Monday, November 23, 2009

429.வீழ்ச்சியடையும் விக்கிபிடியா

உலகின் ஐந்தாவது பெரிய வலைதளமான விக்கிபிடியா மாபெரும் சரிவை கண்டுள்ளதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது,. முன்பெப்போதும் இல்லாத அளவு மில்லியன்கணக்கில் விக்கிபிடியா வாலன்டியர்கள் அதிலிருந்து விலகிவருகின்றனர் என்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.But unprecedented numbers of the millions of online volunteers who write, edit and police it are quitting.

காரணம்?

1. குழு சண்டைகள்.காண்ட்ரவர்சியான கட்டுரைகள் தொடர்ந்து திருத்தப்படுவதால் கட்டுரை எழுதியவர்கள் மனம் வெறுத்து விலகுகின்றனர்.அதுபோக தொடர்ந்து எடிட் செய்யப்படுவதால் விக்கிபிடியாவின் விதிகள் மிகவும் கடுமையாகக்ப்பட்டு கடைசியில் 108 பக்க விதிகள் எல்லாம் வந்தனவாம்.அதனால் கடுப்படைந்து பலரும் விலகுகின்றனர்

2. துறைசார் வல்லுனர்கள் விக்கிபிடியாவில் பங்களிப்பதில்லை.விஞ்ஞானதுறை கட்டுரைகளை விட ஸ்டார்வார்ஸ் பற்றி எழுதிய கட்டுரை தரத்தில் நன்றாக இருப்பதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது

3.கட்டுரையை மெனகெட்டு எழுதியவர்களுக்கு எந்த கிரெடிட்டும் கிடையாது.அதனாலேயே கட்டுரை எழுத பலருக்கும் உற்சாகமில்லாமல் போகிரது என்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.

Sunday, November 15, 2009

427.சென்றார்கள் வென்றார்கள்

அயல்தேசத்தில் குடியேறி மாபெரும் சாதனைகளை படைத்த பாரத மண்ணின் மைந்தர்களை பற்றிய வீரவணக்க தொடர்.

மேற்கிந்தியர்கள் (Indo-carribeans)

19ம் நூற்றாண்டில் மேற்கிந்திய தீவுகளில் அடிமை முறை ஒழிந்ததும் அங்கிருக்கும் தோட்டங்களில் வேலை செய்ய பீகார், உபி போன்ற வடமாநிலங்களீல் இருந்து இந்தியர்களை பிரிட்டிஷ் அரசு மேற்கிந்திய தீவுகளுக்கு கொண்டுசென்றது.கூலிகளாக அங்கே சென்ற இந்தியர்கள் (படம் இணைப்பில்) இன்று அங்கே நிலம் வாங்கி தாம் வேலை செய்த தோட்டங்களுக்கு உரிமையாளராக மாறி பெருமிதத்துடன் வாழ்கிறார்கள்.

மேற்கிந்திய தீவுநாடுகள் சிலவற்றில் இந்திய வம்சாவழியினர் தான் பெரும்பான்மை.குடியேறி இருநூறு ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இன்னும் தம் மரபுகளையும் பாரத மண்ணின் மாண்பையும் மறக்கவில்லை.அங்கே விண்ணுயரும் ஆலயங்களை உருவாக்கி தம் தெய்வங்களை வழிபட்டனர். இன்றும் உலகின் மிக உயரமான் ஆஞ்சநேயர் சிலை மேற்கிந்தியதீவுகளில் தான் உள்ளது .இந்துமதத்தை பின்பற்றினாலும் மேற்கிந்தியதீவு இந்தியர்களிடையே ஜாதி சுத்தமாக இல்லை என்பது பாராட்டுதலுக்குரிய அம்சம்.

மேற்கிந்திய தீவு இந்தியர்கள் பலரும் மாபெரும் சாதனை புரிந்தவர்கள்.நோபல் பரிசு பெற்ற வி.எஸ் நைபால் ட்ரினிடாட்டை சேர்ந்த இந்திய வம்சாவழியினர்

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் வீரர் டேரன் கங்கா இந்தியா வந்ததும் தன் பெயரில் குடிகொண்ட கங்கை ஆற்றை தரிசிக்க விரும்பினார்.கங்கை ஆற்றை பற்றி அவரது பெற்றோர் சொல்லிகொண்டே இருந்தார்களாம்.கங்கா இந்தியா வருகிறார் என்று தெரிந்ததும் அவரது பெற்றோரும் கங்காவுடன் வந்துவிட்டார்கள்.கங்கா இந்தியா வந்த சிலநாட்களில் தீபாவளி பண்டிகை வந்தது.இந்தியாவில் தீபாவளீ கொண்டாடப்படுவதை கங்கா அதிசயத்துடன் கண்டு ரசித்தார்.மேற்கிந்தியதீவுகளில் தீபாவளி நகர் என்ற பெயரில் ஒரு ஆலயம் உண்டு.அங்கே இந்திய வம்சாவழியினர் கூடி குதூகலத்துடன் தீபவாளி கொண்டாடுவார்கள்.ஆனால் பாரதமண்ணீல் தீபாவளி கொண்டாடுவதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது அல்லவா?

கயானாவை சேர்ந்த சிவநாராயண் சந்தர்பால், ரோஹன் கனஹாய், மற்றும் ஆல்வின் காளிச்சரண் ஆகிய மூவரும் கிரிக்கட் உலகில் புகழ் பெற்றவர்கள்.சிவநாராயண் சந்தர்பால் தன் மனைவி ஏமியுடன் (படம் இணைப்பில்) ப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டாலும் இன்னும் கரிபியன் மண்ணையும், இந்திய வேர்களையும் மறக்கவில்லை.சந்தர்பாலின் மனைவி ஏமி இந்திய வம்சாவழியினரே.அவர் இந்திய உணவுகளை அருமையாக சமைப்பார்.மகன் பிரெண்டனும் தந்தையை போலவே சிறந்த கிரிக்கட் வீரராக வர விரும்புகிறானாம்.

கூலிகளாக அங்கே சென்ற இந்தியர்களின் வாரிசுகள் கரிபிய மண்ணீல் மாபெரும் சாதனைகளை புரிந்திருக்கிறார்கள்.அந்த சாதனைக்கு என் வீரவணக்கம்