பல வருடங்களுக்கு முன்பு பெமினா இதழில் படித்த ஒரு சிறுகதையில் இந்திய கணவன் ஒருவன் அமெரிக்க பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறான்.அவன் இந்திய மனைவி அவனுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறாள்.கடைசியில் ஒருநாள் அவள் கணவன் திரும்பி வருகிறான்.திரும்பி வந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்கிறான்.அந்த விளக்கம் முழுவதும் இந்திய கலாசாரத்தை உயர்த்திபிடிப்பதாகவே இருக்கிறது.அதன்பின் முத்தாய்ப்பாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறான்.."டாய்லட் பேப்பர் பயன்படுத்துபவளுடன் என்னால் வாழ்நாள் முழுவதும் வாழமுடியாது.."
அதற்கு என்ன அர்த்தம் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.டாய்லட் பேபர் சுகாதர கேடானதா இல்லை தண்ணீர் விட்டு கழுவுவது சுத்தமானதா என்ன சொல்ல வருகிறார் என்றே அன்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை.
அமெரிக்க டாய்லட்டுகள் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிப்பவை.நம் ஊரில் ஆய் போவதை "காலை கடனை கழிப்பது" என்று ஏதோ கடன் கட்டும் இடமாக கருதி குறிப்பார்கள்.பாத்ரூமுக்கு போனோமா,வேலையை முடித்தோமா வந்தோமா என்று நம் ஊரில் இருப்பார்கள்.அமெரிக்காவில் அப்படி இல்லை.
நம் ஊர் டாய்லட் பவுலில் குத்த வைத்துதான் உட்கார முடியும்.அதனால் எத்தனை சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு எழுகிறோமோ அத்தனை சீக்கிரம் எழுந்திருப்பார்கள்.வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட் பவுலில் சேரில் உட்கார்வது போல் அக்கடாவென உட்கார்ந்து ஆய்போகலாம்.பலர் அதனாலேயே வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட்டுகளுக்கு போகும்போது தினசரியையும் எடுத்துப்போய் ஆற அமர படித்து முடிப்பார்கள்.நம் ஊரில் ஆய்போகும்போது சாப்பிடுவதை அசிங்கமாக நினைப்பார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஆய்போகும்போது ஒரு கோப்பை ஒயினை எடுத்துப்போய் சிப்புகிறவர்கள் இருக்கிறார்கள்.பல அமெரிக்க ஓட்டல்களில் காப்பி மெஷினை டாய்லட்டுகளில் தான் வைத்திருப்பார்கள்.
அமெரிக்க டாய்லட்டுகள் ஒவ்வொன்றிலும் பாத்டப்புகள் தவறாமல் இருக்கும்.அதில் நீரை நிரப்பி மிதப்பது அமெரிக்கர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ஆக பாத்ரூமில் இத்தனை நேரத்தை செலவழிப்பதால் அதை சுத்தமாக வைத்திருப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.பாத்ரூம் தரையில் துளி தன்ணீர் படாமல் கார்பெட் போட்டிருப்பார்கள்.குளிக்கும்போது பாத்டப்பில் நின்றுகொண்டு ஷவரில் குளிக்கலாம்.தன்ணீர் வெளியே விழாமல் இருக்க திரை போட்டு மூடியிருப்பார்கள்.
ஆய்போய்விட்டு தன்ணீர் விட்டு கழுவுவது நம் ஊருல் சுகாதாரமாக கருதப்படுகிறது.ஆனால் இது நம் ஊருக்கு நாக்ரிக மாற்றத்தில் வந்த புது வழக்கம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் அட்டாச்ட் பாத்ரூம்கள் எல்லாம் கிடையாது.ஊர் மக்கள் எல்லோரும் இட்டேரி என்று சொல்லப்படும் இடத்துக்கு சென்றுதான் ஆய்போக வேண்டும்.இட்டேரிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும்.அங்கே சற்று புதர் மறைவாக இருக்கும் இடத்தில் உடகர்ந்து ஆய்போவார்கள்.ஆண்கள்,பெண்கள் என்று எந்த வித்திய்சாமும் இல்லாமல் ஊர்கூடி ஆய்போகும் இடம் தான் இட்டேரி.
இட்டேரிகளுக்கு செம்பை எடுத்து போகிறவர்கள் இருப்பார்கள்.இருந்தாலும் ஒரு சின்ன செம்பு தன்ணீரில் சுத்தமாக கழுவ முடியாது என்பதால் சின்ன சைஸ் கருங்கல்லாக பார்த்து நாலைந்தை எடுத்துகொண்டு இட்டேரிக்கு போய் ஆய்போனபின் முதலில் கரும்கல்லில் ஆயை துடைத்து வீசுவார்கள்,அதன்பின் சின்ன சொம்பில் இருக்கும் நீரைகொண்டு கழுவிக்கொண்டு வீடுவந்து சேர்வார்கள்.
எங்கள் ஊருக்கு அடாச்ச்ட் பாத்ரூமும்,தன்ணீர் குழாயும் வந்தபிறகு இட்டேரிக்கு போவது சுத்தமாக நின்றுவிட்டது.அதன்பின் துடைக்கும் வழக்கம் சுத்தமாக நின்றுபோய் கழுவும் வழக்கம் தான் இந்திய கலாசாரம் என்றும் துடைப்பது அமெரிக்க கலாசாரம் என்றும் நம் மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்.உண்மையில் துடைப்பது தான் இந்தியாவின் ஆதி கலாசாரம்.
13 comments:
இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்.உண்மையில் துடைப்பது தான் இந்தியாவின் ஆதி கலாசாரம். //
துடைப்பது தமிழ்கலாச்சாரம் என்று சொல்லாத உங்கள் நுண்ணரசியல் புரிகிறது :-)
Ramachandran Usha
ஆகா...இந்தியா முழுவதும் பாத்ரூம் வருவதற்கு முந்தி துடைத்துக்கொண்டுதானே இருந்திருப்பார்கள்?அப்ப இது இந்திய கலாசார்ம்தானே?:-))
ஐயா, இதற்கு தமிழ் குரங்கில் இருந்து தமிழ் வருஷ பிறப்பு வரை ஆயிரெத்தெட்டு உதாரணம்
சொன்னாலும், இந்துத்வா ஆட்கள் ஒத்துக்க மாட்டாங்கையா மாட்டாங்க!
Ramachandran usha
// "டாய்லட் பேப்பர் பயன்படுத்துபவளுடன் என்னால் வாழ்நாள் முழுவதும் வாழமுடியாது.."//
இப்படியும் இருக்கலாம் என்னால யுஸ அன் துரோவா இருக்கமுடியாது அதாவாது காரியம் முடிஞ்சதையும் தூக்கி எரியரவளோட வாழமுடியாதுங்ர அர்த்தத்துல சொல்லிருக்கலாம்.
என்ன தான் நாம கல் பயண்டுத்தினாலும் வீட்டுக்கு வந்து மறுபடியும் தண்ணி பயன்படுத்துவோம் அத நீங்க மறந்திருக்கலாம்.இல்ல நீங்க அப்பையே அமேரிக்க ஸ்டைல பாலோ பண்ட ஆரம்பிச்சிருக்கலாம்.மொத்ததுல எல்லாக்காலத்துலையும் நாம தண்ணி தான் பயன்படுத்துரோம்.இருந்தாலும் நீங்க அமேரிக்காவுக்கு ரொம்பத்தான் சொம்படிக்கிரீங்க போங்க.
நம்ம சாப்பாடுக்கு தண்ணிதாங்க சரியானாது.இங்க இருக்க ஒரு சில கடைல சாப்ட மறுநாள் காலைல அந்த எரிச்சல்ல பேப்பர வெச்சா தீப்புடிச்சு எரிஞ்சு போயிருங்க.
கார்த்திக்,
நல்ல விஷயத்தை எங்கிருந்து கற்றாலும் தப்பில்லை.அமெரிக்காவிலிருந்து பாத்ரூமை இறக்குமதி செய்தோம்,கை கழுவும் பேசினை இறக்குமதி செய்தோம்,ஷவரை இறக்குமதி செய்தோம்,வெஸ்ட்ரன் ஸ்டைல் டாய்லட்டை இறக்குமதி செய்தோம்.அடுத்து டாய்லட் பேப்பர்களும் வரதுவங்கிவிட்டன...ஆக நான் எழுதுவதற்கு முன்னரே நம் டாய்லட்டுகள் மேற்கத்தியமயமாகிக் கொண்டிருக்கின்றன:-)
அவர்களது தட்ப வெட்ப நிலைக்கு அவர்கள் முறை சரியாக இருக்கலாம். ஆயினும் எமது நாட்டிற்கு தண்ணீரில் சுத்தம் செய்வது இலகுவானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கும்.
எப்படியாயினும் காலத்திற்கு ஏற்ப மாறுவதே நல்லது. காலாசார மூட்டைகளின் பாரத்தில் அழுந்திக் கல்லைத் தேடுவது அவசியமா?
செல்வன் ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவுபக்கம் வந்தேன். வித்தியாசமான பதிவு.
/உண்மையில் துடைப்பது தான் இந்தியாவின் ஆதி கலாசாரம். //
இருக்கலாம்!
ஆனால் அவற்றால் முழுதாக சுத்தமாவதில்லை! கிருமிகள் தங்கலாம்னு தான் தண்ணீர் பயன்படுத்துறாங்க!
அமெரிக்ககாரன் துடைக்காம போனாலும் நீங்க அவங்களுக்கு சொம்பு துக்குவிங்கன்னு ஊருக்கே தெரியுமே!
நன்றி மங்களூர் சிவா,
வால் பையன்,
கிருமி கையில் தங்க கூடாதுன்னா மலத்தை கையால் தொடகூடாது. கையால் தொடாமல் இருக்கணும்னா டாய்லட் பேப்பரை தான் பயன்படுத்தணும்.அதனால் அடுத்த தரம் செம்பை தூக்குமுன் யோசித்து தூக்குவது நலம்:)
//கிருமி கையில் தங்க கூடாதுன்னா மலத்தை கையால் தொடகூடாது. கையால் தொடாமல் இருக்கணும்னா டாய்லட் பேப்பரை தான் பயன்படுத்தணும்.அதனால் அடுத்த தரம் செம்பை தூக்குமுன் யோசித்து தூக்குவது நலம்:) //
அதுக்கு தானே கையையும் கழுவுறோம்!
பேப்பரில் துடைப்பதால் கையில் ஒட்டாமல் இருக்கலாம்!
ஆனால் வந்த இடத்தில் தங்குமே!
அப்புறம் அரிக்குமே!
கூட்டத்தில் சொறிவோமே!
இதெல்லாம் தேவையா!
அமெரிக்கா, ஐரோப்பாவில் அப்படித்தான் 'வந்த இடத்தில் தங்கி' எல்லோரும் கூட்டத்தில் சொரிந்து கொண்டிருக்கிறார்களாக்கும்?:-)
நம்மை அந்த முறைக்கு நான் மாற சொல்லவில்லை.அதற்கு இன்னமும் நிறைய காலமாகலாம்.வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட், டென்டல் ஃப்ளாஸ், பாத்டப் என்று மேற்கத்தியமமாகும் இந்திய பெருநகர்பகுதிகளீல் முதலில் இது அறிமுகமாகலாம்.அப்புறம் படிப்படியாக இந்தியா எங்கும் பரவும் என்பதுதான் என் கணிப்பு.
மனிதன் எதுவும் சுலபமாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறான்!
சிறு கடினம் கூட இல்லாமல் எல்லா செயலையும் செய்ய வேண்டும் என்பதே அவனது ஆழ்மனது ஆசையாக இருக்கிறது!
அதற்காக தூக்கும் போதே டுயூப் வழியாக செல்வது போல் கூட கண்டுபிடிப்பான்!
யார் கண்டா எதுவேண்டுமானாலும் நடக்கலாம்!
உண்மைதான் வால்பையன்.இன்றைய கனவு நாளைய நனவு..நன்றி
Post a Comment