உன் வழி உனக்கு. என் வழி எனக்கு. சரியான வழி, நேரான வழி, ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது.
Wednesday, September 30, 2009
Sunday, September 27, 2009
419.கோமாளி கடாபி - பாகம் 2
கோமாளி கடாபி படிக்க இங்கே அழுத்தவும்
கடாபியின் ஐநா உரையை கிண்டல் செய்து Saturday Night Live நிகழ்ச்சியில் வந்த காமடி விடியோ
Friday, September 25, 2009
418. கோமாளி கடாபி
சீரியசான விவாதம் நடக்கும் ஐநா சபையில் அவ்வப்போது சில கோமாளிகள் தலைகாட்டுவதுண்டு.இந்த வருடம் லிபிய அதிபர் கடாபி அந்த பொறுப்பை எடுத்துகொண்டார். லாக்கர்பி விமான குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க மக்கள் மனதில் ஆறாத வடுவாக படிந்திருப்பதால் 40 வருடம் கழித்து ஐநா சபையில் காலடி எடுத்து வைத்த கடாபிக்கு நியூயார்க்கில் எந்த ஓட்டலும் அறையை வாடகைக்கு தர முன்வரவில்லை.ஆனால் கடாபி அதற்கெல்லாம் கவலைபடுபவரா என்ன? லிபிய தூதரகத்தில் போய் அக்கடாவென ஓய்வு எடுத்தார்.அப்புறம் அரேபிய பிடோயின் ஸ்டைலில் தோட்டத்தில் டெண்ட் போட்டு தங்க விரும்பினார்.
டோனல்ட் ட்ரம்ப் எனும் அமெரிக்க பணகாரரை பிடித்து அவர் வீட்டு தோட்டத்தில் கடாபிக்கு டெண்டு போட ஏற்பாடு நடந்தது.நியூயார்க் பெட்ஃபோர்ட் நகர மேயர் சும்மா விடுவாரா?கொலைகாரனுக்கு நம்ம ஊரில் எதுக்கு டெண்ட் என கொதித்த நகர மக்கள் புகார் தர அப்ரூவல் இல்லாமல் போடப்பட்ட டெண்ட் அகற்றபட்டது.
இதனால் கடுமையான கோபத்துடன் ஐநாசபையில் நுழைந்த கடாபி அதிபர் ஒபாமாவை தேடினார். புகார் தர அல்ல. ஆபிரிக்க வம்சாவளி கருப்பர் ஒருவர் அமெரிக்க அதிபரானதை பாராட்ட. ஆனால் கடாபியை பார்த்து ஹலோ கூட சொல்ல விரும்பாத அதிபர் ஒபாமா திட்டமிட்டு கடாபி கண்ணில் படாமல் மறைந்துகொண்டார்.இப்படி அவமதிக்கப்பட்டதால் மிகுந்த கோபத்துடன் மைக்கை பிடித்த கடாபி சுமார் 90 நிமிஷம் புலம்பி தள்ளிவிட்டார்.
15 நிமிடம் தான் எந்த நாட்டு அதிபரும் பேசவேண்டும்.15 நிமிடம் முடிந்தது என்பதை நினைவுறுத்த ஐநா சபை அதிகாரிகள் கொடுத்த துண்டுசீட்டை கிழித்து போட்டார் கடாபி.அப்புறம் எதை எதை தான் பேசுவது என்றே இல்லாமல் நம் ஊர் அரசியல்வாதிகள் ஸ்டைலில் உளறிகொட்ட துவங்கினார்.உளறலின் சில பகுதிகள்..
1) கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் கொலையில் மர்மம் இருக்கிறது.அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்
2) ஒபாமா ஆப்பிரிக்காவின் மகன்.அவரை நிரந்தர ஜனாதிபதியாக்கி அமெரிக்காவில் சட்டம் வரவேண்டும்
3) ஐநா சபை என்பது அமைதிக்கான மன்றமல்ல.இது தீவிரவாத கவுன்சில்
4) ஐநா சபை எதுக்கு அமெரிக்காவில் இருக்கணும்?12 மணிநேரம் விமானத்தில் பறந்து எனக்கு ஜெட்லாக் வந்துவிட்டது.ஐநா சபையை லிபியாவுக்கு அல்லது சீனாவுக்கு மாற்றுங்கள்
5) தலிபான் மேல் எதற்கு எல்லோரும் கடுப்பாக இருக்கிறீர்கள்?தலிபான் மத அரசாங்கம் அமைக்க விரும்பினால் அமைத்துகொண்டு போகட்டுமே?வாட்டிகன் கூட மத அரசாங்கம்தான்.வாட்டிகனால் உலகுக்கு எப்படி ஆபத்து இல்லையோ அதேபோல் தலிபானாலும் ஆபத்து இல்லை
6) ஒசாமா உடனே பின்லேடனுடன் பேச்சுவார்த்தை துவக்கவேண்டும்.பின்லேடன் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறான்
7) இஸ்ரேலையும் பால்ஸ்தீனத்தையும் ஒரே நாடாக்கி இஸ்ராதீன் எனும் புதுநாட்டை உருவாக்க வேண்டும்
இப்படி கடாபி உளறிகொட்டுவதை கேட்க சகியாமல் பின்னால் உட்கார்ந்திருந்த லிபிய வெளியுறவுதுறை அமைச்சர் தலையில் கைவைத்துகொண்டு புலம்பினார்.ஒரு கட்டத்தில் அராபிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துகொண்டிருந்த கடாபியின் உதவியாளரே கடுப்பாகி "ஐயோ என்னால் மொழிபெயர்க்க முடியலை" என அலற அப்புறம் கடைசி 20 நிமிட பேச்சை ஐநா சபை அதிகாரி ஒருவர் மொழிபெயர்த்தார்.
நல்ல நகைசுவை திரைபடம் ஒன்றை பார்த்த திருப்தியுடன் உலகதலைவர்கள் தம் அறைகளுக்கு திரும்பினர்
Thursday, September 24, 2009
417.கயானாவின் கலாசாரம் காப்பாற்றப்பட்டது
"என் பெயர் மிஸ்டர் தீமை
நான் இந்த ஏகே 47 வாங்கியது
ஓரினசேர்க்கையாளர் மேல் தோட்டாக்களை தூவ
தோட்டாக்களுடன் வெறியையும் தூவுவேன்
இசைதொகுப்பாளரை வேண்டுவேன்
பின்புறபுணர்ச்சியாளருக்கு வைப்போம் குண்டு
உங்களை வெறுக்கிறேனடா புழுக்களா.."
கயானாவில் புகழ்பெற்ற இசைகுழுவான மிஸ்டர் ஈவில்(Mr.evil) பலத்த கரகோஷங்களுக்கிடையே பாடும் பாடலின் சில வரிகள் இவை.
கயானா..மேற்கிந்திய தீவுநாடுகளில் ஒன்று.ஓரினசேர்க்கையாளரை மற்ற நாடுகள் ஜெயிலில் போடும் என்றால் கயானாவில் கைக்கு கிடைத்தால் அடித்தே கொல்வார்கள்.சில மாதங்களுக்கு முன்பு பார்க்கில் பிடிபட்ட இரு லெஸ்பியன் பெண்களை கயானிய கலாசார காவலர்கள் பலாத்காரம் செய்து அதன்பின் நாயை அடிப்பது போல் அடித்து கொன்று கயானிய கலாசார்த்தை காப்பாற்றினார்கள்.
கயானா ஓரினசேர்க்கையாளர் மேல் நடக்கும் தாக்குதலை நிறுத்த சொல்லி கயானா ஓரினசேர்க்கையாளர் மற்றும் அரவாணிகள் சங்கம் விட்ட வேண்டுகோள் காற்றில் பறக்கும் பஞ்சாய் போனது.இன்று உயிர்பிழைக்க கயானாவை விட்டு ஓரினசேர்க்கையாளர்கள் அருகிலிருக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் குடிபெயர்கிறார்கள்.கயானாவின் விஞ்ஞானிகளும், படித்தவர்களும் இவர்களில் அடக்கம் என்பதால் கயானிய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.அதேச்டமயம் "ஓரினசேர்க்கையை குற்றமற்றதாக்க அமெரிக்காவும் மேலைநாடுகளும் தரும் பிரஷருக்கு அடிபணிய போவதில்லை" என கயானிய பாராளுமன்றத்தில் அரசு உறுதிமொழி கொடுத்து கயானிய கலாசாரத்தை காப்பாற்றி உள்ளது.
ஓரினசேர்க்கையாளர் மேல் வெறுப்பை பரப்பும் கயானிய இசைகுழுக்களுக்கு அமெரிக்கா ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.இதனால் இந்த இசைகுழுக்களில் இருந்து பலர் விலகினாலும் கயானியர்கள் கவலைபடுவதாக தெரியவில்லை.ஓரினசேர்க்கையாளர்கள் மேல் வெறுப்பை பரப்பும் கலாசாரகாவலர் கடமையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்த மிஸ்டர் ஈவில் மாதிரி நடனகுழுக்களை தடை செய்யாமல் வேடிக்கை பார்க்கும் கயானிய சுற்றுலாதுறை அமைச்சர் இந்திய வம்சாவழியை சேர்ந்த மணிராம் பிரசாத் என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கும் செய்தி.
Sunday, September 20, 2009
416.ஸ்டைல் சக்ரவர்த்திக்கும் கவியரசனுக்கும் என் கேள்விகள்
ஸ்டைல் மன்னன் என்று ரஜினியை சொல்வதுண்டு.ஆனால் ரஜினியிடம் கேட்டபோது 'ஸ்டைல் மன்னன் என்பதெல்லாம் சும்மா. எனக்கும் மேலே ஸ்டைல் சக்ரவர்த்தி ஒருவர் இருக்கிறார்.அவர் தான் நடிகர் திலகம்" என்றார்.
அந்த சிவாஜி ஸ்டைலில் கலக்கிய ஒரு பாடலை யுடியூபில் கேட்டேன்."நீரோடும் வைகையிலே" என துவங்கும் அந்த பாடல் என் மனதை கொள்ளை கொண்டது.
இருந்தாலும் என் குறுக்குபுத்தி என்னைவிட்டு எங்கே போகும்?அதனால்
ஸ்டைல் சக்ரவர்த்திக்கும் கவியரசனுக்கும் என் கேள்விகள்
1) ஸ்டைல் சக்ரவர்த்தி.....இத்தனை அழகான இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் பக்கத்தில் வைத்துகொண்டு சிகரெட் குடித்தால் செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் அவர்களை பாதிக்கும்னு தெரியாதா?
2) கவியரசே...
"நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே" என்று தலைவனையும்
"அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே" என்று தலைவியையும் பாடவைத்திருக்கிறாயே?காதல் என்பது தலைவன் தலைவிக்கு அளிக்கும் கருணையா?இது நியாயமா?
60களில் உன்னிடம் இருந்த இந்த மனபோக்கு "ஆதிக்கநாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே?" என்று 80களிலும் தொடர்ந்திருக்கிறதே?
இது நியாயமா கவியரசே?
Tuesday, September 08, 2009
415.விளம்பரத்துக்கே விளம்பரமா?
ஸ்டாலின், சதாம், ஹிட்லர் ஆகியோர் தோன்றும் எய்ட்ஸ் விளம்பர விடியோக்கள் விளம்பர உலகை கலக்கிகொண்டிருக்கின்றன.
"இவர்கள் மட்டும் கோடிக்கணக்கில் மகக்ளை கொல்லவில்லை,.எய்ட்ஸும் தான் கொல்கிறது" என்ற காப்ஷனுடன் ஸ்டாலின், சதாம், ஹிட்லர் ஆகியோர் மாதிரி வேடம் போட்டவர்கள் பெண்களுடன் காண்டம் அணியாமல் உறவுகொள்ளும் இந்த விளம்பரங்கள் வெளிவந்து வெகுசில நாட்களில் இந்த விளம்பர ஏஜென்சிக்கு உலகபுகழ் கிடைத்துவிட்டது.
ஆனால் எய்ட்சால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தினர் இம்மாதிரி கொலைகாரர்களுடன் எங்களை எப்படி ஒப்பிடலாம் என பொங்கி எழுந்து வழக்கு போட இருக்கிறார்கள்.
"விளம்பரத்துக்கே விளம்பரமா?.நகைசுவை உணர்வுடன் ரசியுங்கப்பா"ன்னு ஏஜன்சிகாரர்கள் சொல்லிகொண்டிருக்கிறார்கள்.சர்ச்சை அதிகரிக்க அதிகரிக்க கல்லா நிரம்பி வழிவதாக தகவல்.
அந்த விளம்பரத்தின் விடியோ இதோ.ஆனால் எச்சரிக்கை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும்.ஐரோப்பாவில் விளம்பரம் கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும்னாலும் இது ரொம்பவே ஓவர்:-)
Saturday, September 05, 2009
414.பெண்கல்வியால் சமூகத்தில் பிரமிக்கதக்க விளைவுகள் ஏற்படுகின்றன
கல்வி,சமூக இயலில் நடத்தப்ப்ட்ட ஆய்வுகள் அனைத்தும் கூறுவது என்னவெனில் "பெண்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டால் சமூகத்தில் பிரமிக்கதக்க விளைவுகள் ஏற்படுகின்றன" என்பதே.
முன்னாள் ஐநா சபை பொதுசெயலாளர் கோபி அனான் இதுகுறித்து கூறும்போது "பெண்கல்வி தான் இன்றைய சமூகத்தில் நாம் செய்யகூடிய மிகசிறந்த முதலீடு" என்கிறார்
லாரன்ஸ் சமார்ஸ் எனும் உலகவங்கி பொருளாதார ஆய்வாளர் கூறுகையில் "சமூக முன்னேறம் விளைவிக்கும் மிகபெரிய காரணியாக பெண்கல்வி இருக்கிறது" என கூறுகிறார்.
கோல்ட்மன் சாக்ஸ் வங்கி ஜப்பானிய சமூகத்தை எப்படி முன்னேற்றலாம் என ஆராய்ந்தபின்னர் கூறியது "ஜபபனிய பெண்களின் திறமையை முழுதும் பயன்படுத்தினால் இதுவரை நடந்த முன்னேற்றங்கள் கெல்லாம் ஒன்றுமே இல்லை என கூறூம் வண்ணம் ஜப்பான் யாரும் தொடமுடியாத உயரத்துக்கு சென்றுவிடும்" என கூறுகிறது.
பெண்கள் முன்னேற்றம் தான் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கு இருக்கும் மிகபெரிய உந்துசக்தி.அதனால் தான் இந்திய சுதந்திர போராட்டத்தின்போது காந்தி பெண்கல்விக்கு அத்தனை முன்னேற்றம் தந்து "ஒரு ஆணை படிக்க வைத்தால் அவன் மட்டுமே முன்னேறுவான்.ஆனால் ஒரு பெண்ணை படிக்க வைத்தால் அந்த ஒட்டுமொத்த குடும்பமும் முன்னேறும்" என்று கூறீனார்.
அண்ணல் அம்பேத்கார் இன்னும் ஒருபடி மேலே போய் "தலித் பெண்களை முன்னேற்றாமல் தலித் விடுதலை பற்றி பேசுவது சாத்தியமே இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக கூறீனார்.
பெண்முன்னேற்றம் இல்லாமல் சமூக முன்னேற்றம் துளியும் சாத்தியமில்லை.
