Friday, January 20, 2006

பங்கு வர்த்தகத்தில் செல்வம் சேர்ப்பது எப்படி?- பாகம் 3

பங்கு சந்தை வியாபரத்தை எப்படி சூதாட்டமாக செய்யமுடியும் என்பதை இரண்டாம் பகுதியில் பார்த்தோம்.இனி பங்கு முதலீட்டை வணிகமாக எப்படி செய்ய முடியும் என்பதை பப்பட் எவ்வாரு சொல்கிறார் என்பதை பார்ப்போம். பங்கு சந்தை என்றல்ல, எந்த தொழில் முதலீடு செய்தாலும் நாம் பார்க்க வேண்டியது ரிஸ்க்-ரிடர்ன் டிரேடாப்(risk return tradeoff) என்பதாகும்.அதாவது ரிஸ்க் இல்லாத முதலீடு என ஏதும் கிடையாது.ரிஸ்க் அதிகரிக்க அதிகரிக்க ரிடர்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக வங்கியில் பணம் போட்டால் ரிஸ்க் கிடையாது.ஆனால் லாபம் அதிகம் கிடையாது.(5% அல்லது 6% தான் ரிடர்ன்).குதிரை பந்தயத்தில் ரிஸ்க் அதிகம்,ஆனால் ரிடர்ன் மிக அதிகம்(வந்தால் 10 கோடி,போனால் 10 லட்சம்)..ஆக ரிஸ்க் அதிகரிக்க அதிகரிக்க ரிடர்ன் அதிகரிக்கும்.ரிஸ்க் குறைய குறைய ரிடர்னும் குறையும். பப்பட்டின் முறையில் நாம் முதலில் நமக்கு எவ்வளவு ரிடர்ன் வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.5 அல்லது 6% ரிடர்ன் போதும் என்றால் பங்கு வர்த்தகம் தேவையில்லை.வங்கியில் பணம் போட்டால் போதும்.8 முதல் 10% என்றால் AAA பாண்ட் என்று சொல்லப்பட்வற்றில் பணம் போடலாம். 40,50% வேண்டும் என்றால் கஷ்டம்.அவ்வளவு எதிர்பார்ப்பு வேண்டாம் என்று பப்பட் தெளிவாக சொல்லிவிடுகிறார். பிறகு எவ்வளவு தான் எதிர்பார்க்கலாம்?AAA பாண்டில் பணம் போட்டால் எவ்வளவு கிடைக்குமோ அதை விட இருமடங்கு லாபம் பங்கு சந்தையில் எதிர்பார்ப்பது நியாயம் என்று பப்பட் கூறுகிறார்.ஆக 15 முதல் 20 சதவிகித லாபம் பங்கு சந்தையில் எதிர்பார்ப்பது நியாயம்(15 முதல் 20 என்பது மினிமம் எதிர்பார்க்கும் லாபம் என்பது தெளிவு) அடுத்தது பங்கு சந்தையில் முதலீடு செய்யும் கால அளவு: பங்கு சந்தையில் உங்களிடம் இருக்கும் அத்தனை பணத்தையும் போடுவது புத்திசாலித்தனமல்ல.பங்கு சந்தையில் கொள்ளை லாபம் கிடைக்க வேண்டுமென்றால் அதிக கால அளவு பிடிக்கும்.அதுவரை காத்திருக்க முடியும் என்றால் தான் பப்பட்டின் முறை பயனளிக்கும்.அதிக கால அளவு என்றால் என்ன? பப்பட் சொல்வது குறைந்த பட்சம் 5 வருடம்.அதிக பட்சம் 20 வருடம்.இதற்கு குறைவான கால அளவில் முதலீடு செய்து லாபம் கிடைக்க வேண்டுமென்றால் அது பயன் தராது.குறைந்தது 10 வருடமாவது பொறுக்க வேண்டும்.அப்போது தான் நல்ல லாபம் கிடைக்கும். 3 வருடத்தில் மகள் கல்யாணம்.அப்பொது பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்து இருக்கும் பனத்தை பங்கு சந்தையில் போடுவது புத்திசாலித்தனமல்ல.குறைந்தது 10 வருடமாவது இந்த பணம் திரும்ப நமது கைக்கு வராது என்று நினைத்து முதலீடு செய்யவேண்டும்.அப்படி முதலீடு செய்ய தொகை உங்கள் கையில் இருந்தால் பப்பட்டின் முறை பயனளிக்கும். பப்பட் 1977'ல் 7 கம்பனிகளின் பங்குகளை வாங்கினார்.இன்று வரை அந்த 7 கம்பனிகளின் ஒரு பங்கை கூட அவர் விற்கவில்லை."சாகும் வரை விற்கமாட்டேன்" என்பது தான் பப்பட்டின் பாலிசி.இந்த 7 கம்பனிகளில் அவர் செய்த முதலீடு தான் அவரை இன்று உலகின் இரண்டாவது பெரிய கோடிஸ்வரன் நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.ஒரு பங்கை கூட விற்காமல் டிவிடன்ட்,ஷேர் அப்ப்ரெஷியேஷன் என்று போட்ட பணத்துக்கு மேல் பல மடங்கு அவர் இந்த 30 வருடங்களில் எடுத்துவிட்டார். ஆக பப்பட்டின் முறைப்படி நாம் எதிர்பார்க்ககூடிய நியாயமான குறைந்த பட்ச லாபத்தொகை(conservative estimate) 15 முதல் 20 சதவிகிதம்.(கூட்டு வட்டி)கால அளவு 10 முதல் 20 வருடங்கள். 20 சதவிகித கூட்டு வட்டியில் தற்போது லட்சம் ரூபாய் போட்டால் 10 வருடம் கழித்து 6 லட்சம் கிடைக்க வேண்டும்.20 வருடம் கழித்து 46 லட்சம் கிடைக்க வேண்டும். ரிஸ்க்?மிக மிக குறைவு.. இதை பப்பட்டின் முறை நமக்கு தருமா? (தொடரும்)

8 comments:

ranjit kalidasan said...

மிகவும் பயனுள்ள informative பதிவு செல்வன். அடுத்த பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

நன்றி காளிதாசன்,

தினமும் இப்பதிவின் தொடர்ச்சியை இடுவேன்.

அன்புடன்
செல்வன்

நேர் வழி. said...

Very useful blog. Please continue...
kuppaigalai veesum palarin mathiyil neengal oru uruppadiyana kariyam cheygireergal...

kathiravan

Unknown said...

மிக்க நன்றி கதிரவன்

சந்திரன் said...

ரொம்ப நல்லா எழுதுறிங்க...தொடருங்கள் உங்க "பங்கை"...

Unknown said...

நன்றி தானியேல் அவர்களே,,பங்கு தொடரும்...:-))

Unknown said...

மிக்க நன்றி குணசேகரன்

Unknown said...

அருமையான பதிவுகள்!!!!!

பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips
For earn money in free time visit Mcx Tips, Share Tips,
To earn daily 5000-10000 rupees by our Free Mcx Tips , Free Stock Tips and earn money by investing stock market