Sunday, June 13, 2010

437.புரட்சிதலைவர் கிறிஸ் கிறிஸ்டி

நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் க்றிஸ்டி வரிகளை அதிகரிக்க மறுத்து, வெட்டி செலவுகளை குறைத்து வருவது தெரிந்ததே.அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தில் அவர் கை வைத்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் கடுப்புடன் உள்ளார்கள்.சமீபத்தில் ஒரு பொதுகூட்டத்தில் மக்களிடம் தன் நடவடிக்கைகளை விளக்கி கொண்டிருந்தார் கிறிஸ்டி

அப்போது மைக்கை பிடித்த ரூதர்போர்ட் என்ற ஆசிரியை "நான் சொல்லிகொடுக்கும் ஒரு மாணவனுக்கு எனக்கு $3 சம்பளம் தந்தால் எனக்கு வருடத்துக்கு $83,000 சம்பளம் தரணும்.அதுதான் நியாயம்" என்றார்.

"உங்களுக்கு தரும் சலுகைகளை சேர்த்தால் அதுக்கு மேலேயே உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது" என்றார் கிறிஸ்டி

"என் அனுபவத்துக்கும், படிப்புக்கும் இது போதாது" என்றார் ஆசிரியை

"அப்படியனால் இந்த கம்மி சம்பளம் தரும் வேலையை விட்டு விலகிவிடுங்கள்" என்றார் கிறிஸ்டி

அரங்கமே மக்களின் கைதட்டலால் அதிர்ந்தது....

அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசிய மக்களின் பிரதிநிதி கிறிஸ் கிறிஸ்டி அமெரிக்க ஜனாதிபதியாக இன்றே பிரார்த்தனையை துவக்கிவிட்டேன்.

வாழ்க கிறிஸ் கிறிஸ்டி....

அந்த விடியோ கீழே...

0 comments: