பஞ்சம் பிழைக்க ஒரு கணவனும் மனைவியும் வெளியூருக்கு புறப்பட்டார்கள்.காட்டு வழியே போனார்கள்.கள்வர் பயம் நிரம்பிய காடு."நம்மிடம் காசா இருக்கு?" என தைரியப்படுத்திக் கொண்டு போனார்கள்.கள்வர் கூட்டம் குறுக்கிட்டது.கணவனை அடித்து போட்டுவிட்டு மனைவியை தூக்கிக்கொண்டு போய் விட்டது.
அடிபட்ட கணவன் எழுந்தான்.அழுதான்.காடெங்கும் மனைவியை தேடி பைத்தியகாரன் மாதிரி அலைந்தான்.புலியின் வாயில் சிக்கிய புள்ளிமான் மீண்டா வரும்?அவள் கிடைக்கவில்லை.பித்தனை போல் அழுதுகொண்டு இவன் வீடு திரும்பினான்.
அவன் தாய் தந்தையர் அவனை தேற்றினர்.இன்னொரு மணம் செய்துகொள் என்றனர்.முடியாது என்று சொல்லிவிட்டான்.நடைபிணமாக வாழ்ந்தான்.சில மாதங்கள் ஓடின.
நடுஇரவில் அவன் வீட்டு கதவு தட்டப்பட்டது.கதவை திறந்தால் நிற்பது கள்வரிடமிருந்து தப்பி வந்த அவன் மனைவி.புகை படிந்த ஓவியமாய் எதிரே அவன் மனைவி.அவன் முகத்தில் விழிக்கவே அவளுக்கு தைரியமில்லை.உயிரை விட்டுவிடத்தான் நினைத்தாளாம்.கடைசியாய் அவன் முகத்தை பார்த்து விட்டு சாக விரும்பினாளாம்.
"இங்கே ஏன் வந்தாய்?" என உறுமினர் கணவன் வீட்டார்."மானமிழந்தவளே போய் கிணற்றில் குதித்திருக்க வேண்டியது தானே" என்றர் மாமனார்."அடுத்தவன் தொட்ட வினாடியே கற்புக்கரசிக்கு உயிர் போயிருக்க வேண்டாமா?" என்றார் மாமியார்."இப்போதும் ஒன்றும் கெடவில்லை.சிதை மூட்டுகிறேன்.தீக்குளித்து செத்துத்தொலை" என்றான் கொழுந்தன்.
"உயிரே போனாலும் இவளை விடேன்" என பிடிவாதமாய் நின்றான் கணவன்.அக்கம்பக்கத்தார் எல்லாரும் கூடினர்.என்ன செய்வது என யாருக்கும் தெரியவில்லை.
"மகான் கபீர்தாசரிடம் போகலாம்.அவர் என்ன சொல்கிறாரோ அதை ஏற்கலாம்" என ஒருமித்த முடிவானது.நேராக கபீர் தாசரின் வீட்டுக்கு போனார்கள்.கபீர் தாசர் அங்கில்லை.அவரின் சீடரான கமலதாசர் தான் இருந்தார்.அவரிடம் விஷயத்தை சொல்லி என்ன செய்வது என கேட்டார்கள்.
"அடடே" என்றார் கமலதாசர்."எங்கே அந்தப்பெண்" என்று கேட்டார்.அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்."நான் சொல்லுவது போல் செய்.உன் பாவம் தீர்ந்துவிடும்.நீ சுத்தமானவளாகிவிடுவாய்" என்றார்.
"ராமா,ராமா,ராமா என 3 தடவை சொல்" என்றார்.அந்த பெண் அப்படியே சொன்னாள்.பர்ணசாலையிலிருந்து கங்கை நீரை எடுத்து வரச்சொன்னார் கமலதாசர்.அவள் தலையில் ஊற்றினார்."உன் பாவம் தொலைந்தது.சென்று உன் கணவனுடன் வாழ்க" என்றார்.மகிழ்ச்சியோடு அக்கூட்டத்தினர் வீடு திரும்பினர்.
கபீர்தாசர் வந்ததும் தாம் செய்த நல்ல காரியத்தை பெருமையோடு எடுத்துரைத்தார் கமலதாசர்.கபீர்தாசருக்கு சந்தோஷம் வரும் என நினைத்தார்.ஆனால் கபீரின் முக வாடியது.
"கமலதாசா" என்றார் கபீர்."ஒரு முறை பக்தியோடு "ராமா" என்று சொன்னாலே போதுமே?அப்படி சொன்னவனின் 7 ஜென்ம வினைகளையும் அகற்றி,இம்மை,எழுமை ஆகிய நோய்க்கும் அருமருந்தாகி, பிறப்பினை அறுத்து முக்தியையும், முக்தியை விட இன்பமயமான சச்சிதானந்தத்தையும் அருளவல்லது ராமநாமம்.அதை நீ 3 தரம் சொல்ல சொல்லியிருக்கிறாய்.அதுவும் போக கங்கை நீரை வேறு ஊற்றியிருக்கிறாய்.ராமநாமம் போக்காத பாவத்தையா கங்கை நீர் போக்கும்?ராமநாமம் மீது நீ கொண்ட நம்பிக்கை இவ்வளவுதானா?" என்றார் கபீர் தாசர்.
விக்கித்து நின்றார் கமலதாசர்.
*********
".....மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானேஇம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம் தன்னை, கண்களின் தெரியக் கண்டான்....."
************
Wednesday, March 22, 2006
'இராமன்' என்னும் செம்மை சேர் நாமம்

Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
செல்வன்,
உங்க ராமர் கதை (முந்தியே படிச்சதுதான்) நல்லா இருக்கு. உங்களுக்குக் கோபம் இல்லேன்னா ஒண்ணு சொல்லணும்,
உங்க ஃபோட்டோன்னுட்டு அந்தக் கோழிங்க.....( கோழிங்கதானே?) பாவமா இருக்குப்பா.(-:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே,
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே,
சென்மமும் மரணமும் இன்றி தீருமே,
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்"
நன்றி துளசி அக்கா,
அந்த போட்டோவை பாத்தா அந்த மாதிரி தோணனும்னு தான் அதை வெச்சிருக்கிறேன்.பாவம் கோழிக..அதை சித்த்ரவதை பண்ணி கொல்றோம்.இந்த போட்டோவை பாத்து 1 வேளைக்காவது ஒருத்தராவது அசைவம் சாப்பிடறதை விட்டா ஒரு கோழியாச்சும் உயிர் பிழைக்குமே?
சித்ரவதை அனுபவிக்கும் கோழிகளுக்கு என்னால இப்போதைக்கு செய்ய முடிஞ்சது இதுதான்
welcome jayasri,
சொல்ல சொல்ல திகட்டாத இன்பம் தரும் ராமநாமம் ஆச்சே..அதன் மகிமையை நாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கலாம்
ராம என்ற சொல்லுக்கு நான் எப்பபொழுதோ கேட்ட ஒரு விரிவாக்கம். நாராயணாய என்னும் ஹரி நாமத்தில் ர என்னும் எழுத்தும் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தில் ம் என்ற எழுத்தும் எடுத்து உருவானது. அந்த இரண்டு எழுத்தும் இல்லாமல் அந்த சொற்கள் நா அனாய (அவன் இல்லை) என்றும் ந சிவாய (சிவன் இல்லை) என்றும் பொருள் திரிந்த்துவிடும்.
ம்...ம்...ம்.
அருமையான விளக்கங்கள்.
supersubraவின் விளக்கங்கள் தத்துவார்த்தமாக உள்ளது.
வாழ்க! வளர்க!!
பெரியஞானி ஐயா,
நீங்கள் என் பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.உங்கள் பின்னூட்டத்தையே நீங்கள் எனக்களித்த ஆசியாக எண்ணிக்கொள்கிறேன்.
உங்கள் அன்பு
செல்வன்
supersubra,
உங்கள் விளக்கம் மிகவும் பொருத்தமான விளக்கம் என பெரியஞானி ஐயாவே சொல்லி"வாழ்க வளர்க" என வாழ்த்தியும் விட்டார்.உங்கள் பின்னூட்டத்துக்கு இதை விட சிறந்த பாராட்டு என்னால் தர முடியுமென்று எனக்கு தோன்றவில்லை.
அன்புடன்
செல்வன்
அன்பின் சதயம்,
ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியது வால்மிகி ராமாயணத்தில் இல்லை.பட்டாபிஷேகத்தோடு வால்மிகி தன் ராமாயணத்தை முடிக்கிறார்.சீதையை ராமன் தீக்குளிக்கவும் சொல்லவில்லை.என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லவும் சீதை இனி நான் எதற்கு உயிர் வாழவேண்டும் என்று லட்சுமணனை தீ முட்ட சொல்கிறாள்.ராமன் சீதையை தீக்குளிக்க சொல்லவே இல்லை.
Ashlyn,
Obviously telling Ram naam 3 times is better than telling it once.Because 3>1 :-))) (jokeeee..)
I am not "that intellectual" but I am THE intellectual.
அன்புள்ள செல்வன்
தமிழ்மணத்தில் சேர்வது குறித்து சந்தேகங்கள். என்னுடைய பிளாக் தமிழ்மணம் முகப்பில்,
அண்மையில் சேர்க்கப் பட்ட இடுகை என்று வந்து விட்டது. அவர்கள் சொன்ன java scriptயும்
வெட்டி ஒட்டிவிட்டேன். அதற்குப் பிறகு என்ன என்று புரியவில்லை. உதவ முடியுமா?
ராமா, ராமா, ராமா.
அன்புடன்
சாம்
Hey B's pechal,
What sort of pseudonym is this?ha ha...what brings you to this blogging world?This is not for kids like you.This is for real scholars (like me)
அன்பு சாம்,
1) உங்கள் Blogல் கருவிப்பட்டையை சரியாக நிறுவவில்லை.இதனால் உங்கள் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என தோன்றுகிறது.கருவிப்பட்டையை ஜாக்கிரதையாக சரியான இடத்தில் நிறுவ வேண்டும்.
2) உங்கள் blogல் பதிவுக்கு தலைப்பு இடும் வசதியை நீங்கள் தேர்வு செய்யவில்லை என கருதுகிறேன்.தேடிப்பார்த்து அதையும் செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு சோதனை பதிவு இட்டு அதை இருமுறை republish entire blog செய்யுங்கள்.பிறகு உங்கள் பதிவின் சுட்டியை(url) தமிழ்மணத்தில் இடது கோடி பக்கத்தில் உள்ள "யு.ஆர்.எல். இடுக" என்பதின் கீழே உள்ள இடத்தில் இடுங்கள்.எப்படி தமிழ்மணத்தில் வருகிறது என பார்த்துவிட்டு அடுத்த கட்டமாக என்ன செய்வது என பார்க்கலாம்.
ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை.எளிதில் solve seyyalaam
Post a Comment