Sunday, July 26, 2009

402. கேவலத்திலும் கேவலம்

டெல்லி: பெரும் நஷ்டத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதிச் சிக்கலிலிருந்து மீண்டு வர ரூ. 20, 000 கோடி உதவி நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளது.

இதில் ரூ. 10,000 கோடி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. மீதமுள்ள நிதியை அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 2500 முதல் ரூ. 3000 கோடி வரை தருமாறும் அது மத்திய அரசைக் கேட்டுள்ளது.

மேலும் பழைய விமானங்களைத் தூரப் போட்டு விட்டு புது விமானங்களை வாங்கவும் அது அனுமதி கோரியுள்ளது.

இப்படி மொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடியைக் கேட்டு நிற்கிறது ஏர் இந்தியா. இது டெல்லி மாநிலத்திற்கான வருடாந்திர பட்ஜெட் தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தட்ஸ்தமிழ்

இப்படி மக்கள் வரிப்பணத்தை விழுங்கவென்றே வந்த இந்த அசிங்கத்தை தொலைத்து தலைமுழுகினால் தான் என்ன?அரசாங்கம் என்ன hairக்கு பாசஞ்சர் விமானகம்பனி நடத்தவேண்டும்?

7 comments:

கார்த்திக் said...

மத்த தனியார் கம்பெனி மாதிரி சேர்விளியிட்டு வருமானத்த பெருக்கிக்க வேண்டியதுதானா
நீங்க சொல்லுரத பாத்த இதையும் தனியாருக்கு கொடுத்திரனும்ங்கர மாதிரி இருக்கு.

செல்வன் said...

கார்த்திக்,

ஷேர் வெளியிட்டா அது ஒருவகையில் தனியார்மயம் தானே?

அரசுக்கு விமானகம்பனி வேண்டாம் என்பதுதான் என் கருத்து.இதை முற்றிலும்மாக விற்றுவிட்டு அந்த பணத்தில் சாலைவசதிகளை மேம்படுத்தலாம்.அல்லது ஆயிரகணக்கில் மருத்துவமனைகள் கட்டலாம்.

Government has no business to be in business

கார்த்திக் said...

// அரசுக்கு விமானகம்பனி வேண்டாம் என்பதுதான் என் கருத்து.//

சாமான்யனுக்கு விமானாபய்ணம் ஒரு கனவுதான்(எனக்கும் சேத்துதான்)ஏதோ ஏர் இண்டியா இருக்குர வரைக்கும் அது சாத்தியம் ஆகும் நீங்க சொல்லுரமாதிரி அதையும் ஜெட் மாதிரியான தனியார் கம்பனிகலுக்கு கொடுத்திட்டா என்ன ஆகும் டிக்கட் அவங்க சவுகரியத்துக்கு ஏத்திக்குவாங்க.அப்புறம் காலத்துக்கும் நாங்க ரயில் தான் :-))

(BSNL இருக்குரதால தான் மத்தபய்ளுக எல்லாம் கம்மி ரேட்டுல தரானுங்க இல்லனா நெனச்சுப்பாருங்க.அனிலும் மிட்டலும் வெச்சதுதான் சட்டம்)


// அந்த பணத்தில் சாலைவசதிகளை மேம்படுத்தலாம்.//

மேம்படுத்தி

இப்போ பாருங்க நம்ம பெருந்துரை சிப்காட்ல இருந்து செங்கப்பள்ளி போரதுக்கு தேவையில்லாமா (25-30km )டோல்கேட்டுக்கு பணம் தரவேண்டியதிருக்கும்.ஏற்க்கனவே நாம சாலை வரியும் கட்டிகிட்டு தான இருக்கோம்.பட்ஜட்லையும் இதுக்கும் சேத்துதான பணம் ஒதுக்குராங்க.அப்புறம் எதுக்குங்க இந்த டோல்கேட்டுக்கு நாம பணம்தரனும்.என்ன தான் பேசுனாலும் கட்டாமா கோவை போக முடியாது :-))

அதனால ஒன்ன வித்து இன்னொன்னு போட்டேன்னு பொய் கணக்கு காட்டுரத விட.நலிஞ்சு போன விமான நிறுவனத்த தூக்க எதாவது வழி இருக்கான்னு அரசு பாக்கலாம்.

கார்த்திக் said...

// Government has no business to be in business //

இந்தமாதிரியான் ஒரு பாலிசி வச்சிருந்தால தான் உங்க அமேரிக்க இன்னைக்கு இந்த நெலமைக்கு வந்திருக்கு.தனியார் மயம் அப்படின்னு சொல்லி போக்குவரத்த தனியாருக்கு அதிலும் ரயில்வேவ தனியாருக்கு கொடுத்தாங்க இப்போ என்னாச்சு எல்லாம் ஒன்னு சேந்து ரயிவேயையே ஒரு பண்டிட்டானுங்க.அவனுங்களும் ஒரு வழி ஆயிட்டானுக :-))
(கொஞ்சநாள் முன்னாடி விகடன்ல படிச்சது)

செல்வன் said...

கார்த்திக்,

இலவசம் என்று எதுவுமே கிடையாது என்பது பொருளாதார விதி (there is no free lunch).கோவையிலிருந்து மும்பைக்கு விமான டிக்கடின் சந்தை விலை 3000 ரூ ,ஆனால் மானியத்துக்கு பிறகு அது 500 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றால் மீதம் உள்ள 2500 ரூபாயை கட்டுவது யார் என்பதுதான் கேள்வி. விமானத்தில் போகிறவர் அந்த 2500 ரூபாயை தருவது முறையா அல்லது வாழ்க்கையில் விமானத்தையே பார்த்திராத குப்பனும்,சுப்பனும் கட்டும் வரிபணத்தை அதுக்கு தருவது முறையா?

ஏர் இந்தியாவின் மார்க்கட் ஷேர் வெறும் 20% தான்.அதனால் ஏர் இந்தியா போனால் விமான பயணம் எட்டாகனியாகிவிடும் என நினைப்பது தவறு.டிக்கட் விலையை சவுகரியத்துக்கு ஏற்றினால் விமான கம்பனிகளுக்கு தான் நஷ்டம்.இந்தியாவில் பெட்ரோல் விலை காலனுக்கு 5 டாலர்.அமெரிக்காவில் 2.5$.அதாவது சந்தை விலையை விட இரண்டு மடங்கு அதிகமான விலையில் பெட்ரோல் இங்கே விற்கப்படுகிறது.அதுபோக இங்கே மறைமுக வரிகளும் மிக அதிகம்.சர்வீஸ் வரி, லக்சுரி டாக்ஸ் என விமான பயணத்துக்கு வரிகளை போட்டு தீட்டுகிறார்கள்.அதனால் தான் பொருட்களின்/சேவைகளின் விலை இங்கே அதிகம்.ஏர் இந்தியா தனியார் மயமாக்கப்பட்டு லைசென்ஸ் முறையை ஒழித்து யார் வேண்டுமானல் விமான கம்பனிகளை இந்தியாவில் துவக்கலாம் என அறிவித்தால் டெல்டா,யுனைடட் என பல நாட்டு கம்பனிகளும் இந்திய உள்நாட்டு விமானதுறையில் நுழையும்.அப்புறம் டிக்கட் விலை மிகவும் குறைந்துவிடும்.

ஏர் இந்தியா கேட்கும் 20,000 கோடி என்பது வெறூம் நஷ்டத்தை ஈடுகட்டத்தான். அரசு கம்பனி ஒன்றுக்கு இத்தனைபெரிய தொகையை தண்டம் அழவேண்டுமா என்பதை யோசிக்கவேண்டும்.

இம்மாதிரி பெரிய தொகைகளை ஏர் இந்தியா மாதிரி தண்டங்களுக்கு கொடுத்துவிட்டு சாலைகளை போட அரசிடம் காசு இல்லாததால் தான் தனியாருக்கு அதை தந்து டோல் வாங்கவேண்டி இருக்கிறது.இந்த 20,000 கோடி ரூபாயில் பல சாலைகளை அரசே நிறுவி கட்டணமின்றீ மகக்ளை செல்ல அனுமதிக்கலாம்.இந்த 20,000 கோடி ரூபாயில் பெருந்துறை சிகாட் செங்கபள்ளி சாலை குத்தகையை அரசே தனியாரிடமிருந்து வாங்கி மகக்ளுக்கு இலவசமாக தரலாம்:-)

அரசு நிறுவனங்களூக்கு தரும் வெட்டியான மானியத்தை நிறுத்தி தேவையற்ரவற்றை தனியார் மயமாக்கினால் (உதார்ணம் தமிழ்நாடு ஓட்டல், ஏர் இந்தியா, அசோகா ஓட்டல்- அரசுக்கு எதுக்கு ஓட்டல் பிசினஸ்?) மக்களுக்கு விதிக்கும் வரிகள் பலமடங்கு குறையும்.வாழ்க்கைதரம் அதிகரிக்கும்.

டெலிபோனை முற்றிலும் தனியார் மயமாக்கி, லைன்சென்ஸ் முரையை ஒழித்து யார் வேண்டுமனால் டெலிபோன் கம்பனி துவக்கால்ம், இன்டர்னெட் போன் நிறுவலாம் என விதிகலை கொணர்ந்தால் அம்பானி,பாரதியின் ஆட்டம் அடங்கும்.முழு அளவில் தனியார் மயத்தை செய்யாமல் இன்னும் லைசென்ஸ் முறையை வைத்திருப்பதுதான் சிக்கல்களுக்கு காரணம்.

கார்த்திக் said...

// விமானத்தில் போகிறவர் அந்த 2500 ரூபாயை தருவது முறையா அல்லது வாழ்க்கையில் விமானத்தையே பார்த்திராத குப்பனும்,சுப்பனும் கட்டும் வரிபணத்தை அதுக்கு தருவது முறையா? //

நான் இத யோசிக்கவே இல்லைங்க :-))

// உதார்ணம் தமிழ்நாடு ஓட்டல், ஏர் இந்தியா, அசோகா ஓட்டல்- அரசுக்கு எதுக்கு ஓட்டல் பிசினஸ்?)//

நான்னும் இதை நெச்சிருக்கேன் அரசாங்க ஓட்டல்ங்கரதுக்காக அங்க எதுவும் கம்மிவிலைக்கு விக்கரதில்லை.அப்புறம் எதுக்கு இவங்க ஓட்டல் நடத்துராங்கன்னு :-))

செல்வம் உங்ககிட்ட பேசுர அளவுக்கு நான் இன்னும் வளரலைங்க :-))

செல்வன் said...

//செல்வம் உங்ககிட்ட பேசுர அளவுக்கு நான் இன்னும் வளரலைங்க :-))//

You seem to know a lot about economics.இத்தனை தன்னடக்கம் கூடாது கார்த்திக்:-)