Thursday, August 19, 2010

448.ரஜினியை மேதாவிகள் எதிர்க்க காரணம் என்ன?

ரஜினியையும், ரஜினி ரசிகர்களையும் போல தமிழகத்தின் மேதாவி வர்க்கத்தால் எள்ளி நகையாடப்பட்டவர்கள் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.தமிழக மேதாவி வர்க்கம் கம்யூனிச சார்பு கொண்டது என்பதால் இயல்பாகவே அதற்கு வெற்றியடைந்த மனிதர்களை பிடிக்காது.தனிமனிதர்கள் பணம் ஈட்டுவது, அதுவும் நிறைய பணம் ஈட்டுவது பிடிக்காது..சிவாஜி த பாஸின் வசூல் ரிகார்டையும், ஏரியா விற்பனை விகிதங்களையும் கண்டு இந்த இவர்கள் கடும் கோபம் எரிவார்கள்."ஐயோ,இத்தனை கோடி மக்கள் பணத்தை தயாரிப்பாளர்கள் திருடுகிறார்களே" என அவர்கள் உள்மனதில் ஒரு அங்கலாய்ப்பு.

மற்ற நடிகர்களை விட இவர்களுக்கு ரஜினி மேல் கோபம் இருக்க காரணமே ரஜினி மற்றவர்களை விட அதிகம் வெற்றி அடைவதுதான்.ரஜினி படங்கள் இவர்களை பொறுத்தவரை குப்பை.அதில் என்ன இருக்கு என இந்த நாசமாய் போன சனம் விழுந்து, விழுந்து பார்த்து தொலைக்கிறது, ஐநூறு நாட்களுக்கு படம் ஓடுகிறது என்பது மக்களிடமிருந்து அன்னியப்பட்ட இவர்களுக்கு புரிவதே இல்லை....

இந்த மேதாவி வர்க்கத்துக்கு தமிழக மக்கள் நியாண்டர்தால்கள், திருத்தி மாற்றபடவேண்டிய ஜென்மங்கள், காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம் உண்டு.ரஜினி என்ற காட்டுமிராண்டியின் படம் இந்த காட்டுமிராண்டி மக்கள் கூட்டத்தின் மத்தியில் அடையும் வெற்றியும், அதன் விளைவாக வரும் கோடிகணகான பணமும் ரஜினி, ஏ.வி.எம் போன்ற சில பூர்ஷ்வாக்களின் கல்லாவை மட்டுமே நிரப்ப பயன்படுகிறது என்ற கோபம் இவர்களுக்கு உண்டு.

ரஜினியின் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை "கெடுக்கிறது" என இன்னொரு கோபமும் இவர்களுக்கு உண்டு.எம்.ஜி.ஆர், சிவாஜி ஆதிக்கம் ஒழிந்து உதிரிபூக்கள் மாதிரி நல்ல படங்கள் வந்த சூழலில் முரட்டுகாளை வந்து தமிழ் சினிமாவின் டிரெண்டையே புரட்டிபோட்டது என வருத்தப்படுவார்கள்..மக்கள் விரும்பும் என்டெர்டெயின்மென்ட்டை கொடுப்பது மதுவை ஊற்றிகொடுப்பதுக்கு சமம்தானே?இந்த நியாண்டர்தால்களுக்கு பிடித்த மாதிரி சினிமாவை தயாரிப்பாளர்கள் எப்படி எடுக்கலாம்?மேதாவிகளுக்கு பிடித்த மெஸேஜ் சினிமாக்களை தானே எடுக்கவேண்டும்? கேரள திரைபடதுறையை பாருங்கள்..அங்கிருந்து எத்தனை "நல்ல படங்கள்" வருகின்றன?அந்த மாதிரி தமிழில் வராமல் இருக்க காரணம் ரஜினிதானே?இரானிய படங்களை பாருங்கள்..இந்த மாதிரி நல்லபடம் தமிழில் வராமல் இருக்க காரணம் ரஜினிதானே?

இப்படி மக்களை மடையர்களாக்கி, அவர்களின் ரசனையை குட்டிசுவராக்கி திரைப்படத்தை மக்கள் நலனுக்கு (அதாவது பிரச்சார பீரங்கியாக) பயன்படுத்தாமல் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படுத்தும் ரஜினி மேல் தமிழக மக்களை நல்வழிப்படுத்தி ரட்சிக்க வந்த அறிவுஜீவி வர்க்கத்துக்கு கோபம் இருப்பது இயற்கைதானே?

அதுபோக ரஜினி ஒரு இன்டெலெக்சுவலும் கிடையாது....அவரது வாழ்க்கையில், பேச்சில், செயலில் எந்த முற்போக்கும் இல்லை.தமிழக நியாண்டர்தால்களை போல அவர் தானுண்டு தன் பிழைப்பு உண்டு என இருக்கிறாரே ஒழிய கியூபா, வியட்னாம்,இராக், தண்டகாரண்யம் மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் எதுவும் கொடுக்க காணோம், கடைசிக்கு "முற்போக்கு"வாதம் கூட அவர் படங்களில் பேசப்படுவதில்லை. கமலை போல் ஆஸ்கார் வாங்கவேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு இல்லை, சுருக்கமாக சொன்னால் ரஜினி ஒரு சுயநலவாதி,பிழைப்புவாதி...நுகர்வு கலாசாரத்தை ஊக்குவிக்கும் பிற்போக்குவாதி

இப்படி நியாண்டர்தால்கள் மத்தியில் நியாண்டர்தாலாக வழும் ரஜினியை மேதாவிகளுக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமே இல்லை.பிடித்தால் தான் ஆச்சரியம்.

Friday, August 06, 2010

446.சந்திப்பு

விடுமுறையில் சையன்ஸ் சானல் பார்த்து பொழுதை போக்கி கொண்டிருக்கிறேன்.இன்று நாலைந்து மணிநேரம் சயன்ஸ் சானலில் பிறகிரகங்களை பற்றிய டாக்குமெண்டரிகளை பார்த்தேன்.

யூரபா என்பது ஜூபிடர் கிரகத்தின் நிலவு.நிலவின் சைசை விட சற்று பெரிய இந்த கிரகத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள மாபெரும் அற்புதம் ஒன்று காணப்படுகிறது...அதான் தண்ணீர்.தண்ணீர் என்றால் ஏதோ ஒரு டம்ளர், இரண்டு டம்ளர் அளவு தன்ணீர் அல்ல...சமுத்திரம்..யுரபாவில் மிகபெரும் சமுத்திரம் ஒன்று இப்போதும் திரவ வடிவில் காணப்படுகிறது.

இந்த செய்தி அறிவியல் உலகில் மாபெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. யுரபாவில் மைனஸ் 300 டிகிரி குளிர் நிலவுவதால் அங்கே திரவநிலையில் தண்ணீர் இருக்கும் என கற்பனை கூட செய்யாமல் இருந்தார்கள் விஞ்ஞானிகள்.ஆனால் பேரதிசயமாக யூரபாவில் - 300 டிகிரி திரவநிலையில் நீர் உள்ளது.காரணம் ஜியோதெர்மல் எனெர்ஜி...

குழம்பவேண்டாம்..பூமியில் அலைகள் உருவாக நிலவின் புவியீர்ப்பு விசையே காரணம் என அறிவோம்.பூமியை விட பலமடங்கு சிறிய நிலவு பூமியை கவர்ந்து இழுக்க முயன்று பூமியில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது.பூமியை விட பல மடங்கு பெரிய ஜூபிடர் கிரகம் நிலவை ஒத்த யுரபாவில் எத்தனை குழப்பத்தை ஏற்படுத்தும் என எண்ணிபாருங்கள்...ஜூபிடரின் புவியீர்ப்பு விசை யுரபாவை அசைத்து குலுக்குகிறது.யூரபா கிரகமே இதனால் அடியாழம் வரை அசிக்கபடுகிறது.இப்படி ஜூபிடரின் புவியீர்ப்பு விசையின் யுரபாவின் புவியீர்ப்பு விசையும் பொருதும்போது ஏகப்பட்ட வெப்பம் யுரபாவின் அடியாழத்தில் உருவாகிறது.அந்த வெப்பம் யுரபாவின் சமுத்திரத்தை சூடாக்கி திரவநிலையில் வைத்திருக்கிறது.ஆனால் மேற்புறத்தில் - 300 டிகிரி குளிர் நிலவுவதால் சமுத்திரத்தின் மேற்புறத்தில் பனிகட்டி உறைந்து காணப்படுகிறது.

ஆக யுரபாவில் வெப்பம் உண்டு, சமுத்திரம் உண்டு....உயிரை உருவாக்கும் மாலிக்யூக்லளை கொண்டுவந்து சேர்க்கும் விண்கல் தாக்குதலும் உண்டு...

பூமியில் உருவான முதல் உயிரினம் செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தது என்றொரு தியரி உண்டு.ஆம்..நாலரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் சமுத்திரம் இருந்தது,ஆறுகள் ஓடின..அப்போது செவ்வாயை தாக்கிய விண்கல் ஒன்று அதனுள் பேரதிர்வை ஏற்படுத்தியதாகவும், அப்போது செவ்வாயில் இருந்த கற்கள் விண்வெளியில் தூக்கி எறியபட்டதாகவும் அதில் ஒரு கல் பூமியில் வந்து விழுந்ததாகவும், அந்த கல்லில் ஒரு சிறு உயிரி ஒட்டிகொண்டு வந்து பூமியில் பல்கிபெருகியதாகவும் ஒரு தியரி உண்டு..இது உண்மை எனில் நாம் அனைவரும் ஏலியன்களே.

யுரபாவிலும் இதேபோல் விண்கள் தாக்குதல்கள் உண்டு என்பதால் யுரபாவின் சமுத்திரத்தில் ஏலியன் உயிர்கள் இருக்கலாம் என்ற கருத்தாக்கம் விஞ்ஞான உலகில் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் சூரிய ஒளிபடாமல் பனிகட்டிகள் சமுத்திரத்தை முழுவதும் மூடியிருப்பதால் உயிரினம் அங்கே வாழும் சூழல் இருக்காது என விஞ்ஞானிகள் நம்பினர்.அன்ரைய காலகட்டத்தில் சூரிய ஒளி இல்லாமல் உயிர்கள் வாழ இயலாது என கருதப்பட்டது..ஆனால் பூமியில் பசிபிக் சமுத்திரத்தின் அடியாழத்தை ஆராயந்த பயாலஜிஸ்டுகள் அங்கே சூரிய ஒளியே இல்லாத பிரதேசத்திலும் ஜியோதெர்மல் எனெர்ஜி மூலம் உயிர்கள் வாழ்வதை கண்டுபிடித்தனர்...இது விண்வெளி ஆய்விலும் பரபரப்பை கிளப்பியது.

சூரிய ஒளியே படாமல்,திரவநிலை சமுத்திரத்தில் பூமியில் ஜியோதெர்மல் எனெர்ஜி மூலம் உயிர்கள் பல்கிபெருக முடியும் என்றால் யுரோபாவிலும் பனிகட்டிக்கு அடியே திரவநிலை சமுத்திரத்தில் ஏன் உயிர்கள் வசிக்க கூடாது? உயிரினம் உருவாக,வாழ,பல்கிபெருக தேவைப்படும் அனைத்து சூழல்களும் யுரபாவில் நிலவுகின்ரன..உயிரினம் என்றால் எதேனும் கடல்கன்னி,திமிங்கிலம், நாலு கால் மனிதன் என கற்பனை செய்யவேண்டாம்...ஒரே ஒரு மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ்,பாசி,செடி, என எதுவாக இருந்தாலும் அது உயிர்தான்..பூமிக்கு வெளியே இன்னொரு கிரகத்தில் ஒரே ஒரு சின்ன உயிர் இருப்பது ஊர்ஜிதமானாலும் அது நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்ததற்க்கொப்பான மாபெரும் அறிவியல் சாதனையாக அமையும்.

இரு இடங்களில் உயிர்கள் இருந்தால் பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் மலிந்திருக்கும் என நிருபணமாகும்....பூமியில் உயிர் தோன்றியது விபத்து அல்ல, அந்த சூழல் நிலவும் எந்த கிரகத்திலும் உயிர்கள் உண்டு என நிருபணமானால் அப்புரம் பிரபஞ்சம் முழுவதும் உயிர்கள் இருக்கும் என ஆகும்...பிரபஞ்சத்தில் கணக்குவழக்கற்ற எண்ணிக்கையில் காலக்சிகள் உள்ளன.அதாவது பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறு காலக்சிகள் பிரபஞ்சத்தில் உண்டு.ஒவ்வொரு காலக்சியிலும் ஆயிரம் கோடி நட்சத்திரங்கள்....ஆக ஏலியன் உயிரினங்கள் ஏகப்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் வாய்ப்புகள் உண்டு..ஆனால் இதை நிருபிக்க நமக்கு தேவைபடுவது ஒரே ஒரு ஏலியன் உயிரினம்..

அது யூரபாவில் உண்டா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது??

யுரபாவுக்கு ஒரு ராக்கெட்டை அனுப்புவது..அது யுரபாவின் மேற்பரப்பிள் இறங்கி அங்கே ஒரு சுரங்கம் வெட்டும்.அதனுள் நீரில் நீந்தகூடிய ரோபாட் ஒன்று காமிராவுடன் இறங்கி நீந்தியபடி விடியோ எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கும்...அந்த விடியோவில் ஏலியன் உயிர் ஒன்றே ஒன்று தட்டுபட்டாலும் அது அறிவியலில் வரலாற்று திருப்புமுனையாக அமையும்.

ஆகா அருமையான திட்டமா இருக்கு.யுரபாவுக்கு ராக்கெட் எப்ப கிளம்புகிரது என கேட்கிறீர்களா?

இப்போதைக்கு கிளம்புவதாக இல்லை..காரணம் இப்படி எளிதான திட்டம் கையில் இருந்தாலும் அதை நிறைவேற்றும் டெக்னாலஜி நம்மிடம் இன்னும் இல்லை.முப்பது கோடி மைலுக்கு அப்பால் உள்ள கிரகத்துக்கு ராக்கட்டை அனுப்பி, அங்கே மைனஸ் 300 டிகிரி குளிரில் பாரையாக உறைந்து கிடக்கும் பனியில் பல மைல் ஆழத்துக்கு குழிதோண்டி, ரோபாட்டை கடலுள் இறக்கி,,,புகைப்படம் எடுத்து....

இதை செய்யும் டெக்னாலஜி நம்மிடம் இன்னும் இல்லை..

ஆனால் இன்னும் 20, 30 ஆண்டுகளில் அந்த டெக்னாலஜி நம்மிடம் கிடைக்கலாம்.இப்போதுதான் அண்டார்டிகா பனியை துளைத்து சுரங்கம் தோண்டி உள்லே இருக்கும் சமுத்திரத்தை ஆராயும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்...அதை முப்பது கோடி மைலுக்கு அப்பால் உள்ள கிரகத்தில் செய்தால் இந்த திட்டம் வெற்றி அடையும்...

பில்லியன்கணகான ஆண்டுகளாக சமுத்திரத்தில் உறைபனிக்கு அடியே எந்த மாதிரியான உயிரினங்கள் யுரபாவில் உருவாகியிருக்க கூடும்?முதன்முதலில் ஒரு காமிரா ஏந்திய ரோபாட்டை சந்திப்பது அவற்றுக்கு என்ன வகையான உனர்வுகளை அளிக்க கூடும்?பிரபஞ்ச வரலாற்றை மாற்றியமைக்கும் இத்தகைய மகத்தானதொரு சந்திப்பு நிகழுமா?

நம்புவோம்...நம்பிக்கை தானே வாழ்க்கை?