இந்திய கிரிக்கட் அணி தேர்வாளராக கவுண்டரை நியமித்து சரத்பவார் உத்தரவு பிறப்பித்தார். கவுண்டரும் நமது வீரர்களை ஒவ்வொருவராக அழைத்து நேர்முக தேர்வு நடத்த துவங்கினார். முதலில் வந்தவர் டெண்டுல்கர்.
டெண்டுல்கர்: கவுண்டரே, இந்த தடவை பங்க்ளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. பிச்சு உதறிடறேன். 6+4= 10டுல்கர் ந்னு நிருபிக்கறேன்
கவுண்டர்: ஏழுகழுதை வயசாகியும் இன்னும் 6+4=10ன்னு கத்துக்கற வயசுலையாடா இருக்க நீ?அடேய் white pig, சமீபத்துல 25 வருஷமா நீ எந்த முக்கியமான மேட்சுலயாவது 10 ரன்னை தாண்டிருக்கயாடா? அப்புறம் எதுக்குடா உனக்கு 6+4ன்னு எல்லாம் பட்டம்? இந்த தொடர் முழுக்க மொத்தமே 10 ரன்னு தான் எடுப்பேன்னு சொல்றையாடா நீயி?
டெண்டுல்கர்: இல்லைங்க. ஒரு நாள் தொடருக்கு 6 கோடிக்கு ஒரு ஸ்பான்சரும் , டெஸ்டுக்கு 4 கோடிக்கு ஒரு ஸ்பான்சரும் தயாரா இருக்காங்க. மொத்தமா 6 + 4 = 10 கோடின்னு சுருக்கமா சொன்னேன்.
கவுண்டர்: அடேய் பனம்பழ வாயா..உன்னை சுனாமி கொண்டுபோக. இதுதான் அந்த 6+4= 10 சூட்சுமமாடா? ஆமா நீ தான் ரன்னே எடுக்கறதில்லையே, கைநீட்டி காசு வாங்க உனக்கு வெக்கமா இல்லையாடா?
டெண்டுல்கர்: யார் சொன்னது நான் ரன்னே எடுப்பதில்லைன்னு?இப்ப உலகின் வல்லரசு நாடுகள் எவை எவைன்னு சொல்லுங்க பார்க்கலாம்?
கவுண்டர்: அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் இது நாலும் தான்டா வல்லரசு.
டெண்டுல்கர்: இந்த வல்லரசு நாடுகளுக்கு எதிரா என்னோட ஆவரேஜ் ஸ்கோர் 123.54. ஆனா ஏழைநாடுகளான இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவற்றுக்கு எதிரா என்னோட ஆவரேஜ் 12.10. இப்ப புரியுதா என்னோட பரந்த மனப்பான்மை என்னன்னு?
கவுண்டர்:நல்லா புரியுதடா புரியுது...அட விளங்காத பய மவனெ...உன்னை போட்டு உதைக்கறதுக்கு பதிலா ஊர்ல அப்பாவி ஒருத்தனை இத்தனை நாளா போட்டு உதைச்சுட்டு இருந்தேனே? இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நீயும் ஏறத்தாழ அவன் சைஸ்ல அவனை மாதிரியே நாலடி மூணு இஞ்ச் உயரத்துல தான் இருக்கே. என்ன அவன் செந்திலு..நீ டெண்டுலு..அவன் கரும்பன்னி, நீ வெள்ளை பன்னி. இப்படி சின்ன சின்ன வித்யாசங்கள் இருந்தாலும் நீங்க ரெண்டுபேரும் உதை வாங்க தகுதியானவர்கள்தான்...எங்கே அந்த பக்கம் திரும்பி நின்னு "தில் மாங்கே மோர்"ன்னு சொல்லு பார்க்கலாம்.
டெண்டுல்கர் திரும்பியதும் கவுண்டர் அவரை எட்டி உதைக்கிறார்.அலறி அடித்து டெண்டுல்கர் வெளியே போய் விழுகிறார்.
கவுண்டர்: இந்த ஆளைத் தூக்கி வெளியில இருக்கற பெப்சி விளம்பரபோர்டு கிட்ட போடுங்கடா. அங்கேயே உக்காந்து பிச்சை எடுக்கட்டும்.அப்ப தான் புத்தி வரும். நெக்ஸ்ட்...
அடுத்து சவுரவ் கங்கூலி வருகிறார்..
கவுண்டர்:அது எதுக்குடா ஏசிரூம்ல கூலிங்க்க்ளாஸ் மாட்டிட்டு வர்ரே? கண்ணு தெரியாத கபோதியா நீயி?
கங்கூலி: நோ மிஸ்டர் கவுண்டர். ரேபான் கம்பனி கிட்ட போட்ட ஒப்பந்தப்படி இதை நான் இன்னும் 2 வருஷத்துக்கு கழட்டவே கூடாது.அப்பத்தான் 5 கோடி கிடைக்கும்.
கவுண்டர்: நல்லவேளை டான்டெக்ஸ் அண்டர்வேர் கம்பனி கிட்ட இப்படி எதுவும் ஒப்பந்தம் போடாம போனே. போட்டிருந்தா டீமே நாறிருக்கும். ஆமா உன்னைப்பாத்தா செத்த எலிமாரி இருக்கே.உனக்கு எவன்டா வங்கப்புலின்னு பேர் குடுத்தது?
கங்கூலி: என்னோட 7 கோடி ரசிகர்கள் கொடுத்த பட்டம் அது.
கவுண்டர்: 70 கோடி பேர் உனக்கு ஆடத்தெரியாத கம்மனாட்டின்னு இன்னொரு பட்டம் குடுத்திருக்காங்களே..அது தெரியாதாடா உனக்கு? ஆமா ரிடையர் ஆற வயசுல உனக்கு எதுக்குடா இன்னும் டீம்ல இடம்?
கங்கூலி: நக்மா டார்லிங் பங்களாதேஷ் டூர் போனதே இல்லைன்னு சொல்லுச்சு.அதான்..
கவுண்டர்: ஏன்டா..என்னோட டூயட் பாடுன பொண்ணை தள்ளிட்டு டூர் போக என்கிட்டயே பர்மிஷன் கேக்கறயாடா?நியாயமாடா இது?யூ ஆர் ரிஜக்டட்..நெக்ஸ்ட்.
கங்கூலி: யாரைப்பார்த்து ரிஜக்டட்ன்னு சொல்றீங்க. நான் கங்கூலி..
கவுண்டர்: சங்கூதற வயசுல உனக்கு கங்கூலின்னு பேரு. இப்ப என்ன உனக்கு இடம தானே வேணும்? டெண்டுல்கருக்கு அடுத்த இடம் வேணுமா, அதைவிட ஒசத்தியான இடம்வேணுமா?
கங்கூலி: ஒசத்தியான் இடம்தான் வேணும்.
கவுண்டர்:அந்தா ஜன்னல்ல எட்டிபாரு..டெண்டுல்கர் தெரிவான்.
கங்கூலி எட்டிப்பார்க்க கவுண்டர் அவரை ஒரு உதைவிடுகிறார். டெண்டுல்கருக்கு முன்னே போய் விழுகிறார் கங்கூலி.
கவுண்டர்:இவ்னை எதிரே இருக்கற கோக் விளம்பர போர்டு கிட்ட பிச்சை எடுக்க விடுங்கடா. இல்லைன்னா புடிச்சு ஜூவில அடையுங்க..புலி, கிலின்னு உளறிட்டு திரியட்டும்..நெக்ஸ்ட்...
தடி ஊன்றிக்கொண்டு கண் தெரியாமல் தடுமாறிக்கொண்டு ஒரு முதியவர் வருகிறார்.
கவுண்டர்:என்னடா இது?முதியோர் கிரிக்கட் அணிக்கு செலக்ஷனா நடக்குது இங்கே?யோவ் கிளவா யாரய்யா நீ?
முதியவர்: நான் தான் அனில் கும்ப்ளே.டெஸ்ட் மேட்சுல 10 விக்கட் எல்லாம் ஒரு காலத்தில் எடுத்தனே?
கவுண்டர்:அதுக்குத்தான் உனக்கு தியாகிகள் பென்ஷன், மாலை எல்லாம் கொடுத்து மரியாதை பண்ணியாச்சே? அப்புறம் எதுக்குடா மறுபடி இங்கே வந்தே? முதியோர் பென்ஷன் வாங்க போறப்ப வழிமாறி வந்துட்டியா?
கும்ப்ளே: ஒரு தெய்வீக திட்டத்தோட தான் இங்கே மறுபடி வந்தேன்.
கவுண்டர்:அது என்னடா அது தெய்வீக திட்டம்?
கும்ப்ளே:வங்கதேச டூருக்கு அடுத்தபடியா இலங்கை டூர் இருக்கு. கிரிக்கட் அணியில் தென்மாநில மக்களை புறக்கணிப்பதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இப்ப சேதுசமுத்ர திட்டம் வேற குழப்பத்தில் இருக்கு.
கவுண்டர : சேதுசமுத்திர திட்டத்துக்கும் கிரிக்கட்டுக்கும் என்னடா சம்பந்தம்?ஏன்டா உனக்கு மூளை கீளை குழம்பிபோச்கா?
கும்ப்ளே: இல்லைண்ணே..அணியில் புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர் W.V. ராமன், ஆந்திர வீரர் லட்சுமணன், கர்னாடக வீரர் விஜய் 'பரத்'வாஜ், 'அணில்' கும்ப்ளே ஆகிய நான் இவர்களை மறுபடி அணியில் சேர்த்துக் கொண்டால் ஒரு ராமாயண டீமையே மறுபடி உருவாக்கி இலங்கைக்கு சேதுசமுத்ர வழியே அனுப்பின எஃபெக்ட் கிடைக்கும். "ராமாயணா சீரியஸ்" என்று ஸ்பான்சர்களையும் பிடித்துவிடலாம். எப்படி என் ஐடியா?
கவுண்டர்: அட குக்கர் மூடி மண்டையா.....இதுதான் உன்னோட தெய்வீக ப்ளானா? இப்ப நீ ராமாயண டீம்ல சேரணும், அவ்வளவுதானே?அந்தா ஜன்னலுக்கு வெளியே தெரியற புங்கமரத்தை எட்டிப்பாரு..
கும்ப்ளே எட்டிப்பார்க்க மரத்தின்மேல் குரங்குகள் உட்கார்ந்திருக்கின்றன. கவுண்டர் எட்டி ஒரு உதை விட்டதும் கும்ப்ளே வெளியே போய் விழுகிறார். "போடா போ..அந்த டீம்ல சேந்துக்க..இலங்கை...வலங்கை..சலங்கைன்னு எல்லா ஊரையும் ஒரு சுத்து சுத்தலாம் " என்று சத்தம்போடுகிறார் கவுண்டர்.
"நெக்ஸ்ட் ப்ளீஸ்" என்கிறார் கவுண்டர். அடுத்ததாக கைப்பு வருகிறார்.
"கைப்புள்ளையை யார் உள்ளே விட்டது?What nonsense?" என கோபிக்கிறார் கவுண்டர்.
"அண்ணே..கோபிக்காதிங்கண்ணே.எங்க வ.வா.சங்கத்தின் முதலாண்டு நிறைவுவிழாவை ஒட்டி ஒரு பூமிதி விழாவை ஏற்பாடு பண்ணிருகோம். அதுக்கு உங்களை சிறப்பு அழைப்பாளரா அழைக்க அழைக்க நானும் காந்த கண்ணழகியும் வந்திருக்கோம்" என்கிறார் கைப்பு.
"பூமிதியா,,காந்தக் கண்ணழகியா..மறுபடியுமாடா?" என்று அலறி அடித்தபடி ஓடுகிறார் கவுண்டர்.

11 comments:
எனக்கு இப்ப பயங்கரமான சந்தேகம்...
இதுக்கு முன்னாடி நீங்க தான் கவுண்டருக்கு வசனம் எழுதியதா?
அப்படியே கவுண்டர் கண் முன்னாடி வந்து போகிறார்.
சரி,அவுங்களுக்கெல்லாம் "கோடி",கவுண்டருக்கு என்ன?
தலைவா,
அருமையான பதிவு...
இருந்தாலும் சச்சின இவ்வளவு அசிங்கமா தீட்டிருக்க கூடாது :-((
குமார் சார்,பாலாஜி
நன்றி.
குமார் சார்..சினிமாவுக்கு எழுத ஒரு தனித்திறமை வேணும்.நமக்கு அதெல்லாம் பத்தாது.
அவங்களுக்கெல்லாம் கோடின்னா கவுண்டருக்கு லட்சம் தான் கிடைக்கும்.தேர்வாளர்களுக்கு பணம் கம்மியாதான் குடுப்பாங்க:-)
பாலாஜி,
கவுண்டமனி எல்லோர் காலையும் இப்படித்தான் வழக்கமா வாருவார்.டெண்டுல்கர் என்பதை மறந்துவிட்டு அந்த இடத்தில் செந்திலை வைத்து பாருங்கள்.கவுண்டர் வழக்கமான திட்டுதான் திட்டியிருக்கிரார் என்பது தெரியும்.
ராமாயணா சீரிஸ் ... சீரியஸ் எஃபெக்ட்.
Nice creativity.
//கவுண்டர்: நல்லவேளை டான்டெக்ஸ் அண்டர்வேர் கம்பனி கிட்ட இப்படி எதுவும் ஒப்பந்தம் போடாம போனே. போட்டிருந்தா டீமே நாறிருக்கும்.//
எப்படி ஸார்.. எப்படி ஸார் இப்படியெல்லாம் 'ஐடியா' தோணுது.. சிச்சுவேஷன் காமெடி.. பெஸ்ட்.. வாழ்த்துக்கள்..
>>உன்னைப்பாத்தா செத்த எலிமாரி >>இருக்கே.உனக்கு எவன்டா >>வங்கப்புலின்னு பேர் குடுத்தது?
Ultimate....உங்களுக்குத்தான் முதல் பரிசு.
அன்போடு வாழ்த்திய நண்பர்கள் உங்கள் நண்பன் சரவணன், உண்மைத்தமிழன், கிஸ்மோ ஃப்ரீக் ஆகியோருக்கு நன்றி
நல்ல கற்பனை
நன்றி மருதநாயகம்
ரசித்துப் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்.
ஒருமுறையாவது டெண்டுல்கர், கங்குலி, கும்ப்ளே போன்றவர்களை இதுபோன்று நேரில் அழைத்து நாறடிக்க வேண்டும்.
அன்புடன்
இறை நேசன்
:-)
பட்டய கிளப்பிட்டிங்க செல்வன்
Post a Comment