காந்தியும், நேருவும் நல்ல தலைவர்கள்.ஆனால் மோசமான பொருளாதார நிபுணர்கள்.காந்தியன் சோஷலிசம், நேருவியன் சோஷலிசம் என்ற பெயரில் இந்த "பொருளாதார அறிஞர்கள்" கொண்டுவந்த கான்செப்டுகள் இந்தியாவை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாசம் செய்தன.அன்று ராஜாஜி ஒருவர் தான் சுதந்திர பொருளாதாரத்தை வலியுறுத்தி சுதந்திரா கட்சியை துவக்கினார்.ராஜாஜியின் பொருளாதார கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் நாடு அன்றே முன்னேறி இருக்கும்.என்ன செய்ய?நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான்.
இத்தனை தூரம் புலம்ப காரணம் என்ன என கேட்கிறீர்களா?காதி கிராப்ட் சமீபத்தில் செய்த கிறுக்குதனம்தான் காரணம். காதி என்ற கான்செப்டே இன்று எத்தனை தூரம் சரிப்பட்டு வரும் என்பது கேள்வி. அரசின் மானியத்தில் கடும் நஷ்டத்தில் வெள்ளையானையாக ஓடும் துறை இது. பாவம்,பரிதாபம் என்று இந்த துறைக்கு காசு வாங்காமல் ஒரு விளம்பரத்தில் நடித்து கொடுத்தார் மோகன்லால்.ஆனால் அந்த சமயத்தில் மது விளம்பரத்தில் மோகன்லால நடித்தது தெரிய வந்ததால் மோகன்லாலில் விளம்பரத்தை காந்தியவாதிகள் தடுத்துவிட்டார்களாம்.
தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்ப்பது என்பது இதுதான் போல...சரி..காந்தி படத்தில் நடித்த பென்கிங்க்ஸ்லி மது அருந்துபவராகவும், காந்தியின் கொள்கைக்கு மாறாக மாட்டுகறி தின்பவராகவும் இருக்கும் வாய்ப்புகள் நூற்றுக்கு 99.99%(சராசரி ஐரோப்பியரை பற்றிய என் கணிப்பில் கூறூவது). அதுக்காக காந்தியவாதிகள் என்ன காந்தி படத்தை தடுத்தா நிறுத்தினர்?
நஷ்டத்தில் ஓடும் துறையை தொடர்ந்து நஷ்டத்திலேயே ஓட்டுவது என முடிவெடுத்து விட்டார்கள் போல.அப்புரம் நாம் என்ன சொல்லுவது?
2 comments:
//காந்தியும், நேருவும் நல்ல தலைவர்கள்.ஆனால் மோசமான பொருளாதார நிபுணர்கள்.//
I don't agree with your statement.
I don't think free economy would do wonders in India.
Whatever worked in rest of the world will also work in India. We dont have any other option other than free market
Post a Comment