இங்க பதிவுலகில் உலவும் செஞ்சட்டை/அண்டர்வேர் பார்டிகளுக்கு ஒரு அடின்னாலும், அது சூப்பரான அடி....வாழ்க உமது சேவை..

அசுரத்தனமா எழுதறவரு இன்னும் வரல்லை போல....அவர்கிட்ட சொல்லுங்க, அவர் எடுத்துக்காட்டிய ப்ரபாத் முதலாளி வர்கத்தில் சேர்ந்துவிட்டார், தனியாக கம்பெனி ஆரம்பித்துள்ளார் டைடல் பார்க்கில்....

Unknown said...

அனானி ,

நன்றி.

//அவர் எடுத்துக்காட்டிய ப்ரபாத் முதலாளி வர்கத்தில் சேர்ந்துவிட்டார்//

மனம் திருந்தி நல்வழிக்கு திரும்பியிருக்கார்ங்கறீங்க..பல்லாண்டு வாழ்கன்னு வாழ்த்துவோம்:-)

குமரன் (Kumaran) said...

நல்ல பார்வை. பல முறை எனக்கும் இப்படி தோன்றுவதுண்டு. தோழர்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக அவர்கள் எழுத்துகளைப் படிக்கும் போது எத்தனை தான் தோன்றினாலும் அதனால் எத்தனைப் பேருக்கு பயன் இருக்கிறது என்றும் தோன்றும்; பலமுறை அது ஏட்டுச்சுரைக்காய் என்றே உணர்ந்திருக்கிறேன்.

enRenRum-anbudan.BALA said...

//நல்ல பார்வை. பல முறை எனக்கும் இப்படி தோன்றுவதுண்டு. தோழர்கள் சொல்வதில் நியாயம் இருப்பதாக அவர்கள் எழுத்துகளைப் படிக்கும் போது எத்தனை தான் தோன்றினாலும் அதனால் எத்தனைப் பேருக்கு பயன் இருக்கிறது என்றும் தோன்றும்; பலமுறை அது ஏட்டுச்சுரைக்காய் என்றே உணர்ந்திருக்கிறேன்.
//
Ditto ! Nice posting :)

Unknown said...

குமரன், பாலா

நன்றி.பிராக்டிகல் வேல்யு இன்றி வரட்டு வேதாந்தம் பேசும் சித்தாந்தங்கள் கேட்க இனிமையாக இருக்கும்.ஆனால் அதன்பின் அதனால் பயனேதும் இல்லை.இதற்கு கம்யூனிசமே நல்ல உதாரணம்

வடுவூர் குமார் said...

அவனவன் பசி அவனவனுக்குத்தான் தெரியும்.
அடுத்தவன் பேச்சை மொத்தமாக நம்பினா சோறும் கிடைக்கலாம்,உதையும் கிடைக்கலாம்.
ஆமாம் நீங்க அந்த ஜெகத் சொல்லிய ஹாக் பண்ணவில்லையா?
பின்னூட்ட பெயர்கள் பிச்சி பிடிங்கியிருக்கே!!

Anonymous said...

இந்த பதிவில் உள்ள முரளிமனோஹரின் முழு பின்னூட்டத்தையும் வெளியிட முடியுமா?அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?ஆபாசமாக ஏதேனும் இருந்ததா, ஏன் எடிட் செய்தீர்கள் என்று சொல்லும்படி கேட்டுகொள்கிறேன்

Unknown said...

அனானிமஸ்

முரளிமனோகரின் பின்னூட்டத்தில் இருந்தவை இந்த வரிகள் தான்.

"தோழர் வந்தார். "ஏய், அந்த ஆள் அமெரிக்கன். உன் உழைப்பை சுரண்டுகிறான். இனிமேல் அவனுக்கு நீ செருப்பு தைக்ககூடாது என்றார். தொழிலாளி விழிக்கிறான். "ஐயா அந்த ஆள் நான் கேட்ட கூலி கொடுத்தான். நான் தைக்க வில்லை என்றால் அந்த சப்பை மூக்கு தொழிலாளி தைத்துகொடுப்பான். நானும் புள்ளைகுட்டி காரனய்யா" என்றான்".

அடிமைபுத்தியுள்ள இந்தியர்களை திருத்தவே முடியாது என்று தனது சக தோழர் ராஜாவிடம் அசுரத்தனமாக புலம்பினார் இந்தத் தோழர். பிறகு தாங்கள் வேலை செய்யும் --- நிறுவனத்துக்கு சென்றனர் அவர்கள்.

அதானே, அவங்களும் பிழைக்கணும் இல்லே.

முரளி மனோஹர்

(மேலே கோடுபோட்ட இடத்தில் ஒரு கம்பனியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவர்கள் வேலை செய்யும் கம்பனியின் தகவலை நான் வெளியிட முடியாது என்பதால் அனுமதிக்கவில்லை.இதை தவிர அந்த பின்னூட்டத்தில் வேறு எதுவும் இல்லை-selvan)