Friday, February 03, 2006

உலகசாதனை படைத்த ஆஞ்சனேயர்

1970'ல் பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் விளையாட்டாக அந்த முயற்சி துவங்கப்பட்டது.இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலையை நிறுவுவதுதான் அவர்கள் நோக்கம்.20,000 ரூபாய் செலவில் மலையுச்சியில் சிலையை நிறுவினார்கள். 1976'ல் உடுப்பி,சிருங்கேரி சங்கராச்சாரியர் முன்னிலையில் பிரசன்ன வீராஞ்சனேய ஸ்வாமி சிலை நிறுவப்பட்டது.இந்தியாவிலேயே உயரமான ஆஞ்சனேயர் சிலை அதுதான் என்று சொல்லப்பட்டது. சரியாக 6 வருடங்கள் தான் அந்த சாதனை நீடித்தது.1982'ல் இமாச்சல் பிரதேசத்தில் சின்மயானந்த ஸ்வாமிகள் அந்த சாதனையை முறியடித்து விட்டார்.30 அடி உயரத்தில் சின்மயரின் ஆஞ்சனேயர் பெங்களூர் ஆஞ்சனேயரை தோற்கடித்து விட்டார்.அதுவும் இமயமலை உச்சியில் தவக்கோல ஆஞ்சனேயரை ஸ்தாபித்து விட்டார் சின்மயானந்தர். 1987'ல் அந்த சிலை பூர்த்தியடைந்தது.கோலாகலமாக விழா எடுத்து சின்மயர் பக்தர்கள் அதை கொண்டாடினர். டில்லிக்காரர்கள் சும்மா விடுவார்களா?1989ல் டில்லி பாலம் ரோட்டில் இந்தியாவிலேயே உயரமான சிலை நிறுவ திட்டம் போட்டனர்.இதற்கு ஐடியா கொடுத்தவர் ப்ரபுதத் ப்ரம்மச்சாரி எனும் முனிவர்.தில்லியில் அனுமன் சிலை இல்லாததுதான் தில்லி அன்னிய படையெடுப்புக்கு ஆளாக காரணம் என்று அவர் சொன்னதும் பணம் நாலாபக்கமும் இருந்து குவிந்தது. 1300 டன் எடை கொண்ட 45 அடி கருங்கல் ஆஞ்சனேயர் மங்களூரில் இருந்து வரவழைக்கபட்டார்.1990'ல் அது டில்லி பாலம் ரோட்டில் நிறுவப்பட்டது.இனி டில்லி மீது யாரும் படைஎடுக்க முடியாது என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார் ப்ரபுதத் பிரம்மச்சாரி.ஆஞ்சனேயன் காவலிருக்கும் நகரை யாராவது தொட முடியுமா என்ன? அதே வருடம் பிரம்மச்சாரியின் சாதனை முறியடிக்கப்பட்டது,1990'ல் சத்யசாய்பாபாவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு 65 அடியில் கான்கிரீட் ஆஞ்சனேயர் சிலை நிறுவப்பட்டது.சஞ்சீவி மலையை கையில் ஏந்திய ஆஞ்சனேயர் அந்த விழாவுக்காக நிறுவப்பட்டார். ஆனால் கான்கிரிட் சிலை என்பதால் அது உலக சாதனையாகாது என சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கு இந்திய தீவில் உள்ள 85 அடி ஆஞ்சநேயர் சிலை தான் உலகிலேயே உயரமானது என்கிறார்கள்.(பார்க்க படம்) தமிழ்நாடு மட்டும் சளைத்ததா என்ன?உலக சாதனை செய்யவில்லை என்றாலும் விழுப்புரத்தில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் 36 அடி உயரத்தில் இருக்கிறார்.சரி,நம்ம நாமக்கல்,சுசீந்திரம் ஆஞ்சனேயர் சிலை எல்லாம் எவ்வளவு உயரம்?தெரிஞ்சவங்க சொல்லுங்க.

7 comments:

Unknown said...

I am facing problems with blogger.It refuses to publish and comment saying "we are sorry.we are unable to complete your request.So I am publishing this comment by copying and pasting this from my mail.
-----------------------------------


குமரன் (Kumaran) has left a new comment on your post "உலகசாதனை படைத்த ஆஞ்சனேயர்":

செல்வன். இப்படி பெரிய பெரிய இறை உருவங்களையும் பெரிய கோவில்களையும் கட்டுவது மக்களின் ஆன்மிக உயர்வுக்கு வழி வகுக்கும் என்றாலும் என் மனதிற்கு கொஞ்சம் சங்கடமாகத் தான் இருக்கிறது.

அந்தக் காலத்தில் தான் மன்னர்கள் தங்கள் பெயர் நிலைக்க வேண்டும் என்ற நோக்கமும் கொண்டு மக்கள் வறுமையில் வாடினாலும் பெரிய பெரிய கோவில்கள் கட்டினார்கள் என்றால் இந்தக் காலத்திலும் இந்த சன்னியாசிகளும் பிரம்மசாரிகளும் அதனையே செய்து கொண்டிருப்பது கொஞ்சம் மன உறுத்தலாகத் தான் இருக்கிறது. இதில் செலவிட்டப் பணத்தை எத்தனையோ நல்ல வழிகளில் செலவிடலாமே?

Unknown said...

I am facing problems with blogger.It refuses to publish and comment saying "we are sorry.we are unable to complete your request.So I am publishing this comment by copying and pasting this from my mail.
-----------------------------------

பரஞ்சோதி has left a new comment on your post "உலகசாதனை படைத்த ஆஞ்சனேயர்":

நிறைய விசயங்கள் சொல்லியிருக்கீங்க நன்றி.

சாதனைக்கும், நம்பிக்கைக்கு பெயர் பெற்றவராச்சே நம்ம ஆஞ்சநேயர்.

நீங்க சொன்ன அனைத்து இடங்களுக்கும் சென்று பார்க்கும் வாய்ப்பு இறைவன் கொடுப்பார் என்று நம்புகிறேன்.

Unknown said...

Thanks paranjothi,

It is my dream too to visit all big temples.I have been to namakkal,susinthram.Trinidad is near by and I hope to go there soon.

Unknown said...

Dear kumaran,

Am in office and am unable to reply in tamil as of now.

Money invested in temples is believed to make people go in devotional path and thus it is believed that they would do good do others.I think constructing such big temples would bring in people initially to see the marvel.Once they are inside the temple,they will come again and again and in the end will reform.

But as you said temples should not become a place to show the ego of the persons who constructed it.I guess if silpa shastra methods are followed in constructing temples,there would not be opportunities to show egos.

கைப்புள்ள said...

பதிவைப் பத்தி அப்புறமா சொல்லுறேன். இப்ப இதை பப்ளிஷ் பண்ண முடியுதானு பாருங்க.

Unknown said...

thanks kaipulla.
It got published

கைப்புள்ள said...

செல்வன் தங்கள் பிரச்சனை தீர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.