Tuesday, June 30, 2009

398. ஆண்டவன் சிரிப்பு

ஓரினசேர்க்கை தவறென்று

தீர்ப்பெழுதினார் மதகுரு

பின்பொறியால் சிரித்தான்

படைத்தவன்

Sunday, June 14, 2009

397. இறைவன் எனும் அபினி


கண்மூடி பிரார்த்தித்தேன்

கண்முன் படைத்தவள் வந்தாள்

"வரம் ஒன்று கேள்" என்றாள்


"இலங்கைதமிழர் இன்னல் தீர்" என்றேன்

"என்னால் அது இயலாது" என்றாள்.

"சூடானிய இனப்படுகொலைகளை நிறுத்து" என்றேன்

"முடியாதென்றே" தலைகவிழ்ந்தாள்


"ஜாதி/மத வெறியை ஒழி" என்றேன்

"ஐயகோ முடியாது" என்றாள்

"பெண்கள் துயர் போக்கு" என்றாள்

"அது என்னால் நடவாது" என்றாள்


"வேறு என்னதான் உன்னால் முடியுமென்றேன்"

தலைகுனிந்தே படைத்தவள் பகரலானாள்.

"தோள்சாய இடம்மட்டுமே தரமுடியும்" என்றாள்.


தாயவளின் தோளில் சாய்ந்து

சேயென அழுதேன்

உலகை பற்றிய கவலைகளை மறந்தேன்.

இறைவன் இன்றுமுதல்

என் கவலைகளை மறக்க செய்யும் அபினி

Tuesday, June 02, 2009

395.ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்

மாமியார் என்ற பெண்

மாமியார் என்ற உறவு பட்டமாக மாறி மருமகளுடன் அதிகாரத்துக்காக போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டதால் பெண்ணிய கோணத்தில் மாமியாரும் ஒரு பெண் என்ற அளவில் இந்த விஷயத்தை அலசலாம் என இருக்கிறேன்.

மாமியார் என்பவர் யார்?

மாமியார் என்பவர் ஒரு ஆணின் தாய்.இன்னொரு ஆணின் மனைவி.இந்த இரு வேலைகளையும் செய்து களைத்துபோய், உடல் இளைத்து,நலிந்துபோன ஒரு அடிமை.மருமகளாய் வீட்டுக்கு வந்து அடிமையாய் ரிடையர் ஆன ஒரு பெண்.தான் பெற்ற பிள்ளையை தானே வளர்க்க முன்வராத ஆண்வர்க்கத்தின் சார்பாக குழந்தையை வளர்க்கும் முழுநேர பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அந்த சுமை காரணமாக தனது கெரியரை இழந்தவர்.மன்னன் மனைவியானாலும் நம் நாட்டில் ஒரு பெண்ணுக்கும் நடுத்தெருவுக்கும் இடையில் நிற்பது ஒரு ஆண் மட்டுமே...அந்த ஆண் இல்லையென்றால் அந்த பெண் நடுதெருவில் தான் என்ர நிலையில் தான் நாம் நமது பெண்களை வைத்திருக்கிறோம்.அந்த விதியின் கீழ் தாய்,மனைவி என்ற இருசுமைகளை சுமந்து பணிசெய்து இளைத்து, குடும்பத்தின் முதல் அடிமை மாமியார்.

மருமகள் என்பவர் யார்?

மாமியார் எனும் அடிமை ரிடையர் ஆனதால் அவரது பணிகளை செய்ய புது அடிமை தேவைப்படுகிறது.அதனால் கல்யாண சந்தையில் பேரம் பேசி மருமகள் என்ற இன்னொரு அடிமையை கொண்டுவருகின்றனர் ஆண்கள்.மருமகள் என்பவர் ஒரு குடும்பத்தில் மாமியரை ரீப்ளேஸ் செய்யும் அடிமை.

மாமியார் என்பது கவுரவத்துக்குரிய பட்டமா?

ஜெயிலில் சீனியர் கைதிகளை கன்விக்ட் வார்டர் என்ற பதவி கொடுத்து ஜூனியர் கைதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.அந்த பொறுப்புக்கு பரிசாக அந்த கன்விக்ட் வார்டருக்கு கிடைக்கும் சலுகைகள் கால் காசுக்கு பெறாத கான்விக்ட் வார்டர் என்ற பட்டம்.மற்ற கைதிகளை விட நல்ல உணவு.நல்ல ஜெயில் அறை.சூபரெண்டிடம் மதிப்பு...இதுமாதிரி அலங்கார பட்டம் தான் மாமியார் என்ற பட்டமும்.குடும்பத்துக்கு வந்த ஜூனியர் அடிமைகளை மேற்பார்வை செய்யும் சீனியர் அடிமை மாமியார்.

மாமியார் மருமகள் சண்டை ஏன்?

ஆங்கிலத்தில் zero sum game என்று சொல்வார்கள்..மாமியாரின் நலன் மருமகளை ஒடுக்குவதில் தான் இருக்கிறது என்பது போல் ஆக்கப்பட்டதால் மாமியார்,மருமகள் இருவரும் கிடைக்கும் கால்காசு அதிகாரத்துக்கும்,அந்தஸ்துக்கும் போட்டியிட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.கோழிப்பண்னையில் கோழிகளை கூண்டில் அடைத்துவிட்டு உணவை வீசினால் கோழிகள் உணவுக்காக அடித்துக்கொள்ளத்தான் செய்யும்.இல்லத்திலும் நிலைமை அதுதான்.

மாமியாரும், மருமகளும் ஒரே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள்.அந்த முறையில் அவர்களுக்கிடையே இரு பெண்களுக்கிடையே நிலவும் இயல்பான சகோதரபாசம் மறைந்து அவர்கள் எதிரிகளானதற்கான காரணம் முழுக்க இந்த ஆணாதிக்க சமூகத்தின் வடிவமைப்பாலேயே நிகழ்ந்தது.

கணவனின் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வது மருமகளின் கடமை ஆகாதா?

இல்லை.ஆணாதிக்க உலகில் பெண்களிடம் சுமத்தப்ப்டும் இப்படிப்பட்ட மருமகள் கடமை, தாயின் கடமை ஆகிய அனைத்தும் ஆண்கள் தமது பொறுப்பை தட்டிகழித்துவிட்டு பெண்களை அடிமைப்படுத்த செய்யும் சூழ்ச்சியே ஆகும்.தனது குழந்தையை தான் கவனிக்கும் கடமையை தட்டிகழித்து மனைவியின் தலையில் அதை கட்ட தாய்மை என்ற பொறுப்பு பெண்களின் தலையில் கட்டப்படுகிறது.அதேபோல் தனது பெற்றோரை தான் தான் கவனித்துகொள்லவேண்டும் என்ற ஆணின் கடமை மனைவியின் தலையில் கட்ட மருமகள் என்ற இன்னொரு கடமை பெண்ணின் தலையில் கட்டப்படுகிறது.

இப்படி ஆணின் வேலையை பெண் செய்வதால் அவளது career அழிந்து ஆணை சார்ந்திருக்க வேண்டியவளாகிறாள்.இத்தகைய சார்ந்திருத்தல் ஆணின் பலத்தை அதிகரித்து பெண்ணை நிரந்தர அடிமையாக்குகிறது.

இதற்கான தீர்வு என்ன?

பெண்னை பெண்ணாக வளர்ப்பதும், ஆணை ஆணாக வளர்ப்பதும் ஒழியவேண்டும்.ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுதரவேண்டும்.வீட்டுவேலைகள் அனைத்தும் செய்ய அவர்கள் பழக்கப்படுத்தப்படவேண்டும்.பெண் குழந்தைகளை மட்டும் இதை செய்ய வைத்துவிட்டு ஆண்குழந்தைகளை கிரிக்கட் ஆட அனுப்பும் போக்கு ஒழியவேண்டும்.

ஆணாதிக்கம் ஒழிய பெண் ஆணைப்போல் வேலை,கெரியர் என்ற கண்ணோட்டத்தில் வளர்க்கப்டுவதும், ஆண்கள் பெண்களைபோல் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் விதத்திலும் வலர்க்கபடவேண்டியது முக்கியமாகிறது.தனது வீட்டின் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை கணவனும், மனைவியும் பக்ரிந்து செய்யவேண்டும்.துணி துவைப்பது,பாத்திரம் கழுவுவது ஆகியவை அசிங்கமல்ல,ஆண்மைக்கு இழுக்கல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும்.அடிமைகளை மேலும், மேலும் உருவாக்கும் கூட்டுகுடும்பமுறை ஒழிந்து காதல்மணங்களும், தனிகுடித்தனங்களும் பெருகவேண்டும்.

இவை எல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்பது யதார்த்தம் என்றாலும் ஒரு விஷயம் இருக்கவேண்டியது இப்படித்தான் என்பதையாவது உலகம் அறிந்தால் நன்று:-)