Friday, August 28, 2009

413.இந்து நாடு ஆகும் அமெரிக்கா

நியூஸ் வீக் கட்டுரை

America is not a Christian nation. We are, it is true, a nation founded by Christians, and according to a 2008 survey, 76 percent of us continue to identify as Christian (still, that's the lowest percentage in American history). Of course, we are not a Hindu—or Muslim, or Jewish, or Wiccan—nation, either. A million-plus Hindus live in the United States, a fraction of the billion who live on Earth. But recent poll data show that conceptually, at least, we are slowly becoming more like Hindus and less like traditional Christians in the ways we think about God, our selves, each other, and eternity.

The Rig Veda, the most ancient Hindu scripture, says this: "Truth is One, but the sages speak of it by many names." A Hindu believes there are many paths to God. Jesus is one way, the Qur'an is another, yoga practice is a third. None is better than any other; all are equal. The most traditional, conservative Christians have not been taught to think like this. They learn in Sunday school that their religion is true, and others are false. Jesus said, "I am the way, the truth, and the life. No one comes to the father except through me."

Americans are no longer buying it. According to a 2008 Pew Forum survey, 65 percent of us believe that "many religions can lead to eternal life"—including 37 percent of white evangelicals, the group most likely to believe that salvation is theirs alone. Also, the number of people who seek spiritual truth outside church is growing. Thirty percent of Americans call themselves "spiritual, not religious," according to a 2009 NEWSWEEK Poll, up from 24 percent in 2005. Stephen Prothero, religion professor at Boston University, has long framed the American propensity for "the divine-deli-cafeteria religion" as "very much in the spirit of Hinduism. You're not picking and choosing from different religions, because they're all the same," he says. "It isn't about orthodoxy. It's about whatever works. If going to yoga works, great—and if going to Catholic mass works, great. And if going to Catholic mass plus the yoga plus the Buddhist retreat works, that's great, too."

Then there's the question of what happens when you die. Christians traditionally believe that bodies and souls are sacred, that together they comprise the "self," and that at the end of time they will be reunited in the Resurrection. You need both, in other words, and you need them forever. Hindus believe no such thing. At death, the body burns on a pyre, while the spirit—where identity resides—escapes. In reincarnation, central to Hinduism, selves come back to earth again and again in different bodies. So here is another way in which Americans are becoming more Hindu: 24 percent of Americans say they believe in reincarnation, according to a 2008 Harris poll. So agnostic are we about the ultimate fates of our bodies that we're burning them—like Hindus—after death. More than a third of Americans now choose cremation, according to the Cremation Association of North America, up from 6 percent in 1975. "I do think the more spiritual role of religion tends to deemphasize some of the more starkly literal interpretations of the Resurrection," agrees Diana Eck, professor of comparative religion at Harvard. So let us all say "om."

Thursday, August 27, 2009

412.வர்ணங்கள்


வர்ணங்கள் சுவற்றுக்கு மட்டுமே இனி இருக்கட்டும்

புவியெங்கும் சமத்துவம் பூக்கட்டும்

நந்தனார்கள் தீட்சிதர்கள் ஆகட்டும்

திருப்பாணாழ்வார்கள் சங்கராசாரிகள் ஆகட்டும்

சேரியும்,அக்கிரகாரமும் ஒரே ஊராகட்டும்


புலையருக்கும் பூணூல் அணிவித்தவன் பாரதியன்றோ?

மதுரையில் ஆலயபிரவேசம் நடத்தியவன் வைத்தியநாத ஐய்யரன்றோ?

நம் தாய்தமிழை மீட்டெடுத்தவன் சாமிநாத ஐயரன்றோ?

பிராமணரும் பஞ்சமரும் நெருங்கிவிட்டார்

மாயாவதியை ஆட்சியில் அமர்த்திவிட்டார்


அன்று நடந்து பழங்கதை

இன்று நடப்பது புதியவரலாறு

பழங்கதைகள் பஞ்சாங்கமாய் மாறட்டும்

பழையபகைகள் போகியோடு ஒழியட்டும்

குக்கிராமமான உலகில் ஏது பார்ப்பனும் பஞ்சமனும்?

அனைவரும் இனிஒருதாய் மக்களே

பாரததாயின் புதல்வரே

Saturday, August 22, 2009

411.அமெரிக்க பதிவர்களுக்கு நற்செய்தி

1) நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்களா?

2) வீட்டில் ஹைஸ்பீட் இனைய தொடர்பு வைத்திருக்கிறீர்களா?

3) இந்தியாவுக்கு அடிக்கடி பேசுகிறீர்களா?

மூன்றுக்கும் பதில் ஆமாம் என்றால் இன்று வானேஜ் இணைய தொலைபேசி அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் உங்களுக்கு உதவும்.

அதாவது வானேஜ் போன் கனெக்சன் வாங்கினால் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எத்தனை நிமிடங்கள் வேண்டுமனாலும் பேசலாம்.மாத கட்டணம் $25க்கு.Yes,just $25.Not a penny more, not a penny less

வெறும் $25க்கு அமெரிக்காவில் எந்த மாநிலத்துக்கும், கனடாவுக்கும், இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இன்னும் அறுபது உலகநாடுகளுக்கும் பைசா செலவின்றி போனை டயல் செய்து பேசலாம்.எத்தனை நிமிடங்கள் வேண்டுமானாலும் பேசலாம்.உங்கள் தற்போதைய லேண்ட்லைன் எண்ணையே வானேஜுக்கும் பெறுகொள்ளலாம்.

வானேஜ் தள முகவரி www.vonage.com

இந்த ஆஃபர் எத்தனை நாள் இருக்கும் என்று தெரியாது.If you want it act fast

Tuesday, August 18, 2009

410.தீவிரவாதம் Vs. சிகரெட்

இராக் அரசு சமீபத்தில் பொது இடங்களில் சிகரெட் குடிக்க தடை விதித்துள்ளது.பொது இடத்தில் ஒரு சிகரெட்டை பற்றவைத்தால் $4300 பைன்.அதாவது சுமார் 2.25 லட்சம் ரூபாய்.இராக்கில் தினமும் பத்து பேர் தீவிரவாத தாக்குதல்களீல் உயிர் இழக்கிறார்கள்.ஆனால் தினமும் ஐம்பது இராக்கியர்கள் சிகரெட் குடிப்பதால் உயிர் இழக்கிறார்கள் என இராக் அரசு கூறுகிறது.

இந்த தடைக்கு இராக் பாராளுமன்றத்தில் பெருவாரியான ஆதரவு.ஆனால் பொதுமக்கள் இதனால் கடும்கோபம் அடைந்துள்ளார்கள்.

இராக் மக்கள் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கூறியது

"சிகரெட் குடிக்க இனிமேல் ஒதுக்குபுறங்களை தேடவேண்டும்.அங்கே தான் கார்குண்டுகள் அதிகமாக இருக்கும்.மக்களை ரிஸ்க் எடுக்க வைக்கும் இம்மாதிரி சட்டங்கள் தேவையா?"

"சதாமை மீண்டும் கொண்டுவாருங்கள்.அவர் தான் இம்மாதிரி கிறுக்குதனமான சட்டங்களை போடமாட்டார்"

"என் மருமகன் சில நாட்களுக்கு முந்தி தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்தான்.என் பக்கத்துவீட்டுகாரரை போலிஸ் பிடித்துகொண்டு போய் சித்த்ரவதை செய்தது.வீட்டில் மாதகணக்கில் மின்சாரம் இல்லை.ஆஸ்பத்திரியிலும் இதே கதைதான்.பாராளுமன்றத்தில் இதை எல்லாம் விவாதிக்காமல் சிகரெட்டை விவாதிக்கிறார்கள்.நல்லா இருக்கு நாட்டு நடப்பு"

"ஜெயிலும் பொது இடம்தானே?இனிமேல் ஜெயிலில் காவலர்கள் சிகரெட் குடித்துவிட்டு கைதிகளீன் உடலில் சிகரெட்டை வைத்து இழுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கலாமா?"

நன்றி: எகானமிஸ்ட்

Saturday, August 15, 2009

409.ராம் முகம்மத் சிங் ஆசாத்

ராம் முகம்மத் சிங் ஆசாத்

இதுதான் அவன் பெயர்.மும்மதங்களும் சங்கமிக்கும் பெயர்.இறுதியில் அவனது கனவான சுதந்திரம்......அதுதான் ராம் முகமத் சிங் ஆசாத்.

பெயரை போலவே இவனும் மதம்,இனம் ஆகியவற்றை கடந்து இந்தியனாக நின்றான்.மனித இனத்தின் மாபெரும் விடுதலை போராளியாக அறியப்பட்டான்.வாழ்ந்த காலத்தில் வரலாறாக மாறி இந்திய விடுதலை போராட்டத்தின் ஆன்மிக பலத்துக்கு உந்து சக்தியாக நின்றான்.

ராம் முகம்மத் சிங் ஆசாத் என்றால் பலருக்கும் இவனை தெரியாது.ஷாகித் உத்தம் சிங் என்றால் தெரியும்.

ஷாகித் உத்தம் சிங் பஞ்சாபில் பிறந்தவன்.1919ல் ஜாலியன்வாலாபாக் படுகொலை பஞ்சாபில் நடந்தது.அந்த படுகொலைகலை நடத்த உத்தரவிட்டவர் அன்றைய பஞ்சாப் கவர்னர் ஒட்வையர். அதை முன்னின்று நடத்தியவர் ஜெனெரல் டயர்.

அந்த படுகொலைகளை நிகழ்த்தி இங்கிலாந்துக்கு கப்பலேறிய ஜெனெரல் டயருக்கு பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று 21,000 பவுன்களை நிதியாக அளித்தது.அதை கேட்டதும் ஷாகித் உத்தம்சிங்குக்கு மனமெல்லாம் கொதித்தது.இந்த படுகொலையை நிகழ்த்த உத்தரவிட்ட கவர்னர் ஒட்வையரை கொல்வேன் என பொற்கோயிலில் நின்று சபதம் எடுத்தான்.துப்பாக்கியுடன் கவர்னரை தேடி புறப்பட்டு போலிஸ் பிடியில் சிக்கினான்.

கோர்ட்டில் "கவர்னரை கொல்லத்தான் துப்பாக்கியுடன் வந்தேன்" என ஒப்புதல் வககுமூலம் தந்து ஐந்தாண்டுகள் சிறைதண்டனை அடைந்தான்.விடுதலை அடைந்ததும் போலிஸ் அவனை கண்கானீத்தபடி இருந்தது.போலிஸ் கண்ணில் மண்ணிதூவி காஷ்மிருக்கு போனான்.அங்கிருந்து அவன் எங்கே போனான் என யாருக்கும் தெரியவில்லை.1934ல் எப்படியோ ஜெர்மனியை அடைந்தான்.அங்கிருந்து இத்தாலி, அங்கிருந்து பிரிட்டன்.

ஜெனெரல் டயர் 1921ல் இங்கிலாந்தில் மரணம் அடைந்துவிட்டான்.சாகும் முன் அவன் குற்ர உணர்ச்சியால் பீடிகப்பட்டு "படைத்தவன் முன் போகிறேன்.நான் செய்தது குற்றம் என்றால் அவன் என்னை தண்டிக்கட்டும்" என சொல்லியபடி இறந்தான்.

ஆனால் கவர்னர் ஒட்வையர் திருந்தவில்லை.அவனை பகிரங்கமாக பலர் முன்னிலையில் கொன்று தாய்நாட்டுக்கு நேர்ந்த அவமானத்தை போக்குவேன் என சபதம் எடுத்தான் ஷாகித் உத்தம் சிங்.

அதே போல் இந்திய பற்றிய கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட ஒட்வையரை கொல்ல கருத்தரங்கில் நுழைந்தான் உத்தம்சிங்.அவன் கையில் ஒரு புத்தகம்.அதில் துப்பாக்கி.

ஓட்வையர் முன் நேருக்கு நேர் நின்றான்.அடுத்த வினாடி துப்பாக்கி வெடித்தது.இரு குண்டுகள் ஒட்வையர் மேல் பாய்ந்தன.அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தான் ஒட்வையர்.

காவலர் ஓடிவந்து உத்தம்சிங்கை பிடித்தனர்.அவன் தப்ப முயலவே இல்லை."என் தேசத்துக்கு நிகழ்த்தப்பட்ட அவமானத்தை துடைத்தேன்" என பெருமையுடன் சொல்லியபடி காவலருடன் சிரித்தபடி சென்றான்.(ஷாகித் உத்தம்சிங் கைது செய்யப்பட்டபோது எடுத்த படம் இனைப்பில்)

கோர்ட்டில் உன் பெயர் என்ன என நீதிபதி கேட்டபோது "ராம் முகமத் சிங் ஆசாத்" என பெருமையுடன் கூறி மதம்,இனம் ஆகியவற்றை கடந்து மானுட விடுதலைக்கு குரல் கொடுத்த மானுடபோராளி என்பதை அவன் குறிப்பால் உணர்த்தினான்.

அவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.பென்டன்வில்லியில் அவன் தூக்கில் இடப்பட்டான்.அவன் மரணம் அன்று இந்தியா எங்கும் அதிர்ச்சி அலைகளை தோற்றுவித்தது.காந்தி,நேரு என பாரதத்தின் தலைவர்கள் அனைவரும் அவனைபற்றி பேசினார்கள்.நேருவும்,காந்தியும் அந்த செயலை "பழிவாங்கும் நோக்கில் நடந்த வன்முறை" என கண்டித்தார்கள்.ஆனால் இந்திய மக்களும்,ஐரோப்பிய ஊடகங்களும் ஷாகித் உத்த்மசிங்கின் தியாகத்தை புகழ்ந்தன.லண்டன் டைம்ஸ் அவனை சுதந்திரபோராட்ட தியாகி என்று கூறி அஞ்சலி செலுத்தியது.

இந்த மரணம் ஏற்படுத்திய அதிர்வலையின் விளைவாக காந்தி 1942ல் வெல்ளியனே வெளியேறு இயக்கத்தை துவக்கினார்.

1962ல் இறப்புக்கு முன் நேரு தன் நிலையை மாற்றிகொண்டார். 'ஷாகித் உத்தம்சிஙை வணங்குகிறேன்.நாம் சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதற்காக தூக்குகயிற்றை முத்தமிட்ட மாபெரும் தியாகி அவன்" என்றார் நேரு.

அந்த தியாகியின் உடலின் மீதங்கள் 1974ல் இந்தியா கொண்டுவரப்பட்டு அவன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

Wednesday, August 12, 2009

பெண்


பிறந்தாள்

வளர்ந்தாள்

மகளானாள்

தங்கையானாள்

மனைவியானாள்

தாயானாள்

மாமியாரானாள்

பாட்டியானாள்

தெய்வமுமானாள்

யாரையும் காதலிக்காமல்

யாராலும் காதலிக்கப்படாமல்!!!

Monday, August 10, 2009

406. மனிதனை கண்டேன்

சிகாகோவின் டவுன்டவுன் ஒரு காங்கிரீட் காடு.அதில் மூன்றுநாள் மூச்சுதிணறி போய்விட்டேன்.கையில் கத்தை கத்தியாக காசு இருந்தால் தான் டவுன் டவுனில் நடமாடவே முடியும்.காரை பார்க் செய்ய தினமும் முப்பது டாலர் கட்டணம்னா பார்த்துகுங்க.

கடைகளில் கொள்ளை விலை.எங்கூரில் 2 டாலருக்கு கிடைக்கும் பொருள் இங்கே நாலு டாலர்.இந்த காங்கிரீட் காட்டில் சாலைகளில் அத்தனை நெரிசல்.டிரைவர்களுக்கு ஹாரன் அடிப்பதென்றால் கொள்ளை பிரியம்.யாருக்கும் நிற்ககூட நேரமில்லை.

இத்தனை இயந்திரமயமான இடத்தில் வால்க்ரீன்ஸ் ஸ்டோருக்கு என் காரை எடுத்துகொண்டு கிளம்பினேன்.ஸ்டோரில் காரை நிறுத்த இடமில்லை.கூட வந்த நண்பரை கடைக்கு முன் இறக்கிவிட்டுவிட்டு அருகே இருந்த பார்க்கிங் கராஜுக்கு போனேன்.அரைமணிநேரத்துக்கு காரை நிறுத்த $9 கட்டணம்.நண்பர் உள்ளே போனது $2 மதிப்புள்ள மருந்தை வாங்க.

$2 மருந்துக்கு $9 பார்க்கிங் கட்டணம் என்று திட்டிகொண்டு காரை நிறுத்திவிட்டு உள்ளே போய் நண்பருடன் சேர்ந்து மருந்தை வாங்கிகொண்டு பார்க்கிங் கராஜுக்கு வந்தேன்.

"இத்தனை சீக்கிரம் வந்துவிட்டீர்கள்" என்றார் வியப்புடன் பார்க்கிங் அட்டெண்டெண்ட்.காசை நீட்டியபோது வாங்க மறுத்துவிட்டார்.

இந்த காங்கிரீட் காட்டிலும் மனிதம் சாகாமல் இருக்கிறது என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது.

மனநிறைவுடன் வெளியே வந்து மக்கள் கூட்டத்தில் கலந்தேன்.

Wednesday, August 05, 2009

404. கோமாளிகளின் தேசமாக மாறும் இந்தியா

சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலான வசனங்கள் இடம் பெற்றதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் வக்கீல்களை கிண்டலடிக்கும் வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இருப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சினிமா என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாமா என்று கேட்டிருந்தது.

இந்த நிலையில் விஜய் சார்பில் வருத்தம் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நான் வழக்கறிஞர்களுக்கு எதிரானவன் அல்ல. சிவகாசி படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தால், அது வழக்கறிஞர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.

--------------------

இப்படி ஒவ்வொரு துறையும் சினிமாவில் தன்னைமோசமாக சித்தரிப்பதாக வழக்கு போட்டு மன்னிப்பு கேட்க சொன்னால் கடைசியில் எதைதான் படமாக எடுப்பது?அரசியல்வாதி, போலிஸ்,சாப்ட்வேர் எஞ்சினியர், வாத்தியார் என்று ஒவ்வொருவரும் வழக்குபோட ஆரம்பித்து அதுக்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பும் வந்தால் நம் நாடு கோமாளிகளின் நாடாக அல்லவா ஆகும்?கருத்து சுதந்திரம் என்றால் என்ன?

வெட்ககேடு

Sunday, August 02, 2009

American Beauty

அமெரிக்கன் பியூட்டி என்ற இந்த படம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. மிக வலிவான திரைகதையும், கத்தியை விட கூர்மையான வசனங்களும், மனித மனங்களின் பலவீனங்கள் இயல்பாக அணுகப்படும் விதங்களும் இந்த கதையின் சிறப்பம்சங்கள்.கதை சொல்லப்பட்ட விதம் தான் இதன் பலமே.

லெஸ்டர் டர்ஹம் 42 வயது நபர். தன் மனைவி கேரலினுடனும் மகள் ஜேனுடனும் வசிப்பவர். 42 வயதில் திருமண உறவு லெஸ்டருக்கு கசந்துவிடுகிறது. பாத்ரூமில் சுய இன்பம் அனுபவிக்கும் வினாடிகள் தான் ஒருநாள் போதில் லெஸ்டர் மகிழ்ச்சியாக இருக்கும் தருனங்கள் என்று அவனே மனம் கசந்து கூறுகிறான்.

மகள் ஜேன் டீன் வயது பெண். இந்த வயதில் டீன்களுக்கு இருக்கும் குழப்பங்கள் அனைத்தும் ஜேனுக்கு இருக்கின்றன. ஜேனை துரத்தி துரத்தி காதலிக்கிறான் பக்கத்துவீட்டு சைக்கோ வாலிபன்.அவன் அப்பா ஓரினசேர்க்கையாளர் மேல் ஆழ்ந்த வெறுப்பு கொண்டவர்.

லெஸ்டரின் வாழ்க்கை இப்படி நகர்கையில் ஒருநாள் தன் மகளின் வகுப்புதோழி ஏஞ்செலாவை சந்திக்க நேர்கிறது.அடுத்த வினாடியே அவள் மேல் காதலில் விழுந்துவிடுகிறான் லெஸ்டர்.

ஏஞ்செலா செக்ஸ் விஷய்த்தில் மிக ஆக்டிவாக இருப்பவள்.ஜேன் இதில் மிக கன்சர்வேடிவ்.ஆஞ்செலாவின் காதல் லீலைகளை கடுமையாக விமர்சிக்கிறாள் ஜேன்.தன் தந்தை ஏஞ்செலாவிடம் வழிவதை ஜேனால் தாங்க முடிவதில்லை.

ஏஞ்செலாவும் லெஸ்டர் மேல் காதல் கொள்கிறாள்."அதில் எந்த தவறும் இல்லை" என்றும் அது ஜாலிக்கான வழிசல் தான் என்றும் ஜேனிடம் கூறுகிறாள்.அதே சமயம் சைக்கோ வாலிபனிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஜேனிடம் கூறுகிறாள் ஏஞ்செலா.

அதை புறக்கணித்து அவன் மேல் காதல் கொள்கிறாள் ஜேன்.சைக்கோ வாலிபன் போதை மருந்து விற்பவன்.செத்துபோன குருவிகளை படம் பிடித்து பார்த்து ரசிப்பவன்.இந்த சைக்கோதனம் எல்லாம் ஜேனுக்கு மிகவும் பிடிக்கிறது.

சைக்கோ வாலிபனின் தந்தை ஒரு முன்னாள் ஓரினசேர்க்கையாளர்.அது பற்றிய கடும் குற்ற உணர்வுகளால் தவிப்பவர்.தன் மகனை லெஸ்டரின் அறையில் ஒரு நாள் பார்க்கிறார்.லெஸ்டர் அப்போது சட்டை இல்லாமல் இருக்கிறான்.உடனே அந்த தந்தைக்கு தன்மகனுடன் லெஸ்டருக்கு ஓரினசேர்க்கை உறவு இருப்பதாக பலத்த சந்தேகம் வந்துவிடுகிறது.லெஸ்டர் மேல் அவர் கடும்கோபம் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் லெஸ்டருக்கும் மனைவிக்கும் உறவில் விரிசல் வந்துவிடுகிறது. ஏஞ்செலாவிடம் தன் காதலை சொல்ல அவள் அதை ஏற்றுகொள்கிறாள்.இருவரும் உறவு கொள்ள முயலும்போது ஏஞ்செலா ஒரு அதிர்ச்சிதரும் உண்மையை சொல்கிறாள்.அதாவது தான் கன்னிப்பெண் என்றும் இதுவரை பலரை காதலித்ததாக சொன்னதெல்லாம் நண்பர்களிடையே புகழ் பெற சொன்னது என்றும் கூறுகிறாள்.

இதை கேட்டதும் லெஸ்டருக்கு அவள் மேல் தந்தைக்கிருக்கும் பாசம் வந்துவிடுகிறது. ஏஞ்செலா தன் மகளை போல் ஒரு குழப்பம் நிறைந்த டீனேஜர் என்பதை புரிந்து கொண்ட லெஸ்டர் அந்த காதலை தந்தை பாசமாக மாற்றிக்கொள்கிறான். ஒரு சில வினாடிகளில் சைக்கோ வாலிபனின் தந்தையால் கொல்லப்படுகிறான்.

சாகும் சில வினாடிகளில் லெஸ்டர் தான் வாழ்ந்த அற்ப வாழ்க்கையை நினைத்து பார்க்கிறான்.அதில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் அவன் மிகவும் விரும்புகிறான்.தன் பலமும், பலவீனங்களும், தவறுகளும், நியாயங்களும் அவனுக்கு மிகவும் விரும்பத்தக்கனவாக இருக்கின்றன. தன் வாழ்வை தான் மிகவும் அனுபவித்து மகிழ்ந்ததாக் சொல்லி மகிழ்வுடன் இறக்கிறான் லெஸ்டர்.

ஏஞ்செலாவின் மேல் லெஸ்டர் கொண்ட பொருந்தா காதல் தான் கதையின் சுவாரசியமான விஷயம். 42ம் 16ம் எப்படி மேட்ச் ஆகும்?? ஆனால் லெஸ்டர் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

தொந்தியும்,தொப்பையும் குறைய உடல்பயிற்சியை ஆரம்பிக்கிறான். ஏஞ்செலாவை பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு சிகப்பு ரோஜாக்கள் நிரம்பிய நீர்தொட்டியில் அவளுடன் சேர்வது போல் கனவு வருகிறது. இரவு மனைவியுடன் தூங்குகையில் ஏஞ்செலாவை நினைத்து சுய இன்பம் அனுபவித்து மாட்டிக்கொண்டு அது விவாகரத்து வரை போய்விடுகிறது. இத்தனை செய்தும் கடைசியில் அவன் காதலி கைக்கு கிடைத்தபோது அவன் காதல் தந்தைபாசமாக மாறிவிடுகிரது.சராசரி மனிதனாக,தந்தையாக அந்த வினாடியில் மாறிவிடுகிறான் லெஸ்டர்.

படத்தில் வரும் மறக்க முடியாத வசனங்கள்


1) Angela Hayes: Jane, he's a freak!

Jane Then so am I! And we'll always be freaks and we'll never be like other people and you'll never be a freak because you're just too... perfect!

2)
Carolyn (Jane's mother) : Are you trying to look unattractive?

Jane : Yes.

Carolyn : Well, congratulations. You've succeeded admirably.

3)
Lester: I figured you guys might be able to give me some pointers. I need to shape up. Fast.

Jim Olmeyer: Are you just looking to lose weight, or do you want increased strength and flexibility as well?
Lester Burnham: I want to look good naked!