நம்மிடம் அதிக தேர்வுகள் இல்லை.வெறும் மணல் லாரிகள் ஓடும் ஆற்றில் அணையை கட்டி வைத்து காத்திருப்பது ஒரு வகை.பெட்ரோலை எரித்து மின்சாரம் எடுப்பது இன்னொரு வகை(செலவு அதிகமான முறை).நிலக்கரியை எரித்து மின்சாரம் எடுக்கலாம்.இதிலும் அனல் மின்நிலையத்தை கட்டி வைத்து திறப்பு விழா நடத்துவது என்பது வேறு.அதில் நிலக்கரியை கொண்டுவந்து சேர்த்து எரித்து மின்சாரம் எடுப்பது என்பது வேறு,.முன்னது எளிது.பின்னது சற்று கடினம்.நம் நாட்டில் பல்வேறு அனல்மின் நிலையங்கள் நிலக்கரி பற்றாகுறையால் இயங்காமல் நின்றுள்ளன.
இந்திய நிலக்கரியின் தரம் குறைவு என்பதால் நாம் நிலக்கரியை இறக்குமதி செய்து கொண்டுள்ளோம்.சென்ற வருடம் மட்டும் நாம் இறக்குமதி செய்த நிலகரியின் எண்ணிக்கை 11.4 கோடி டன்கள்.இந்த வருடம் மட்டும் இது இன்னும் ஐந்து மடங்கு..அதாவது 55 கோடி டன்னாக உயரும் என எதிர்பார்க்கபடுகிறது.இதில் ஏற்படும் போக்குவரத்து சிக்கல்,அன்னிய நாடுகள் ஏற்படுத்தும் கோட்டா பிரச்சனைகள்,சுற்றுபுற சூழல் அனுமதியை பெற ஏற்படும் இடைஞ்சல்கள் என பல இடையூறுகள் நம் நிலக்கரி சப்ளையை பாதிக்கின்றன.சொல்லபோனால் இத்தனை கோடி டன்கள் நிலக்கரியை கொண்டு செல்ல ரயில்வே வாகன்கள் கூட நம்மிடம் இல்லை.
நிலக்கரி தட்டுபாட்டால், சப்ளை செயின் இடையூறுகளால் பல நிலக்கரி நிலையங்கள் சுத்தமாக செயலிழந்து நிற்கின்றன.2017ம் ஆண்டு மட்டும் நம் நிலக்க்ரி தட்டுபாடு 20 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.இந்திய மின் தட்டுபாடு பிரச்சனை பூதாகரமானது.இப்படியே அணுமின் நிலையங்களுக்கு முட்டுகட்டை போட்டுகொண்டு போனால் ஒட்டுமொத்த தொழில்துறையும் செயலிழந்து, மின்சாரம் இன்றி மக்கள் கலவரத்தில் இறங்கி பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாடு செல்லும்.
மேலே சொன்னதெல்லாம் சாத்தியமான வகைகள்.அசாத்தியமான கனவு திட்டங்களான சூரிய சக்தி மின்சாரம்,,காற்றாலை மின்சாரம் போன்றவற்றுக்குள் நாம் போகவே வேண்டியதில்லை.உங்கள் பெட்ரோல் காரை தூக்கி போட்டுவிட்டு நீங்கள் ஏன் சூரிய சக்தியால் அல்லது பேட்டரியால் இயங்கும் காரை தற்போது பயன்படுத்தவில்லையோ அதே காரணத்தால் தான் இந்த டெக்னாலஜிகளும் இன்னும் பரவவில்லை.இவை எல்லாம் பசுமை இயக்க கோமாளிகளின் பகல் கனவு திட்டங்கள்.இன்னும் ஐம்பது அறுபது ஆண்டுகளில் இவை நடைமுறைக்கு வரலாம்.ஆனால் இன்று இதனால் வரவை விட செலவு தான் அதிகம்.
நம்பகமான,சிக்கலின்றி கிடைக்க கூடிய ஒரே வகை மின்சாரம் அணு மின்சாரம் மட்டுமே. ஆயிரம் லோடு ரயில்கள் மூலம் பெறப்படும் நிலக்கரி அளவு சமமான மின்சாரத்தை ஒரு ஆட்டோ லோடு அளவு எரிபொருள் மூலம் அணு உலை உற்பத்தி செய்யும் என படித்த நினைவு.
அதாவது சுருக்கமாக சொன்னால் அணு மின்சாரம்வேண்டாம் என சொல்லிவிட்டு மின் தட்டுபாட்டை வேறு எந்த வகையிலும் நம்மால் சமாளிக்க இயலாது என்பதே.எனக்கு அணு மின்சாரம் வேண்டாம், வேறு மின்சாரம் வேண்டும் என சொல்வது நடைமுறையில் எந்த பலனையும் அளிக்காது.இந்தியா மாதிரி வளர்ச்சியடையும் நாட்டுக்கு அணு உலையை அன்றி வேறு வழி இல்லை.இப்போது அரசு கட்டிவரும் மின் நிலையங்கள் எல்லாம் யானை பசிக்கு சோளபொறி கதைதான்.மின் நிலையத்தை கட்டலாம்..ஆனால் நிலக்கரி இன்றி உற்பத்தி நடக்காது.அணு மின்சாரம் வேண்டாம் என்றால் தினம் நாலு மணிநேரமாக இருக்கும் மின் தடை ஏழு,எட்டு மணிநேரமாக உயரும்.அம்மா, ஐயா,கேப்டன் என நீங்கள் சின்னத்தை மாற்றி ஓட்டு குத்தலாமே ஒழிய அதனால் எந்த பலனும் இருக்கபோவதில்லை.
அதனால் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வேண்டுமா,வேண்டாமா என்பதுதான் நம் முன் உள்ல கேள்வியே ஒழிய அணு உலை வேண்டுமா,வேண்டாம என்பதல்ல.அணு உலை வேண்டாம் என்ம்பவர்கள் அணு உலை போனால் மின்சாரத்துக்கு என்ன மாற்று என உருப்படியாக ஒரே ஒரு திட்டத்தை மின்மொழிந்துள்ளனரா?சாணியில் மின்சாரம் எடுப்பேன்,சூரியசக்தியில் எடுப்பேன் என காமடி தான் செய்துகொண்டுள்லார்கள்.
கலாட்டா செய்து அணு உலையை மூடுவது எளிது.ஓட்டுக்கு பயந்த அரசியல்வாதிகள் அணு மின் நிலயத்தை மூடிவிட்டு ஜாலியாக போய்விடுவார்கள்.அதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.அது முழுக்க நம் வரிப்பணம்.நஷ்டம் நமக்குதான்.
கூடங்குளத்தை பசுமையாக வைத்துகொண்டு மின்சாரம் இன்றி தொழிர்சாலைகள் வேறு நாடுகளும்மும்,மாநிலங்களுக்கும் ஓடியபின்னர் அங்கே நாம் பஞ்சம் பிழைக்க போவதில் எந்த பலனும் இல்லை.ஒன்று அணு உலை நம் ஊருக்கு வரும்.அல்லது அது இருக்கும் நாட்டுக்கு வேலைகள் குடிபெயரும்.நாம் அப்புறம் அங்கே குடியேறவேண்டும்.
0 comments:
Post a Comment