Thursday, May 14, 2009

392.ஒபாமாவும் தமிழ்நாட்டு டாக்டர்களும்

ஐநூறு மைல் நீளமுள்ள துண்டுநிலத்துக்கு முதல்வராகிவிட்டு உடனே பல்கலைகழகத்துக்கு போய் டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்ளும் நம் ஊர் மானம் கெட்ட கொள்ளைகார மிருகங்களுக்கு..(மிருகங்கள் மன்னிக்கவும்)..அரசியல்வாந்திகளுக்கு ஒபாமா தன் உதாரணம் மூலம் செருப்படி கொடுத்திருக்கிறார்.

அரிசோனா பல்கலைகழகம் ஒபாமாவின் பெயரை கவுரவ டாக்டர் விருதுக்கு பரிசீலித்து டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு அவர் எந்த சாதனையும் செய்யவில்லை என முடிவு செய்தது.அதன்பின் அதை ஒபாமாவுக்கும் தெரிவித்து மாணவர்களுக்கு விருது வழங்க அவரை அழைத்தது.ஒபாமா கோபிக்காமல் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் "நான் இன்னமும் எந்த சாதனையும் செய்யவில்லை.அமெரிக்க ஜனாதிபதியாவது என்பது ஒருவர் தன் வாழ்க்கையை சிறப்பாக நடத்தினார் என்பதற்கான அறிகுறி அல்ல" என பேசியிருக்கிறார்.

அரசியல்வாதிகளின் காலை நக்கி பிழைக்காத அரிசோனா பல்கலைகழகத்தை பாராட்டுவதா இல்லை தனக்கு டாக்டர் பட்டம் வாங்க தகுதி இல்லை என்று கூறிய பல்கலைகழகத்தின் பரிந்துரை சரியானது என்று கூறிய ஒபாமாவை பாராட்டுவதா என புரியவில்லை.

மசாலாபடத்தில் நடித்த நடிகருக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி நக்கிபிழைக்கும் நம் ஊர் பல்கலைகழகங்களும், மணிக்கணக்கில் இந்திரன்,சந்திரன் என புகழ்மாலைகளை கேட்டு ரசிக்கும் நம் அரசியல்வாந்திகளும் இனியாவது திருந்தினால் சரி.

4 comments:

கார்த்திக் said...

// மசாலாபடத்தில் நடித்த நடிகருக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி நக்கிபிழைக்கும் நம் ஊர் பல்கலைகழகங்களும், //

ம்ம் சரி சரி புரியுதுங்க.

ஆனா அந்த பட்டத்த குடுத்திருந்தா அவர் என்ன வேணம்னா சொல்லப்போராரு அவரும் வாங்கிவேச்சிருப்பாரு :-))

கால்கரி சிவா said...

என்ன சார் ரொம்ப நாளைக்கு அப்புறம். சரியான பதிவு

கால்கரி சிவா said...

என்ன சார் ரொம்ப நாளைக்கு அப்புறம். சரியான பதிவு

செல்வன் said...

Thanks karthik, Calgary siva