Thursday, May 27, 2010

434.ரேகனிசம்

அமெரிக்க பொருளாதாரத்தை தலைநிமிர்த்தியவர், கன்சர்வெடிவ் இயக்கத்தை உயிர்பித்தவர், காம்யூனிசத்தை தன் ஆட்சிகாலத்தில் ஒழித்தவர், அமெரிக்கா முழுவதிலும் அரசியல் கட்சி அடையாளங்களை தாண்டி நேசிக்கப்பட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஜனாதிபதி ரோனல்ட் ரேகன். 1980 முதல் 1988 வரை இவர் ஜனாதிபதியாக இருந்தார்.இதே காலகட்டத்தில் இந்தியாவில் நடிகர்- அரசியல்வாதி காம்பினேஷனில் எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோர் ஆட்சியில் இருந்தனர்.

ரேகனின் அரசியல், பொருளாதார கொள்கைகள் ரேகனிசம் என அழைக்கப்பட்டன. ரேகன் சிறிய அரசு, வலுவான தனியார் துறை, குறைவான வரிகள், அரசு செலவீனங்கள் குறைப்பு, தொழிற்சங்க எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார்.ரேகன் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்க விமானிகள் சங்கம் சம்பள உயர்வு, வாரத்துக்கு 32 மணிநேர வேலை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஸ்ட்ரைக்கை அறிவித்தது.அன்றைய காலட்டத்தில் அமெரிக்க பைலட்டுகளில் பெரும்பாலானோர் இந்தசங்கத்தில் உறுப்பினராக இருந்தனர்.ஸ்ட்ரைக் வந்தால் அமெரிக்க சிவில் விமானதுறையே முடங்கும் என்ற நிலை.

ரேகன் அசராமல் ஒரே உத்தரவு போட்டார்."நாளை காலை வேலைக்கு வராத அனைத்து பைலட்டுகளும் வேலை இழப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக விமானம் ஓட்டமுடியாமல் லைசென்ஸ் பறிக்கபடும்" என்றார்.அதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி சொன்னதே இல்லை.ஸ்ட்ரைக் வந்தால் பணிந்துபோய் பேரம் பேசுவது தான் வழக்கம்.ரேகன் ஏதோ ஜோக் அடிக்கிறார் என பைலட்டுகள் நினைத்தனர்.

அடுத்த நாள் காலை விடிந்தது.பணிக்கு வராத 12,000 பைலட்டுகளை வேலைநீக்கம் செய்து வாழ்நாள் முழுக்க அவர்கள் எந்த விமானத்திலும் கால் வைக்க முடியாதபடிக்கு லைசென்ஸை பறித்தார் ரேகன்.(12,000 பைலட்டுகளுக்கும் சுமார் 12 வருடம் கழித்து பில்க்ளின்டன் ஆட்சிக்கு வந்துதான் பைலட்டுகளுக்கு லைசென்சை மீண்டும் கொடுத்தார்).அமெரிக்க விமானிகள் சங்கமே அத்துடன் இழுத்து மூடப்பட்டது.அதன்பின் ஸ்ட்ரைக் என்ற பேச்சே ரீகன் ஆட்சிகாலத்தில் எந்த தொழிற்சங்கத்தாலும் எழுப்பபடவில்லை.அமெரிக்க தொழில்துறை தலைநிமிர்ந்து நின்று வளர்ச்சி பாதையில் காலடி எடுத்து வைத்தது.

2 comments:

கார்த்திக் said...

ஏன் அங்க நடந்தாத்தான் உங்க கண்ணுக்கு தெரியும
இங்க அம்மா ஆட்சிலியும் தான் இதே கூத்து நடந்துது

செல்வன் said...

Yes.But later court struck down that order and she lost