ஏ.ஆர்.முருகதாஸ் ஆபிஸில் பாண்டியன் நுழைந்தபோது அவர் ஸ்டோரி டிஸ்கசனில் மும்முரமா இருந்தார்.ஆனால் பாண்டியனை பார்த்ததும் "வாய்யா..பாண்டியா..இத்தனை நாள் கட்சி ஆபிஸ்லேயே சுத்திகிட்டு இருந்தே.இப்ப தான் என் நினைவு வந்ததா?" என அன்புடன் வரவேற்றார்உன் வழி உனக்கு. என் வழி எனக்கு. சரியான வழி, நேரான வழி, ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது.
Thursday, October 27, 2011
எட்டாம் அறிவு
ஏ.ஆர்.முருகதாஸ் ஆபிஸில் பாண்டியன் நுழைந்தபோது அவர் ஸ்டோரி டிஸ்கசனில் மும்முரமா இருந்தார்.ஆனால் பாண்டியனை பார்த்ததும் "வாய்யா..பாண்டியா..இத்தனை நாள் கட்சி ஆபிஸ்லேயே சுத்திகிட்டு இருந்தே.இப்ப தான் என் நினைவு வந்ததா?" என அன்புடன் வரவேற்றார்Tuesday, October 25, 2011
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி புதுவருடம் என்பதால் வடக்கே லக்ஷ்மி சிலை அமோகமாக விற்குமாம் . அன்றுதான் பலரும் புதுகணக்கு எழுத துவங்குவார்கள்)


சிலிகுரி பட்டாசு உற்பத்தி

அகமெதாபாத்தில் அஞ்சுமான் இ இஸ்லாம் பள்ளி மாணவிகள் நடத்திய தீபாவளி கொண்டாட்டம்

தானை தலைவரும் தீபாவளி கொண்டாடுகிறார்.பிண்னணியில் ஜார்ஜ் வாஷிங்டன்.புகைப்படத்தில் இருப்பவர் மேரிலாந்து மாநில கோயில் பூசாரியான நாராயணாச்சாரியார்
http://www.huffingtonpost.com/2011/10/25/diwali-hindu-festival-of-lights-america_n_1031492.html
Sunday, October 23, 2011
ஜப்பானிய பெளத்த மம்மிகள்
Tuesday, October 18, 2011
வீரபாண்டியன் மனைவி
சிறிது தொலைவு சென்றதும் மேலும் மேலே செல்லவே இயலாது எனும் அளவு அடர்ந்த காட்டுபகுதி வந்தது.அருள்மொழிவர்மனின் குதிரை தயங்கி நின்றது.அந்த தயக்கத்தை போக்கும் வகையில் "காப்பாத்துங்க..காப்பாத்துங்க" எனும் குரல் காட்டின் உள்ளே இருந்து ஒலித்தது.
அருள்மொழிவர்மன் குதிரையிலிருந்து இறங்கினான்.குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.குரல் நிற்காமல் ஒலித்தது.கொஞ்ச நேரத்தில் குரல் அடங்கியது.
"இந்த காட்டில் எவண்டி வந்து உன்னை காப்பாத்த போறான்?மரியாதையா நகையை கழட்டு.."
கள்வர்கள்...அருள்மொழிவர்மனின் உடல் சிலிர்த்தது...
இடையில் இருந்த கத்தியை உருவினான்..அவர்கள் அவனை பார்க்கவில்லை.அவளது நகைகளை பறிப்பதில் குறியாக இருந்தனர்.கீழே ஒருவன் குத்தப்பட்டு விழுந்து கிடந்தான்.
அருள்மொழிவர்மன் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்தான்.நன்கு குறிபார்த்து கள்வன் ஒருவன் மேல் எறிந்தான்.கல் அவன் தலையை சரியாக குறிபார்த்து தாக்கியது.அவன் அலறியபடி கீழே விழுந்தான்.
மீதமிருந்த மூன்று கள்வர்களும் அதிர்ச்சியுடன் திரும்பினார்கள்..."எவன்டா அது" என கூவி முடிப்பதற்குள் இன்னொரு கல் ஒருவனின் நெஞ்சை பதம் பார்த்தது.,அவனும் அலறி கீழே விழுந்தான்.
கள்வர்கள் இருவரும் காட்டுக்குள் ஓடி மறைந்தார்கள்.
அருமொழிவர்மன் கீழே இறந்து கிடந்த வாலிபனின் உடல் அருகே சென்றான்.அவன் நாடிதுடிப்பை பரிசோதித்தான்.உயிர் பிரிந்து விட்டிருந்தது.அவன் முகத்தை திருப்பினான்.
"ஆ..அண்ணா..ஆதித்த கரிகாலா..இறந்துவிட்டாயா?"
அதிர்ச்சியில் அருல்மொழி அழுதான்..ஆவேசமாக அந்த பெண்ணை நோக்கி திரும்பினான்.
"யார் நீ?என் அண்ணன் எப்படி இங்கே இறந்துகிடக்கிறார்?மரியாதையாக உண்மையை சொல்கிறாயா இல்லை ..."
"இவர் உங்கள் அண்ணனா?" என்றால் அந்த பெண் அதிர்ச்சியுடன்."அப்படியனால் ஒரு உண்மையை சொல்லியகாவேண்டும்.அதற்கு நான் வருந்தவில்லை.இவரை நான் தான் கொன்றேன்.."
"என்ன?" அருள்மொழி கத்தியை உருவினான்
"நான் நந்தினி.வீரபாண்டியன் மனைவி.என் மேல் இருந்த வெறியில் வீரபாண்டியனை கொன்றார் உங்கள் அண்ணன்.பழிவாங்க அவர் மேல் ஆசை உள்ளது போல் நடித்து இந்த காட்டுக்கு வரவழைத்தேன்.கணவரின் மரணத்துக்கு பழிதீர்த்தேன்.அதன்பின் கள்வர்கள் வந்து என்னை பிடிக்க முயன்றனர்.நீங்கள் வந்து என்னை காப்பாற்றினீர்கள்"
அருள்மொழி கத்தியை கீழே போட்டான்.அவன் உடல் நடுங்கியது
"கொலை..கொலைக்கு கொலை,.பழி,பழிக்கு பழி..இந்த உணர்வு அழியவேண்டும்.அன்பு மலரவேண்டும்.." நாகையில் அவன் சந்தித்த புத்த பிட்சுகள் சொன்ன வாசகம் அவன் மனதில் எதிரொலித்தது.
"உன்னை மன்னித்துவிட்டேன்" என்றான் அருள்மொழி. "நீ போகலாம்.."
நந்தினி நம்ப இயலாமல் திகைத்து நின்றாள்.
அருள்மொழியின் மனதில் அவள் மேல் மேலும் இரக்க உணர்வு தோன்றியது.கணவனை இழந்த பெண்.இனி அவள் வாழ்க்கையை நடத்துவது எஞ்ஞனம்?
தன் கழுத்தில் இருந்த நகையையும்,கையில் இருந்த நகைகளையும் கழட்டினான்.அவளிடம் அளித்தான்.
"பெற்றுகொள்.நடந்ததை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை துவக்கு"
"பணம் ஒரு விதவைக்கு சமூகத்தில் எந்த பலனையும் அளிக்காது" என்றாள் நந்தினி."அந்த சங்கிலியை நீங்களே என் கழுத்தில் அணிவியுங்கள்.."
------
இருவரும் குதிரையில் வீடு திரும்பினார்கள்.
கார்டனில் உட்கார்ந்து தினமலர் படித்து கொண்டிருந்த அருள்மொழியின் அப்பா நடராஜன் திகைத்தார்
"என்னடா..ஹார்ஸ் டிரெய்னிங் போறேன்னு சொல்லிட்டு இப்ப யாரையோ குதிரைல கூட்டிட்டு வர்ரே?" என்றார்
"இது உங்க வருங்கால மருமகள் நந்தினி"
"என்னது?"
"அதை அப்புறம் பேசிக்கலாம்.சித்தப்பா மகன் ஆதித்த கரிகாலன் செத்துபோயிட்டான்.காட்டில் திருடர்கள் குத்திகொன்றுவிட்டார்கள்.முதல்ல போலிசுக்கு போன் செய்யுங்க"
"என்னடா சொல்றே?என் தம்பி பொன்னியின் செல்வன் படிச்சுட்டு மகனுக்கு ஆதித்தகரிகாலன்னு பேர் வைச்சப்பவே நான் சொன்னேன்.வேண்டாம்னு...கேட்டானா?" புலம்பியபடி அப்பா போனை நோக்கி ஓடினார்
வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் நந்தினி.
Thursday, October 06, 2011
லார்ட் ஆஃப் வார் - திரை விமர்சனம்
ஆயுத வியாபாரியின் கதையை சொல்லும் படம்.
ஆபிரிக்காவில்,லெபனானில்,ஆப்கானிஸ்தானில் போராடும் "விடுதலை படைகள்" அவர்களை ஒழிக்க முயலும் அரசுகள் அனைத்துக்கும் ஆயுத சப்ளை செய்கிறார் யூரி ஆர்லொவ் (நிக்கலஸ் கேஜ்).கூட உதவிக்கு அவரது தம்பி.ஆயுதம் வாங்கும் குழுக்கள் அவருக்கு பிளட் டயமண்ட் எனப்படும் ரத்த வைரங்களை அளிக்கின்றன.சில சமயம் கொக்கெயினை அளிக்கின்றன.காரணம் அந்த நாடுகளில் பணம் இல்லை.
ஆயுத விற்பனை மூலம் கணக்குவழக்கற்ற பணத்தை சம்பாதிக்கிறார் யூரி. நடிகை ஒருவரை மணக்கிறார்.திரையுலகில் வெற்றி காணமுடியாத நடிகை யூரியை மணந்து இல்லத்தரசியாக இருந்து மனநிறைவு காண்கிறார். அவர் நடித்து சம்பாதிக்க ஆசைப்பட்டதை விட பணம்,வைரம்,உடைகள்,வீடு, என அனைத்தும் யூரியிடம் இருக்கிறது. அதனால் யூரியின் தொழிலை பற்றி அவர் அதிகம் கேள்வி கேட்பதில்லை. யூரி ஆயுதம் விற்கபோன இடங்களில் அப்படி, இப்படி இருந்தாலும் மனைவிக்கு படுக்கையில் எந்த குறையும் வைப்பதில்லை.மனைவிக்கு பகிரங்கமாக தெரியும் வகையில் தவறும் செய்வதில்லை.அதனால் அவரது மனைவி இந்த வாழ்க்கைக்கு தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்.அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்.
யூரியை துரத்தும் இன்டெர்போல் ஏஜென்ட் வாலைன்டைனை யூரி அனாசயமாக சமாளிக்கிறார்.விமானம் நிறைய ஆயுதம் ஏந்திபோகும் யூரியை நடுவானில் ஜெட் விமானம் மூலம் மறிக்கிறார் ஏஜென்ட் வாலன்டைன்.விமானத்தை ஆபிரிக்க சாலை ஒன்றில் இறக்கும் யூரி இன்டெர்போல் வருவதற்குள் அனைத்து ஆயுதங்களையும் அங்கிருந்த கிராம மக்களுக்கு கொடுத்து விடுகிறார்.
இறுதியில் வாலன்டைன் சென்டிமென்ட் அஸ்திரத்தை கையில் எடுக்கிறார்.யூரியின் மனைவியிடம் ஆயுதம் கடத்தும் ரகசியத்தை போட்டு உடைக்கிறார்.கணவன் மேல் உள்ல விசுவாசத்தால் வாலன்டைனுக்கு உதவ மறுக்கும் நடிகை கணவனை தொழிலை நிறுத்த சொல்லி நிர்ப்பந்திக்கிரார்.யூரியும் ஒப்புகொண்டு நேர்மையான தொழிலுக்கு செல்கிறார்.
ஆனால் பழைய குருடி கதவை திறடி கதையாக மீண்டும் தொழிலில் இறங்குகிறார்.அவரது மனைவி அவரை பின் தொடர்ந்து போய் அவர் ஆயுதம் பதுக்கி வைத்திருக்கும் கிடங்குகளை கண்டுபிடிக்கிறார்.அவரது மனைவியை பின் தொடர்ந்த இன்டெர்போல் ஆயுத கிடங்கை பிடித்துவிடுகிறது.
யூரி கைது செய்யபடுகிறார்.
"உன் ஆயுள் முழுவதும் இனி சிறையில் தான் கழிக்கவேண்டும்" என்கிறார் ஏஜென்ட் வாலன்டைன்
"உனக்கு புரியவில்லை" என்கிறார் யூரி."நான் ஆயுதம் விற்பது உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களுக்கு.உலகின் பல நாடுகளின் ஜனாதிபதிகளை நான் பெயர் சொல்லி அழைப்பது வழக்கம்.என்னை ஒரே ஒரு செகண்டு கூட உன்னால் ஜெயிலில் வைக்க முடியாது"
சொன்னதுபோலவே ஒரு செகண்டு கூட ஜெயிலில் இருக்காமல் வெளியே வருகிறார்.அவரது மனைவியும்,குழந்தையும் அவரை விட்டு பிரிகிறார்கள்.யூரி தன் தொழிலை தொடர்கிறார்
(கதையில் வரும் சம்பவங்கள் உண்மை என்ற டைட்டிலுடன் படம் முடிவடைகிறது)
படம் முழுக்க நம்மை கவர்வது நிக்கலஸ் கேஜின் ஆர்ப்பாட்டமில்லாத,மென்மையான நடிப்பு.
இது முழுக்க நெகடிவான கதாபத்திரம்.ஆனால் அந்த கதாபாத்திரத்தின் கண்ணோட்டத்தையும் படம் நம் முன் நிறுத்துகிறது.நிக்கலஸ் கேஜின் கண்முன் அவர் அளித்த ஆயுதங்களை வைத்து இனபடுகொலை நடக்கிறது.ஆனால் அது தன் தவறு இல்லை என நிக்கலஸ் கேஜ் நம்புகிறார்.அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியதால் ஆயுதம் வேண்டாம் என சொல்லும் வாடிக்கையாளரை நிக்கலஸ் கேஜ் திட்டுகிறார்."என்ன அமைதி ஒப்பந்தமா?யுத்தம் செய்யுங்கப்பா...நான் தான் ஆயுதம் சப்ளை செய்யறேன்னு சொல்றேனில்ல?"
இறுதியில் அவர் வாலன்டைனுக்கு தன் தரப்பு நியாயத்தை விரிவாக எடுத்துரைக்கிறார்.."உலகிலேயே மிக பெரிய ஆயுத விற்பனையாளர் அமெரிக்க ஜனாதிபதிதான்....உலகின் டாப் ஐந்து ஆயுத விற்பனையாளர்கள் அமெரிக்கா,ரஷ்யா,சீனா,இங்கிலாந்து,பிரான்ஸ்..இவை ஐந்தும் ஐநா சபையின் நிரந்தர உறுப்பினர்கள்.நீ என்னை பிடிக்க வருகிறாய்..நான் செய்வது கடத்தல் இல்லை.சேவை.மக்களுக்கு தம்மை பாதுகாத்துகொள்ள ஆயுதம் தேவை.அதை தான் நான் தருகிறேன்"
Sunday, October 02, 2011
இந்தொனேசியாவை கலக்கிவரும் கேகே தீரஜ்Fwd: வன்டர்புல் வர்ல்ட்
இந்தொனேசியா இஸ்லாமிய நாடு என்பதால் திரைப்படங்களில் கடும் தணிக்கை முறை உண்டு. ஆனாலும் அரபுநாடுகள் மாதிரி கடும் தணிக்கையும் இல்லை.ஓரளவு லிபரலாக இருப்பார்கள்.
இந்த சூழலில் கேகே தீரஜ் எனும் இந்தோனேசிய இயக்குனர் எடுக்கும் படங்கள் அங்கே கடும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.சென்சார் விதிகளுகுட்பட்டு என்னென்ன கில்பான்ஸ் காட்சிகளை வைக்க முடியுமோ அவற்றை படங்களில் வைப்பவர் தீரஜ்.அந்த படங்களில் நடிக்க அமெரிக்க போர்னோகிராபி படங்களில் நடிகைகளை நடிக்கும் கூட்டிவருவார். அவர்களுக்கு சட்டபடி குறைந்தபட்சம் உடை என்னவோ அதை மாட்டிவிடுவார்.படங்களையும் நைட்கிளப், நீச்சல் குளம் மாதிரி இடங்களில் நடப்பதாக எடுப்பார்.போஸ்டர்களில் நம்மூரில் இருப்பதுபோல நாயகிகளின் கவர்ச்சி படங்களை பெரிதாக அடித்து கலக்குவார்.

அவ்வளவுதான் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும்.உடனே இஸ்லாமிய அமைப்பு ஏதேனும் தீரஜை கடுமையாக கண்டித்து படத்தை தடை செய்ய கோரிக்கை விடுக்கும்.உடனே இன்னும் சில நாட்களில் படத்துக்கு தடை வந்துவிடும் என நினைத்து அரங்குகளில் கூட்டம் அலைமோதும்.
தீரஜின் ஹிட்டான "கன்னிபேயின் முணகல்(moaning of a virgin ghost)" எனும் படத்திலிருந்து

