Sunday, June 15, 2014

திருமாலை உண்ண முடியுமா?



சிறுவயதில் என் தாத்தா அடிக்கடி ஆன்மிக க்விஸ் வைப்பார். ஒரு நாள் திடீரென "பெருமாளை சாப்பிடுபவர்கள் யார்?" என கேட்டார்.

குழம்பி போய் தெரியாது என்றேன்

"மீனை பிடித்து சாப்பிடுபவர்கள் எல்லாரும் பெருமாளை சாப்பிடுபவர்கள் தான். பெருமாள் மச்சாவதாரம் எடுத்தார் அல்லவா?" என்றார்

நேற்று சத்தியநாராயண பூஜைக்கு வைத்த தேங்காயை உண்கையில் அந்த நினைவு தான் வந்தது. சத்தியநாராயண பூஜையில் தேங்காய் தான் திருமால். அதனால் நானும் திருமாலை நேற்று சாப்பிட்டுட்டேன்.




ஒரு முழுதேங்காயில் உள்ள மூலசத்துக்கள்:

118 கிராம் உறைகொழுப்பு (செத்தார் மருத்துவர்)
36 கிராம் நார்சத்து (ஒரு நாளுக்கு தேவை 30 கிராம் நார்சத்து மட்டுமே)

வெறும் 24 கிராம் சர்க்கரை மட்டுமே. அதனால் சர்க்கரை இருப்பவர்கள் தாராளமாக உண்ணலாம்.

54% இரும்புசத்து
22% வைட்டமின் சி (இம்யூனிட்டிஅயி அதிகரிக்கும்)
26% போலிக் அமிலம் (கர்ப்பிணிக்கும், கருவுக்கும் அத்தியாவசியமானது)
48 மிகி கோலின் (ஃபேட்டி லிவர் வியடகியை தடுக்கும்)
இன்னபிற பி வைட்டமின்கள்
32% மக்னிசியம் (பல்லுக்கும், எலும்புகளுக்கும், இதய அடைப்புக்கும் அருமருந்து)
40% பொட்டாசியம் (பிளட்பிரஷரை தடுக்கும்)
45% பாஸ்பாரம் (எலும்பு தேய்வை தடுக்கும்)
86% காப்பர் (வயதாவதை தடுக்கும். சருமத்தை அழகாக வைத்திருக்கும்)
298% மாங்கனிஸ் (எலும்புகளுக்கு நன்மை)
57% செலனியம் (தய்ராய்டு சுரப்பிக்கு நல்லது)



No comments: