உன் வழி உனக்கு. என் வழி எனக்கு. சரியான வழி, நேரான வழி, ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது.
Friday, June 25, 2010
439.என் கொள்கைக்கு விரோதமான படங்கள்
அந்த 7 நாட்கள்: "உன் காதலி என் மனைவி ஆகலாம்.ஆனால் என் மனைவி உன் காதலி ஆக முடியாது" என்ற வசனத்தை கேட்டாலே நான் கடுப்பாவது வழக்கம்.இந்த சினிமாவை நான் எடுத்திருந்தால் படம் இன்டெர்வெல்லுக்கு முந்தியே முடிந்திருக்கும்.அதாவது அம்பிகாவே ராஜேஷிடம் சொல்லி பாக்கியராஜுடன் போயிருப்பார்.
நிலவே மலரே: ராஜேஷ்,ரகுமான்,நதியா நடித்த படம்.காதலியை நண்பனுக்கு "விட்டுகொடுக்கும்" படம்.இதனாலேயே எனக்கு இது பிடிக்காது.
சுயம்வரம்: உடல் ஊனமுற்ற சுவலட்சுமியை திருமணம் செய்ய ஏழை பார்த்திபன் போடும் நிபந்தனை "உன் காசு,பணம் எனக்கு வேண்டாம்.என் வருமானத்தில் தான் நீ வாழவேண்டும்"....என்ன ஆணாதிக்கம் என எனக்கு அப்பவே சரியான கடுப்பு.பொண்டாட்டி வருமானத்தில் வாழ்வது இவரது ஆண்மைக்கு இழுக்காம்...இவன் வருமானத்தில் வாழ்வது மனைவிக்கு இழுக்கில்லையா?படத்தில் இதை கேட்டு சுவலட்சுமி ஆனந்தகண்ணீர் விடுவார்.எனக்கு பயங்கர கடுப்பு ஆகும்.
மன்னன்: மனைவியின் திமிரை அடக்கும் படம்...என்ன சம்பாதித்தாலும், எத்தனை உயர்பதவியில் இருந்தாலும் பொம்பளை,பொம்பளையாதான் இருக்கணும் ஆண்மைக்கு அடிபணியவேண்டும் என்பதை சித்தரிக்கும் படம்.
கல்கி: புரட்சி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பாலசந்தர் எடுத்து குட்டையை குழப்பிய படம்.ஆணாதிக்கம் பிடித்த ஒருவனை திருத்த அவனுடன் படுத்து அவன் குழந்தைக்கு தாயாகி அந்த குழந்தையை அவன் மனைவியிடம் தந்து....ஸ்ஸ்..அப்பா....
சிந்து பைரவி: மனைவி கணவனின் "கலைதாகத்தை" புரிந்துகொள்ளவில்லையெனில் அவன் சின்னவீடு வைத்துகொள்வது நியாயமே என்ற கருத்தை வலியுறுத்திய படம்.
என்றென்றும் காதல்: அக்கா ஒத்துகொண்டால் தான் காதலனை கைபிடிப்பேன் என தங்கௌ கூற,அதற்காக அக்காவிடம் அனுமதி வாங்க காதலனின் குடும்பம் நாய் மாதிரி வந்து அக்கா வீட்டில் விழுந்து கிடக்கிறது....நான் இதை எடுத்திருந்தால் பத்தே நிமிடத்தில் படம் முடிந்திருக்கும்...அதாவது தங்கை காதலனை கல்யாணம் செய்துகொண்டு அக்காவுக்கு லெட்டர் போட்டுவிட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.சுபம்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
'லாபம்'னு முதல் கமெண்ட் நான் தானா? பதிவுக்குப் பின்னூட்டம்: சேம் ப்ளட்.
செல்வன்னு பேர் வச்சு எழுதுவது ஆண் தான்னு நினைக்கிறேன், பல நாளா கூகிள் ரீடரில் படிப்பதால்...;-)
இந்த பதிவு படிச்சதும் தோன்றியது: உலகின் புதிய கடவுளின் கணவர்/தோழர்/மகன்/தந்தைன்னு போட்டுட்டு இருந்திருக்கலாம்.
இல்லை, உலகின் புதிய கடவுள்களுக்காகப் பதிவிடும் புண்ணியவான் அப்படின்னாவது :-P
வாங்க கெக்கே பிக்குணியாரே
செல்வன் ஆண்தான்.
//இல்லை, உலகின் புதிய கடவுள்களுக்காகப் பதிவிடும் புண்ணியவான் அப்படின்னாவது :-P//
உங்க வாய்முகுர்த்தம் பலித்தாவது அவர்கள் கடவுளாகட்டும்:-)
சுயம்வரம் படத்துல அந்த சீன்ல பார்திபன் சொல்லும் அர்த்தம் எல்லா கேரக்டர்களும் பணத்துக்காக கல்யாணம் பண்ணுரமாதிரி காட்டுவாங்க இவர் மட்டும் அவளுக்காக மட்டும் கல்யாணம் பண்ணுவார் அவ சொத்து எதுவும் தேவை இல்லைனு
இது ஆணாதிக்கம் எங்க வந்துங்க பெண்ணாதிக்கவாதி :-))
பாலச்சந்தர் படங்கள் வேண கொஞ்சம் கடுப்படிக்கும்
அந்த 7 நாட்கள் நல்ல காமடி படம்
தாலி செண்டிமண்ட் ஓவர் தான்
ஆனா அது நிதர்சணம் :-))
Karthik,
கணவனின் சம்பாத்தியத்தில் தான் மனைவி வாழவேண்டும், மனைவியின் சொத்தில் கணவன் வாழ்ந்தால் அது ஆண்மைக்கு இழுக்கு,பொண்டாட்டியும் சொல்படி கேட்டு நடக்க மாட்டாள்.
""""""""என்றென்றும் காதல்: அக்கா ஒத்துகொண்டால் தான் காதலனை கைபிடிப்பேன் என தங்கௌ கூற,அதற்காக அக்காவிடம் அனுமதி வாங்க காதலனின் குடும்பம் நாய் மாதிரி வந்து அக்கா வீட்டில் விழுந்து கிடக்கிறது....""""""""""""""""
இந்த மொக்கை கதை என்றென்றும் காதல் படத்தில் வராது "மின்சார கனவு"படத்தின் கதை.
Post a Comment