Monday, February 27, 2006

54.சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு?

சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு? கொலராடோ மாநில கவுன்சிலர் ஒருவர் தன் முன்னாள் தோழி இன்னொருவனுடன் போய் விட்டாள் என்பது தெரிந்ததும் அவர்கள் ஜாலிடூர் போன காருக்கு பின்னால் தொடர்ந்து போய் ஆரன் அடித்து லந்து செய்திருக்கிறார்.அவள் வீட்டுக்கு முன் புது பாய்பிரண்ட் கார் நின்றதை பார்த்ததும் 3 நாள் தொடர்ந்து கார் மீது முட்டை வீசியிருக்கிறார்.போலிஸ் கைது செய்ய வந்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம்."இதுக்கெல்லாமா கைது பண்ணுவாங்க?சின்னபுள்ளத்தனமா இல்ல இருக்கு" என்றாராம். தர்மத்தின் தலைவன் புளோரிடா மாநிலம் மன்றோ கவுண்டியில் ஆபிசுக்கு ஒருவர் நன்றாக போதை மருந்து அடித்துவிட்டு போய்க்கொண்டிருந்தார்.போலிஸ் மடக்கிபிடித்து கைது செய்துவிட்டது.அவர் போதை மருந்து அடித்திருந்தது எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா?பேன்ட் போட மறந்து தர்மத்தின் தலைவன் ஸ்டைலில் போய்க்கொண்டிருந்தாராம். முடியாதா,என்ன விளையாடறையா? இங்கிலாந்து நாட்டில் கோவென்ட்ரியில் ரேடியோ ஜாக்கி(தொகுப்பாளருங்க) அவர் கேர்ள்பிரண்டை ஒரு லைவ் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்கு கூட்டி வந்தாராம்.புரொக்ராம் ஜாலியாக போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று கல்யாண பிரபோசல் செய்தாராம்.நேரடியாக அது ஒளிபரப்பானதாம். சர்ப்ரைசாக இருக்கட்டும் என நினைத்து செய்தாராம்.சர்ப்ரைஸ் அவருக்குத்தான்."முடியாது" என்று அந்தப் பெண் சொல்லிவிட்டாராம்.ரேடியோ ஜாக்கி "எங்கிருந்தாலும் வாழ்க" பாட்டை அடுத்து போட்டாரா என தெரியவில்லை. என்னை உன்னால் பிடிக்க முடியாது செக் நாட்டில் ஒருவருக்கு 18 மாதம் ஜெயில் தண்டனை கிடைத்ததாம்.போலிஸ் பிடிக்க வரும்போது தப்பி ஓடிய அவர், அவர் அம்மா வீட்டில் சுரங்கம் தோண்டி பதுங்கியிருந்தாராம்.4 வருஷம் உள்ளே ஒளிந்திருந்தாராம்.போலிஸ் கண்டுபிடித்து விட்டார்கள். "4 வருஷம் ஜெயிலில் இருந்துவிட்டேன் விட்டுவிடுங்கள்" என கேட்டுப்பார்த்தார்.விடவில்லை.உள்ளே தூக்கி போட்டுவிட்டர்களாம்."நல்ல வேளை போலிஸ் பிடித்தது,இல்லாவிட்டால் ஆயுள் முழுவதும் பதுங்குகுழியிலேயே இருந்திருப்பார்" என்கிறார்களாம் அவர் நண்பர்கள். போலிஸ் உங்கள் நண்பன் பார்க்கோவில் நல்ல போதையில் போலிஸ் ஸ்டேஷனுக்கு ஒரு பெண் போன் செய்து மரியுவானா கேட்டிருக்கிறார்."ஜோக்" என நினைத்து "ஸ்டேஷனுக்கு வா தருகிறோம்" என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு சிரித்துக்கொண்டிருந்தார்களாம் போலிஸ்காரர்கள்.அம்மணி நிஜமாகவே ஸ்டேஷனுக்கு வந்து விட்டாராம்.பிடித்து உள்ளே போட்டு விட்டார்களாம். வேற கால்டாக்ஸி கம்பனிக்கு போன் செய்திருக்ககூடாது? ஜெர்மனியில் ஒரு நபர் டாக்ஸியில் ஏறி நன்றாக ஊர் சுற்றிப்பார்த்துவிட்டு டாக்ஸியை வெயிட்டிஙில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.எஸ்கேப் ஆனவருக்கு ஒரே ஆனந்தம்.வீட்டுக்கு போக வேண்டுமே?அதே கால்டாக்ஸி கம்பனிக்கு போன் செய்து ஒரு டாக்ஸி அனுப்ப சொல்லியிருக்கிறார்.அதே ஏரியாவில் இருந்த பழைய டாக்ஸி டிரைவருக்கு கம்பனியில் இருந்து வயர்லெஸ்சில் கூப்பிட்டு புது கஸ்டமர்,பிக்கப் செய்துகொள் என சொல்ல, இவர் அங்கே போக, அவர் அங்கே நிற்க.....அப்புறம் என்ன? வேற கால்டாக்ஸி கம்பனி நெம்பர் தெரியாது" என ஜெயிலில் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கஸ்டமர்."

No comments: